For Read Your Language click Translate

Follow by Email

30 May 2014

உலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?
kamadhenu 


இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம்-தொண்மை இதனால் அழிகிறது.

 அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.

இந்த சிற்பம் சென்னிமலையாண்டவர் கோவில் படிக்கட்டு மண்டபத்தில் எடுத்தது..

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!
Image may contain: outdoor and text

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..! 


Image may contain: text


பசு பற்றி 50 தகவல்கள்
                    
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.  
2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.  
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார்.  
4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.  
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை.  
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.  
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.  
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
11. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.
12. கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா? பணக் கஷ்டம் நீங்கும்.
13. பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
14. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.
15. பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம்.
16. பசுக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க முடியாது. எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ வேண்டும்.
17. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.
18. அதிகப்பால் கறப்பதற்காக பசுக்களுக்கு அதிகப
19. உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது.
20. பசுக்கள் இறந்தால், அவற்றுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
21. பசுவையும் கன்றையும் பிரிக்கும் பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது.
22. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது.
23. சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்.
24. ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
25. பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் சுமை குறையும்.
26. ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.
27. பசு தானம் கொடுக்கும் போது ஜெர்சி இன பசுக்களை தானம் வழங்கக் கூடாது. நாட்டு பசுவையே தானமாக கொடுக்க வேண்டும்.
28. சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது.
29. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும்.
30. பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
31. நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும்.
32. ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
33. ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும்.
34. மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.
35. பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும்.
36. ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம்.
37. கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்த னர்.
38. பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
39. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
40. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
41. திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிறைய பேர் பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக் கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம்.
42. நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண் டும்.
43. வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
44. வெளிப்புறம் மேயும் பசுக்களுக்கு நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.
45. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் வரை சாணத்தையும், கோசலத்தையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக் கழுவிவிட வேண் டும்.
46. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
47. வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும்.
48. பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
49. நமக்கு வருவாய் அளிக்க இயலாத நலிந்த பசு மாடுகளை, பசுக்களை பராமரிக்கும் பசு மடங்களிலும் தொழுவங்களிலும் சேர்ப்பிக்க வேண்டும்.
50. பசுக்களை அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரித்துக் காக்க வேண்டும்.
நாட்டு மாடுகள்
nattumadugal
நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும்.
இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்..?
மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.
இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள். சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.
முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.
நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லைஎனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன.இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால்ன்னு பல வகைகள் இருக்கு. ஆனா, ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான்  சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறாங்க. நாட்டு மாடுங்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும், பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவிச்சிக்கிட்டு வருது.

ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால, அதோட வெப்பம் பால், சிறுநீர் மூலமாத்தான் வெளியேறுது.மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன.அதுமட்டுமில்லாம அயல்நாட்டு இன மாடுகளோட சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கிறதில்ல. இதுவே நம்ம நாட்டு மாடுகள்ல வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது மட்டுமில்லாம, சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமா கொடுக்கிற ஒரே காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியா முழுவதும் விவசாயிங்க வளர்த்துட்டு வர்றாங்க. தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிஞ்சு போயிடுச்சி.கடந்த 30 வருசமா காங்கேய மாடுகளிலிருந்து பால் கறந்து விற்றுவரும் எனக்கு, பாரம்பரியமிக்க நாட்டு இனம் அழிஞ்சிட்டு வர்றதைப் பார்த்து ரொம்பக் கஷ்டமா இருந்துச்சி.

இதனாலேயே பல நன்மைகள் கொண்ட நாட்டு மாடுகளில் அதிகப் பால் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நம் இனங்களைக் காக்கலாம் என்ற எண்ணம் மனசுக்குள்ள வந்துடுச்சி. அதனாலேயே தமிழகத்துல எந்த இடத்துல மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும் தவறாமப் போய் கலந்துக்கிட்டு நல்ல காங்கேயமா பார்த்து வாங்கிட்டு வந்துடுவேன்" என்று கூறும்  நடராஜன், மாட்டு வர்க்கத்தில் நல்ல வம்சங்களைக் கண்டுபிடித்து பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவில் பால் கறக்கும்  வேறு பசுவின் காளையுடன் இனப்பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம் அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்" என்கிறார்.

