For Read Your Language click Translate

Follow by Email

26 March 2017

🍋பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

No automatic alt text available.
🍋அதன்
சிறப்பு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்
🍋சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.
🍋பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.
🍋சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
🍋பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும்.
🍋 அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது.
🍋 மங்களம் குடிகொள்ளும்
🍋அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
🍋காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.
🍋இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!
🍋 எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம்.
🍋இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.
🍋 எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.
🍋பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது.
🍋இது எப்போதுமே சுபவேளை தான்.
🍋 இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும்.
🍋 பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.
🍋 நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும்
🍋பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
💐உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும்.
🍋 இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
🍋மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது.
🍋இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
🍋அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள்.
🍋இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
🍋இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.
🍋நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.
🍋அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம்.
🍋 அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.
🍋இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது
🍋ஆகவே நாம் நம் பெரியோர்கள் வாழ்ந்து காட்டியவாறு நாமும் வாழ்ந்து மற்றோர்களையும் சிவபெருமானின் பெருங்கருணையால் வாழவைத்தும் காட்ட வேண்டும் என்ற உறுதிபாடு பிரம்ம முகூர்த்தத்தில் கட்டாயம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்.
🍋 திருச்சிற்றம்பலம்

பார்வையாளனாக இருங்கள்.....!!!


