For Read Your Language click Translate

21 June 2014

பெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்

சென்னை : பாம்பை கண்டால் படையே நடுங்கும் , இது பழமொரூ.. எதற்கும் அஞ்சாத போர் படைவீரர்கள் கூட, பாம்பை கண்டால் இரண்டு அடி தூரம் பின்நோக்கி நகர்வார்கள் என்பது இதன் பொருள். இத்தகைய பாம்புகள் வீட்டின் குளியல் அறை, சமையல் அறை, படுக்கை அறை, கரூ.வறை, அலுவலகத்துக்குள் புகுந்து விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

பதறி அடித்து கொண்டு ஓடி விடுவார்கள். கம்பு, கடப்பாறை, உருட்டு கட்டை சகிதம் பாம்பை தாக்கும்முன் அது எங்காவது மறைந்து விடுகிறது. பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து “101“ என்ற இலவச தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அவர்கள் சம்பவ இடம் விரைகின்றனர். அவர்களிடம் பாம்பை பிடிப்பதற்கான போதிய உபகரணம் இல்லாததால், வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் பறக்கிறது.

அவர்கள் விரைந்து சென்று மக்களை பயமுறுத்தி சந்து, பொந்து என அதன் தடயத்தை வைத்தே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து காயம் இல்லாமல் பிடிக்கின்றனர். பின்னர், அதனை பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விட்டு விடுகின்றனர். இப்படி வனச்சரக அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என 3 மாவட்டங்களில் கடந்த 4 மாதத்தில் 1,396 பாம்புகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டுள்ளனர். இதற்கு கட்டணம் ஏதும் வசூல் செய்வது இல்லை.

இதுதொடர்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்துக்கான வனச்சரக அதிகாரி (வன உயிரினம்) டாக்டர் டேவிட் ராஜ் கூறியதாவது:
வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி வன உயிரினங்களை வேட்டையாடுவது குற்றம். அதன்படி, குற்றவாளிகளுக்கு 3 முதல் 7 ஆண்டு வரை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. வனப்பகுதிகள் தற்போது சுருங்கி வருகிறது. இதனால் பாம்பு, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இதனால், மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 044, 2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்போம். மாறாக, வரூ. தவறி வரும் வன விலங்குகளை தாக்காதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு கிராம் விஷம் விலை!
பாம்புகளின் விஷம் மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும், வேறு சில பொருட்கள் தயாரிக்கவும் உதவுகிறது. இதனால், இதன் விலையும் கள்ளச் சந்தையில் விண்ணை தொடும் அளவுக்கு உள்ளது. விஷத்தின் ஒரு கிராம் விலை விவரம் வருமாறு:
கட்டு விரியன் ,        ரூ.30,000
கண்ணாடி விரியன் , ரூ.35,000
சுருட்ட பாம்பு ,         ரூ.47,000
நல்ல பாம்பு ,        ரூ.5,000 - See more at: http://wap.dinakaran.com/News_Detail.asp?Nid=10978#sthash.o02MJGKC.dpuf


கண்ணாடி விரியன

 

கண்ணாடி விரியன்
Daboia head.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி:முதுகுநாணிகள்
துணைத்தொகுதி:முதுகெலும்பிகள்
வகுப்புஊர்வன
வரிசை:Squamata
துணைவரிசை:பாம்புகள்
குடும்பம்:Viperidae
துணைக்குடும்பம்:Viperinae
பேரினம்:Daboia
ஜான் கிரே, 1842
இனம்:D. russelii
இருசொற்பெயர்
Daboia russelii
(ஜார்ஜ் ஷா, பிரெடெரிக் நொடர், 1797)
வேறு பெயர்கள்
Daboia - கிரே, 1840 (nomen nudum)

கண்ணாடி விரியன்
கண்ணாடி விரியன் (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன[1]. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்[2].


உடல் தோற்றம்


கண்ணாடி விரியன். இதன் தற்கால அறிவியற்பெயர் டபோயா ரசெல்லி (Daboia russelii)
  • தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.
  • தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
  • பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

நிறம் மற்றும் குறிகள்

  • பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.
  • உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.
  • உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.
  • உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

நச்சு

விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.



புல் விரியன், என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்[2]நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.


