For Read Your Language click Translate

21 June 2014

மின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக பெற

இன்று இணையத்தை பயன்படுத்துவோருக்கு மின்னஞ்சல் என்பது இன்றி அமையாத ஒன்றாக ஆகிவிட்டது. எமது மின்னஞ்சல் கணக்குக்கு அன்றாடம் ஏராளமான மின்னஞ்சல்கள் வந்து குவிகின்றன
இவ்வாறு வரும் மின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்வது?
இது மிகவும் இலகுவான ஒரு விடயம்.
நீங்கள் PDF கோப்பாக பெற விரும்பும் மின்னஞ்சலை pdfconvert@pdfconvert.me எனும் முகவரிக்கு Forward செய்யுங்கள் இனி சற்று நேரத்தில் அது உங்கள் Inbox இற்கு PDF கோப்பாக வந்திருக்கும். பிறகு தேவையானால் அதனை தரவிறக்கிக் கொள்ளலாம்.
உங்கள் மின்னஞ்சலில் Image, Word, Excel, Powerpoint, ஆவணங்கள் இருந்து நீங்கள் அவற்றினை மட்டும் PDF வடிவத்தில் பெற விரும்பினால் அதனை attachconvert@pdfconvert.me எனும் முகவரிக்கு அனுப்புக சிறிது நேரத்தில் குறிப்பிட்ட ஆவணம் PDF வடிவல் உங்கள் Inbox இல் வந்து அமர்ந்திருக்கும்.
மேலும் ஒரு இணையப்பக்கத்திலுள்ள ஒரு பதிவை PDF கோப்பாக பெற விரும்பினால் webconvert@pdfconvert.me முகவரிக்கு குறிப்பிட்ட Link இனை அனுப்புக சிறிது நேரத்தில் குறிப்பிட்ட பக்கம் PDF கோப்பாக வந்திருக்கும். (இது தமிழ் எழுத்துக்களுக்கு இன்னும் ஆதரவளிக்கவில்லை)
உதாரணத்திற்கு topsoftdown.com இன் Protect your Windows PC from all virus in the USB drive எனும் பதிவை PDF கோப்பாக பெற http://www.topsoftdown.com/2012/12/Protect-WindowsPC-From-Virus-USBAV.html எனும் அதற்கான முகவரியை E-mail Body இல் இட்டு அனுப்ப வேண்டும்.
இது தவிர ஒரு PDF கோப்பினை Word Document ஆக அல்லது வேறு ஆவண வடிவில் பெற விரும்பினால் பெற விரும்பும் ஆவத்தின் வடிவத்தினை @zamzar.com என்பதுடன் சேர்த்து அனுப்புக
உதாரணத்திற்கு ஒரு PDF கோப்பினை Word Document ஆக விரும்பினால் doc@zamzar.com எனும் முகவரிக்கு குறிப்பிட்ட PDF கோப்பினை அனுப்புக.
இன்னும் ஒரு வீடியோ கோப்பினை Mp3 ஆக பெற விரும்பினால் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை mp3@zamzar.com எனும் முகவரிக்கு அனுப்புக.
இது போல் எந்த ஒரு கோப்பினையும் அதனை ஒத்த வேறு வடிவங்களுக்கு மாற்ற @zamzar.com என்பதுடன் குறிப்பிட்ட வடிவத்தினை (Format) சேர்த்து அனுப்புக.
@zamzar.com மூலம் ஒரு கோப்பினை எந்தெந்த வடிவங்களுக்கெல்லாம் மாற்றிக்கொள்ள முடியும் என்பதன் பட்டியலுக்கு கீழுள்ள இணைப்பில் செல்க
தொழிநுட்ப தகவல்களுக்கு லைக் >: Ānąs cσяρσяaιтιøиร
உங்கள் தொழிநுட்ப தெளிவுகள் மற்றும் தகவல்களுக்கு >> http://goo.gl/8udkdM

No comments:

Post a Comment