For Read Your Language click Translate

07 June 2014

சப்தகன்னியர்

8 இல் 1 வது புகைப்படம்
சப்தகன்னியர்: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி).
 சூட்சும சக்திகள் என்பது எது?
உண்மையில் சூட்சும சக்திகள் என்பது எது? ஏன் அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன? அவை நல்லவையா, கெட்டவையா?. அதற்கான விடைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஒருசிலருக்கு நன்மை தருபனவாகவும் மற்றவர்களுக்கு ஏன் தீமை செய்பவனவாகவும் அவை ஏன் நடந்து கொள்கின்றன?. அதற்கு என்ன காரணம்?. நாம் செய்த, பாவ, புண்ணியங்களா?. இல்லை. வேறு ஏதெனும் நம்மால் அறிய இயலாத காரணங்கள் உள்ளனவா?. நமக்குத் தெரியாது. நம்மால் அவ்வளவு எளிதில் அவற்றை அறிந்து கொள்ளவும் இயலாது. ஏன் நன்மை செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் துன்பப்படுகின்றனர், தீயவர்கள் வசதியோடு, செழிப்பாக வாழுகின்றனர்?. அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா? மனிதன் செய்த கர்மவினை தான் காரணமா?. அல்லது வேறு ஏதேனும் சூட்சுமமான செயல்பாடுகள் உள்ளனவா?. விடை அறிவது மிக மிகக் கடினம்.
ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்கிறது நமது சாத்திரம். அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன என்றும் அது கூறுகிறது. அப்படியென்றால், அந்த நவக்கிரகங்களை சாந்தி செய்து விட்டால், பரிகாரம் செய்து விட்டால் போதுமே, ஊழிலிருந்து தப்பித்து விடலாமே! இப்படி எண்ணத் தோன்றும். ஆனாலும் அவை சாத்தியமா?
ஏனெனில், நம்மை ஆட்டி வைப்பவை வெறும் நவக்கிரகங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலான, இறைவனின் ஏவலைச் செய்து முடிக்கக்கூடிய சில தேவதாம்சங்களும் உள்ளன என்பது தான் உண்மை. அவை தான் நம்மை வழிநடத்துகின்றன. நம்மை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன.
அதே சமயம் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதிப்பாடு இருக்குமானால், அவற்றை அவன் அனுபவிக்குமாறும் விட்டு விடுகின்றன. அவற்றின் மூலம் அவன் தான் செய்த தவறை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவற்றின் நோக்கம்.
இவ்வகை சூட்சுமசக்திகளே தேவதைகளாகப் போற்றப்படுகின்றன. இவை, மனிதனின், மூளையில் தங்களது எண்ண அலையைப் பிரயோகித்து, அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு, அவனை நல்ல வழியிலோ, அல்லது தீய வழியிலோ செயல்படத் தூண்டுகின்றன. பாவ, மத்திய, புண்ணிய ஆவியுலகங்களையும் கடந்த நிலையில் வாழும் இவ்வகைத் தேவதைகள், இறைவனின் ஏவலர்களாகப் பணிபுரிகின்றன. இவற்றில் நல்ல தேவதைகளும் உண்டு. தீய தேவதைகளும் உண்டு. பிரதமர், அமைச்சர் என படி நிலையில் அரசு செயல்படுவது போல, இவ்வகைத் தேவதைகளும், இறைவனின் தலைமையில் செயல்படுகின்றன.
இது போன்ற தேவதைகள் வழிபாடு,  இந்து மதத்தில சிறப்பிடம் பெறுகின்றன. ஹோமங்கள், யாகங்கள் யாவற்றிலும் அவற்றிற்கு அவிர்ப்பாகம் அளிக்கப்படுகின்றன. .
இவற்றில் தேவ யக்ஷணியும் உண்டு. அசுர யக்ஷனியும் உண்டு. அசுர யக்ஷணிகள் துர் தேவதைகளாகவும், நீச தேவதைகளாகவும் கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாம்பூல யக்ஷணி எனப் பலவகைகள் உள்ளன. மேலும் யோகினி, சாகினி, டாகினி, ஹாகினி, மோகினி எனப் பல தேவதாம்சங்களும் உண்டு.
சில மாந்த்ரீகர்கள், இது போன்றவற்றை உபாசித்து, தீய காரியங்கள் சிலவற்றிற்கு உபயோகப் படுத்துகின்றனர். இறுதியில் அவற்றாலேயே அழிந்தும் போகின்றனர்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை, தேவதைகள் அனைத்தும், சப்தமாதாக்களின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ஸ்ரீ சக்ர மகாமேருவில் வீற்றிருந்து இவ்வுலகைப் பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக இந்த சப்தமாதாக்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் எதிரே இவற்றிற்கு சன்னதிகள் இருக்கும். இம் மாதாக்களுக்குக் காவலாக ஸ்ரீ சாஸ்தா அல்லது அய்யனார் இருப்பார். சில சமயங்களில் சில முனிவர்களின் திரு உருவங்களும், விநாயகப் பெருமானின் சன்னதியும் கூட அடுத்து இருக்கும். இச் சப்த மாதாக்களில் வாராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். கேட்ட வரம் தருபவள். இவளை வழிபட்டுத் தான் சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்பது வரலாறு. தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டி ஸ்ரீ வாராஹிக்கு தனி ஆலயம் உள்ளது. தஞ்சை பிரகீதீஸ்வரர் ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது. இது போக சப்த மாதாக்களான பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி ஆகியோரை வழிபட நன்மைகள் பெருகும்.
எனவே, நம்மை நாமே அறியாமல் கட்டுப்படுத்தும் தேவதைகளின், சூட்சும சக்திகளின் பாதுகாப்பினைப் பெற சப்த மாதாக்களையும், ஸ்ரீ சக்ர மாதாவினையும் சரணடைவோம். வளம் பெறுவோம்.
சப்தகன்னியர் செய்திகள்

