For Read Your Language click Translate

Follow by Email

29 December 2015

தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

 பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாஸ்டர்டாமஸ்


நாஸ்டர்டாமஸ் என்னும் ஐரோப்பிய தீர்க்க தரிசி !

By  |

நம் நாட்டு சித்தர் பெருமக்களை ஒப்பிடும்போது , இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. என்ன பண்ணுவது? அவர் தான் மேலை நாட்டில் பிறந்து விட்டாரே ! அற்புதம் என்று தோன்றும் விஷயங்களை அவர்கள் தான் விளம்பரப் படுத்துவதில் ஜித்தர்களே. அவரை வைத்து எழுதிய புத்தகங்கள் அனைத்தும், மில்லியன் டாலர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளன. சரி, நமது நண்பர்களுக்காக – அவரைப் பற்றி ஒரு சில பதிவுகள் . இந்த தகவல்கள், தற்செயலாக நான் படிக்க நேர்ந்தது. நமது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. ‘நூற்றாண்டுகள்’ என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன..
14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!
லத்தீனில் ஆழ்ந்த புலமை பெற்ற நாஸ்டர்டாமஸ் அம்மொழியின் செழுமையான வார்த்தைகளைக் கையாண்டிருப்பதால் அதன் உள் அர்த்தம் புரியாமல் அறிஞர்களும் ஜோதிட ஆர்வலர்களும் இன்று வரை அச்சொற்பொருள்களை அறிய தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளில் இந்நூலை முடித்து 1555ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வெளியிட்டார். நூல் அச்சிடப்பட்ட மேஸ்பான்ஹோம் பிரஸ்ஸின் முன்னே வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் மக்கள் நின்று இதை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் சங்கேத மொழியில் பலன்களைக் கொண்டுள்ள பாடல்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தின
அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ். இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் ‘இன்னும் மூன்று நாட்களில்’ என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.
இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக “இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா” என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ் வில்லியிடம் “இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது” என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் “உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்” என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். “இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்” என்றார். உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். “கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்” என்றார். இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.
இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் “மாலை வணக்கம் இளம் பெண்ணே” என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், “மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது. நாளுக்கு நாள் அவர் புகழ் பெருகவே அவர் வாயிலிருந்து என்ன சொல் உதிரப் போகிறது என்பதை அனைவரும் அறிய ஆவலுற்றனர். அவர் மரணத்திற்குப் பின்னும் கூட அவர் ஆரூடம் பலித்ததுதான் விசித்திரத்திலும் விசித்திரம்!
நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார். இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார். தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!
பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர். சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.
சலான் என்ற நகரில் அவரது வீட்டில் மேல் மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அதைத் தனது பணிகளுக்கான அறையாகக் கொண்ட அவர் அதில் அடிக்கடி தீவிர தியானத்தை மேற்கொண்டு சமாதி நிலையை அடைந்தார். அவர் அகக்கண்ணில் எதிர்காலம் பற்றிய காட்சிகள் தோன்றலாயின அவர் எதிர்காலத்தில் பயணிக்கும் காலப் பயணியாக மாறித் தனக்குப் புலப்பட்டதை எல்லாம் குறித்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவரது ‘செஞ்சுரீஸ்’ என்ற எதிர்காலக் கணிப்பு நூல்!.
அந்நூலில் சங்கேத பாஷையில் அமைந்த அவரது பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
மூன்றாம் காண்டத்தில் 57வது க்வாட்ரெய்னில் (நான்கு வரிச்செய்யுள்) உள்ள நான்கு வரிகள் இவை:-
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச்சந்திக்கும்
290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்
ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது
துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள்
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது
2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.
3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்
4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.
5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.
6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது
7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.
இதே போல ஒவ்வொரு பாடலும் ஒரு எதிர்காலக் காட்சியைக் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.
ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது
இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது
இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.
‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்’.
இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!

ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்

விநாயகர் துதி (மேஷம்)
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை…
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக ! விரைகழல் சரணே !
முருகன் துதி (ரிஷபம்)
பேர் ஆதரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!
சேரா நிருதர் குல கலகா!
சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்
தேவா ! தேவர் சிறைமீட்ட
செல்வா ! என்று உன் திருமுகத்தைப்
பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !
வா, வா, என்று உன்னைப் போற்றப்
பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்
வாராது இருக்க வழக்கு உண்டோ !
வடிவேல் முருகா ! வருகவே !
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி கணவா ! வருகவே !
பெருமாள் துதி (மிதுனம்)
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து !
நரசிம்மர் துதி (கடகம்)
அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்
அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்
தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்
துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்
மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்
ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்
வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்
பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !
அனுமன் துதி (சிம்மம்)
விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்
உறைவார் முடிவே உணரா முதலோன்
கரைவார் நிறைவே கருதாதவன் போல்
உறைவான் மறையாய் ஒரு நீதியனே !
கண்டேன் ஒரு சீதையையே
கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்
வென்றேன் எனவே விழைந்தானையே நான்
கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !
சரமே தொளையா சகமே மறவா
சரீரா அனுமா ஜமதக் கினிநீ
உரமே உறவே உறவோய் பெரியோய்
உயர்வே அருள்வாய் திருமாருதியே !
கோவிந்தன் துதி (கன்னி)
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,
நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !
ராகவேந்திரர் துதி (துலாம்)
நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !
சிவ துதி (விருச்சிகம்)
நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !
துர்க்கை துதி (தனுசு)
இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !
துர்க்கை துதி (மகரம்)
சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.
சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்
பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா
வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !
சிவன் துதி (கும்பம்)
ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !
ஸ்ரீரங்கநாதர் துதி (மீனம்)
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !
வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !
ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்
ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ளகூறப்பட்டுள்ள கணித முறை.....

நமது பஞ்சாங்களின் மூலம் மழையின் அளவை தெரிந்து கொள்ள கூறப்பட்டுள்ள கணித முறை.....
அந்த,அந்த வருடத்திற்க்கான சாலிவாகன சகாப்தத்தை 8 ஆல் பெருக்கி 9 ஓன்பதால் வகுக்க ,ஈவு போக,மீதி
‪#‎ஒன்றானால்‬ வர்த்தமேகம் என்று பெயர் அதாவது புன்மழையாம் அதாவது மழைக் குறைவு எனவும்.
‪#‎இரண்டானால்‬ கங்கு வர்த்த மேகம் என்று பெயர் அதாவது புயல் வீசும் என்றும்...ஆக வெறும் புயல் என்று மட்டும் என்று அறியலாம்.
‪#‎மூன்றானால்‬ புஷ்கரை மேகம் என்றும், பிரளயமாய்ப் பொழியும் என்றும்.
‪#‎நான்கானால்‬ துரோண மேகம் என்றும் அதாவது வெள்ளப்பெருக்கேற்படும் என்றும்.
‪#‎ஐந்தானால்‬ காள மேகம் என்றும் அதாவது காற்றும் மழையும் கலந்து வீசும் என்றும்.
‪#‎ஆறானால்‬ நீல மேகம் என்றும் அதாவது பெய்த இடத்தே பெய்து மற்ற இடத்து பொய்க்கும் என்றும்.
‪#‎ஏழானால்‬ வருண மேகம் என்றும் அதாவது வெகு மழை பொழியும் என்றும்.
‪#‎எட்டானால்‬ வாயு மேகம் என்றும், மழை பொய்த்து வறட்சி மிகும் என்றும்.
‪#‎ஒன்பதானால்‬ தமோ மேகம் என்றும்,நல்ல மழை பொழிந்து சுபிட்சம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது....
அவ்வாறானால் இந்த மன்மத வருடம் ‪#‎சாலிவாகன‬ சகாப்பத வருடம் 1937 ஐ 8 ஆல் பெருக்க 15496 வரும்,இதை ஒன்பதால் வகுக்க மீதி ஏழு வரும் என்றும் அதன் மூலம் பார்க்க‪#‎வெகு_மழை‬ என்பது கணித கணக்கு...
அடுத்ததாக....
வருட மேகாதிபதி சூரியனால் கிழக்கு திசையிலும்,சந்திரனாயின் தென்மேற்கிலும்,செவ்வாயின் தெற்கிலும்,புதன்,குருவாகில் வடக்கிலும்,சுக்கிரனாயின் தென்கிழக்கிலும்,சனியாயின் மேற்கிலும் மேகம் உற்பத்தியாகி மழை பெய்யும் என்கிறது சாஸ்திரமே.
அப்படியாயின் இந்த ‪#‎மன்மத‬ வருடம் மேகதாதி பதியாக சந்திரன் வந்துள்ளார் எனவே தென் மேற்க்கு என்றாகிறது....
மேலும் இந்த வருட மேகாதிபதியின் பலனாக‪#‎ஆறு_குளம்_நிரம்பும்_என்றும்_பலவித_நிறம்_உள்ளவர்கள்‬விருத்தி என்றும் கூறப்பட்டுள்ளது....
ஆக இதன்படி காணும் போது இது பருவகால மழை என்றும்,இந்த ‪#‎பேரழிவுக்கு‬ காரணம்,ஏறி,குளம்,கூவம் என்றும் மண்ணின் தன்மை அறியாமல் கட்டங்களை கட்டி,மழை நீர் வடிய,செல்ல வழியில்லாததால் தான் இந்த கஷ்டம் என அறிய முடிகிறது.
‪#‎இயற்க்கை_குறை_சொல்லக்கூடாது‬ என்பது...வினை விதைத்தோம்,வினை அறுக்கிறோம்...காலத்தின் கோலம் 
நன்றி: https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf

பெண்களின் ஜாதகத்தை பலன் சொல்ல எடுத்தாளும் விதிகள்.

பெண்களின் ஜாதகத்தை பலன் சொல்ல எடுத்தாளும் விதிகள்.
0.பெண்களின் உடல் அழகு அறிய ராசி,லக்னம் இவற்றில் எது பலமோ, அந்த அதைக் கொண்டு அறிய வேண்டும்.
1.பெண்களின் ஜாதகத்தில் 8 மிடத்தின் மூலம் கணவரின் ஆயுளை நிர்ணயிக்க வேண்டும்.
கணவன் மரணத்திற்க்கு பின் மறுமணம் மறுக்கப்பட்ட காலம் அது.
2.உடல் சம்பந்தமான கேள்விகளுக்கு லக்னத்தாலும்,ராசியாலும் அறிய வேண்டும்....இவை ஆண்,பெண் இருவருக்கும் பொது.
3.பெண்களின் யோக பலன்களையும்,கணவரின் யோக பலனையும் லக்னத்திற்க்கு ஏழாம் வீட்டின் மூலம் அறிய வேண்டும்.
4.புத்திர பாக்கியம்,செல்வம், ஐந்துடன் ஒன்பதையும் ஆராய்ந்தே சொல்ல வேண்டும்.
5.கற்பு நிலைகளை அறிய நான்குடன் ஏழாமிடத்தையும் ஆராய வேண்டும்.
6.பெண்களுக்கு கணவன் காரகன் செவ்வாய்,என்றும்,குரு என்றும்,சுக்கிரன் என்றும் சில நூல்கள் சொல்லுகின்றன....ஆனால் பெண்களுக்கும் களஸ்திர காரகன் சுக்கிரனே!!
7.தடையில்லாத யோகங்களை பெற ராகு,கேதுவையும்,சூரியனையும் ஆராய்வது முக்கியம்.
எனவே விதிகளை இன்றைய நடைமுறை வாழ்க்கை,சூழ்நிலைக்கு ஏற்ப,சிறு,சிறு மாறுபாடுகள் அடைகின்றன.
நன்றி :https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf

வீடுகளில் ‪நவகிரகங்கள்‬ உறையும் இடங்கள்.நாம் வசிக்கும் வீடுகளில் ‪#‎நவகிரகங்கள்‬ உறையும் இடங்கள். 
# அடிப்படையானதுதான்#
தெரிந்து_கொள்வோமே‬!!!