Echis carinatus sal.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி:முதுகுநாணிகள்
துணைத்தொகுதி:முதுகெலும்பிகள்
வகுப்புஊர்வன
வரிசை:செதிலிகள்(Squamata)
துணைவரிசை:பாம்புகள்
குடும்பம்:நச்சுப்பாம்புகள்
(Viperidae)
துணைக்குடும்பம்:நச்சுப்பாம்பு உள்குடும்பம்
பேரினம்:Echis
இனம்:E. carinatus
இருசொற்பெயர்
Echis carinatus
(Schneider, 1801)

பெயர்க்காரணம்

  • செதில்கள் அதிக அளவில் கீலுடையதாகவும் கீலிணைப்புகளின் ஓரங்கள் இரம்பப்பற்களைப் போல இருப்பதாலும் இப்பாம்பிற்கு இரம்பச்செதில் விரியன் [அ] வாட்செதில் விரியன்- Saw-scaled viper என்ற பெயர் வந்தது.
  • இது சலசலவென்றும் புஸ்ஸென்றும் ஒலிப்பதால் ஊது சுருட்டை, குறட்டைப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது.
  • அழகிய கம்பளம் போன்ற நிறமுடையதால் கம்பள விரியன் என்றும் அழைக்கப்படுகிறது

உடல் தோற்றம்

  • தலை முக்கோண வடிவில் இருக்கும்; அதில் அம்பு வடிவில் வெள்ளைக்குறி காணப்படும். தலை கழுத்தை விடவும் பெரியது. தலையின் மேற்பரப்பிலுள்ள செதில்கள் சிறியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
  • தடிமனான, சிறிய உடலையுடையது.
  • கண் பெரியதாகவும் கண்மணி செங்குத்தாகவும் உள்ளது.
  • வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.

E. carinatus பக்கவாட்டில் வளைந்து செல்லுதல்

இயல்பு

  • அளவில் சிறியதாக இருந்தாலும் (45 - 60 செ.மீ.), இதன் நஞ்சு அல்லது நச்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தரப்பட்டால் உடன் தாக்கக்கூடியது; பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களே காரணமாகின்றன.[4]
  • தொந்தரவு தரப்படும்போது, இது தன் உடலை இரு சுருள்களாக எண் 8 வடிவத்தைப் போல சுருட்டிக்கொண்டு அச்சுருள்களை ஒன்றோடொன்று தொடர்ச்சியாக உராய்விக்கும்; அப்போது உப்புக்காகிதத்தைத் தேய்த்தால் உண்டாகும் ஒலி போன்ற சலசலப்பு உரக்கக் கேட்கும்.[
  • பெரும்பாலும் இரவில் நடமாடக்கூடியது; காலை வெயிலில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
  • காய்ந்த வெளி, மணல்/பாறைப் பாங்கான சமவெளி/மலை, மலைப்பாங்கான இடத்திலுள்ள பாறைப்பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காண முடியும்.
  • பகலில் பாறைகளுக்கடியில், மரப்பட்டைகளுக்குப் பின்னால், முட்செடிகளின் அடி போன்ற இடங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.
  • பக்கவாட்டில்-வளைந்து செல்லும் ( side-winding ) முறையில் வேகமாக இயங்கும்.
  • மரங்களில் நன்றாக ஏறும்.

உணவு

  • எலிகள், பல்லி/ஓணான்கள், தவளைகள், தேள்கள் மற்றும் பூச்சிகள்.

மேலும் சில இயல்புகள்/குணங்கள்

  • ஆண் பாம்புகள் சண்டையிடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் 4 - 8 வரையில் குட்டிகளை ஈனும். ஈனும் காலம் - ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை.




கட்டுவிரியன் (Common Krait - Bungarus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் ஒரு விரியன் வகைப் பாம்பு. கொடிய நஞ்சினையுடைய இப்பாம்பு பெரும் நான்கு என்றழைக்கப்படும் பாம்புகளில் ஒன்று. இப்பாம்பு தமிழில் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

கட்டுவிரியன்
Bungarus caeruleus ewart.jpg
உயிரியல் வகைப்பாடு

திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி:முதுகுநாணி
துணைத்தொகுதி:முதுகெலும்பிகள்
வகுப்புஊர்வன
வரிசை:Squamata
குடும்பம்:Elapidae
பேரினம்:
Bungarus
இனம்:B. caeruleus


புவியியற் பரம்பல்

பாக்கிசுதானின் சிந்து மாகாணத்தில் இருந்து மேற்கு வங்கச்சமவெளி வரை வாழ்கின்றன. மேலும் தென்னிந்தியா முழுவதும் இலங்கையிலும் இவை உள்ளன.