temple

பிராம்மி
அக்டோபர் 08,2012

அ-
+
Temple images
templeபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.
நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர்.  சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.
பிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
பிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.
பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள்  கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.
பிராம்மி பாடல்:
பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.

பிராம்மி  என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:
ஆசன மூர்த்தி மூலம்
ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:
ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:

பிராம்மி காயத்ரி:
ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:
சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே

மூலமந்திரம்:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:

 
templetempleTemple images

மாகேஸ்வரிஅக்டோபர் 08,2012

சப்தகன்னியரில் மாகேஸ்வரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், கருங்குயில்நாதன் பேட்டை அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சக்திபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். தக்க யாகத்தில் இந்திரன் குயில் உருவங்கொண்டு வந்து வழிபட்ட தலம். சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் நோய் நீக்கும் சிறப்புடையது. தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. காவிரி வடகரையில் பூம்புகார்ப் பேருந்து சாலையில் உள்ளது கருணாபுரம் கருணாபேட்டை.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
போன் : 94435 23080.
மாகேஸ்வரி வழிபட்ட மற்றொரு தலம் தஞ்சாவூர் மாவட்டம், கோயிலடி அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன.  தலவிருட்சம் நெல்லிமரம். தீர்த்தம் சத்திய கங்கை. 
தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் கோயிலடி பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே ஒரு கி.மீ
மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு): மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி சிவபிரானைப் போன்றேமுக்கண் ஐந்துதிருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள். பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், பாம்பணி பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவள். வெள்ளை நிறமுடையவள்.
தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!

மாகேஸ்வரி பாடல்: சிரத்துமாமதி சூடிய தேவனைக் கருணா
புரத்து நாதனைப் புண்ணியமூர்த்தியைப் புகழ்சால்
உரத்து மேம்படும் மயேச்சரி பூசனை உஞற்றி
வரத்து மேதகு சிறப்பெலாம் பெற்றனள் வாழ்ந்தாள்.
மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா
ஆசன மூர்த்தி மூலம்:
ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:
காயத்ரி: ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:
 
Temple images

கவுமாரிஅக்டோபர் 08,2012

templeசப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் கல்யாண சுந்தரி, பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.
கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.
மயிலாடுதுறையிலிருந்து  4 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
கவுமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!
கவுமாரி பாடல்:
ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்
சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி
ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி
ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.
கவுமாரி ஸ்கந்தரி - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்:
ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:
காயத்ரி:
ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்:
சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:


TopTipsNews

 
Temple imagesசப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.
மயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.
வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.
விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!
நாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்து
விரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்
புரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்து
கரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.
நாராயணி (வைஷ்ணவி) - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:
காயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம




 
Temple images

வராகிஅக்டோபர் 08,2012

templeவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத் தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.  இவள் கருப்பு நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது.  வராஹியின் வரத, அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம்,  கபாலம், உலக்கை, நாகம் தாங்கியிக்கிறாள். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் ஆகும். இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம். வராகி பூஜித்த தலம்.
திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன் பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள். கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம் உடையவள்.
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்
மூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)
அம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி 
தலவிருட்சம் :தேவதாரு,வன்னி
தீர்த்தம் : பாதாளகங்கை
பாடியவர் : திருஞானசம்பந்தர்( வைப்புத்தலம்)
புராண பெயர் : தாருகா வனம்
மாநிலம் : தமிழ்நாடு
மாவட்டம் :   நாகப்பட்டினம் 
ஊர் :   திருவழுவூர்

திருவிழா :  மாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா
கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,
இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.
ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.
மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.
வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.
தல சிறப்பு :  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.
சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.
சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம்
திறக்கும் நேரம் : காலை 6  மணி முதல்   12  மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8   மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில்,
வழுவூர் - 609 401
நாகப்பட்டினம் மாவட்டம்
போன் :  99437 98083

பொது தகவல் : இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர். திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது. இத்தல விநாயகர் செல்வ  விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
பிரார்த்தனை : அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.
திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.
இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்தி கடன் : அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள்
கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல்,
சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம்
அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.
மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
தல பெருமை:
கஜசம்கார மூர்த்தி : இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு. இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம். சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.
சனிபகவான் : சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப்போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார்.இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார்.
சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம். சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும். கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.
யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார். 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது. சனீசுவரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம் தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது. பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.
தல வரலாறு : தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவர் கொண்டனர். அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர். முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை அழிந்தனர். பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார். முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர். வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு,பாம்பு , முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர். பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள். பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வருகிறார். அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் கஜசம்ஹாரமூர்த்தி எனப்படுகிறார்.
இருப்பிடம் : மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
மயிலாடுதுறை - 7 கி.மீ.
திருவாரூர் - 25 கி.மீ.
வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!
வராகி பாடல்: கரியின் தோல் திருமேனியிற் கவினுறப் போர்த்தி
அரியின் கண்ணடி அணிதரும் அண்ணலைச் சத்தி
புரியின் மேவிய பொருளினை வராகி பூசித்தாள்
தெரியின் மேம்படு வரமெலாம் சிறப்புறப் பெற்றாள்.
வாராகி விஷ்ணு அம்சி - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:
காயத்ரி: ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
temple

இந்திராணிஅக்டோபர் 08,2012

தருமபுரம் அருள்மிகு அபயாம்பிகை சமேத தருமபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். குருஞானசம்பந்தரால் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற தருமை ஆதீனம் இங்குள்ளது. தருமராஜா பூஜித்தது. எமன் சிவபிரானை வழிபடும் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. பதினெண்கரங்களோடு கூடிய துர்கை ஆலயம் இங்கு உள்ளது.
சந்திரனின் சாப நீக்கம் பெற்ற தலமும் கூட, மனோகாரகன் எனும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் சந்திரன், மனிதனின் மனத்தைக் குறிப்பிடுபவன். கலைகள், கற்பனைத் திறன் இவையெல்லாம் சந்திரனைப் பொறுத்தே அமைகின்றன. அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த பெருமான், அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர். பசுபதி கோயில் எனும் ஊரில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி கோயில் கொண்டுள்ளார். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் ஊருக்கு முன்பாக, சாலையிலிருந்து சற்று விலகி கிழக்குநோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். அம்பாள் ஆதி மூல அம்பிகையாக, மகாராணியாக, ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சப்த மங்கை தலங்களுள் பல்வேறு சிறப்புகளைப் பெற்று தனித்து விளங்குகிறது இந்தத் தாழமங்கை.
சப்த மங்கையர்களின் இந்திராணி எனப்படும் தாழமங்கை, தங்கியிருந்து வழிபட்ட சிவாலயம். அதனாலேயே கோயிலின் பெயர்கூட, தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் என்றுதான் இன்றுவரை பேச்சு வழக்கில் உலவுகிறது.
இந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள். யானைக்கொடி, யானை வாகனம் உடையவள்.
மயிலாடுதுறை செம்பொனார் கோயில் பேருந்துச்சாலையில் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
இந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்!
இந்திராணி பாடல்: கரம் விராய வச்சிரக் கவின்பெற்ற இந்திராணி
தரம் விராயபல்லுயிர்க்கு நன்கருள் திருத் தரும
புரம் விராய அற்புதன் அடிப்பூசனை புரிந்தாள்
பரம் விராய பல் வரங்களும் பண்புறப் பெற்றாள்.
இந்திராணி ஐந்தரி பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:
காயத்ரி: ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :
 
temple

சாமுண்டிஅக்டோபர் 08,2012

சப்தகன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வள்ளலார் கோயில் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். . தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. சாமுண்டி சிவன் அம்சம் உடையவள். மூன்று கண்களும் சூலம், கட்கம், அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட எட்டுக்கைகளும் உடையவள். சடாமகுடம் உடையவள். மகிடவாகனம் உடையவள்.
மயிலாடுதுறை நகரில்  வள்ளலார் கோயில் அமைந்துள்ளது.
மூலவர்: வதாரண்யேஸ்வரர், (வள்ளலார்)
அம்மன்: ஞானாம்பிகை
சிறப்பு: சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம்
ஊர்: மயிலாடுதுறை
மாவட்டம்: நாகப்பட்டினம்
தல வரலாறு: பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதரை வழிபாடு செய்து வந்தாள். அவளுக்கு அருள்பாலிக்க சிவன் ரிஷபத்தில் வந்தார். நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த ரிஷபத்திற்கு, தன்னால் தான் சிவபெருமானால் இவ்வளது தூரத்தை விரைவாக கடக்க முடிந்தது என்ற ஆணவம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவன், நந்தியின் ஆணவத்தை அடக்க தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தினார். உடனே நந்திதேவர் பாதாள உலகத்திற்கு போய்விட்டார். தனது தவறை உணர்ந்த நந்தி, தனக்கு இனிமேல் ஆணவம் ஏற்படாதவாறு ஞான உபதேசம் செய்ய இறைவனை வேண்டினார். அதற்கு சிவபெருமான்,நந்தி! இவ்வுலக மக்கள் அனைவரும் தங்களது பாவம் தீர கங்கையில் நீராடுவர். இந்த பாவங்களையெல்லாம் சேர்த்து கொண்ட கங்கை, தன் பாவத்தை ஐப்பசி மாத அமாவாசையன்று இத்தல காவிரியில் நீராடி போக்கி கொள்ளும். அப்போது காவிரியின் வடகரையில் தோன்றி, குருவாக இருந்து உனக்கு ஆணவத்தை அடக்கும் முறை பற்றி உபதேசம் செய்வேன்,என்றார். இதனால் இத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். குருவின் முன்னால் நந்தி: சிவசன்னதி, அம்மன் சன்னதியின் முன்பு தான் நந்தியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் தெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு நந்தி இருப்பதைக் காண முடியும். இவரை தரிசித்தால் ஆணவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல சிறப்பு: இத்தலம் காசிக்கு இணையானது என்றும், கைலாயத்திற்கு நிகரானது என்றும் புராணங்கள் கூறுகிறது.அன்னை பார்வதிதேவி சண்ட, முண்ட அரக்கர்களை வதம் செய்வதற்காக சப்த கன்னியர்களாக வடிவெடுத்தாள். அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தங்கள் தோஷம் நீங்க ஏழு சிவாலயங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்து தோஷம் நீங்க பெற்றனர். இவர்களில் சாமுண்டி வழிபட்ட தலம் வள்ளலார் கோயில் ஆகும். சாமுண்டி இங்கு அஷ்ட புஜ துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். ஞானாம்பிகை அம்மன் சன்னதியை சுற்றிலும் சப்தகன்னியரின் சுதை சிலைகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியன்று இங்கு சண்டிஹோமம் நடக்கிறது.
போன்: 04364-242 996
சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!
சாமுண்டி பாடல் : பாரமேருவிற் பரமனைப் பரவும் உத்தரமா
யூரநாதனை உம்பர்கள் தம்பெருமானைத்
தீரமேதரு சாமுண்டி பூசனை செய்து
வாரம்மேய பல்வரங்களும் பெற்றுளம் மகிழ்ந்தாள்.
சாமுண்டி பைரவி பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:
காயத்ரி: ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;
சூல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, காளீ ப்ரசோத யாத்
தியான ஸ்லோகம்: சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;
கபால சூல ஹஸ்தா;
ச வரதாபய பாணிநீ;
ஸிரோமாலா உபவீதா ச
பத்ம பீடோ பரிஸ்திதா;
வ்யாக்ர சர்மாம்பர தரா
வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;
வாம பாத ஸ்திதா, ஸர்வா
ஸவ்ய பாத ப்ரலம்பிதா;
நவாமி சாமுண்டா தேவிம்
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம

No comments:

Post a Comment