‪#‎சூரியன்‬ பூஜையறையில் இருப்பார்,வடக்கிழக்கான ‪#‎ஈசான‬திசையே சூரியனின் இருப்பிடமாகும்.
‪#‎சந்திரன்‬ குளியறையில் இருக்கிறார் என்றும்(சிலர் கேதுவுக்கும் சொல்லுகிறார்கள்) அதாவது ‪#‎கிழக்கு‬ திசை.
‪#‎செவ்வாய்‬ சமையலறையில் இருக்கிறார் அதாவது‪#‎தென்கிழக்கு‬ திசை.
‪#‎புதன்‬ படிப்பு,தொழில் சம்பந்தபட்ட விசயங்கள் கலந்துரையாட, முன்வராந்தா அல்லது வீட்டின் மைத்திய பகுதி.
‪#‎குரு‬ பொக்கிய அறை,அதாவது வடக்கு.இதில் வடகிழக்கில் தியானம் பொன்றவை செய்யும் போது குருவே நிறைந்து இருப்பாராம்.
‪#‎சக்கிரன்‬ வரவேற்பு,படுக்க அறை, துணிமாற்றும் அறை அதாவது ‪#‎தென்மேற்க்கு‬ திசை.
‪#‎சனி‬ இருண்ட அறை, ஆடு,மாடுகள் கட்டும் இடம் அதாவது‪#‎வடமேற்க்கு‬ திசை.
‪#‎ராகு_கேது‬ விட்டின் நுழைவு வாயில் ‪#‎வலது‬ திசையிலும்‪#‎கேது‬ விட்டின் நுழைவு வாயில் ‪#‎இடது‬ திசையில்.

‪#‎நன்றி‬!!!https://www.facebook.com/Astro-Sadaiyappa-1537796269799506/?fref=nf
Astro Sadaiyappa

உங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது?- GEMSTONEராசிக் கற்கள்:
ராசிக்கல்
நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்படுகிறது. இந்த நவமணிகளை அணிவதன் மூலம் அந்த கிரகத்தின் நற் தன்மைகள் கதிர் வீச்சுக்களாய் நம் உடலில் ஊடுருவி குறிப்பிட்ட கிரகத்தின் பாதிப்புகளை சமன் செய்வதுடன் அதிர்ஷ்டத்தையும் வழங்குவதாக குறிப்புகள் கூறுகின்றன.

இன்றும் கூட தமிழர்கள் வீடு கட்ட துவங்கும் போது நவமணிகளை வீட்டின் தலைவாயிலில் புதைப்பதை காணலாம். இவை தவிர கோவில்களில் நவமணிகள் பெரும் அளவில் கருவறைகளிலும், கோபுர அஸ்திவாரங்களில் புதையுண்டிருப்பதாக குறிப்புகள் காணப் படுகின்றன. இவையெல்லாம் இந்த நவமணிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகும். 


ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
1. சூரியன்—மாணிக்கம்.இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
2. சந்திரன்—-முத்து.இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
3. செவ்வாய்—-பவழம்.இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம்               உண்டாகும்.

புதன்—-மரகதம்.இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும், ஞானம்,வாக்கு                        சதுர்த்தியம்,யுக்கி,,வியபார தந்திரம் போன்ற பலன்களை அளிக்க வல்லது.
5.குரு—-புஷ்பராகம்.இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ            விருத்தியையும் கொடுக்கும்.

6. சுக்கிரன்—-வைரம்.இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
7. சனி—-நீலம்.செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
8. ராகு—-கோமேதகம்.
9. கேது—- வைடூரியம்.


நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடமா.. ?


எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?
ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் எனசாஸ்திரம்சொல்லுகிறது.அதற்கென சில நாட்களை வரையறுத்திருக்கின்றனர்அதன்படி....

ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்
திங்கள் : முத்து, வைடூரியம்
செவ்வாய் : பவழம்
புதன் : மரகதம்
வியாழன் : புஷ்பராகம்
வெள்ளி : வைரம்
சனி : நீலம்

தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப் படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள்தோஷ நிவர்த்திஎன்பர்.

நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.

மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும்
முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,
புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும்
கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும்
மரகதம் பச்சை நிறக் கதிர்களையும்
வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,
வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும்
நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும்
பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.

இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் அகத்தியர் தனதுஅகத்தியர் வாகடம்என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும். நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி எல்லோருமே ராசிக்கற்களை அணிந்துகொள்ளலாமா என்றால், கூடாது என்றுதான் கூறவேண்டும். நிஜத்தில் ஒவ்வொரு ஜாதகரின் கிரக அமைப்பு, அவற்றின் சாதக பாதகங்களை வைத்து மட்டுமே நவமணிகளை பரிந்துரைக்க முடியும்.அதாவது பிறந்த ராசி, ராசிஅதிபதி, நட்சத்திரம், தசாபுத்தி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யாருக்கு எந்தவகை ரத்தினம் பொருந்தும் என்று குறிப்பிடமுடியும். மற்ற படி தனியாக ஒரு ராசியையோ, நட்சத்திரத்தையோ முன்வைத்து கற்களை குறிப்பிடுதல் தவறாகும்.

எந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது?

1.மேஷம் - நீலம்

2.ரிஷபம் - நீலம்

3.மிதுனம் - புஷ்பராகம்

4.கடகம் - வைரம்

5.சிம்மம் - பவளம்

6.கன்னி - புஷ்பராகம்

7.துலாம் - மாணிக்கம்

8.விருச்சிகம் - முத்து

9.தனுசு - பவளம்

10.கும்பம் - பவளம்

12.மீனம் - மரகதம்
இவ்வாறு பரிந்துரைக்கப் பட்ட ரத்தின வகைகளை பொதுவாக ஆண்கள் தங்கள் வலது கை மோதிரவிரலிலும்பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிதல் வேண்டும்சிறு குழந்தைகளாயின் கழுத்தில் அணியலாம். இவ்வாறு அணியும் போது அந்தக் கல்லானது உடலில் படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே சிறப்பு.முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக பரிந்துரைக்கப் பட்டு அணியப் படும் கற்கள் நல்ல பலன்களை ரும்.


அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்…!
மாணிக்கம் : இணைக்கும் உலோகம் – தங்கம்
அணிய வேண்டிய விரல்                    – மோதிர விரல்

முத்து : இணைக்கும் உலோகம்  – தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல்  – ஆள்காட்டி விரல், மோதிர விரல்

புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம் – தங்கம்
அணிய வேண்டிய விரல் – ஆள்காட்டி விரல்

கோமேதகம் : இணைக்கும் உலோகம் – வெள்ளி அல்லது தங்கம்
அணிய வேண்டிய விரல் – மோதிர விரல், நடு விரல்

மரகதம் : இணைக்கும் உலோகம் – தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் – சுண்டு விரல், மோதிர விரல்உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?
ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.
எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.
புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை
வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள்  பயிரிடுவோர்

நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்— யார், எப்படி அணியவேண்டும்…? ஒரு கண்ணோட்டம்
செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.

நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

.முத்து (pearl)

முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும், அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.
முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.வைரம் (diamond)
உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.


வைடூரியம் (cat’s eye)
இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.
சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .
வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மாணிக்கம் (ruby)
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .
பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .
மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .


மரகத பச்சை (emerald)
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.
மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.


புஷ்பராகம் (topaz)
இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.
புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.பவழம் (coral)
இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.


இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.

நீலம் (sappihire)
ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.
தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.

நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.

கோமேதகம் (hessonits)
புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.
உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.


கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.


நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.

சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)
சந்திர காந்த கற்கள்
இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்
தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.
யாரெல்லாம் அணியலாம் ..?
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.


சூரிய காந்த கற்கள்
இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.
யாரெல்லாம் அணியலாம் ..?
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.

கிரகங்களும் அவை தோற்றுவிக்கும் நோய்களும் அவற்றிற்கான பரிகாரங்களும்:

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.


நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத் துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.

கன்னி
 லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரக தத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்தினை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.
இரண்டு ரத்தினங்களை இணைக்கும்போது, அவைகளுக்குள் பேதை ஏற் படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண் டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும். தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம்
மஞ்சள்  நிறமுடைய  புஷ்பராகக்கல்:
மூன்றாம் எண் குருவிற்கு உரியது.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 3ஆம் எண்ணாகும்.
இந்த மூன்றாம் எண்காரர்கள் பொதுவாக வசீகரமானவர்கள். ஆண்கள் கம்பீரமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள் அழகாக இருப்பார்கள். சிலர் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகுடன் இருப்பார்கள்
ஜோதிடமாகட்டும் அல்லது எண் ஜோதிடமாகட்டும், குருவிற்கு முக்கியமான பங்கு உள்ளது. சூரியனிட மிருந்து தான் பெறும் சக்தியைவிடப் பன்மடங்கு சக்தியை வெளிபடுத்தும் கிரகமாகும் அது. நியாயத்தையும், தர்மத்தையும் போதிக்கும் கிரகம் அது. அதனால்தான் அதற்குப் பிரஹஸ்பதி அல்லது வாத்தியார் என்ற பெயரும் உண்டு. பண்டைய நூல்கள் குருவை முக்கியப்படுத்திப் பல செய்திகளைச் சொல்கின்றன.
Jupiter is a planet of courage, boldness, power, hard work, energy, knowledge, and speech.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் குருவிற்கு நட்புக் கிரகங்களாகும். தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குருவிற்குச் சொந்த இடங்களாகும். கடகம் உச்சமான இடம். மகரம் நீசமான இடம்.
பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டிற்குக் காரகன் குரு. தந்தைக்குக் காரகன் சூரியன் என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின் மற்ற செயல்பாடுகளுக்கெல்லாம் குருவே அதிபதி.
ஒன்பதாம் வீடுதான் அதிர்ஷ்டத்தைக்குறிக்கும் வீடு. அதிர்ஷ்டத்திற்கு அதிபதி குரு. அதை மறக்க வேண்டாம். ஜாதகத்தில் குரு, கேந்திர கோணங்களில் இருப்பது நன்மை பயக்கும்!
நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும் குருவின் அமைப்பு முக்கியம். பெண்ணின் ஜாதகத்தில் குருவின் அமைப்பைவைத்துத்தான் அவளுக்கு நல்ல கணவன் அமைவான். ஜாதகத்தில் குரு மறைவிடங்களில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
சனி, ராகு அல்லது கேதுவுடன் கூட்டாகவோ அல்லது எதிரெதிர் பார்வையுடனோ இருக்கும் குருவால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. மிதுனம், கன்னி லக்கினக்காரர்களுக்கு, அதுபோன்ற அமைப்பு இருந்தால், சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும்
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கடினமான உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செயல்படக்கூடியவர்கள். தங்களைத் தாங்களே பலவிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம் என்பது சிறிதும் இருக்காது. அதீதமாகப் பொருள் ஈட்டக்கூடியவர்கள். அதாவது சம்பாதிக்கக்கூடியவர்கள்.
அறவழிகளில் ஈடுபாடு உடையவர்கள். கடமையே வெற்றிக்கு வழி என்பதிலும் உறுதியாக இருக்கக் கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர்கள். ஓய்வு என்று சொல்லி ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். செய்யும் வேலை அலுப்பைத் தந்தாலும், அதை விடாது செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
எந்த வேலையை மேற்கொண்டாலும், அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவர்கள். அந்த விதமான செயல்பாடே அவர்களுக்கு அதீதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அந்தத் தன்னம்பிக்கைதான் அவர்களின் தாரக மந்திரம். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றக் கூடியவர்கள். அதனால் பலரது நம்பிக்கைக்கும் ஆளாகியிருப்பவர்கள். எதிலும் ஒரு ஒழுங்கை விரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சிறப்புடன் வாழ்பவர்கள். முத்தவர்களின் அன்பு, பாசம், பரிவு, ஆலோசனை என்று அனைத்தும் இவர்களைத் தேடி வரும். சமூக அந்தஸ்தும் தேடிவரும்.
ஆரோக்கியமான உடற்கட்டு இருக்கும். வாழ்க்கையுடன் இயைந்து போவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியை உடையவர்கள். நகைச்சுவை உணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத் தூண்டுதலாக விளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.
ஒற்றிலக்க எண்களில் - அதாவது 1,3,5,7,9 எனும் எண்களில் 3ஆம் எண்தான் அதிக சக்தியுள்ள எண். தலைமை எண் என்றும் சொல்லலாம்.
It makes its natives independent, bold, active, hard, working, dependable, popular, disciplined & self-confident. At the beginning of their career, which they start quite early in life they have to struggle a lot. This struggle, however, is very beneficial for their growth and development and makes them shine.
கடுமையான உழைப்பினால், சிலருக்கு, மன அழுத்தங்கள் உண்டாகும். சில இடையூறுகள் ஏற்படும். ஆனால் இந்த எண்ணிற்கு இயற்கையாகவே உள்ள அதிர்ஷ்டம்தரும் அமைப்பினால், அவைகள் எல்லாம் அவ்வப்போது களையப்பட்டுவிடும். தேவையானபோது இந்த எண்காரர்களுக்குப் பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். செய்யும் வேலையில் அல்லது தொழிலில் தலைமை ஏற்கும் நிலைக்கு உயர்வார்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும் நன்மை பயக்கக்கூடியதாகவே இருக்கும். வியாழக்கிழமை உரிய கிழமையாகும். அதுபோல திங்கள், செவ்வாய் & புதன் கிழமைகளும் இந்த எண்காரர்களுக்குச் சாதகமான கிழமைகளே!
இந்த எண்காரர்களுக்குச் சாதகமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறத்தில் துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணை உறை, கைக்குட்டை என்று எல்லாவற்றிலும் மஞ்சள் நிறத்தையே போற்றி வைத்துக்கொள்ளலாம்
நவரத்தினங்களில் மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் நன்மை பயக்கும்!
உடல் நலம்: இந்த எண்காரர்களுக்கு, நீரழிவு நோய், மஞ்சள்க் காமாலை நோய் போன்றவைகள் வரக்கூடும்.  எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த எண்காரர்களின் வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகிய வயதில் வாழ்க்கை ஏற்ற முடையதாக இருக்கும்
ஐந்தான் ஜார்ஜ் மன்னர், அப்ரஹாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பிரபலங்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.
ஒருவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய எந்தக் கல்லை தேர்ந்தெடுத்து அணிவது என்பதை 'ஜெம்மாலஜி' என்ற அறிவியல் எடுத்துரைக்கின்றது. நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதப் பச்சையாகும். மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும் என்பார்கள். எனவே தான் மரகத லிங்கமுள்ள திருக்கோவில்களில் சிவலிங்கத்திற்கு தீபம் மட்டும் காட்டுவதாகச் சொல்வார்கள்.