ஒரு அரச குமாரன் தீட்சை பெற்றான். முதல்நாள் அவன் பிச்சை யாசிக்கச் சென்றான்
புத்தர் கூறிய வீட்டின் வாயிலில் நின்று பிச்சை கேட்டான். பிச்சை கிடைத்தது. உண்டு, திரும்பி வந்தான்
புத்தரிடம் சென்று, "மன்னியுங்கள்.
என்னை மீண்டும் அங்கே அனுப்பாதீர்கள்." என்று வேண்டினான்.
புத்தர், "என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.
அவன் பதிலளித்தான்,
"அந்த இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது என் மனதில் எனக்குப் பிடித்தமான உணவு வகைகளின் எண்ணம் தோன்றியது.
அந்த இடத்தை அடைந்தபோது, வீட்டுத் தலைவி நான் எண்ணிய உணவு வகைகளையே பரிமாறினாள்.
நான் தற்செயலாக நேர்ந்தது என எண்ணினேன்.
ஆனால் உணவு உண்டபோது, தினமும் எனது வீட்டில் உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் பழக்கம் நினைவுக்கு வந்தது.
இன்று நம்மை யார் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கூறப் போகிறார்கள் என்று எண்ணினேன்.
உடனேயே அந்தப் பெண், "சுவாமி! போஜனத்திற்குப் பின் சில நிமிடங்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லுங்கள். கிருபை செய்யுங்கள் என் இல்லம் பவித்ரமாகிவிடும்!." என்று வேண்டினாள்.
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் , இதுவும் தற்செயல்தான். என் மனதில் தோன்றியது, இவளும் கூறினாள் என்று சமாதானம் செய்து கொண்டேன்.
ஓய்வு எடுக்க அமர்ந்தபோது, "இன்று எனது சொந்தக் கட்டிலும் இல்லை. படுக்கையும் இல்லை, இருக்க நிழலும் இல்லை". என்ற எண்ணம் தோன்றியது.
வேறு ஒருவரது கூரை நிழலில் வேறு ஒருவரது பாயில் படுத்திருக்கிறேன்." என்று எண்ணினேன்.
உடனே அந்தப் பெண், "பிட்சு, படுக்கை உங்களுடையதுமல்ல. என்னுடையதுமல்ல!" என்றாள்.
எனக்கு மிகவு‌ம் கலக்கமாகிவிட்டது. தற்செயலாக மீண்டும் மீண்டும் நேருவது சாத்தியமல்ல.
"நான் அவளிடம் கலவரத்துடன் கேட்டேன் :
"எனது எண்ணங்கள் உன்வரை எட்டுகின்றனவா? எனக்குள்ளே ஓடும் நினைவுப் பெருக்கு உனக்குத் தெரிகிறதா?"
அவள், "எப்பொழுதும் தியானம் செய்து செய்து எனது சிந்தனைகள் சூனியமாகி விட்டன.
இப்பொழுது மற்றவர்களது சிந்தனைகளும் காட்சியளிக்கின்றன!." என்றாள்.
நான் பயந்து நடுங்கி ஓடி வந்து விட்டேன்
இனி என்னைத் தயை செய்து அங்கே அனுப்பாதீர்கள்.
புத்தர் விடவில்லை. "ஏன்"? என்று கேட்டார்.
அவன் தயங்கியபடி, "எப்படிக் கூறுவேன்?" அந்த அழகிய யுவதியைக் கண்டு என் மனதில் விகாரங்களும் எழுந்தன. அவற்றையும் அவள் படித்திருப்பாள் அல்லவா?
நான் எந்த முகத்தைக் கொண்டு அங்கு செல்வேன்? எப்படி அந்த வாயிலில் சென்று பிச்சை கேட்பேன்? மீண்டும் என்னை அங்கே அனுப்பாதீர்கள்! " என்றான்.
புத்தர், "அங்கேயே செல்ல வேண்டும். இது உனது சாதனையின் ஒரு பகுதி.
இந்த முறையில் சிந்தனைகளைப் பற்றிய விழிப்பு உனக்குப் பிறந்து விடும்.
சிந்தனையின் பார்வையாளனாக நீ ஆகிவிட முடியும் ",
என்று வற்புறுத்தினார்.
வேறு வழியில்லை. மறுநாளும் செல்ல நேர்ந்தது.
ஆனால் மறுநாள் அதே மனிதன் அங்கே செல்லவில்லை. முதல் நாள் அவன் வழியிலேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
மனதில் என்ன தோன்றுகிறது என்பதையே அறியவில்லை.
இன்று அவன் விழிப்புடனே சென்றான்.
ஏனெனில் இப்பொழுது பயம் இருந்தது. அவன் முழு நினைவுடன் சென்றான்.
அவளது வீட்டு வாயிலை அடைந்தபோது, சற்றுத் தாமதித்து, படிகளில் நின்று,
தன்னை முழுமையாக உணர்வடையச் செய்தான்.
உள்ளே அகக் கண்களை நன்கு திறந்து கொண்டான். "உள்ளே பார்! வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
நீ காணாத எந்தச் சிந்தனையும் இருக்கலாகாது.
நீ அறியாத எந்த எண்ணமும் தோன்றக்கூடாது என்பதை மட்டும் நினைவில் இருத்திக் கொள்", என்று கூறியிருந்தார், புத்தர், தனக்குள்ளே கவனித்தபடி அவன் படியேறினான். தனது சுவாசமே அவனுக்குத் தெரியலாயிற்று.
தனது கை கால்களின் அசைவுகளும் காட்சியளித்தன. உணவு உண்டான்.
ஒவ்வொரு கவளமும் எடுப்பது அவனுக்குள் காட்சியளித்தது. வேறு யாரோ உணவு அருந்துவதை அவன் பார்துதுக் கொண்டிருந்தான்.
உங்களது பார்வையாளனாக நீங்கள் மாறி விட்டால் உள்ளே இரு நிலைகள் ஏற்படுகின்றன.
ஒன்று செயல் புரிபவன்,
மற்றொன்று சாட்சியாக மட்டும் இருப்பவன்.
உங்களுக்குள் இருபகுதி ஆகிவிடும்.
ஒன்று கர்த்தா; மற்றொன்று த்ரஷ்டா.
அந்த முறை அவன் உணவு உண்டான்.
ஆனால் உணவு உட்கொண்டது ஒருவன்.
பார்த்தது மற்றொருவன்.
நம் நாட்டில் கூறப்படுவது, உலகம் முழுவதிலும் ஞானம் அடைந்தவர்கள் கூறுவது ,
"பார்த்துக் கொண்டிருப்பவனே நீங்கள்,
செய்து கொண்டிருப்பவன் நீங்களல்ல!'
என்பதே. அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மிகுந்த அதிசயமும் ஆனந்தமும் அடைந்தான்.
புத்தரிடம் வந்து சேர்ந்தான். மிக்க மகிழ்ச்சியுடன், கூத்தாடிக் கொண்டு, "தன்யனானேன்". பெரும் பேறு கிடைத்தது.
இரு பெரும் அனுபவங்கள் கிடைத்தன.
ஒன்று நான் பூரண விழிப்புடன் இருந்தபோது, சிந்தனைகள் நின்று விட்டன.
விழிப்புடன் உள்ளே கவனித்தபோது எண்ணங்கள் நின்று விடுகின்றன என்பதை உணர்ந்தேன்.
மற்றொரு அனுபவம், சிந்தனைகள் நின்று விட்டபோது கர்த்தா வேறு, த்ரஷ்டா வேறு என்பதை உணர்ந்து கொண்டேன்!" என்றான்.
புத்தர், "இதுவே விதி".
இதைச் சாதனை செய்து விட்டவன், அனைத்தையும் சாதித்து விடுகிறான்!"
என்கிறார் ஓஷோ
Image may contain: one or more people and people sitting