முஸ்லிம் அரசர்கள்:

முகலாய சாம்ராஜ்யத்தில்- பாபர் முதல் அகமத் ஷா வரை பசுவதை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவதில் பெயர் போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசுவதையை ஆதரிக்க கூடாது என்று கடுமையாக வலியுருத்தி இருந்தார்.மைசூர் சுல்தான்களான ஹைதரும், திப்புவும் கூட பசுக்கள் கொல்வதை தடை செய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்!

ராபர்ட் கிளைவ்: இந்தியாவின் விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.
காந்தி: பசுவதையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தினார்.

நேரு: சுதந்திர இந்தியாவில் முதல் நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என்று சொன்ன நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்த சொன்னால் பதவி விலகுவேன் என்று மிரட்டி பசுவதையை ஆதரித்தார்.

இந்திரா: பசுவதைக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடு மூலம் கொன்று அடக்குமுறையை கையாண்டார்.

நம்மாழ்வார்: பசுக்கள் நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வருகிறார். விலைமதிப்பில்லா பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை தரும், மரபு பசுக்கள் நமது சொத்து, அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுருத்தி வருகிறார்.

இன்று: பணத்துக்காக இன்று மரபின பசுக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. பசுவதை என்பது வெளிநாட்டு சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீக சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள். மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்...!நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..

நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..
----------------------------------

பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன. 
http://www.youtube.com/watch?v=9KMtQfjcJMo

இந்திய மாடுகளின் பெரிய கொலைக்களமான கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான்கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.
http://www.youtube.com/watch?v=KN83hnfqSvI

பாகிஸ்தானில் கூட மரபுபசுவினன்களை காக்க தனி நிர்வாகமே உள்ளது.
http://www.rccsc.com.pk/

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்..? திரு காசி பிச்சை அவர்களின் பேச்சு..
https://www.youtube.com/watch?v=48bPl4dgfks

இவை மட்டும் இல்லாது அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பாரத்தின் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது..!நாட்டு மாடுகளை சுற்றியிருக்கும் பன்னாட்டு அரசியல்இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.

விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிகொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது என்பதால் நாட்டு மாடுகளின் கொலைகளம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது. இருந்தும் பசுவை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்து மக்களிடம் நோயை விதைக்கும் உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளை திணித்தார்கள். பால் அதிகம் கிடைத்ததால் பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்க துவங்கினர். நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில் போய் விட்டன. இதனால் இலவச இயற்கை உரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலப்பின பசுவின் பாலால் அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்ட சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது. கலப்பின பசுக்களுக்கு தீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினர் வியாபாரம் விரிந்தது. தீவனதுக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடபட்டதால் உணவு பொருட்கள் விலையும் எகிறியது.பின்னால் வந்த இந்திய அரசாங்கமும் பல்வேறு காரணங்களால் பசுமை புரட்சி என்ற விஷ புரட்சி மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வேர்மிகம்போஸ்ட், தொளுவுரம், கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள். இனி வெளிநாட்டு நிறுவனங்கள் விற்க போகும் கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், கான்சர் போன்ற கொடிய நோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து.
 


பால் அல்ல மாடே கலப்படம்தான்!குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும். அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது. இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது… மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.


‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு… நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’ முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஆண்களுக்கு பெண்பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.

ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.


பண்டைய இந்திய பாரம்பரியம் கால் நடைகளைகுறிப்பாக பசுக்களையும்,காளைகளையும்மையப்படுத்தியே சுட்டிக்காட்டப்படுகிறதுஆநிரைகள் மட்டுமே அவர்கள் சொத்துபள்ளி கல்லூரி பருவங்களில் தமிழ் கவிதைகள் பல மறந்து போனாலும் அதில் காணப்படும் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளும் ,பெண்களும் நம்மால் மறக்க முடியாத பாத்திரங்கள் ஆனார்கள்.ஆரியர்கள் கைபர்போலன் கணவாய் வழியாக கடந்து வந்ததாக கூறப்படும் கருத்தோட்டத்தில் அவர்கள் மட்டும் தனியாக வரவில்லைகூட்டமாக கால்நடைகளையும் அழைத்து வந்தனர்பசுக்கள்காளைகள்எருமைகள் மட்டுமல்லாது கழுதைகள் மற்றும் அரேபிய குதிரைகள் என பட்டியல் நீளுகிறதுஇப்பட்டியல் ஆங்கிலேயர்கள் கால் பதித்ததில் துவங்கி வெண்மைப்புரட்சியின் கவர்ச்சி அலையில் அழியத் துவங்கியது.
இந்தியாவின் பாரம்பரிய சொத்துக்களான நாட்டு பசுக்கள் இப்போது எங்கே உள்ளனஎப்படி அடையாளம் காண்பதுயார் கொள்ளை அடித்தனர் போன்ற பாமர கேள்விகளில் துவங்கி வளர்ப்புபாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் என அனைத்து திசைகளிலும் தகவல்களை தரும் ஜோஷி ,விஜ்டாண்டியா மற்றும் நிர் சர்க்கார் போன்றோரை மறக்க முடியாதுஅவர்களை வாசித்த பின் கனத்த இதயமும்குற்ற உணர்வுமே நமக்கு மிஞ்சும்என் குருநாதரும்இயற்கை வேளாண் விஞ்ஞானியுமான திருஆர்.எஸ்நாராயணன் ஒரு கூட்டத்திற்காக காமாட்சிபுரம் வந்திருந்தார்சின்னமனூர்கூடலூர்வேப்பம்பட்டி,காமாட்சிபுரம் பகுதிகளில் காணப்பட்ட சித்து மாடுகள் கண்டு அவர் வியந்தார்.ஏனெனில் இவ்வகையானவை அழிந்துபோனவை என அரசுக் குறிப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்மந்தையாக வாழும் இவை மேய்ச்சலின் மூலம் தங்கள் உணவை நிறைவு செய்யும்மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் இவை குறுகிய உடலமைப்பும்நீண்ட கால்களும் கொண்டவைசாணம் அதிக உரச்சத்து கொண்டதுஎனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இரவு பொழுதுகளில் "கிடைசாத்துகின்றனர்.அதனால் கிடைமாடுகள் என்றே இவற்றை அழைக்கிறார்கள்வயல் வெளிகளுக்கு இவற்றின் சாணமே போதுமானதுஉழவுக்கு முன் அல்லது முறைகள் கிடை சாத்தினால் கிடைக்கும் உர அளவை டி..பி ,யூரியா கூட எட்ட முடியாது என வேளாண் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.
மேய்ச்சல் நிலம் தேடி மாடுகள் மந்தையாக செல்லும் காட்சி அற்புதமானது.நெடி மனதை கவரக்கூடியது. 80கள் வரை நீடித்த இவ்வகையான நிகழ்வுகள் தற்போது புழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டனஇன்று மேய்ச்சல் நிலமும் இல்லைமேய்பவரும் இல்லைநாட்டு பசுக்களும் அனாவசியமாகிப் போய் விட்டனரியல் எஸ்டேட் கொள்ளையர்களின் பார்வையில் வளம் தரும் வயல் வெளிகளே "அவசியமாஎன கேள்விக்கு உட்படுத்தபடும் போது பசுக்களை பற்றி கேட்கவே வேண்டாம்வனத்துறையும் போதாக் குறைக்கு தலைமுறை சார்ந்த மேய்ச்சல் குடிகளுக்கும் நிரந்தர தடை விதித்து விட்டனர்.பாலுக்கென்றே வளர்க்கப்பட்ட நெல்லூர்தார்பார்க்கர்காங்கேயம்காங்கிரஜ்...என நம் பாரம்பரிய இனங்கள் அருகிப்போய் ஜெர்சியும்பிரீஷியனும் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளால் புகுத்தப்பட்டனதினமும் "வாளி நிறைய பால் கறக்கலாம்என்று ஆசைவார்த்தை காட்டி மோசம் செய்த சீமை ரகங்களின் உடம்பெல்லாம் வியாதிபண்டுகம் பார்த்தே நொந்து போனான் விவசாயிசீமைப்புல் ,கியூபா புல்நேப்பியர் புல்யூரியா கலந்த வைக்கோல் என செயற்கையாக தருவிக்கப்பட்ட உணவே அளிக்க வேண்டும்இதில் நகைச்சுவை என்னவென்றால்இப்புற்களின் விதை கிலோ 60 ரூபாய்விதை நெல்லின் விலையோ வெறும் 6ரூபாய்நஞ்சையே உணவாக உட்கொள்ளும் இவைகளின் பாலும் நஞ்சாக இருப்பது இயல்பு தானேவெள்ளை புரட்சியின் கறுப்பு சுவடுகள் இங்கிருந்து தான் துவங்கின.
தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆய்வுப்படி கெடால் ஹியூக் (Catal huyuk) என்ற துருக்கி நாடே அடிப்படை இனங்களின் தாயகமாக கருதப்படுகிறதுஅடிப்படை இனங்கள் என கருதப்படும் (1) திமில் இல்லாத நீண்ட கொம்பு (Bos taurus), (2)திமில் இல்லாத குட்டை கொம்பு மற்றும் (3) திமில் புடைத்தது (Bos indicus)போன்றவை இங்கிருந்தே வந்தவைஐரோப்பிய இனங்களில் காணப்படும் முன்னோர்களும் இவ்வினங்களில் காணப்படும் சகோதர வழி பந்தங்களே. "செபுஎன அழைக்கப்படும் பெருத்த திமில் கொண்ட காளை இனம் 5000ஆண்டுகளாக இந்திய உபகண்டத்தில் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வினத்தில் இருந்தே தோன்றியுள்ளன தற்போது வரை இந்திய பாகிஸ்தான் தேசத்தில் எஞ்சி இருக்கும் நாட்டு இனங்களின் வாரிசுகள்செபு இன பசுக்கள் ஆப்பிரிக்காதென்வட அமெரிக்காஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு கப்பல் முலம் அனுப்பப்படுகின்றன. 16ம் நூற்றாண்டில் இருந்தே இவ்வகையான இறக்குமதி நடைமுறையில் இருந்து வருகிறது.
குறிப்பாக ஓங்கோல்கிர் மற்றும் காங்கிரஜ் போன்றவை பிரேசிலுக்கும்சிவப்பு சிந்திகாங்கேயம் மற்றும் காகிவால் போன்றவை ஈக்வடார் நாடுகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளனஇந்தியாவிலிருந்து அனுப்பப் பட்ட நாட்டு மாடுகளின் தூய சந்ததிகள் அமெரிக்காவில் இன்றும் காப்பாற்றப்படுகின்றனகுறிப்பாக காங்கிரஜ் (குஜராத்)ஓங்கோல் (ஆந்திரா)கிர் மற்றும் கிருஷ்ணா (ஹரியாணா)ஆகியவை புளோரிடா மற்றும் அட்லாண்டா பகுதிகளில் பெயர் பெற்றவை.இவைகளை பிராமணாஸ் (Brahmanas) என அழைக்கிறார்கள் .வேத காலத்து பிராமணர்கள் திமில் பருத்த செபு இன மாடுகளின் இறைச்சியை உண்டதாக வரலாறு உண்டு ஆகவே தான் யக்ஞ வல்கியர் "மாட்டிறைச்சியை உடலின் சதை வளர்க்க உண்கிறேன்என்றார்நாம் கைவிட்ட இப்பழக்கத்தை அமெரிக்கர்கள் கைவிடவில்லை போலும் !
1950 ல் கிருஷ்ணாராவ் என்பவர் கால்நடை துறை அமைச்சராக இருந்தார்.அந்த சமயம் டி.எம்.எஸ் என அழைக்கப்படும் (DELHI MILK SCHEME) துவங்கப்பட்டதுஅப்போதைய உயர் அதிகாரிகள் ஜெர்சி மற்றும் பிரீஷியன் போன்ற ஐரோப்பிய இனங்களை இறக்குமதி செய்தால் தான் திட்டம் வெற்றிப் பெறும் என்றனர்நம்மிடம் உள்ள தார்பார்கர், சாகிவால் மற்றும் சிந்தி போன்ற நாட்டுமாடுகள் இத்தேவையை பூர்த்தி செய்யும் போது ஐரோப்பி இனங்கள் தேவையில்லை என பதில் குறிப்பு எழுதினார் கிருஷ்ணாராவ்விளைவாக அவர் பதவி பறிபோனதுபிளிட்ஸ் இதழ் அவர் பழிவாங்கப்பட்டதாய் கூறியது.அப்போதை ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது உண்மை நிலை அறிந்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார்அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரை எந்த அன்னிய மாடுகளையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை.காங்கிரஜ் என்ற மாட்டின் பெயரே மருவி "காங்கிரஸ்வந்ததாய் ஒரு கருத்து உண்டுகாந்தி பிறந்த இடத்திற்கு அருகில் தான் இம்மாடுகளின் தோற்ற மையம்கூட்டம் கூடும் இடம், கலப்பு என்ற அர்த்தம் தொனிக்க உபயோகப்படும் இச்சொல் ஒரு தேசிய கட்சியின் பெயராக உருமாற்றம் அடைந்து சீரழிந்து விட்டது. 1952 முதல் நான்கு பொது தேர்தல்களிலும்"மாட்டு பொட்டிக்கு ஓட்டுப்போடுங்கஎன்றே ஓட்டுக்கேட்டார்கள்இன்று சூட்கேசாக கைமாற்றம் அடைவது பரிணாம வளர்ச்சி !

அறிவியல் பயின்ற வேளாண் அதிகாரிகளும்கால்நடை வல்லுனர்களும் கலப்பினம் மூலமே மிக அதிக பயன் பெற முடியும் என்ற தவறான நம்பிக்கை கொண்டு தங்களை நாடிவரும் விவசாயிகளை மூளைச் சலவை செய்கிறார்கள்அவ்வாறு கலப்பினம் தான் தேவை என்றால் கால்நடைகளில் ஓங்கோல்சிந்தி மற்றும் தார்பார்க்கர் போன்ற இந்திய இனங்களுடன் தமிழ் மாநிலத்தில் உள்ள நாட்டு மாடுகளை சேர விடலாமேஅதற்காக ஜெர்ஸி மற்றும் பிரீஷியன் தேவையில்லை. "நம் நாட்டின் மாடுகள் நமது தேவையை விட குறைவாக பால் கொடுப்பது முற்றிலும் நமது தவறினால் தான்." என்ற காந்திஜியின் வரி நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
வெள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்ட திப்பு சுல்தான் போர் முனைக்கு தனது ஆயுதங்களை கர்நாடக மாநில மாடுகளில் ஒன்றான ஹல்லிகர் மூலம் கொண்டு சென்றான்அவைகளின் சுறுசுறுப்பையும் இழுவைத்திறனையும் கண்ட எதிர் படை தளபதியான வெல்லஸ்லி பிரபு "இம்மாடுகளை போன்று100ஜோடிகள் நம்மிடம் இருந்திருந்தால் நெப்போலியனை எதிர்த்து போரிட்ட போது எளிதில் வெற்றி பெற்றிருப்போம்என்றாராம்இந்தியாவில் சுமை தூக்கஇழுக்க என 6.39 கோடி கால்நடைகள் பயன்பாட்டில் உள்ளனஇது 2007ல் எடுக்கப்பட்ட ஆய்வுஇவற்றில் 5.23 கோடி காளைகளும்61 லட்சம் ஆண் எருமைகளும்25 லட்சம் குதிரைகள்கோவேரி கழுதைகள்ஒட்டகங்கள் மற்றும் யாக் எருமைகள் என பலவும் கைகோர்த்து உயர் சக்தி ஆற்றலை மிச்சம் செய்கின்றனஉண்மையில்இவற்றின் அதிக பட்ச பயன்பாடு இறைச்சிகாக அவை உண்ணப்படுவது தான்!
கால்நடை வளர்ப்பு பொதுவாக பால் வளத்தை குறிவைத்தே பிரதானப்படுத்தப்படுகிறதுஇது தவறுஅவைகளின் கழிவுஇழுவைத்திறன் மற்றும் மாமிசம் போன்ற பயன்பாடுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.அரசின் உதவியோடு வெளிநாட்டு விந்துகளை நம் மாடுகளுக்குள் செலுத்தி,அவைகளின் உண்மையான இனம் அழிய நாமே வழி வகுக்கிறோம்இந்திய பொலி காளைகளின் வளர்ப்பு அதனால் புறக்கணிக்கப்படுகிறதுகாளை மாடுகளின் ஆற்றல் இன்றும் பஞ்சாப் ,ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளினால் உணரப்பட்டுள்ளதுஇங்குள்ள முரண்நகை என்னவெனில் அதிக டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் இம்மாநிலங்களில் தான் தயாரிக்கப்பட்டு தமிழகத்திற்கு சப்ளை செய்யப்படுகின்றனவிதைப்பு எந்திரம்,மண்கட்டிகளை சமன்படுத்தும் எந்திரம்ஆழ உழுது களையை புரட்டும் எந்திரம்கரும்புச் சாறு பிழியும் எந்திரம் என அம்மாநில விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு பயன் பெறும் வகையில் எந்திரங்களை வடிவமைத்துள்ளனர்அதைப்போன்று ஏன் நாமும் வடிவமைத்து நம் கால்நடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கூடாதுஇதற்குண்டான விடையை வேளாண் பல்கலை கழகங்கள்தாம் கூற வேண்டும்.
சீமை மாடுகள் குறைந்த காலத்திற்கு அதிக பாலை தரலாம்ஆனால் நம் நாட்டு ரக மாடுகளைப் போல் சக்தியும் திறனும் படைத்தவை அல்ல அவை.காங்கேயம் மற்றும் ஹல்லிகர் காளைகளின் சக்தி (BULL POWER) அரேபிய குதிரைகளின் குதிரை சக்திக்கு (HORSE POWER) நிகரானது என்ற மேலை நாட்டு அறிஞர் குறிப்பை நான் தஞ்சை சரஸ்வதி மகாலில் கண்டேன்உழவு மாடுகளின் பராமரிப்பு செலவிற்கும் பால் தரும் நாட்டு ரக வளர்ப்பிற்கும் அரசு மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்மானியம் வழங்குவதில் இவ்வகைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மிக அவசியம். "அப்போது தான் நம் நாட்டு வளர்ப்பு ரகங்கள் கீழ்மை அடையாது".
-----------------------------------------------------------------------------