வாழிடம்

பொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன.

இயல்பு

இது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் பாம்பு. ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை.

இரை

கட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. மேலும் பல்லிகளையும், பாம்பரணைகளையும் தின்கின்றன. இவை தங்களுடைய குட்டிகளையே தின்னும் இயல்பு கொண்டவை. இதன் பாம்புக்குட்டிகள் கணுக்காலிகளையும் உண்கின்றன. சில சமயங்களில் இவை சிறு பாலூட்டிகள், தவளை போன்றவற்றையும் தின்கின்றன.
இவை இரவில் திரியும் பாம்புகளாகையால் பகலில் எலி வங்குகளிலோ, கறையான் புற்றுகளிலோ,[3] மண், குப்பை கூளங்களுக்கிடையிலோ பதுங்கிக் கொள்கின்றன. பகலில் சீண்டப்படும் போது, தலை பாதுகாப்பாக இருக்கும் வகையில் தங்கள் உடலை பந்து போல் சுருட்டிக் கொள்கின்றன. எனினும் இரவில் இவை எதிர்க்கும். பங்காரசு இனப்பாம்புகளில் இதுவே மிகவும் ஆபத்தானது.

நஞ்சு

கட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகையைச் சேர்ந்தது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதாலேயே பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.


நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் நஜா நஜா’ என்பதாகும்.  நஜாஎன்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  நாகா நாகா என்று நம் மக்கள் கூறியதை நஜா நஜா என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே என ஜா ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் நஜா நஜா என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.
 
 
நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.
 
நல்ல பாம்பின் தலை - முன்னும் பின்னும்
 
நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டுகழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன் என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.
 
நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்லபாம்பு (Spectacled cobra) என்பார்கள்.
 
ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.
 
கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.
  
http://en.wikipedia.org/wiki/Bungarus
 
கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு ரஸ்ஸல்ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.
   Inline image 5
http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg
கண்ணாடி விரியன் பாம்பு                                                      ரஸ்ஸல் கண்ணாடி விரியன்
 
1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree)பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன். எங்கே? எங்கே காட்டு என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான்பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.
 
ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்றுஇதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)  மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு வீடு (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் வீட்டினை மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.
Inline image 6
 
உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.
 
இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.
 
 
பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.
Inline image 7
 
http://www.team-bhp.com/forum/attachments/4×4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg 
 
அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்டபாம்புகளில் இதுவும் ஒன்று.
 
சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.
 
1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப்பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.
 
இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.
 
இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.
 
கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.                            
 
 Inline image 8
http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta
பச்சைப் பாம்பில் இரு வகை
.
கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.
 
1.  கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.
 
2.  கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.
 
இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
 
இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.
 
நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், சார் அது கண்ணெக் கொத்தீடும் என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?
 
 
ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  ஓலைப்பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
 
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.
சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.
 
http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg
 
சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.
 
இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.
 
பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
 
(தொடரும்)  
 
நடராஜன் கல்பட்டு
விஷம் துப்பும் நாகம்  (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப்பாம்பு..
விஷம் துப்பும் நாகம்
இந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம்.  எப்படி என்கிறீர்களா?  தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம்.  அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும்.  இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம்.  இவ் விஷத் துளிகள்    காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்லை.  ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.
கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப்பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும்.  இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும்.  அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.
Inline image 5
கிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு
கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும்.  ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும்.  மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும்.  அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.
 
கடல் வாழ் பாம்புகள் :  பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன.  அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை.  இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது.  ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும்.  இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும்.  அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.


மஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்
 


பாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்.(Neurotoxin)  இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும்.  அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது.  அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும்.  உயிரும் பிரியும்.
 
கட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.
 
கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது.  அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம்(Heamotoxin).  ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும்.  ரத்தம் உறைவதைத் தடுக்கும்.  உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும்.  முக்கியமாக மூத்திரக் காய்களை செயல் இழக்கச்செய்யும்.
 
பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது.  இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது.  இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு  வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர்.  பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது.  குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது.  எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.
 
செயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.
 
இருளர்களும் பாம்புகளும் :  தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர்.  (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்!)
 
இருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல்.  பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள்.  பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று.  பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.
 
1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.
 
தானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும்,  அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படிபாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது.  இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.
 
இருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைகள் பண்ணை இவைகள் தோன்றக் காரணமாய் இருந்தவர்மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர்.  இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/- கொடுக்கிறது.
 
இவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது.  மூன்று வாரங்கள் வைத்திருந்துபாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.
 


பாம்பின் விஷம் கறத்தல்
சர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள்.  நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு.  சுமார் 1,000 டாலர்களே.  காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.
 
கறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும்.  அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.
 
பாம்புக் கடியும் மாந்திரீகமும் மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது.  ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது.  அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம்.  எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம்.  அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம்.  அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ  இல்லையோ தெரியாது.  ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
 
இனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்க்கலாம்.
 
முதலில் செய்யக் கூடாதவை பற்றி.
 
1.  பதட்ட மடையாதீர்கள்.  நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள்.  பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.
 
2.  கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது.  இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.
 
3.  கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள்.  இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம்.  ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம்.  இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம்.  மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.
 
4.  முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும்.  ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா?  கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.
 
5.  கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள்.  அதனால் இரண்டு பாதிப்புகள்.  ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல்.  மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.
 
6.  கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள்.  அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.
 
7.  கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள்.  அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.
 
இனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.
 
நீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா?  மேலே படியுங்கள்.
 
1.  கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள்.  எல்லாப் பாம்புகளுமே விஷப் பாம்புகள் அல்ல. (Reassure)
 
2.  பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள்.  கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள்.  (Immobilize)
 
3.  உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை  விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள்.  ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  (Go to Hospital)
 
4.  பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.
இவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.
 
அ.  கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.
ஆ.  கண் பார்வை மங்குதல்.
இ.  தோளில் எரிச்சல்.
ஈ.  வலிப்பு.
உ.  பேதி.
ஊ.  மயக்கம்.
எ.  அதிகமாக வியர்த்து விடுதல்.
ஏ.  ஜுரம்.
ஐ.  அதிகமாக தாகம் எடுத்தல்.
ஒ.  தசைளை இயக்க முடியாமை.
ஓ.  வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.
ஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.
அ.அ.  இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.
ஆ.ஆ.  அதீத வலி.
இ.இ.  தோலின் நிறம் மாறுதல்.
ஈ.ஈ.  கடித்த இடத்தில் வீக்கம்.
உ.உ.  சோர்வு.
 
பாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள்.  (Tell the doctor)
 
மேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள்(RIGHT actions).
 
கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா?” என்பது பழமொழி.  “பாம்பு கடித்து பாம்பு சாகுமா?” என்பது கேள்வி.  சாகாது,ஒரே ரகப் பாம்பாயிருந்தால்.  காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.
 
கட்டுரையை முடிக்கும் முன் இரு  வேண்டுகோள்கள்.
 
ஒன்று:  பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள்.  பயத்திற்கு அடிமையாகி அதைவெறுக்காதீர்கள்.  அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.
 
இரண்டு:  உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம்  பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  இது உங்களுக்கும் உதவியாக இருக்கும்.  பிறருக்கும் உதவியாக இருக்கும்.  காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.        


இந்திய நாகம்,


இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். ஏனைய நாகப் பாம்பினங்களைப் போலவே இந்திய நாகமும் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை எறத்தாழ இரண்டு மீற்றர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் யூலை மாதங்களுக்கிடையில் இவை முட்டை இடுகின்றன. ஒரு முறையில் 12 முதல் முப்பது முட்டைகள் இடப்படுகின்றன. இம்முட்டைகள் 48 முதல் 69 நாட்களில் பொரிக்கின்றன. பிறக்கும்போது 20 முதல் 30 சென்ரி மீற்றர் நீளமுடையனவாக இருக்கும் நாக பாம்புக் குட்டிகளது நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்படக் கூடியன.


Naja naja with hood spread open














           உயிரியல் வகைப்பாடு                                                          திணை:
(இராச்சியம்) விலங்கினம்

தொகுதி: முதுகுநாணிகள்

துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்

வகுப்பு ஊர்வன

வரிசை: Squamata

துணைவரிசை: Serpentes

குடும்பம்: Elapidae

பேரினம்: Naja

இனம்: N. naja















1 comment: