For Read Your Language click Translate

16 June 2014

தமிழர்​களின் புராதனக் கடல் வணிக வழி ''கடல் வாழ் ஆமைகள் - குறித்த அரிய செய்தி

நேற்று ஓசுரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த த.வ.ஆ.ந'வின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகளின் சுருக்கம் ஒரிசா பாலு ஐயா அவர்களால் பகிரப்பட்டது. அவரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. 
 
உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்களிலும் பரந்துபட்டுக்கிடக்கும் தமிழ் சொற்களின் காரணம் வணிகம் சார்ந்து தமிழர் மேற்கொண்ட பயனங்களின் வாயிலாக என்று அவர் நிறுவியது அருமை.
 
இயற்கையை நன்கு அறிந்திருந்த தமிழர்கள், நெய்தல் நிலத்தில் ஆமையையும், குறிஞ்சி நிலத்தில் யானைகளையும், மருத நிலத்தில் எருதுகளின் துணைகொண்டும் எவ்வாறு இயற்கையை தங்கள் நண்பனாக்கி கொண்டனர் என்று விளக்கியதும் அற்புதம். அவரின் ஆய்வுகளை நோக்கும்போது உலகுக்கெலாம் உழவு கற்றுக்கொடுத்த இனம் தமிழினம் என்பதும் நன்கு விளங்கும். சமீபமாக நடக்கும் கடலியல் ஆய்வுகள் சோழர்களின் கடற்படை வலிமை குறித்து புதிய வெளிச்சங்களை அடையாளப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர்களின் கடல் வணிகப் பாதை மற்றும் பயண வழிகள் குறித்து புதிய கருத்துகளைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு
பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும்
ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள்
பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.

 இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்​களின் புராதனக் கடல் வணிக வழி குறித்த அரிய செய்தி உள்ளதாக பாலு கண்டறிந்து இருக்​கிறார். அதாவது, சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85 கி.மீ. தூரமே நீந்திக் கடக்க முடியும். இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!!
எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)

RFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும்
நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு
பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை
செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா,
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட்,
ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு
சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப
அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில்
துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும்,
மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த
கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்

நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில்
வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக
இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது
தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி
தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை
தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில
பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள்
உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர்
‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில்
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள்
ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய
கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators)
பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப்
பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

Photo: பழந்தமிழரின் கடல் மேலாண்மை

’ஒரிசா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில்
தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின்
கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின்
சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு
பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும்
ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள்
பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு
கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால்
இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!!
எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)

RFID உதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும்
நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு
பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை
செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா,
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட்,
ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு
சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப
அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில்
துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும்,
மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த
கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்

நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில்
வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக
இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது
தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி
தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை
தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில
பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள்
உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர்
‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில்
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள்
ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய
கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators)
பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப்
பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு
செல்லுவோம்.
ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்பு உள்ளதாக இன்றளவும் இருக்கின்றன. பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமை​களை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோலோச்சி இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்'' என்கிறார் ஒரிசா பாலு.

அவர் சுட்டிக்காட்டும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இது, தமிழகத்தில் விளையும் ஒருவகைக் கிழங்கு.  மீனவர்கள் கடலோடும்போது, பல நாட்கள் பசி தாங்குவதற்கு இவற்றையே உணவாகக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்​புடையதாகக் கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் மியான்மர், இந்தோனேஷியா, ஆஸ்தி​ரேலியாவின் சில பகுதிகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்​கின் பெயர் 'குமரா’ என்பதாகும். பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் 'திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் 'அம்மா’ வலது பாகம் 'அக்கா’ இடது பாகம் 'வக்கா’. அடிப்பாகம் 'கீழ்’. இவ்வாறு, கடலியல் சார்ந்த புதிய ஆய்வுகளின் வருகை சோழர்களின் மிச்சங்கள் தாய்லாந்திலும் கம்போடியாவிலும் கடாரத்திலும் எவ்வாறு இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்துகின்றன. ஆனாலும், வலிமைமிக்க சோழர்களின் கடற்படை எவ்வாறு அழிந்துபோனது? அந்தக் கடற்படையின்  வரைபடங்கள், கப்பல் கட்டும் தொழில்நுட்பம் போன்றவை ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்பவை இன்னமும் கண்டறியப்படாத தமிழகத்தின் அரிய வரலாற்று உண்மைகள். அவை முறையாக ஆராயப்படும்போது தமிழனின் பராம்பரியக் கடலியல் அறிவும், தொழில்நுட்பமும் முழுமையாக வெளிப்படக்கூடும்.

இரும்பு நாகரீகம் தமிழகத்தில் தோன்றியதற்கான சான்றுகளையும், எவ்வாறு தமிழகம் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் வணிக தளமாக செயல்பட்டது என்பதையும், கடல் பரப்பில் மூழ்கி கிடக்கும் தமிழர் நாகரீக அடயாளங்களையும், மண்ணுக்குள்ளும், நம் கண்முன்னேயே இறைந்து கிடக்கும் பல வரலாற்று சான்றுகள் சரியான முறையில் ஆவணபடுத்தப்படாமல் வீணாகிவருவதையும், சான்றுகளோடு விளக்குகிறார். அவர் காட்டிய ஆதாரங்களில் என்னை பெரிதும் கவர்ந்தது வடுகர்களால் தமிழர் அடிமைபடுத்தப்பட்டமையை குறிக்கும் பொருட்டு வடிக்கப்பட்ட ஒருகையில் ஆமையும், மறு கையில் களிறுமாக உள்ள ஒரு கோவில் சிற்பம். 
 
அவரிடம் பேசும்போது நமக்கான வரலாறுகள் நம்மை சுற்றி கொட்டிக்கிடந்தபோதும், அவற்றை எடுத்து ஆய்வதற்கான நேரமும், ஆள்பலமும் போதமையால் ஏற்படும் அவரின் ஆதங்கமும் இளையதலைமுறையினரிடம் அவருக்கு உள்ள எதிர்பார்பும் விளங்குகிறது.
 
இவரின் ஆய்வுகள் வெரும் பழம்பெருமைகளாக மட்டுமே இல்லாமலும், வெறும் வரலாற்று ஆய்வு முடிவுகளாக மட்டுமே இல்லாமலும், தக்க சான்றுகளோடும் இன்றைய தலைமுறையினரின் பயனம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டுதல்களை தன்னுள்ளே உள்ளடக்கியதாகவும் மிக ஆக்கபூர்வமாக இருக்கிறது. இது ஒரிசா பாலு ஐயா அவர்களின் தனிச்சிறப்பு.
 
எந்த முன் அனுபவமும் இல்லாத எனக்கு வெறும் இருபது நிமிடங்களில் இவ்வளவு ஆக்கபூர்வமான உந்து சக்தியை ஐயா அவர்களின் ஆய்வுச்சுருக்கம் மட்டுமே விதைக்க முடியுமானால், தக்கமுறையில் தமிழகம் முழுவதும் இந்த உண்மைகளை எடுத்துச் சென்றால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் விடியலாகக் கூட இவை இருக்கலாம்.

 நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு
செல்லுவோம்.
முகநூலில் அவரின் பணிகளை கவனிக்க http://www.facebook.com/orissa.balu

No comments:

Post a Comment