புதன் கிரகத்தால் பலன் பெற விரும்புபவர்கள் மரகதப் பச்சை அணியலாம். மோதிரத்தை எந்த வடிவத்தில் செய்து எந்த விரலில் எப்பொழுது அணிய வேண்டும் என்பதை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு அணிந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். பொதுவாக பெண்கள் நல்ல ஜாதி மரகதக் கல் அணிந்து கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். இருதயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். ஆண்கள் அணிந்து கொண்டால் அற்புதப் பலன்களைக் காணலாம். புத்திக் கூர்மை ஏற்படும்.  விவாகத்தினால் விவகாரம் ஏற்படாமல் வியக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். இது பொது நியதி என்றாலும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்வதே நல்லது.


அஷ்டமாதிபதியை ராசிநாதனாகக் கொண்டவர்கள், ராசிப்படி கல் அணியலாமா?
உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் மரகதத்தை மோதிரமாக் அணியலாமா? கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவழத்தை அணியலாமா?  கூடாது.
கடக லக்னம், கடக ராசி உள்ள ஒருவருக்கு எட்டில் சனி. அவருக்கு சனி தசை ஆரம்பித்த நாலே வருடங்களில் தொழில் சரிவு ஏற்பட்டு குடும்பத்தினரும் பிரிந்து விட்டனர்.  கையில் நீலக் கல் மோதிரம் அணிந்திருந்த அவர் கூறியதென்னவென்றால்,  சனி தசை நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நீலக்கல் அணியும்படி ஒரு நகைக் கடைக்காரர் கூறியதாகக் கூறினார்.  கேட்டதும் அதிர்ச்சி அடையாமல் வேறென்ன செய்வது?
அஷ்டமாதிபதியின் கல்லை அணியக்கூடாது என்ற அடிப்படை விஷயம்கூட அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.  எனவே நவரத்தினங்களில் எதை அணியலாம்; எதை அணியக்கூடாது என்பது பற்றி  நமது மேலான ஜோதிட சாஸ்திரம் சொல்வதை நன்கு ஆராய்ந்து பார்த்து கீழ்க்கண்ட உண்மைகளை எடுத்து இயம்பியுள்ளோம்.
1. லக்னப்படியும் ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்த கிரகம் வலிமை குறைந்திருந்தால், அந்தக் கிரகத்துக்குரிய கல்லை அணியலாம்.
2.  6, 8 க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே. ( பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும் அணியக்கூடாது)
3. லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால், அவருடைய ராசிக்கல்லை வலதுகை மோதிர விரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு , எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால், லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத் திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்கவேண்டும்.
4. 5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும்போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம்.
5. 2,11,4,7,10 பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால், அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணியலாம்.
5. ராகு கேதுக்களின் தசை நடக்கும்போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி , லக்ன சுபராகி  அவர் வலிமை குறைந்திருந்தால்,  அந்த ராகு கேதுக்கள் இருக்கும் ராசிக்கு  அதிபதியின் கல்லை அணியலாம்.
6. ராகு கேதுக்கள் 3,11ல் இருந்தால், மட்டுமே அவர்றின் ராசிக் கற்களை அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் இருந்தால், அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
7. கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற ,  அதாவது கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற குருவும், புதனும், எந்த பாபர் பார்வையும் , சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும்  நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. {லக்னம் , கேந்திரத்துக்கும் திரிகோணத்துக்கும் பொதுவானது.  லக்கினத்தில் அவர்கள் இருந்தால் தோஷம் இல்லை} .
8. மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணியவேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்ச லோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்கினக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்.
9. ரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும்.


யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் …?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.


யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.
எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம். மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் …!
யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.
யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்
யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்
யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.
யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்

யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.
இப்படியான விதிமுறைகளை ஆராய்ந்த பின்னர், தேவைப்பட்டால், உங்கள் பிறந்த ஜாதகத்துடன்  குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால்,  தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

THANK YOU:
http://www.maalaimalar.com/2014/01/21150849/Benefits-of-stones.
htmlhttp://moonramkonam.com/lucky-gems-rasi-kal-gemmology/
http://arjunmathu.blogspot.in/p/blog-page.html