VEGETABLES

வழிகாட்டி சரியாக அமைந்தால் ஊரை அடைவது சுலபம்.

Image may contain: 2 people, people sitting
**************
மனம் என்பதே குழப்பம் தான
அது எப்பொழுதும் குழப்பிகொண்டேயிருக்கும்.
அதை தெளிவாக்கி ஆன்மாவை உணர செய்வது என்பது அத்தனை சுலபம் அல்ல.
எந்த எதிர்பார்புமன்றி
நான்-உணர்வற்று
அறியாமை மிகுந்த உலகில்
அறிபவனாக இருக்க வேண்டும்.
இதற்கு சரியான வழிகாட்டி வேண்டும்
வழிகாட்டி இல்லாமல்
யாராலும் ஊர் போய் சேர முடியாது.
ஊர் இது தான் என தெரிந்தாலும்
செல்லும் பாதை தான் முக்கியம்.
பலர் இப்படி போகங்கள் ஊரை அடையலாம் என்று சொல்லாம்
இது சுலபம்
கையை காட்டி விட்டு அவர் நகர்ந்துவிடுவார்.
ஆனால்
அவர் உங்கள் கூடவே வந்து
உங்களை திசைமாற விடாமல்
கண்காணித்து உங்களை ஊரை அடையச்செய்வது என்பது மிக மிக கடினம்
ஏனெனில்
இங்கு அவரை நீங்கள் முழுமையாக நம்புகிறீர்கள்.
அவரும் உங்கள் மீதுள்ள அன்பால்
எந்தபிரதிபலனையும் எதிர்பார்க்காமல்
உங்களுக்கு உதவுகிறார்.
யார் அவசியம்?
உங்கள் மீது அக்கறையின்றி கையை காட்டிவிட்டு தன் வேலையை பார்ப்பவரா!
உங்கள் மீது அக்கறை கொண்டு தன் வேலையை விட்டு உங்கள் கைகளை பற்றி கூடவே வருபவரா!.
Image may contain: 1 person
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனைபற்றிய ஆய்வு ......
.
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .
ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்
அகத்தியர் & இராவணன் போன்ற மகாண்கள். சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.
ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.

No automatic alt text available.

வாசி என்றால்என்ன???
வா-என்றால் காற்று
சி-என்றால் நெருப்பு.
சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.【"வாசி" என்ற வார்த்தையை திருப்பி படித்தால் "சிவா" என்று வரும்】
இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாகவாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.
வாசி இருப்பிடம்
எல்லோரும் அறிவார் நவ வாசல், அறியாதார் திருவாசல் என்ற பத்தாவது வாசலின் இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள இடுக்கமான ll வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.
வெளிசுவாசம் – உள்சுவாசம்
இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்
போதுவெளிசுவாசம் மாற்றப்பட்டுஉள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.
காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மா
யை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில்உள்சுவாசமான [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு சக்தியை அளிக்கவல்லதாகிறது.
மாமருந்து
சுவாசத்தை கணக்கறிந்து மேலேற்றிமூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப்பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின்நடுனாடி வழியாக ஓடி பத்தாவதுவாசலின் உச்சியில் கனல் ஆவியில்உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.
மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய
------------------[குதம்பை சித்தர்]
உயிராதார காற்று
பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக் கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.
இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள்
ரிஷிகள்.
பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள் என்கிறார்கள்.

Image may contain: 1 person

தந்திர-குண்டலினி யோகம் (Tantra-Kundalini
Yoga)
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின்
வெளிப்பாடு ஆகும். பிரபஞ்சம்
வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை,
இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று மற்றது
இல்லாமல் இருக்க முடியும்.
ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண்
நிலை, நிலையான, இயக்கமற்ற (Static)
தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்பட
ாத உணர்வு அடையாளமாக உள்ளது. சிவம்
முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால்
உருவாக்கவோ அல்லது மாற்றவோ
முடியாதது.
மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic).
சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.
பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம்
இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன்
ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான். பிரபஞ்சத்தில்
காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி
மனிதனிடமும் காணப்படும். பிரபஞ்சத்தில்
பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும்
தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும்
பொருந்தும்.
மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று
அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு
தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக்
கூறப்படுகிறது. குண்டலினி-யோகாவின்
தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட
ஆற்றலை மேலே எழுப்பச்செய்து
முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள்
எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள்
வழியாக செலுத்துவதாகும். பிறகு சிவம்
எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ர
தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில்
சேர்ப்பதாகும். இவ்வாறாக சிவம், சக்தியை
ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன்
தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின்
பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய
நிலையை அடைய முடியும்.
நாடிகள் (Nadis)
நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை
தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு
பாதையானது அமைந்துள்ளது.அதன் பெயர்
நாடியாகும். சிவ சம்கிதம் என்ற தாந்திர
சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன. அவற்றில்
இடகலை,பிங்கலை மற்றும் சுழுமுனை
என்பவை மிகவும் முக்கியமானதாக
கருதப்படுகின்றது.
பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க
பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண்
தன்மைகொண்டது. வெப்ப வழிப்பதை,
சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது.
யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது.
மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க
பாதை. வெண்மை நிறமுடையது, பெண்
தன்மைகொண்டது. குளிர்சி வழிப்பதை,
சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது.
கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது.
மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது.
மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின்
மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள
சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது.


வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் . அன்புடன்

முடிவெடுக்கும் முன்னே . . .!!!
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .
மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்
“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .
நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .
ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .
நமசிவாய என்றார் ஒருவர் .
ஓம் சக்தி என்றார் மற்றவர் .
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .
எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .
அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்”, பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .
இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .
சில வருடங்களுக்குப்பின் . . .
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.
தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .
நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .
இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .
தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .
அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.
உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”
இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.
மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,
ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .
இந்த நிலை மாறும்
அவ்வளவுதான்
வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .
தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.
தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.
அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.
இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .
நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .
மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.
தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.
மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .
மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .
இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .
அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “
மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே ”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .
ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.
சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.
அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .
இந்த நிலை மாறும்
இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .
நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.
இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !
அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை .
ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.
இந்த நிலை மாறும்
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
அன்புடன் கருணாகரன் .@ http://tamilnanbargal.com/

YOGAயோகாசனம் & முத்திரை

Updated about 4 months ago
5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும்.

அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும்.

"யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள்.

உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்.யோகாசனம்= யோகம்+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர்.

மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன. சில யோகாசனங்கள் இரத்த ஒட்டத்தை சீர்படுத்தினாலும் அவை இரத்த ஒட்டத்திற்காக மட்டும் செய்யப்படும் பயிற்சி ஆகாது. இதைப் போலவே சில யோகாசனங்கள் 
சுவாசத்தைச் சீர்ப்படுத்தினாலும், சுவாசம் சீர்ப்படுத்தலுக்கு என்று சுவாச பந்தனம், பிராணயாமா போன்ற தனிப்பயிற்சிகள் உள்ளன. அதனால் யோகாசனம் என்பது உடற்பயிற்சியும் அவை சார்ந்த நிலைகளும் மட்டுமே.ஆசனப் பயிற்சிஉட்காசனம்பத்மாசனம்வீராசனம்யோகமுத்ராஉத்தீதபத்மாசனம்சானுசீரானம்பஸ்திமோத்தாசனம்உத்தானபாத ஆசனம்நவாசனம்விபரீதகரணிசர்வாங்காசனம்ஹலாசனம்மச்சாசனம்சப்தவசீராசனம்புசங்காசனம்சலபாசனம்தணுராசனம்வச்சிராசனம்மயூராசனம்உசர்ட்டாசனம்மகாமுத்ராஅர்த்தமத்த்ச்யோந்தராசனம்சிரசாசனம்சவாசனம்மயூராசனம்உசர்ட்டாசனம்அர்த்த மத்ச்யோந்திராசனம்அர்த்த சிரசானம்சிரசாசனம்நின்ற பாத ஆசனம்பிறையாசனம்பாதாசுத்தானம்திருகோணசனம்கோணாசனம்உட்டியானாநெளலிசக்கராசனம்சவாசனம்/சாந்தியாசனம்பவனமுத்தாசனம்கந்தபீடாசனம்கோரசா ஆசனம்மிருகாசனம்நடராசா ஆசனம்ஊர்த்துவ பதமாசனம்பிரானாசனம்சம்பூரண சபீடாசனம்சதுரகோனோசனம்ஆகர்சன தனூராசனம்ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்உருக்காசனம்ஏக அத்த புசங்காசனம்யோகா நித்திரைசாக்கோராசனம்கலா பைரப ஆசனம்அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்கவையாசனம்பூர்ண நவாசனம்முக்த அகத்த சிரசாசனம்ஏகபாத சிரசாசனம்
Image may contain: 1 person
No automatic alt text available.
Image may contain: one or more people and text
Image may contain: one or more people and text
Image may contain: one or more people
Image may contain: one or more peopleதலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!
தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.
மகா சிரசு முத்திரை
மோதிர விரல் உள்ளங்கை நடுவிலும், ஆட்காட்டி, நடு, கட்டை விரல் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.
பலன்கள்: காலை, மாலை என 10 நிமிடங்களுக்கு செய்ய, தலைவலி நீங்கும். இந்த முத்திரை செய்வதால், தலை மற்றும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். தலையில் நீர்கோத்து ஏற்படும் தலைவலி, சைனஸ் தலைவலிக்கு (Sinusitis) சிறந்த தீர்வாக அமையும்
Image may contain: one or more peopleதலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!
பிராண முத்திரை
மோதிர விரல், சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கலாம். இரண்டு கை அல்லது ஒரு கையிலும்கூட இந்த முத்திரை பிடிக்கலாம்.
பலன்கள்: 20 - 40 நிமிடங்கள் செய்யலாம். தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த முத்திரையைச் செய்துவர, ஒற்றைத் தலைவலிப் பாதிப்பு குறையும்
Image may contain: one or more peopleதலைவலியைத் தீர்க்கும் முத்திரைகள்..!!!
சின்மய முத்திரை
சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும்.இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.
பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
Image may contain: one or more peopleஅர்த்தசின் முத்திரை
ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள்: 10 - 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்
Image may contain: one or more people
அபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (mudra of the heart) !!!

நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து 
ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். 
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு "மிருத்யு சஞ்சீவி" என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.
இந்த முத்திரை "அபான முத்திரை" மற்றும் "வாயு முத்திரை" இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

அபான வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
• இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும்.
• உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,
• நெஞ்சு படபடப்பு குறையும்.
• வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
• மூலநோய் குணமாகும்.
• உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
• சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.
• உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். (உம்- தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கனுக்கால் வலி முதலியன ).
• இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.
• உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும். (TOXINS)
• வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும்.
• இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் (BLOCK) அது நீங்கி நெஞ்சு வலி குறையும்.
• இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.
• ஹார்ட் அட்டாக் சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி உடனடியாக செய்தால் இது "சார்பிட்ரேட்" உயிர் காக்கும் மாத்திரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதேபோல் நம்மை காப்பாற்றும்

.   


                                             
No automatic alt text available.

Image may contain: 1 person, sitting


Image may contain: one or more people, people sitting and shoes

Image may contain: one or more people
Image may contain: 1 person, outdoor

Image may contain: one or more people

Image may contain: one or more people and text