For Read Your Language click Translate

Follow by Email

30 September 2014

ஜோதிட பலன் சொல்ல 16 சக்கரங்கள் அவசியமா?

பராசர  முனிவர் எழுதிய பராசர ஹோரையில் 16 விதமான சக்கரங்களை (திரேகோணம், ஓரை, சப்தம்சம், தசாம்சம் , துவாத சாம்சம், போன்றவை) ஆராய்ந்து பலன் சொல்லvendumendrum  அப்பொழுது தான் ஜாதக பலன் துல்லியமாக அமையுமென்றும் கூறப்பட்டுள்ளது . ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் rasi, அம்சம், மட்டுமே ஆராய்ந்து பலன் சொல்லுகிறார்களே இது சரியா ? இந்த சந்தேகம் பலர்க்கும் உண்டு . மருத்துவத்தில் அந்த காலத்தில் கை நாடியை பார்த்தே என்ன நோய் என்றறிந்து சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் மருந்து கொடுப்பார்கள் . ஆனால் தற்போது ஆங்கில மருத்துவர்களும் என்ன செய்கிறது என்று நோயளியிடமே கேட்டு  தெரிந்து கொண்டு மருந்து சொல்லுகிறார்கள். அப்படி கொடுக்கப்படும் மருந்துகளும் மெடிக்கல் பிரதிநிதிகள் வந்து கொடுக்கும் மருந்துகளைத்தான் அதன் காம்பினேசனை தெரிந்து கொண்டு நமக்கு எழுதி கொடுக்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஏற்கனேவே நோயாளிகளுக்கு கொடுத்து வந்த அனுபவத்தை வைத்தும் எழுதி கொடுப்பார்கள். அது எல்லாருக்கும் ஒத்து வருவதில்லை . சிலருக்கு ஓவர் dosh ஆகும். சிலருக்கு உடனே வேலை செய்யும். சிலருக்கு எந்த பலனும் இருக்காது. அதனால் மறுபடி அவர்கள் மாற்று மருந்தை எழுதி தருவார்கள் .


இதே நிலை தான் ஜோதிடத்திலும் ராசிக்கட்டம், நவாம்சக்கட்டம் இருந்தாலே போதும் . ஜாதகருடைய பலனை துல்லியமாகச் சொல்லி விடலாம். நவாம்சக்கட்டதில் அந்த கிரகம் எந்த பாத சரத்தில் இருக்கிறதென்று தெரிவதற்குத்தான், இந்த இரு கட்டங்களையும் விஹி முடிவு  செய்ய தெரியாதவர்கள் மற்ற சக்கரங்களை வைத்து என்ன செய்ய போகிறார்கள்.அதற்காக முன்னோர்களும் முனிவர்களும் ஜோதிட மாமேதைகளும் திரேகோணம், தசாம்சம் , துவாத சாம்சம்,என்று வகுத்துவைத்தது பைத்தியக்காரதனமல்ல ! இன்றைக்குள்ள ஜோதிடர்களில்  ஒரு சிலருக்கே பராசரர் சொன்ன 16 விதமான கணிதங்கள் தெரியும். இந்த முறைகளையெல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் , அதற்கு பலாபலன் தெளிவாக முழுமையாக தெரியுமா என்பது சந்தேகமே . அவ்வளவு குறுகிய காலத்தில் ஜோதிடக் கலையை கற்றுக்கொடுத்து விட முடியுமா? சுருதி , யுக்தி அனுபவம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜோதிடருக்கு வாக்குப்பலிதம் ஏற்பட உபாசனா   சக்தியும் அவசியம். அது போல ஜாதகனுடைய விதியை தீர்மானிப்பது ராசியும் நவாம்சமும்  தான் , மற்றவையெல்லாம் நடைமுறைக்கு வெறும் அலகாரம் தான். மேலும் இதில் முக்கியமான ஒரு ரகசியம் உண்டு. எந்த சக்கரம் போட்டாலும் அது ராசிக்கட்டத்தை அடிப்படையாக வைத்தே கணிக்க வேண்டும் . ராசி சக்கரத்தை ஒன்பது விதமக்குவது நவாம்சம் , மூன்று பாகமாக்குவது திரேகோணம், பாத்து பாகமக்குவது தசாம்சம் , ஏழு பாகமாக்குவது சப்தாம்சம், இரண்டு பாகமாக்குவது ஓரை, கிரஹங்களின் பாகை, கலை (டிகிரி) வைத்து மேலே கண்ட சக்கரங்களை அமைக்கலாம்.


ஒரு ராசியிலுள்ள இரண்டே கால் நட்சத்திரத்தில் ஒன்பது பாதம் உனு. ஒரு பாதத்துக்கு 3 பாகை, 20 கலை உண்டு. கிரஹஷ்புடம் செய்யும் போது கிரஹங்களுக்கு எத்தனை டிகிரி இருக்கிறதோ அதைக்கொண்டு  நவாம்சம் , திறேகோணம், சப்தம்சம், தசாம்சம், துவாதசாம்சம், சோடாம்சம்  போன்றவற்றை கணிக்க வேண்டும்.ஒரு நோயாளியின் நோய்தன்மையை தெளிவாகதெரிந்து கொள்ள இயலாத நிலையில் ப்ளூட் டெஸ்ட், x-ray scan, என்று

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு..!

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு..!
அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்...
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

நம் உடலுக்கான கால அட்டவணை இதோ!.


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்....
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

21 September 2014

பாம்பு கனவில் வந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்::மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளின் ஒரு பகுதியே கனவுகளாக வெளிப்படுகிறது. பாம்புகளை அடிக்கடி கனவில் பார்ப்பது ஒரு வகையில் நல்லது என்றே சொல்லப்படுகிறது.....

1.ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2.இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3.பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.இதேபோன்று கனவில் கரும்பூனையை(முற்றிலும் கருப்பாக இருக்கும் பூனை) பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கனவில் மட்டுமின்றி சாதாரணமாகவே அதுபோன்ற பூனையைப் பார்ப்பது நல்லதாம்....!

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்
அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.


19 September 2014

லக்னத்தை கண்டறிவது எப்படி ?

லக்னத்தை கண்டறிவது எப்படி ?

நீங்கள் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் ‘ல’ என்று குறிப்பிட்டு இருப்பதுதான் லக்னம் என்பதாகும். இந்த லக்னத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஜாதகப் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
இந்த லக்னத்தைக் கண்டறிவது எப்படி என்று பார்ப்போம். சூரியனின் நகர்வை 360 பாகைகளாகப் பகுத்து ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகைகள் வீதம் 12 ராசிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒரு பாகை என்பது 4 நிமிடங்களைக் கொண்டதாகும். 30 பாகைகள் 120 நிமிடங்களாகும். ஆக, ஒரு ராசிக்கான லக்னம் என்பது சுமார் 2 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு லக்னத்துக்குமான நேரக் கணக்கீடு சற்றே கூடவோ குறையவோ செய்யலாம். ஒவ்வொரு லக்னத்துக்குமான கால அளவு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒரு மாதத்தில் சூரியன் எந்த ராசியில் அமைந்திருக்கிறதோ, அந்த ராசிதான் உதய லக்னமாக அமையும். உதாரணமாக, ஒருவர் சித்திரை மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்குப்  பிறப்பதாக வைத்துக் கொள்வோம். சித்திரை மாதம் சூரியன் தன் உச்ச வீடாகிய மேஷத்தில் இருப்பார். எனவே, அந்த ஜாதகரின் ஜனன லக்னம் மேஷம் ஆகும். அதே நாளில் ஒருவர்் 8.30 மணிக்குப் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது மேஷ லக்னம் முடிந்து ரிஷப லக்னம் தொடங்கி இருக்கும். எனவே, அந்த ஜாதகரின் ஜனன லக்னம் ரிஷப லக்னம் ஆகும்.

சித்திரை மாதத்தின் முதல் நாள் மேஷ லக்னத்துக்கு 30 பாகைகள் இருக்கும் என்பதால், ஒரு பாகைக்கு 4 நிமிடங்கள் வீதம் 120 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் மேஷ லக்னம் ஆகும். அடுத்த நாள் மேஷ லக்னத்துக்கு ஒரு பாகை குறைந்து விடுவதால், அடுத்த நாள் மேஷ லக்னம் 1 மணி 56 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.
சித்திரை மாதம் 15-ம் தேதி மேஷ லக்னத்துக்கான பாகைகள் 15 மட்டுமே. எனவே அன்று மேஷ லக்னம் 1 மணி நேரம் மட்டுமே இருக்கும். சித்திரை மாதம் 1-ம் தேதி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் பிறப்பவரின் ஜன்ம லக்னம் மேஷம் என்றால், அதே ஜாதகர் சித்திரை மாதம் 15-ம் தேதி 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பிறந்தால்தான் அவருடைய ஜன்ம லக்னம் மேஷமாக இருக்கும். 7 மணிக்கு மேல் ஆகிவிட்டால், அவருடைய ஜன்ம லக்னம் ரிஷபமாக இருக்கும். இப்படி ஒரு நாளில், சுமாராக  ஒவ்வொரு 2 மணிநேரத்துக்கும் லக்னம் மாறிக் கொண்டே இருக்கும்.
வைகாசி மாதம் சூரியன் ரிஷப ராசியில் இருப்பதால் உதய லக்னம் ரிஷபம் ஆகும். இப்படியே ஆனி மாதம் மிதுனம்; ஆடி மாதம் கடகம்; ஆவணி மாதம் சிம்மம்; புரட்டாசி மாதம் கன்னி; ஐப்பசி மாதம் துலாம்; கார்த்திகை மாதம் விருச்சிகம்; மார்கழி மாதம் தனுசு; தை மாதம் மகரம்; மாசி மாதம் கும்பம்; பங்குனி மாதம் மீனம் என்று உதய கால லக்னமாக அமையும்.
லக்னத்தைக் கொண்டுதான் பன்னிரண்டு பாவங்களின் பலாபலன்களைக் கணிக்க வேண்டும் என்பதால், லக்னத்தைத் துல்லியமாகக் கண்டறிவது அவசியம்.

வருங்கால கணவர் இப்படித்தான்!

வருங்கால கணவர் இப்படித்தான்!

ண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பார்கள் ஆன்றோர்கள். நம் வாழ்வில் எண்களுக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த அடிப்படையிலேயே எண்ணியல் ஆய்வாளர்கள் பலரும் எண்கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள். எண்கணித ஜோதிடத்தின் முக்கிய அங்கங்களாக பிறவி எண்ணையும் விதி எண்ணையும் குறிப்பிடுவார்கள். இவற்றைப் போன்று லக்ன எண்ணையும் கவனத்தில் கொண்டால், விரிவான பலாபலன்களை அறிய முடியும் என்கிறார்கள், சில எண்கணித ஆய்வாளர்கள்.
இங்கே, லக்ன எண் அடிப்படையில்… கல்யாணத்துக்குக் காத்திருக்கும் கன்னிப்பெண் களுக்கு, அவர்களுடைய வருங்கால கணவருடைய இயல்புகளை அறியும் விதமாக ஓர் அட்டவணையையும், உரிய பலாபலன்களையும் கொடுத்திருக்கிறோம். பலனை அறிய விரும்புவோர் முதலில் பெண்ணுக்கான லக்னத்தை தெரிந்துகொள்ள வேண்டும் (பிறந்த வேளையில் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே லக்னம் ஆகும்). ஜாதகத்தில்- ராசிக்கட்டத்தில் ‘ல’ என்ற குறிப்பை வைத்து லக்னத்தை அறியலாம். உதாரணமாக ‘ல’ எனும் குறியீடு மேஷ ராசிக்கான கட்டத்தில் இருந்தால், அந்த ஜாதகரின் லக்னம் மேஷம் ஆகும் (உதாரணப் படமும் இங்கே இடம்பெற்றுள்ளது).
லக்னத்தை அறிந்துகொண்டீர்களா? இனி, அட்டவணையில் உங்கள் லக்னத்துக்கு உரிய லக்ன எண், கணவர் எண், அதிபதியை கவனியுங்கள். உதாரணமாக உங்கள் லக்னம் மேஷம் எனில்… லக்ன எண் – 9; கணவர் எண் – 6; கணவருக்கான அதிபதி சுக்ரன். ஆக ‘சுக்ரன்’ தலைப்பிலான பலா பலன்கள், உங்களின் கணவரது இயல்பைச் சொல்லும்.
இனி பலாபலன்களை தெரிந்துகொள்ளலாமா…
சூரியன்: கள்ளம் கபடமறியா கும்ப லக்னக்காரர்களுக்கு கணவருக்குரிய எண் சூரியனை குறிக்கும் ஒன்றாம் எண்ணாகும். இவர்களுக்கு அமையும் கணவர் முன்கோபக்காரர். இவரை புரிந்துகொள்வது கடினம். குடும்பப் பற்று உள்ளவர். பெரும்பாலும் பொருத்தமில்லாத கணவரே அமைவர். சித்திரை மாதம் பிறந்த பெண்கள் எனில், கணவருடன் அடிக்கடி வாக்குவாதங்கள்  ஏற்பட வாய்ப்பு உண்டு. ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் எனில், உங்கள் பேச்சுக்கு அடங்கிநடக்கும் கணவர் வாய்ப்பார்.
பரிகாரம்: தினம் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு. இதனால், அன்பான கணவர் வருவார். சூரிய பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்வதும், சூரியனார் கோயில் சென்று தரிசித்து வருவதும், நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற்றுத் தரும்.
சந்திரன்: எதிலும் முன்யோசனை, தன்னம்பிக்கைக் கொண்ட மகர லக்னக்காரர் களுக்கு கணவரின் எண் சந்திரனின் இரண்டாம் எண்ணாகும். பொருத்தமான கணவர் கிடைப்பார். வாழ்க்கையில் மற்றவர்களைவிட ஒருபடி மேலே இருக்கவேண்டும் எனும் துடிப்பும், முயற்சியும் கொண்டவராக திகழ்வார். நீங்கள் உங்களின் பிடிவாதக் குணத்தை மாற்றிக்கொண்டால் குடும்பம் மேன்மை பெறும். ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் எனில், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நல்ல கணவர் வாய்ப்பார். கடக ராசியில் பிறந்த பெண்கள் எனில், உங்கள் கணவர் கற்பனா சக்தி மிகுந்தவராகத் திகழ்வார்.
பரிகாரம்:  மூன்றாம் பிறை வழிபாடு,  அழகான – அன்பான கணவர் கிடைக்கச் செய்யும். சந்திரனார் கோயிலுக்குச் சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்வதால் தீர்க்க சிந்தனையுள்ள கணவர் வாய்ப்பார்.

குரு: எதையும் எளிதில் கிரகித்துக்கொள்ளும் மிதுன லக்ன பெண்கள் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு கணவரின் எண் குருவின் மூன்றாம் எண்ணாகும். மிதுன லக்னக் காரர்களுக்கு தாமத திருமணம்தான் சிறப்பான கணவரைத் தரும். குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் அமையும். கன்னி லக்னக்காரர்களுக்கு இன்பகரமான குடும்ப வாழ்க்கை கிடைக்கும். பிரியமான, அடக்கமான கணவர் அமைவார். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்வர்.
பரிகாரம்: மிதுன, கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பாதகாதிபதி என்பதால் வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். திருச்செந்தூர் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
புதன்: தனுசு மற்றும் மீன லக்னக் காரர்களுக்கான கணவரின் எண் புதனின் ஐந்தாம் எண்ணாகும். புதன் இவர்களுக்கு பாதகாதிபதியாக வருவதால், தாமதத் திருமணம் நல்ல கணவரைத் தரும். இல்லையெனில் அதிருப்தியுடன் வாழ நேரிடும். கணவர் அறிவாளி. அவர் விருப்பப்படியும் சொல்படியும் நடந்தால் நன்மை. அவரது கருத்துக்கு இணைந்து செயல்பட்டால், வாழ்க்கை இனிக்கும்.
பரிகாரம்: மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையையும் ஸ்ரீசொக்கநாதரையும் வழிபட்டு வாருங்கள். நவக்கிரகத்தில் புதபகவானை வழிபடுவதால் நன்மைகள் வந்து சேரும்.
சுக்கிரன்: குடும்ப பொறுப்புமிக்க மேஷ லக்னக்காரர்கள் மற்றும் சுய மரியாதை மிக்க விருச்சிக லக்னக்காரர்களுக்கான கணவரின் எண், சுக்ரனுக்கு உரிய ஆறாம் எண்ணாகும். மேஷ லக்னம் எனில், குடும்பப் பற்று மிக்க கணவர் வந்துசேர்வார். அவருக்கு பெண்கள் விரோதிகளாக இருப்பர். குடும்பப் பொறுப்புக்களை நீங்களே ஏற்கவேண்டியது இருக்கும். விருச்சிக லக்னக்காரர்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு கிடைக்காது. உறவினர்களால் கணவரிடம் அந்நியோன்யம் குறையும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதர் – ஸ்ரீரங்கநாயகி தரிசனம் நன்மை அளிக்கும். நல்ல பண்புள்ள கணவர் வாய்ப்பார். வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள கோயிலுக்குச்சென்று நவக்கிரகங்களில் சுக்ரபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வரப்போகும் கணவருக்கு வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

சனி: எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய கடக லக்னக்காரர்கள் மற்றும் சுதந்திர விரும்பிகளான சிம்ம லக்னக்காரர்களின் கணவருக்கான எண் சனியின் எட்டாம் எண் ஆகும். கடக லக்னக்காரர்களுக்கு மாற்று சிந்தனையும், பாசமும் மிகுந்த கணவர் வாய்த்தாலும் திருப்தி அடையமாட்டார்கள். சிம்ம லக்னக்காரர்களுக்கு  மனதுக்கு இனிய கணவர் வாய்ப்பார். உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டார். நீங்களும் அவரிடம், உங்களின் தூய அன்பைப் பரிமாறிக்கொண்டால், வாழ்வில் நடப்பதெல்லாம் நன்மையாகவே அமையும்.
பரிகாரம்: காக்கைக்கு சனிக்கிழமை தோறும் தயிர்சாதத்தில் கருப்பு எள் கலந்து படையுங்கள். இதனால் நல்ல கணவன் அமைவார். திருநள்ளாறு சனிபகவான் தரிசனமும் வழிபாடும் நல்ல நிலையில் உள்ள கணவன் அமைய வழிவகுக்கும்.
செவ்வாய்: திடமான மனதுடைய ரிஷப லக்னக்காரர்கள் மற்றும் உழைத்து வெற்றி பெறும் துலா லக்னக்காரர்களுக்கான கணவரின் எண் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற ஒன்பதாம் எண்ணாகும். முன்கோபம், பிடிவாத குணம்கொண்ட கணவர் அமைவார். அவர்கள், நினைத்ததைச் சாதிக்கும் வல்லவர்களாகத் திகழ்வார்கள். ரிஷப லக்னக்காரர்களின் கணவர் சுறுசுறுப்பானவர். எனினும் எடுத்தெறிந்து பேசக்கூடியவராக இருப்பார். ஆனாலும் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகவே இருக்கும். துலா லக்னக்காரர்களுக்கு உங்கள் மனதுக்கு இனிய கணவர் வாய்ப்பார். அவர்களுடைய சாமர்த்தியத்தால் குடும்பம் செழித்துச் சிறக்கும்.
பரிகாரம்: பழநி முருகனை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  சங்கடஹர சதூர்த்தி விரதமிருப்பதும் நலம். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் ஸ்ரீதுர்கை அம்மனை வழிபட்டு வந்தால், நல்ல குணசாலியும் திறமைசாலியுமான கணவர் வாய்ப்பார்.
நன்றி-சக்தி விகடன்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்! காலக் கணிதத்தின் சூத்திரம்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்! காலக் கணிதத்தின் சூத்திரம்

ர்க்கடக ராசி லக்னமாகவோ, சந்திரன் இருக்கும் ராசியாகவோ அமைந்து, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருப்பாள். ஓவியங்களின் வாயிலாக தனது சிந்தனையை வடிவமைப்பவளாக இருப்பாள். எண்ணத்தில் இருக்கும் தத்துவ விளக்கத்தை, ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவதில் திறமை அதிகமாகக் காணப்படும் என்கிறார் வராஹமிஹிரர் (சில்பினீ).
பக்தி, பணிவு, உற்றார், உறவினர், புத்தி, யுக்தி, கணிதம், வேதாந்தம், அறிவு, வார்த்தைகள், தேவதைகளை உபாசனை செய்வதில் ஆர்வம், உண்மை உரைத்தல், சிற்பக்கலை, இளவரசர், நண்பர்கள், மருமகன் (அக்கா-தங்கைகளின் புதல்வன்) படித்தவர்களின் பாராட்டு, விஷ்ணுபரமான செயல்பாடுகள், கதை, கட்டுரை, விமர்சனம், எடுத்துக்காட்டு, கட்டுரையின் தர நிர்ணயம், நகைச்சுவை, மருத்துவம், அமைதி ஆகிய விஷயங்களை புதனை வைத்து இறுதி செய்வார்கள். இவற்றில் சிற்பக்கலையில்… புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் தனித்திறமை பெற்றிருப்பாள் என்பதை விளக்குகிறது ‘சில்பினீ’ என்ற செய்யுள்.

அறிவும்… ஆர்வமும்!
அறிவுபூர்வமான விஷயங்களில் ஆர்வம் அதிகமாகி, தத்துவ விளக்கங்களில் பல கண்ணோட்டங்களை விளக்கி, உள்ளதை உள்ளபடி விவரிக்கும் திறமையை புதன் அளிப்பான். அவளுக்கு அந்தத் திறமை இருப்பதை புதன் சுட்டிக்காட்டுகிறான் என்றும் சொல்லலாம் (க்ரஹா: ஸுசயந்தி). ஆழமாக ஆராயும் அறிவுக் கூர்மையை மறை முகமாகச் சொல்கிறது ‘சில்பினீ’ என்ற சொல். சிற்பத்தில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி துல்லியமான ‘பாவ’த்தை வெளிக்கொண்டு வருவதற்கு அறிவுக் கூர்மை அவசியம். இப்படியும் சொல்லலாம்… ஜடப் பொருளை சைதன்யப் பொருளாக மற்றவர்கள் உணரும் படி செய்வது என்பது, தனித் திறமையால் வரவேண்டிய ஒன்று. ஆராயும் திறமை இருப்பதால் உண்மையை ஏற்பதும், பொய்யை விலக்குவதும் சுலபமாகிவிடும். செம்மையான தாம்பத்திய வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான ‘விவேகம்’ அதாவது பகுத்து அறிதல் இருப்பதை, ‘சில்பினீ’ என்ற சொல் விளக்குகிறது.
அனசூயை, நளாயினி, குந்தி, சாவித்ரி, சீதை போன்றவர்கள் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியில் திறமையை எட்டியவர்கள். ‘பதிவிரதை’ என்ற சொல்லுக்கு, ‘கணவனுக்கு அடிமை’ என்று பொருள் கொள்ளக்கூடாது. கணவன் சொல்லுக்கு செவி சாய்த்து, அதை ஆராய்ந்து தத்துவ விளக்கத்தை உணருபவள் அவள். திரௌபதி சபையில் வாதம் செய்ததும், அனசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகள் ஆக்கியதும், ஸ்ரீராமனுக்கும் அவருடைய புதல்வர்களான லவ – குசர்களுக்கும் இடையேயான மோதலை சீதை முடிவுக்குக் கொண்டு வந்ததும், சாவித்ரி யமனோடு வாதாடியதும் அவர்களுடைய சிந்தனை வளத்துக்கு எடுத்துக்காட்டு.
புராணம் காட்டும் பதிவிரதைகள்
இவர்கள், சிற்றின்பத்தின் ஈடுபாட் டில் வரையறையுடன் இருப்பதில் இருந்து நழுவாத மனப்போக்கை உடையவர்கள். அவர்களுடைய சிந்தனை வளம் குன்றாமல் இருக்க… கணவனைத் தவிர மற்றவர்களுடன் சிற்றின்பத்தை பங்குபோடாதவர்கள். சிற்றின்பத்தில் ‘தாதுஷயம்’ (அதாவது பீஜம், சோணிதம் ஆகிய இரண்டும் தாதுகீகள். அதன் ஷயம்- குறைவுபடுதல்) ஏற்பட்டால் சிந்தனை வளம் குன்றிவிடும். ஆனால், நாம் எடுத்துக்காட்டியது போன்ற மாதரசிகள் முனிவர்கள் போல், தங்களது சிந்தனை வளத்தால் எதிரிகளை வென்றுவிடுவார்கள். அந்தத் திறமையை வளர்த்தது ‘பதிவிரதை’ என்கிற தகுதி. அது புத த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளில் தென்படும்.
கிளிப்பிள்ளை போன்று கணவன் சொன்னதை அடிமை போல் அனுசரிப் பதை, ‘பதிவ்ரதை’ என்று சொல்ல இயலாது. தனது சிந்தனையில் தெளிவு ஏற்பட்டு, கணவன் சொல்லுக்கு மதிப்பு அளிப்பவள் அவள். விவேகம் இருக்கும் இடத்தில்தான் அதைக் காண இயலும். அப்படியான விவேகத்தின் அளவை, புதனை வைத்து வரையறுக்கவேண்டும்.
புத யோகம்… சந்திர கிரகணம்!
‘சந்திரனைப் பிடிக்க முற்படும் கேதுவுக்கு (சந்திர க்ரஹணம்) புத யோகம் வந்தால், கேது முயற்சியில் இருந்து நழுவுவான்; க்ரஹணம் நிகழாது’ என்று முத்ராராக்ஷஸ நாடகத்தில் விசாகதத்தன் கூறுவான் (க்ரூரக்ரஹ: ஸகேது: சந்திரமஸம் பூர்ணமண்டல மிதானீம் அபிபவிது மிச்சதி பலாத் ரஷத்யேனம்து புதயோக:). ‘கிரகணத்தின் பிடியிலிருந்து சந்திரனை விடுவிக்கிறான் புதன்’ என்று விளக்கம் அளிப்பார்கள். ஆபத்திலிருந்து வெளிவருவதற்கு ஏற்ப சிந்தனை வளம் செயல்படும் என்பதை மறைமுகமாக புத யோகம் (புதனின் சேர்க்கை) விளக்குகிறது.
மும்மூர்த்திகளின் விருந்துக்கு ஏற்பாடு செய்தாள் அனசூயை. அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். அதாவது, ‘எங்களுக்கு உடையைக் களைந்து ‘நக்னமாக’ உணவு பரிமாற வேண்டும்’ என்றனர். சிந்தனை வளம் பெற்ற அனசூயை, மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள்; ஆபத்திலிருந்து வெளிவந்தாள். பெண்மையை ரசிக்கும் திறன் குழந்தைக்கு இருக்காது. சாவித்ரியும் சிந்தனை வளத்தால் வென்றாள். இதுபோன்ற திறமைகளை புத யோகம் அளிக்கும். புத த்ரிம்சாம்சகம் அவளை சிந்தனைச் சிற்பியாகக் காட்டித் தந்தது.
புதனுக்கும் ‘மௌட்யம்’ உண்டு!
த்ரிம்சாம்சகம் அல்லாத தொடர்புகள், பல நல்ல இயல்புகளை வெளிப்படுத்தும். புதனுக்கும் ‘மௌட்யம்’ வரும். மௌட்யம் என்றால் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிந்தனை செயல்படாமல் இருப்பது என்று சொல்லலாம். சிந்தனை வளம் அற்றவளையும் அப்படிச் சொல்லலாம். பிறப்பில் மௌட்யம் இருந்தால் சிந்தனை வளம் பெறாதவள். சூரிய சேர்க்கையில் ‘மௌட்யம்’ வந்தால், சிந்தனை வளம் செயல்படாமல் போய்விடும். தனது தகுதியை இழந்துவிடுவாள். பாபக் கிரகச் சேர்க்கையில் சிந்தனை வளம் குன்றாது; விபரீத சிந்தனையில் துயரத்தைச் சந்திக்கவைக்கும். மௌட்யத்தில் இருந்து வெளிவந்தால் நல்ல சிந்தனை திரும்பவும் வளரும். சத்ரு வீட்டில் அமைந்த புதன், 6, 8, 12-க்கு அதிபதியாக இருக்கும் புதன், அஸ்தமனமான புதன், பாப யோகத்தில் இருக்கும் புதன்… இந்த இடங்களில் எல்லாம் மாறுபட்ட பலனை அளிப்பதில் சிந்தனை திரும்பிவிடும். உச்ச புதன், நீசபங்கம் அடைந்த புதன், கேந்திரகோணாதிபத்யம் உள்ள புதன்… இவை அத்தனையும் சுய சிந்தனையை விருத்தி செய்து, பல நன்மைகளை வாரி வழங்கும் தகுதியைப் பெறும்.
புதனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. 4-வது கேந்திரத்தில் மகிழ்ச்சியைக் கெடுப்பான். சூரியனுக்கு முன்னும் பின்னுமாக அதிக இடைவெளியில்லாமல் பயணிப்பான் புதன். சூரியனின் நெருக்கத்தில் அடிக்கடி அஸ்தமனத்தை ஏற்கவேண்டியது வரும். ஆனால், அவன் சேர்க்கையில் புதனுக்கு நிபுண யோகம் என்ற தகுதியுண்டு என்கிறது ஜோதிடம். நிபுண யோகத்துக்கு, இக்கட்டான சூழலில் இருந்து விடுபடும் தகுதி உண்டு.
அகப்பட்டவனும் ஓடிப்போனவனும்!
‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு; ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு’ – என்ற சொல் வழக்கு அர்த்தமுள்ள ஒன்று. 8-ல் வந்த குரு தப்பான இடத்தில் அமர்ந்ததால், தன்னிச்சையான செயல்பாடு தடைப்பட்டது. ராசியின் தரத்துக்கு ஏற்பச் செயல்படும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் சிக்கலில் அகப்பட்டுத் திணறுகிறான். 9-ல் வந்த குரு – தன்னிச்சையாகச் செயல்படும் திறன் குன்றாமல் இருப்பது. ஐந்துக்கு ஐந்தான பூர்வபுண்ய ஸ்தானத்தின் ஐந்தான பாவாத்பாவத்தில்- ஒன்பதில் இருப்பதால் சிக்கலில் சிக்காமல் வெளிவந்து விடுகிறான். அதில் அகப்படாமல் ஓடிப்போய் விடுகிறான் என்கிறது அந்த விளக்கம். சுப கிரகமான குருவின் ராசி சம்பந்தத் தால் ஏற்படும் விபரீத விளைவுகளும் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது அது.
புதன் த்ரிம்சாம்சகத்தின் தொடர்பால் ஏற்படும் தனி விளைவையும் சுட்டிக்காட்டுகிறது. ராசியின் 60, 30, 15, 12, 10, 9, 7 போன்ற பிரிவுகள் த்ரிம்சாம்சகத்தை ஒட்டி வந்தாலும், பலனை நிர்ணயம் செய்வது புத த்ரிம்சாம்சகம் என்று விளக்குகிறது. வெப்ப கிரகங்களும் தட்ப கிரகங்களும் த்ரிம்சாம்சகத்தோடு இணைந்திருந்தாலும், அவற்றின் சேர்க்கையில் புதனின் மாறுபாடு எப்படி இருக்கும் என்பதை த்ரிம்சாம்சகமே நிர்ணயிக்கும்.
‘குளிர்ந்த நீரில் வெந்நீர் விடுக’
வெப்பம் – தட்பத்தின் தாக்கத்தில் மாறுபாடு, தட்பம் – வெப்பத்தின் தாக்கத்தில் மாறுபாடு – இவை இரண்டும் ஒரே மாறுபாட்டைத் தோற்றுவிக்காது. ‘குளிர்ந்த நீரில் வெந்நீரை விடு’ என்கிறது சாஸ்திரம் (உஷ்ணா: சீதாஸ்வாளீய). தட்பமும் வெப்பமும் சந்திக்கும் விஷயத்தில் பாகுபாடு உண்டு. குளிர்ச்சியில் வெந்நீர் கலக்கும்போது, குளிர்ச்சியின் தாக்கத்தால் வெந்நீரின் வெப்பம் மாறுபாட்டை உண்டு பண்ணும் சக்தியை இழந்துவிடும். வெந்நீரில் குளிர்ந்த நீரை இணைக்கும்போது, வெப்பம் தனது மாறுபாட்டை நடைமுறைப்படுத்துவதில் தடங்கல் இருக்காது என்ற தகவலை வெளியிடுகிறது சாஸ்திரம்.
சரிசமமான சேர்க்கையும் கூட விபரீத பலனை ஏற்படுத் தும் என்கிறது ஆயுர்வேதம். தேன், கபத்தைக் கரைக்கும். நெய், அக்னி பலத்தை வளர்க்கும். இரண்டும் நமக்குத் தேவையானதுதான். ஆனால் அதன் சேர்க்கை சமமாக இருந் தால் (அளவில் அல்ல தகுதியில்) விஷமாக மாறிவிடும் என்கிறது ஆயுர் வேதம். வெப்ப தட்ப கிரகங் களின் சேர்க்கையில், இரண்டில் ஒன்றின் தரம் வெளிப்படலாம். சேர்க்கையில் எதிரிடையான பலனும் வெளிப்படலாம். நமது சிந்தனையின் அளவு கோலின் அல்லது நமது அனுபவத்தின் கண்ணோட்டத்தில் அதன் வெளிப்பாட்டை நிர்ணயிக்க இயலாது. ஜோதிடம் சொல்லும் பலனை ஏற்க வேண்டும். ராசியின் தசவித பிரிவு களில் வெப்ப- தட்ப கிரகங்களின் இணைப்பு, நுணுக்கமான பல மாறுதல்களுக்கு வித்திடும். போதுமான ஆராய்ச்சியோடு அணுகினால் அவை நமக்குப் புலப்படும்.
கர்க்கடக ராசியில் புத த்ரிம்சாம்சகம்…
கர்க்கடக ராசியில் (இரட்டைப்படை ராசியில்) 5 பாகைக்கு மேல் 12 பாகை வரை புத த்ரிம்சாம்சகம். ஹோரையில் சந்திரன். முதல் த்ரேக்காணத்திலும் 10 பாகை வரையில் சந்திரன்தான். ராசியிலும் சந்திரன் பரவியிருப்பான். சதுர்த்தாம்சம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷஷ்ட்யம்சம் ஆகியவற்றில் வெப்பக் கிரகத்தின் சேர்க்கையும் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் பலனை இறுதி செய்யும் தகுதியானது, த்ரிம்சாம்சகத்தில் இணைந்திருக்கும்.
மொத்தம் 30 பாகைகளில் வெப்பக் கிரகத்துக்கு 10 பாகைகளும் (செவ்வாய்- 5, சனி- 5), தட்பக் கிரகத்துக்கு 20 பாகைகளும் (குரு-8, புதன்-7, சுக்கிரன்-5) த்ரிம்சாம்சகத்தில் அடங்கும். ஒற்றைப் படை ராசி மற்றும் இரட்டைப்படை ராசி என்ற பாகுபாட்டில் வெப்ப – தட்பக் கிரகங்களின் எண் வரிசை மாறுமே ஒழிய, ’10 : 20’ என்ற பிரிவு அப்படியே இருக்கும். நிசர்க்க சுபனான குருவுக்கு எண்ணிக்கையில்  அதிக இடமாக 8 உண்டு. அடுத்து சுபக் கிரகங்க ளில் புதனுக்கு 7 எண்ணிக்கை இருக்கும் (ஆன்மிக வாழ்விலும் லோகாயதத்திலும் அவன் பங்கு உண்டு. அறிவுபூர்வமான ஆராய்ச்சி லோகாயத வாழ்க்கைக்குத் தேவை. பேரறிவை எட்டுவது, வாழ்வின் குறிக்கோள் இரண்டிலும் பங்கு பெறுகிறான் புதன்). உலகவியல் சுகபோகங்களை வாரி வழங்கும் தகுதியோடு நில்லாமல், சிற்றின்பத்துக்கும் காரகனாக இருக்கும் தகுதியும் சேர்ந்து, அவன் (சுக்ரன்) அடுத்த படியில் இறங்கி வருவதால், சுக்கிரன் 5 என்ற எண்ணிக்கையோடு முற்றுப் பெறுவதை கவனிக்க வேண்டும்.
வெப்ப- தட்ப கிரகங்களை ராசிகளில் கலந்துகட்டி பகிர்ந்தளித்தது போல் அல்லாமல், வெப்ப கிரகங் களை ஒரு பக்கமும், தட்ப கிரகங்களை மறுபக்கமுமாக த்ரிம்சாம்சகத்தைப் பிரித்ததில் இருந்து, அதன் சேர்க்கை யானது நம் புத்திக்கு எட்டாத பல மாறுதல்களை விளைவிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.
ஜோதிடர்களும் ஜோதிடமும்
இப்படியிருக்க, சிறப்பான இயல்பைச் சித்திரிக்கும் த்ரிம்சாம்சகத்தை அறவே ஒதுக்கிவிட்டு, ஒட்டும் உறவும் அற்ற ராகு- கேதுக்களைக் கையாண்டு பலன் சொல்லும் துணிவு ஜோதிடருக்கு வரக் கூடாது. 7-ல் ராகு கலப்புத் திருமணம், 5-ல் ராகு குழந்தையின்மை, 12-ல் கேது மோட்சத்தை அளிப்பான், 10-ல் ராகு தொழில் முடக்கம்… இப்படியெல்லாம் மேலெழுந்தவாரியாகப் பலன் சொல்வதுடன் நில்லாமல், புத்தகங்களிலும் எழுதி சவால் விடும் போக்கானது, ஜோதிட சாஸ்திரத்தின் கோட்பாடுகளைத் தரம் தாழ்த்துகிறது. அது ஜோதிட சேவை ஆகாது. ஜோதிடத்தின் சட்டதிட்டம், கோட்பாடு, அதன் அடிப்படைத் தகவல்களை அறிமுகம் செய்தவர்களின் சிந்தனைகள், மற்ற சாஸ் திரங்களின் பரிந்துரைகள், காலத்தால் தென்படும் கிரகசார மாறுதல்கள், நமது பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய அத்தனையையும் இணைத்து ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நிலையில் ஒரு ராகுவையோ, கேதுவையோ, செவ்வாயையோ அல்லது ஒரு சனியையோ தனித்தனியே பலனை நிர்ணயம் செய்யப் பயன்படுத்துவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.
கூட்டுப் பலனே இறுதியானது!
12 ராசிகளிலும் எல்லா கிரகங்களின் பங்கும் இருக்கும். 60, 30, 15, 12, 10, 9, 7, 4, 2, 1 இப்படி ராசியைப் பல பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளுக்கு வெப்ப தட்ப கிரகங்களின் பங்கைச் சொல்லும். அதுபோல், ஒரு தசையில் அதிபதி ஒருவன் இருப்பான். ஆனால், அந்த தசையில் ‘புக்தி’ என்கிற பிரிவில் 9 கிரகங்களுக்கும் விகிதாசாரப்படி பலன் இருக்கும். அந்த புக்தியில் வரும் அந்தரத்திலும் 9 கிரகங்களுக்கும் விகிதாசாரப்படி பலன் இருக்கும். மற்ற கிரகங்களில் ஏதாவதொரு இணைப்பில் தனது பலனை இறுதி செய்யும். இப்படியான கூட்டுபலனே இறுதி பலன் என்று இருக்கும் போது, ஏழரைச்சனி திண்டாடுவான், 8-ல் குரு மாட்டிக்கொள்வான், 11-ல் குரு எல்லாவற்றிலும் வெற்றி வாகை சூடுவான், 7-ல் சனி உயிர் துறப்பான், 10-ல் சுக்கிரன்  ஓஹோவென்று இருப்பான்- இப்படியெல்லாம் பலன் நிர்ணயம் செய்ய ஜோதிடர்களுக்கு தடயம் ஏது என்று சிந்தனையாளர்களுக்குச் சிந்திக்கத் தோன்றும்.
சிந்தனை வளம் பெற்றவர்கள் அலசி ஆராய்ந்து செயல்படுவது அழகு. சிக்கல் இல்லாமல் தெளிவான பதிலை எளிதாக அளிக்கும் முறையை விஞ்ஞானத்தின் வழியில் ஜோதிடத்தில் கொண்டு வருவது இன்று வரையிலும் வெற்றிபெறவில்லை. ஆக, ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது ஜோதிடத்துக்கும் பொருந்தும்.

பித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்!

உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன.
இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் – தேவர்கடனும் பிதிர் கடனும். நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்?
நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே அவர்களை காப்பாற்றுகின்றன.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தான் என்று
ஐம்புலத்து ஆ(று) ஓம்பல் தலை
- என்பது திருவள்ளுவர் வாக்கு
எனவே, பித்ருக்களின் ஆசி கிடைத்தால், நல்லது நடக்கும், அவர்களுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து, அவர்களின் ஆசிகளைப் பெறுதல் முக்கியம்.

மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…

மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…


மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…
தன் வீட்டிற்கு வரும் மருமகள் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அனுசரித்து வாழ வேண்டும் என்று பிள்ளையை பெற்ற ஒவ்வொருவரும் நினைப்பது இயல்பு.
அது சரியான கருத்துதான்….இருப்பினும் பெண்னை பார்க்கும் போதே நல்ல ஜாதக அம்சமுள்ள ஒரு பெண்னை பார்த்தால் ஒரு பிரச்னையும் இல்ல பாருங்க…..
நீங்க பார்க்கும் பெண்ணுக்கு இந்த அம்சம் எல்லாம் இருக்கானு பாருங்களேன்………
* பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் வீடு  எந்த விதத்திலும் பாதிக்கபட கூடாது, அதாவது லக்னம் 6, 8, 12ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்னம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி  மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள், மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும், மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை
ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும், கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும், கணவனிடம் பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள். வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும். சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள் .
* ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கபட கூடாது, அதாவது லக்னம் 6, 8, 12ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும், தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்படும், இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை உண்டாகும். பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்படும் பிரச்னைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள். சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு அமைந்திருக்கும். தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள். குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும், எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள்.
* ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கபட கூடாது. சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும், கற்பு  நெறியில் சிறந்து விளங்குபவளாகவும், சகல வசதிகளையும், நிறைவான மனமும், மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும், சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள். தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள். குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள். அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பன்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .
* ஜாதகிக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது. பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே பிறக்கும்  குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும். தனக்கு பிறக்கும் குழந்தை பல உயரிய பண்புகளையும், இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும், ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார்.
* களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு எந்த விதத்திலும் பாதிப்படை கூடாது. அதாவது லக்னம் 6, 8, 12ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும். கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும், கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும், தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார். குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார். கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள், களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள். சமுதாயத்தில் தனது கணவனை மிகசிறந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள்.
* ஜாதகிக்கு 8ம் வீடு தனது கணவனின் உடல்நிலையையும், மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான், ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின் உயிரை காப்பாற்றி வைப்பதே பெண்களின் 8ம் வீட்டை பொறுத்தே அமையும்.
* ஜாதகிக்கு 12ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும். கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள்.
மேற்கண்ட ஸ்தானங்கள் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில், ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள். ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும்.

MONDAY, 22 JULY 2013

ஷஷ்டாஷ்டக ராசி(ஒற்றுமையின்மை)

ஷஷ்டாஷ்டக ராசிகளில் கணவன் மனைவி

ராசிகள் அமைந்தால் இருவருக்குமிடையே

பல விஷயங்களிலும் ஒற்றுமையின்மை

நிலவும்.பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.

பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.

Posted by narayanasamy jagadeesan at 10:28 1 comment:

Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest

Labels: Marriage matching, ஷஷ்டாஷ்டக ராசி

Thanks-Dinamani jothidam

செவ்வாய் சேர்க்கை…

பூர்வ ஜன்ம ஞாபகம்! செவ்வாய் சேர்க்கை…

செவ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முதலானவற்றுக்கு காரகத்துவம் வாய்ந்தவராகத் திகழ்பவர். பிற கிரகங்களுடனான இவரது சேர்க்கை, மிக முக்கியமான பலாபலன்களைத் தரவல்லது. அங்காரகனான இவர் எந்தெந்த கிரகங்களுடன் இணைந்து, என்னென்ன பலன்களை அளிப்பார் என்பதை அறிவோமா?
செவ்வாய் – சூரியன்: எப்போதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் கொண்டவர்கள், எடுத்த காரியத்தை திறமையுடனும், வெற்றியுடனும் செயல்படுத்துவதில் தீவிரமாக முனைவார்கள். தைரியம் மிக்கவர்கள். எதையும் நேருக்கு நேராகப் பேசுவார்கள். நல்ல குணங்களுடன் திகழ்வார்கள். பரந்த நோக்கம் கொண்டவர்கள்.  கூடப் பிறந்த தம்பிகளிடமும் தந்தையிடமும் அதிக பாசம் உள்ளவர்கள். வாழ்க்கையில் சிரமங்களும், சண்டை சச்சரவுகளும் அதிகமாக இருக்கும். கடைசி வரை உழைத்துக்கொண்டே இருப்பார்கள். உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
செவ்வாய் – சந்திரன்: சிவந்த மேனியுடன், அழகான உடல் அமைப்பு பெற்றிருப்பர். கல்வியில் திறமை வாய்ந்தவர்களாக இருக்கும் இவர்கள், ஆசார அனுஷ்டானங்களிலும் தெய்வ வழிபாடுகளிலும் சிரத்தையுடன் ஈடுபடுவார்கள். விவசாயத்தொழில், ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் போன்ற துறைகளில் ஈடுபடுவர். குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்களாகவும், அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிப்படைபவர்களாகவும் இருப்பர். மனைவியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முத்து, பவழம் முதலியவைகளை வியாபாரம் செய்வர்.
செவ்வாய் – புதன்: தாய்மாமன் வகையில் வாழ்க்கைத் துணை அமையும். எதிர்பாராத வகையில் சொத்துச் சேர்க்கை உண்டாகும். புளிப்பு, காரம் இவைகள் அதிகமுள்ள உணவு வகைகளை   விரும்பிச் சாப்பிடுவார்கள். ராணுவத்தில் கணக்குத் துறையுடன் தொடர்புடைய வேலையில் அமர்ந்திருப்பார்கள். நல்ல உயரமும் பருமனும் கொண்டிருக்கும் இவர்கள் செய்யும் தொழிலில் இவர்களது பிள்ளைகளும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அந்தஸ்தில் குறைந்தவர்களிடம் அலட்சியத்துடனும், அதிகாரத்துடனும் நடந்துகொள்வார்கள். சொந்த வீட்டில் இவர்களால் இருக்க முடியாது. ஓரளவு தானம், தர்மம் செய்வார்கள்.
செவ்வாய் – குரு: பெரியவர்களிடம் பக்தி காட்டுவர். ஆடம்பரமின்றி அமைதியான குடும்பம் அமையும். கௌரவமான உத்தியோகத்தில் இருந்துகொண்டு  வீடு, வாசல், வாகன சுகங்களை அனுபவிப்பர். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். மடம், கல்வி அறக்கட்டளை போன்ற சமூக நலப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சகல சுகங்களையும் அனுபவிப்பர். கல்வித் தகுதி குறைவாக இருந்தாலும் நல்ல உத்தியோகம்  அமையும். மூதாதையர் சொத்துக்களை அனுபவிக்க கூடியவர்களாக இருப்பார்கள். அலுவலகத்தில் எதிரிகள் இருந்தாலும் அவர்களால் பாதிப்புகள் இருக்காது.
செவ்வாய் – சுக்கிரன்: தாயாருக்கு உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும். தாயாருடனான உறவு சுமுகமாக இருக்காது. எதிரிகளைப் பற்றிய அச்சம் இருந்துகொண்டே இருக்கும். கடன்களும் தொல்லை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். அழகான உடல் அமைப்புடன் ராஜ கம்பீரம் பெற்றுத் திகழ்வார்கள். விரோதங்கள் நிறைந்திருந்தாலும் சபையில் மரியாதையுடன் நடத்தப்படுவர். மனைவி வழியில் ஆதரவு இருக்காது. கடல் வாழ் பொருள்கள் சார்ந்த வியாபாரம் செய்வர்.
செவ்வாய்- சனி: இரும்பு, திராவகம் தொடர்புள்ள வியாபாரம் செய்வார்கள். தந்திரசாலிகளாக நடந்துகொண்டு காரியம் சாதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திடமான சரீரம் கொண்டவர்களாக இருப்பர். சுக சௌகர்யங்களுடன் வாழ விரும்புவார்கள். மாந்திரீக சக்தியைப் பெற்றிருப்பர். மனைவியிடம் மிகுந்த அன்புடன் இருப்பார்கள். பெரிய குடும்பத்தைப் போஷிப்பவர்களாகவும்,  சிறந்த கவிஞர்களாகவும் திகழ்வார்கள். நண்பர்களின் கலக வார்த்தைகளைக் கேட்கவும், அதனால் அவ்வப்போது சஞ்சலத்துக்கு ஆட்படவும் நேரிடும்.
செவ்வாய் – ராகு: அடிக்கடி வீண் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் விருப்பம் இருக்காது. தீய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் தொல்லைகளும் உண்டாகும்.  தகாத செயலில் ஈடுபட்டு சிறைக்குச்  செல்லக்கூடிய  வாய்ப்புகள் அதிகம். வீட்டை விட்டும், நாட்டை விட்டும் பிரிந்து வசிக்க நேரிடும். உறவினர்களுடன் பகைமை கொண்டிருப்பர். தெய்வ நம்பிக்கை, சாஸ்திர நம்பிக்கை குறைவாக இருக்கும். மனைவி, மக்களிடத்தில் பிரியமாக இருப்பர். பழைய வாகனங்களை வாங்குவதில் விருப்பம் இருக்கும். வியாபார நோக்கில் பழைய வீட்டை வாங்கிப் புதுப்பித்து லாபத்துக்கு விற்பர்.
செவ்வாய் – கேது: வாழையடி வாழையாக இவருடைய வம்சம் தழைத்தோங்கும். ஆண்குழந்தைகளே அதிகம் பிறக்கும். உடல் வலிமையும், தேஜஸும், நல்ல குணங்களும், அழகான கண்களும் கொண்டிருக்கும் இவர்கள் தர்ம சிந்தை உள்ளவர்களாகத் திகழ்வர். எங்கும் எதிலும் இவர்களுக்கு வெற்றியே உண்டாகும். இவர்களில் சிலர் ஆகம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பர். எங்கும் எதிலும் வெற்றியே பெறுவர். ஏரி, குளம், கிணறு வெட்டுதல், கோயில் நிர்மாணம் போன்றவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். உடன்பிறந்த சகோதரர்களிடம் அதிக பாசம் கொண்டிருப்பதுடன் அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பர். பூர்வஜன்மம் பற்றிய ஞானம் இருக்கும்.

சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்

October 31
சந்திர பகவான் வழிபட்ட தலங்களில் குறிப்பிடத்தக்க தலம் திருப்பதி. சந்திர தோஷம் உடையவர்கள் அவசியம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். இத்திருத்தலம் கீழ்திருப்பதி, மேல் திருப்பதி என இரட்டை நகரமாக அமைந்துள்ளது.

கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும், கபிலேச்சுவரர், சிவன் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் குகை ஒன்று உள்ளது. திருச்சானூரில் அலமேலு மங்கை ஆலயம் உள்ளது. மேல் திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் கோவிலும், புஷ்கரணி திருக்குளமும், குளக்கரையில் ஆதிவராகர் ஆலயமும் உள்ளன.

ராமானுஜர் சந்நிதியும் உள்ளது. சற்று மேலே ஆகாச கங்கைத் தீர்த்தமும், பாபவிநாசம் தீர்த்தமும் உள்ளன. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் மார்பில் இருதேவியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்து, ஸ்ரீவராக சுவாமியை வழிபட்டு, பிறகு ஏழு மலையானைத் தரிசிக்க செல்ல வேண்டும் கோவிலுக்குள் சென்றதும் ஓம் ஸ்ரீவேங்கடேசாய நமஹ என்பதை மட்டும் உங்களுக்குள் தியானியுங்கள்.

கோவிலுக்குள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யாதீர்கள். திருமலையில் பூக்கும் எல்லா மலர்களும் ஏழுமலையானுக்கே சொந்தமாகும். எனவே அவற்றைப் பறித்துச் சூடாதீர்கள். திருப்பதி செல்லும்போது திருச்சானூர் அலமேலு மங்கையையும் அவசியம் தரிசனம் செய்யுங்கள்.

சந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…

சந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…

‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி
சந்திரனுடன் மற்றொரு கிரகம் சேர்ந்திருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்துப் பார்ப்போம்.
சந்திரன்- சூரியன்: சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகும். அயல் தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், செலவு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருக்கும். அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் இவர்கள், பெற்றோரிடம் அதிக பாசம் செலுத்த மாட்டார்கள். இவர்கள் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பர்.
சந்திரன்- செவ்வாய்: சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். பூமி, வாகனம் வாங்கி விற்பதன் மூலமும், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மூலமும் பணம் சம்பாதிப்பர். கடல்சார்ந்த பொருட்களாலும் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் இவருக்குச் சகோதரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் கசப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பிப் புசிப்பர்.
சந்திரன்- புதன்: சிறந்த அறிவாளிகள். ஜோதிடம், வானியல் ஆராய்ச்சி, கணக்கு தணிக்கைத் துறை, கல்வித் துறை போன்றவற்றில் இவர்களுடைய ஜீவனம் அமையும். சிலர் ஆன்மிகம் தொடர்பான துறைகளில் உயர்பொறுப்பு வகிப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் தாய்மாமன் உறவுமுறையிலேயே திருமணம் நடக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டு. இவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடும்.
சந்திரன்- குரு: சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல்,  பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.
சந்திரன்- சுக்ரன்: பாட்டு, நடனம், ஓவியம், நடிப்பு போன்ற கலைகளில் தேர்ச்சியும் ரசனையும் பெற்றிருப்பர். தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாகவும் கலைநயத்துடனும் வைத்திருப்பர். தெய்விக ஈடுபாடு அதிகம் இருக்கும். அம்மனை வழிபடும் இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. பங்களா, சொகுசு கார் என்று வசதியாக வாழ்வர். குழந்தை பாக்கியம் இல்லையென்றே சொல்லலாம். ஒருசிலருக்கு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பு உண்டு. இனிப்பு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சந்திரன்- சனி: உழைப்பாளிகள். இரும்பு சம்பந்தமான பொருட்களின் மூலம் பணம் சம்பாதிப்பர். எத்தனை வசதிகள் இருந்தாலும் அனுபவிக்க முடியாதபடி சுற்றிக்கொண்டே இருப்பர். குடும்ப நலனுக்காகவே எப்போதும் பாடுபடுவர். அதிக காரமான உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவர்.
சந்திரன்- ராகு: இந்த ஜாதகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாமனார், மாமியார் வகையில் தொல்லைகள் தொடர்ந்து ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இவர்களால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அடிக்கடி பணி மாறிக்கொண்டே இருப்பர். தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையிலும் பிரச்னைகள்தான். ஜாதகத்தில் சந்திரன்- ராகு சேர்க்கை பெற்றவர்கள், உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலமே பிரச்னைகளில் இருந்து விடுபடமுடியும்.
சந்திரன்- கேது: இவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. ஏதேனும் பொருள் காணாமல் போனால், அதுபற்றிய விவரங்களைச் சொல்லக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு எல்லாவிதமான மந்திரங்களும் ஸித்தியாகும்.சாமியார் ஜாதகம்...

சாமியார் ஜாதகம்...இவனுக்கு கல்யாணமே ஆகாது ஆனாலும் ஓடிப்போயிடுவான்..இல்லைன்னா அது ஓடிரும்னு சொல்வாங்க..இல்லையா..அந்த ஜாதகம் எது என்றால் சனியும்,சந்திரனும் சேர்ந்திருப்பது...அல்லது சனியும்,சந்திரனும் பார்வை செய்வது...

குடும்ப வாழ்வை தராவிட்டாலும் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை தரும்..

ஆதிசங்கரர்,
விவேகானந்தர்,
ராமானுஜர்,
போன்ற மகான்களின் ஜாதகத்தில் சனி,சந்திரன் சேர்ந்து இருக்கும்...!!!

சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்

October 31
சந்திர பகவான் வழிபட்ட தலங்களில் குறிப்பிடத்தக்க தலம் திருப்பதி. சந்திர தோஷம் உடையவர்கள் அவசியம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். இத்திருத்தலம் கீழ்திருப்பதி, மேல் திருப்பதி என இரட்டை நகரமாக அமைந்துள்ளது.

கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும், கபிலேச்சுவரர், சிவன் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் குகை ஒன்று உள்ளது. திருச்சானூரில் அலமேலு மங்கை ஆலயம் உள்ளது. மேல் திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் கோவிலும், புஷ்கரணி திருக்குளமும், குளக்கரையில் ஆதிவராகர் ஆலயமும் உள்ளன.

ராமானுஜர் சந்நிதியும் உள்ளது. சற்று மேலே ஆகாச கங்கைத் தீர்த்தமும், பாபவிநாசம் தீர்த்தமும் உள்ளன. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் மார்பில் இருதேவியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்து, ஸ்ரீவராக சுவாமியை வழிபட்டு, பிறகு ஏழு மலையானைத் தரிசிக்க செல்ல வேண்டும் கோவிலுக்குள் சென்றதும் ஓம் ஸ்ரீவேங்கடேசாய நமஹ என்பதை மட்டும் உங்களுக்குள் தியானியுங்கள்.

கோவிலுக்குள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யாதீர்கள். திருமலையில் பூக்கும் எல்லா மலர்களும் ஏழுமலையானுக்கே சொந்தமாகும். எனவே அவற்றைப் பறித்துச் சூடாதீர்கள். திருப்பதி செல்லும்போது திருச்சானூர் அலமேலு மங்கையையும் அவசியம் தரிசனம் செய்யுங்கள்.


செல்வமும் கீர்த்தியும் யாருக்கு? கிரகங்களின் சேர்க்கை…

செல்வமும் கீர்த்தியும் யாருக்கு? கிரகங்களின் சேர்க்கை…

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். நவகிரகங்களில் புத பகவானின் அனுக்கிரகம் வாய்ப்பதும் அப்படித்தான்! ஒருவர் சீரும்சிறப்புமாக வாழவும், வித்யைகளில் சிறந்து விளங்கவும் புத பகவானின் திருவருள் தேவை. அவரு டைய அருள் பரிபூரணமாகக் கிடைப்பது எப்போது? எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது புதன் என்னென்ன பலன்களைத் தருவார்? தெரிந்துகொள்வோமா!
புதன் – சூரியன்: தெய்விக அருளைப் பெற்றிருப்பார்கள். தனவந்தனாக இருப்பதுடன் புத்தியால் பெயரும் புகழும் பெற்றிருப்பர். அற்பமான எண்ணங்களும் மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசும் குணமும் கொண்டவர்களாக இருப்பர். புராணங்கள், இதிகாசங்கள்,
சாஸ்திரங்கள், சரித்திரங்கள் முதலியவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாய் இருப்பர். எல்லோரிடமும் அன்புடன் பழகுவர். நல்ல விஷயங்களை போதிப்பதிலும், வாதம் செய்வதிலும் வல்லவர்களாகத் திகழ்வர். உடலில் உஷ்ணத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
புதன் – சந்திரன்:  வேதம், சாஸ்திரம், விஞ்ஞானம், ஜோதிடம் முதலியவற்றில் ஆர்வம்கொண்டவர்கள். தேர்ந்த ஆசானைப் போல் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு போதிப்பார்கள். திறமை, அறிவுக்கூர்மையுடன் திகழும் இவர்கள், நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரிகளை சுலபமாக வெற்றிகொள்ளும் இவர்களுக்கு அவ்வப்போது கர்வம் தலைதூக்கும். மற்றவர்களால் புகழையும், கீர்த்தியையும் பெறுவார்கள்.
புதன் – செவ்வாய்: விவசாய நிலங்கள், மாடு கன்று பால் பாக்கியங்களுடனும், வீடு- மனைகளுடனும் செல்வந்தராக இருப்பார்கள். கல்வியில் நாட்டம் இருக்காது. ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றுவதில் கண்டிப்புடன் இருப்பர். அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதுக்குள் தகாத எண்ணங்கள் ஏற்பட்டாலும், அவற்றை வெளியில் தெரியாமல் மறைப்பதில் சமர்த்தர். இவர்களுக்கு மனோதைரியம் அவ்வளவாக இருக்காது. சகோதரர்களால் ஏமாற்றப்படக்கூடும். தாய் மாமன் மகளை மணந்துகொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்கக்கூடும். இவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும். வாழ்க்கை முழுவதும் சுகபோகங்களுடன் வாழ்வார்கள்.
புதன் – குரு: மனதில் அதிக அளவு ஆசைகளை வளர்த்துக் கொள்வர். பெண்களிடம் நட்புடன் பழகுவதில் ஆர்வம் கொண்டிருப்பர். அழகாகவும் கம்பீரமாகவும் தோன்றும் இவர்களுக்கு ஊர் ஊராகச் சுற்றுவதில் விருப்பம் இருக்கும். வாக்கு சாதுரியம் பெற்றிருப்பர். ஞானிகளின் தொடர்பும் அவர்களின் ஆசிகளும் இவர்களுக்குக் கிடைக்கும். கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். மனதில் உள்ளது வெளியில் தெரியாதபடி அழுத்தமாகக் காணப்படுவர். மாயாஜாலங்கள் செய்வதில் வல்லவர். புனித க்ஷேத்திரங்களை தரிசிப்பதில் நாட்டம் கொண்டிருப்பார்கள். எப்போதும் உண்மையைக் கடைப்பிடிக்கும் இவர்களுக்கு பிறர் பொருள்களிடம் ஆசை இருக்காது. முன்கோபம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
புதன் – சுக்ரன்: தாராளமாக உதவும் மனப்பான்மை கொண் டிருக்கும் இவர்கள் ஆசார அனுஷ்டானங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பர். தெய்விக வழிபாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வர். சாதுவாகவும், பிறர் மனம் புண்படாதபடி நடந்து கொள்பவராகவும் இருப்பர். எடுத்த பணியைத் திறம்படச் செய்து முடிப்பதில் வல்லவர். சத்தியத்தில் இருந்து தவறாதவர். பிறர் கஷ்டப்படுவதைக் கண்டு மனம் வருந்துவதுடன், தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். எல்லோரையும் கவரக்கூடிய காந்த சக்தியைப் பெற்றிருப்பர்.
புதன் – சனி:  எல்லோரிடமும் நட்பு பாராட்டி நண்பர்களாக்கிக் கொள்வர். பொருளைச் சேர்த்து வைப்பதிலும் சரி, சேர்த்த பொருளை பாதுகாத்துக் கொள்வதிலும் சரி… இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். பண விஷயத்தில் கணக்காகவும் கறாராகவும் இருப்பார்கள். பிறர் சொல்வதைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பே அவசரப்பட்டுக் கோபம் கொள்வார்கள். பேச்சிலும் செயலிலும் கண்டிப்பாக இருப்பர். பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதில் சந்தோஷம் அடைவர். துன்பப்படுபவர்களிடம் இவர்கள் இரக்கம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. சரியோ தவறோ, தான் சொல்ல நினைப்பதை ஆணித்தரமாக அழுந்தச் சொல்லு வார்கள்.
புதன் – ராகு: கல்வி கற்பதில் ஊக்கம் கொண்டிருக்கும் இவர் களுக்கு அறிவுக் கூர்மை அதிகம். காது கேட்கும் திறன் சற்று குறைவாக இருக்கும். ஸ்திரமான எண்ணம் என்பது இவர்களுக்கு இருக்காது. மனதில் சதா சஞ்சலம் குடிகொண்டிருக்கும். இவர்கள் மனதில் உள்ளதை உள்ளபடி வெளியில் சொல்ல மாட்டார்கள். இவர்கள் உடலில் பித்தம் மிகுந்திருக்கும். பிறரை நன்றாகப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள். உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். ஆசார அனுஷ்டானங்களில் அவ்வளவாகப் பற்றுதல் இருக்காது. தெய்வ நம்பிக்கை இவர்களுக்குக் குறைவு என்றே சொல்லலாம். இவர்கள் உடல் நலனில், குறிப்பாக பற்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
புதன் – கேது: அறிவுக்கூர்மையுடன் திகழும் இவர்கள், பிறருக்கு ஆசிரியர்களாக போதிப்பார்கள். சண்டைபோடுவதில் விருப்பத்துடன் ஈடுபடுவர். ஆன்மிக ஞானம் பெற்றிருப்பார்கள். எந்தக் கவலையையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் சதா காலமும் சிரித்துப் பேசியபடி வலம் வருவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். எடுத்த காரியம் எதுவானாலும் அதை உடனே முடித்துவிடும் சுபாவம் கொண்டவர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் புகழுடனும் பெருமையுடனும் திகழ்வார்கள். சகல விதமான போகங்களையும் அனுபவிப்பார்கள்.

குருவும் குணமும்! கிரகங்களின் சேர்க்கை…

குருவும் குணமும்! கிரகங்களின் சேர்க்கை…

குரு – சூரியன்:
பெரியவர்களிடம் பக்தி சிரத்தை உடையவர்களாகவும், கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், தெய்வபக்தி மிகுந்தவர்களாகவும், பூஜை வழிபாடுகளில் சிரத்தை கொண்டவர்களாகவும் தார்மிக சிந்தனை உடையவர்களாகவும் திகழ்வார்கள். செல்வச் செழிப்புடன் இருக்கும் இவர்கள், படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பர். ஆசானாகவும், புத்திசாலியாகவும் இருப்பர். சண்டையிடுவதில் விருப்பம் கொண்ட வர்களாக இவர்கள் இருப்பதால், ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருப்பர். செய்நன்றி மறவாத குணம் கொண்டிருப்பர்.

குரு – சந்திரன்:
சிவந்த மேனியுடன் திகழும் இவர்கள் அழகான, அகன்ற கண்களைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் ஓரளவு நம்பிக்கை உடையவராக இருப்பர். கவலைகளை மறந்து சதா சிரித்துப் பேசும் குணமுடையவர். உறவினர்களாலும் நண்பர்களாலும் புகழ், பெருமைகளைப் பெற்றவராகவும், சாமர்த்தியசாலியாகவும் திகழும் இவர்கள் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகுவார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களாகவும், எடுத்த காரியத்தை முடிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவும்் இருப்பார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
குரு – செவ்வாய்:
சிவந்த கண்களுடனும், கல்வி பயில்வதிலும், சாஸ்திர ஆராய்ச்சியிலும் திறமை வாய்ந்தவராகவும், தரும சிந்தனை, பரோபகாரம் ஆகிய குணங்களுடன் அழகாகவும், செல்வந்தர் களாகவும் விளங்கும் இவர்கள், தங்க நகைகளி னால் பொருள் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டிருப்பர். தெய்விக சிந்தை உடைய இவர்கள், ஆலய வழிபாடுகளில் அதிக ஈடுபாடு் கொண்டிருப்பர். கோயில் கட்டுதல் போன்ற சமூக நலம் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். மற்றவர்களால் பெரிய மனிதராக மதிக்கப்படுவர்.
குரு – புதன்:
ஆசார சீலராகவும், மன தைரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நல்ல குணங்களுடன் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள், புத்திக்கூர்மையுடன் வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும் இருப்பர். கீர்த்தியுடன் திகழும் இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. நல்ல குணங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். சரும வியாதிகள் தோன்றக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மற்றவர்களை  வசியப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய திறமையைப் பெற்றிருப்பார்கள்.  மதுரமான வார்த்தைகளைப் பேசுபவராகவும் இருப்பர்.
குரு – சுக்ரன்:
குரு-சுக்ரன் சேர்க்கையானது அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்த சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் கோபம், அகங்காரம் கொண்டவர்களாகவும், மற்றவர்களால் தூற்றப்படுபவர்களாகவும், நன்றி மறப்பவர்களாகவும் இருப்பார்கள். தான் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்களுக்கு நியாயத்தை உபதேசிப்பதில் தயங்கமாட்டார்கள்.
குரு – சனி:
இந்த சேர்க்கையும்கூட அவ்வளவு சிலாக்கியமில்லை. அசைவ உணவில் விருப்பம் கொண்டிருப்பர். இவர்களின் வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையுமே நிறைந்திருக்கும்.தைரியசாலிகளான இவர்கள், அலட்சியமாகவும் தற்பெருமையாகவும் பேசுவார்கள்.இவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. எப்பொழுதும் வெளியில் சுற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இவர்களிடம் உண்மையான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், எதிர்பாராத வகையில் இவர்களுக்கு பண வரவும், சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.

ராஜகிரகங்கள் என அழைக்கப்படும் குருவும், சனியும் ஒரே வீட்டில் இருந்தால்?

ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தீர்கள். இதில், ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஒரே வீட்டில் இந்த 2 கிரகங்களும் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

குரு, சனி சேர்ந்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். எனவே, குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர். 

ஆனால் எந்த லக்னத்திற்கு குரு-சனி ஏற்றது என்பதையும் இங்கே கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் மேஷ லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் ஒரு பலனையும் அளிக்காது. நல்ல பலனைத் தராது என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் ரிஷப லக்னத்திற்கு இந்த யோகம் இருந்தால் சிறு வயதிலேயே பெற்றோர் உயிரிழப்பது அல்லது தகப்பானருக்கு சில இடர்பாடுகள் ஏற்படுவது.

மிதுன லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் இருந்தால் திருமணத் தடைகள் ஏற்படும். திருமணத்திற்கு பின்னரும் மனைவி தரப்பில் சில சிக்கல்கள் காணப்படும்.

கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் அமைந்தால் உத்தமமான மனைவி, மனைவி அமைந்த பின் யோகப் பலன்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.கன்னி லக்னத்திற்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை குரு சண்டாள யோகம் ஏற்படுத்தும். 

துலா லக்னத்திற்கு இந்த யோகம் காணப்பட்டால், ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை நன்மையை அளிக்கும். வேதங்கள், இதிகாசங்களில் ஆர்வம் ஏற்படும். 

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.

பொதுவாக எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு-சனி சேர்க்கை 11வது இடத்தில் அமைந்திருந்தால், அது யோகப் பலன்களை அளிக்கும். அது சர லக்னமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். இதற்கு காரணம் குரு, சனி இருவருக்குமே 11ஆம் இடம் உகந்தது என்பதே.

கேந்திர வீடுகளில் (குறிப்பாக 4ஆம், 7ஆம் இடத்தில்) குரு-சனி சேர்க்கை இல்லாமல் இருந்தால் நல்லது. 

குரு-சனி சேர்க்கை நன்றாக இல்லாத இடங்களில் காணப்பட்டால் ஈமச் சடங்குகளுக்கு உதவலாம் (ஏனெனில் சனி கர்மத்திற்கு உரிய கிரகம்). நல்ல வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு உதவலாம். மேலும் குருவும், சனியும் ஆலயத்திற்கு உரிய கிரகங்கள் என்பதால் அவற்றை புதுப்பிக்க, சீரமைக்க உதவலாம்.குரு – ராகு:
கல்வியில் ஊக்கம், வியாபார நுணுக்கங்களை துல்லியமாக அறியும் திறன் கொண்ட இவர்கள், ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவராகவும் பலன் கூறுபவராகவும் இருப்பார்கள். சங்கீதத்தில் பிரியமும், சாத்தியம் இல்லாத காரியங்களைக்கூட  சாதிக்க முயற்சி செய்பவராகவும் இருப்பார்கள். சாஸ்திரங்களைக் கற்பதுடன் பிறருக்கும் உபதேசித்து தானும் கடைப்பிடிப்பர். பேச்சு சாமர்த்தியமும் மற்றவர்களின் குணமறிந்து பழகும் தன்மையும் பெற்றிருப்பர்.
குரு – கேது:
ஆசார சீலர்களாகவும், வேதம் சாஸ்திரங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்்தக ஆராய்ச்சிகளைச் செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர், நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்றிருப்பர். திறமைசாலியாகவும் அழகாகவும், திகழும் இவர்கள் சங்கீதத்தில் பிரியமும் யாத்திரை செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். புத்திர ப்ராப்தி இல்லை என்றே சொல்லலாம். மாடு, ஆடுகளை வளர்ப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். பிறருடைய வேலைகளில் தலையிட்டு, தானே முன்னின்று செய்து முடிப்பவராகவும் இருப்பர்.

குரு தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்

பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, அக்டோபர் 23, 1:34 PM IST

 

கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது58

பிரதி

குரு தோஷம் இருப்பவர்கள் குரு தலங்களில் எத்தகைய வழிபாடுகளை செய்ய வேண்டும் தெரியுமா? 

1. வியாழக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் கோவில் ஒன்றில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது மிகவும் சக்தி உள்ள பரிகாரம் ஆகும். 

2. வியாழக்கிழமைகளில், பெரியவர்கள், துறவிகள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி, அவர்களது ஆசியைப் பெறுதல் வேண்டும்.

 3. மிகக் கடுமையான குரு தோஷம் உடையவர்கள் வியாழக்கிழமையில் கங்கை நதியில் ஸ்நானம் செய்வதால் நீங்கும் என கங்கா மகாத்மியம் விளக்கி உள்ளது.

‘சூரிய’ பலன்கள்! கிரகச் சேர்க்கை…

‘சூரிய’ பலன்கள்! கிரகச் சேர்க்கை…

ருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம்.
நவகிரகங்களில் சூரியனே முதன்மையானவர் என்பதால் சூரியனில் இருந்தே தொடங்குவோம்.
சூரியன் – சந்திரன்: - ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.
சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்.

சூரியன் – செவ்வாய்: – உடல் உஷ்ணம் அதிகம். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பார்கள். ஆண்மைக்கு உரிய கம்பீரம் இவர்களிடம் கூடுதலாகவே காணப்படும்.  காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே இவர்களுக்கு அமையும். அதிக சகோதரர்களும் அவர்களால் ஆதாயமும் உண்டு. இந்த சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அந்த வீட்டில் மீனாக்ஷி ஆட்சிதான் நடக்கும் என்று சொல்லலாம். இந்த சேர்க்கை மேஷத்தில் காணப்பட்டால், மேலே சொன்ன பலன்கள் கூடுதலாக நடக்கும்.
சூரியன் – புதன்:- சூரியன், புதன் சேர்க்கை பெற்ற 8 பாகைகளுக்குள் ஜாதகர் பிறந்திருந்தால், புதனுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்பட்டு பலன் தராமல் போய்விடும். குறிப்பாக புதனின் தசா புக்தி காலங்களில் கெடுபலன்களே நடைபெறும். 8 பாகைகளுக்குப் பிறகு பிறந்தால்தான் பலன் தரும். சூரியன் புதனின் சேர்க்கையானது ஜாதகரை கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் தாமதமாகவே படிப்பை முடிப்பர். தகுதியைவிட உயர்ந்த இடத்தில்  வேலைக்குப் போவர். இவருடைய பணி பெரும்பாலும் அரசாங்கப் பணியாகவே அமையும். தாய்மாமன் உறவுமுறை சுமுகமாகவும் ஆதாயம் தருவதாகவும் இருக்கும். வாக்குத்திறமை பெற்றிருப்பர்.
சூரியன்-குரு:- சூரியன், குரு சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லலாம். பொன் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்யும் குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். நிதி அமைச்சகம், வங்கிகள், நிதிநிறுவனங்களில் வேலை அமையும். அத்தகைய பணியும்கூட தலைமையிடத்தில் இருக்கும். ஒருசிலர் பேராசிரியராகவும் பணிபுரிவர். இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் இவர்களில் சிலர் ஆன்மிக குருவாகவும் பிரகாசிப்பர்.
சூரியன் – சுக்ரன்:- சூரியன் சுக்ரன் சேர்க்கையானது ஜாதகருக்கு எதிர்பாராத பொருள்வரவைத் தரும். இவர்களுக்கு எதிலும் நஷ்டம் என்பதே ஏற்படாது. ராணுவத் தளவாடங்கள் விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பர். வசதியான குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். விலை உயர்ந்த சொகுசு வாகன பிராப்தி இவர்களுக்கு உண்டு. இவருக்குச் சொந்தமான வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது.
சூரியன் – சனி:- பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு பித்ருகாரகன் சூரியன் என்றால், இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பித்ருகாரகன். இந்தச் சேர்க்கையானது தந்தை மகன் உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், கோர்ட், கேஸ் என்றும் அலைக்கழிக்கும். அவ்வப்போது மன அமைதி பறிபோகும். சமையல் கலைஞராகவும், கேன்டீன் காண்ட்ராக்டராகவும் பணம் சம்பாதிப்பர். இரும்புக் கழிவுகளை வாங்கி விற்றும் ஜீவனம் நடத்துவர். கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர். சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அதில் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்குச் செலவழிக்கவும் தயங்கமாட்டார்கள். எதையுமே புதியதாக வாங்குவது இவர்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் பயன்படுத்திய கார், பைக் போன்றவைகளையே வாங்குவர்.

சூரியன் – ராகு:- சூரியன் ராகு சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். எதிலும் மாற்றுச் சிந்தனையும், புரட்சிகரமான எண்ணங்களும் கொண்டிருப்பர். பிறருடைய சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கு எதிர்பாராமல் வந்து சேரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகளை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பர். இவர்களுக்கு அமையக்கூடிய பணியும்கூட மீன்வளத்துறை போன்று கடல் சார்ந்த பணியாகவே இருக்கும்.
சூரியன் – கேது:- ஆன்மிகவாதியாக இருப்பர். ஆன்மிகம் தொடர்புடைய மரங்களைக் கோயில்களுக்குக் கொடுப்பர். மரங்களை வெட்டி விற்பனை செய்வதால், இவர்கள் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் செய்வர். ஒருசிலர் காய்,கனி வகைகளை விற்றும் ஜீவனம் செய்வர். இவர்களுக்கு வனத்துறை சார்ந்த பணிகளே பெரும்பாலும் அமையும்.
நன்றி-விகடன்

சுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை…

சுகங்களைத் தரும் சுக்ரன்… கிரகங்களின் சேர்க்கை…

சுக்ரன் – சூரியன்:
இந்தச் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலோ அல்லது இந்தச் சேர்க்கை உள்ள இடத்துக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்்பட்டிருந்தாலோ அசுப பலன்கள் நீங்கி, பெரிய மனிதர்களின் தொடர்பையும், செல்வச் செழிப்பான வாழ்க்கையையும் பெற்றிருப்பார்கள்.
மற்றபடி, இந்தச் சேர்க்கை அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்தச் சேர்க்கை கொண்ட ஜாதகர்கள், கலகம் செய்வதில் ஈடுபடுவர். தகாத குணமும் நடத்தையும் கொண்டவர்கள். பெண்களாக இருந்தால், கணவன் வீட்டாரின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வர். பிறரை ஏமாற்றுவதில் சாமர்த்தியசாலிகள். ஒருவர் செய்த நன்மைகளை உடனுக்குடன் மறந்துவிடுவர்.
சுக்ரன் – சந்திரன்:


இந்த சேர்க்கையை பெற்றவர்கள், நிறைந்த கல்வி அறிவும், புத்தி சாதுரியமும் கொண்டவர்கள். சகல சுக செளகரியங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்கமாட்டார்கள். மூர்க்கத்தனம், பிடிவாத குணம் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்வது அவசியம். இவர்களின் சிறிய வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் பெண்களிடம் பேசுவதற்கு சங்கோஜப்படுவார்கள்.
சுக்ரன் – செவ்வாய்:
அழகான தோற்றமும் ஆரோக்கியமான உடலமைப்பும் பெற்றிருக்கும் இவர்கள், சத்தமாகப் பேசுபவர்கள். மிகுந்த தைரியசாலிகள். எதையும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றி பெறக் கூடியவர்கள். எப்படியாவது தங்கள் காரியம் நிறைவேறினால் போதும் என்று நினைக்கக்கூடியவர்கள். கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட! என்னதான் செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, இரக்க குணமோ, தர்ம சிந்தனையோ, உதவும் மனப்பான்மையோ இவர்களிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது.
சுக்ரன் – புதன்:
அன்பும் பாசமும் நிறைந்த இவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். நல்ல பேச்சாளர்கள். சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்ட இவர்களால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. கலகலப்பாக எல்லோரிடமும் பேசிப் பழகக்கூடியவர்கள். இவர்களுக்கு இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். வாழ்க்கையில் எல்லாவிதமான சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்வார்கள்.
சுக்ரன் – குரு:
இவர்கள் எந்த ஒரு கருத்தையும் ஆதரித்தும் மறுத்தும் பேசக்கூடிய திறமை கொண்டவர்கள். இரக்க மனம் கொண்ட இவர்களுக்குப் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள். பிறரை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். குறைவான உழைப்பில் நிறையச் செல்வம் பெற நினைப்பவர்கள். சொத்துக்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆசைகள் அதிகம் இருக்கும். காரியம் ஆக வேண்டுமானால் எதையும் செய்யக் கூடியவர்கள். எப்பொழுதும் எதிலும் போராடிக்கொண்டே இருப்பதான வாழ்க்கையே அமையும்.
சுக்ரன் – சனி:
கம்பீரத்தோற்றத்துடன் காணப்படும் இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. வீட்டில் மீனாட்சியின் ஆட்சிதான்! திடசித்தம் கொண்ட  இவர்களுக்கு இருக்கக்கூடிய முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அதேபோல், சஞ்சல குணத்தையும் விட்டுவிட வேண்டும். நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன், உண்மையா னவர்களாகவும் நடந்துகொள்வார்கள் இவர்கள். 
சுக்ரன் – ராகு:
மனைவியிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். மக்கள் நலப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுவார்கள். வீடு, நிலங்கள், மாடு கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். எந்த வேலையாக இருந்தாலும், அதில் ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களால் புகழத்தக்க அளவுக்கு இவருடைய செயல்பாடுகள் அமைந்திருக்கும். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாத ஜாதகர்கள் எப்பொழுதும் கவலை தோய்ந்த முகத்துடனும் நோயாளியாகவும் காணப்படுவார்கள்.
சுக்ரன் – கேது:
ஆன்மிகத்தில் ஈடுபாடும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் விருப்பமும் கொண்டிருக்கும் இவர்கள் பூஜை வழிபாடுகளைச் சிரத்தையுடன் செய்வார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும், அதுபற்றித் தீவிரமாக யோசித்த பிறகே ஈடுபடுவார்கள். நீதிநேர்மையுடன் இன்னும் பல நல்ல குணங்களையும் கொண்டிருக்கும் இவர்கள் அழகான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புவார்கள். கவிஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் புகழுடன் திகழ்வார்கள். இவர்களில் சிலர் ஜோதிடத்திலும், மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் பித்தம் சம்பந்தமான நோய்களே ஏற்படும். எக்காரணத்தைக் கொண்டும் சொன்ன சொல்லை மீறமாட்டார்கள்.