தார்பார்க்கர்காங்கிரஜ் ,சிவப்பு சிந்தி ,அம்ரித் மஹல் ஹல்லிகர்பர்கூர் பசு,காங்கேயம் காளைஉம்பலச்சேரிஓங்கோல்பிங்கனூர் குட்டைரகம்வெச்சூர் பசுதாங்கிகிருஷ்ணாதேவ்னி பசுபாச்சோர்பசுகிர்மாளவிரதிசாகிவால்,நாகூரிடியோனி,கெளலங்நிமாரிசுராட்டி ...இவை எல்லாம் நம் இந்திய மண்ணில் இன்றும் ஜீவித்திருக்கும் மாடுகளின் பெயர் தாம்குறைந்த பட்சம் இதையாவது நினைவில் கொள்வோமே! (நன்றி ஆர் .எஸ் .நாராயணனின் நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம்)

kannan233@gmail.com 233@gmail.com>

"கோ" தான முறையில் பசு வளர்ப்பு!!"கோ" தான முறையில் பசு வளர்ப்பு!!

முகநூல் ஒன்றில் படித்த செய்தி.. நமது பாரம்பரியத்தை காப்பதற்கும் அழிந்து வரும் நாட்டுமாடுகளை காப்பதற்கும் தக்க உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
இன்று நகரங்களில்(நரகத்தில்) வாழும் பலரும் தங்களது அன்றாட தேவைக்கு தினசரி அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை பால் வாங்குகின்றனர். ஆனால் அந்தப் பாலானது பெரும்பாலும் கொழுப்பு நீக்கப்பட்ட சக்கைப் பாலாகவும்தண்ணீர் கலக்கப்பட்ட நீர்த்துப் போன பாலாகவும், A1 Milk எனப்படும் சீமைப் பசும் பாலாகவும்(சீமைப் பன்றிப் பால்) இருக்கின்றது. வேறு வழி இல்லாத காரணத்தால் இவர்கள் அனைவரும் கதியே என்று அதனையே தொடர்ந்து வாங்கின்றனர்..
பெரும் நிறுவனங்களில் வாங்கும் பாக்கெட் பாலில் என்னென்ன கலப்படம் செய்யப் படுகின்றது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
(
சோடா உப்புசோப்பு பவுடர்உள்ளிட்ட பல ரசயான பொருட்கள் கலப்படம் செய்யப் படுகின்றன..)
(
இதற்க்கு சில நிறுவனங்கள என்னவோ நமது கிராமங்களில் இருந்து நேரடியாக பாலை கொள்முதல் செய்து அதனை அப்படியே பக்கெட் செய்து விற்பது போன்ற பசுமையான விளம்பரங்கள் வேறு..)
தினசரி ஒரு லிட்டர் பால் வாங்கும் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக வருடம் ஒன்றிக்கு(40*365) 15000 ரூபாய் செலவு ஆகின்றது. ஆனாலும் நல்ல பால் கிடைப்பதில்லை.
எனவே இவை அனைத்துக்கும் மாற்றாக ஒரு திட்டம்..

1.
நகரத்திலோ அல்லது உங்கள் கிராமத்திலோ நாட்டு மாடு வளர்க்க இட வசதியும் நேரமும் இல்லாதவர்கள் தாங்கள் ஒரு நாட்டு மாட்டினை தானமாக வாங்கி ஒரு விவசாயிக்கு கொடுக்க வேண்டும்.

2. 
மாட்டுக்கான பராமரிப்பு செலவு முழுவதும் அந்த விவசாயி ஏற்றுக் கொள்ள வேண்டும். மாடு அவருடைய சொத்தாக கருதப் படும்.

3. 
நாட்டு மாட்டினை வாங்கி தானமளித்தவருக்கு தினசரி அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை இலவசமாக கொடுக்க வேண்டும்.

4. 
மாட்டிலிருந்து கிடைக்கும் மற்ற பாலையும் மற்ற அணைத்து பலனும் விவசாயி அனுபவித்துக் கொள்ளலாம்..
அவர்கள் ஒன்றரை வருடம் பால் வாங்க செலவு செய்ய்யும் தொகையை செலவு செய்து ஒரு மாடு வாங்கி விட்டால் என்றென்றும் இலவசமாக பால் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் நுகர்வோருக்கும் A2 Milk எனப்படும் சத்துமிக்கஉடலுக்கு நன்மை செய்யும் நல்ல பால் கிடைக்கும்விவசாயிக்கும் வருமானம் கிடைக்கும்நாட்டு மாடுகளும் காப்பாற்றப்படும். 
இதனை செயல் படுத்த இரு தரப்பினருக்கும் இடையே நல்ல புரிதல் மட்டும் இருந்தாலே போதுமானது.. சிறப்பான முறையில் செயல் படுத்தினால் நமது கிராம பொருளாதாரமும் நல்ல முறையில் வளரும்.

மாடு வளர்ப்பு

ஒரு பசு மாட்டின் சராசரி வயது எவ்வளவு? 15 ஆண்டுகள்தானாம். அதாவது நம்மூரில் இருக்கும் கலப்பினப் பசுக்கள்.

மாடு வளர்ப்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

மாடு கன்றுக்குட்டி ஈனும்போது கூடவே சீம்பால் என்ற ஊட்டச்சத்து மிகுந்த பாலைச் சுரக்கும். இந்தப் பால் முழுவதையும் கன்றுக்குட்டி குடிக்கக் கொடுக்கவேண்டுமாம். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை. சிலர் அதைத் தாங்கள் உண்டிட எடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் ஏதோ மூட நம்பிக்கைகளை மனத்தில்கொண்டு குளத்தில் கொட்டிவிடுகின்றனராம். இதன் விளைவாக, அந்தக் கன்றுக்குட்டி ஆரம்பத்திலேயே வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது.

எனவே சீம்பாலை முழுமையாகக் கன்றுக்குட்டிக்குக் கொடுக்கவேண்டும்.

அடுத்து அதன் தொப்புள்கொடியை வெட்டுவது; மருந்துபோட்டுக் காப்பது. எப்படி மனிதக் குழந்தைகளுக்கு கவனமாக தொப்புள்கொடியை அரிந்துவிட்டு பிளாஸ்திரி போட்டுக் கட்டிவைக்கிறோமோ, அப்படிப் பெரும்பாலும் மாடுகளுக்குச் செய்வதில்லை. கன்று மண்ணில் புரண்டு அங்கு இன்ஃபெக்‌ஷன் வர நேரிடுகிறது.

எட்டு நாள் தாண்டிய உடனேயே கன்று வயிற்றில் (ஜீரண மண்டலத்தில்) பூச்சி வராமல் இருக்க மருந்து கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டுமாம். அதன்பின் 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை முறையாகச் செய்துவரவேண்டும்.

சுமார் 2.5 ஆண்டுகளில் ஒரு கன்று வயதுக்கு வந்து, சினை பிடிக்கத் தயாராக உள்ளது. உடனடியாகவே அதற்குச் சினையூட்டலாம். கன்றை ஈன்றதும், கவனமாக முன் சொன்னதுபோல, அதன் குட்டிக்கு சீம்பாலை கொடுக்கவேண்டும். அடுத்த சுமார் 10 மாதங்களுக்கு மாடு பால் தரும். அதன் பால் வற்றிப்போகும் காலத்தைக் கணித்து அதற்கு ஏற்றவாறு அதனை மறுபடியும் சினையூட்ட வைக்கவேண்டும். அதன் வாழ்நாளில் அதனை 10 முறை சினையூட்டி, கன்றுகளை ஈன வைத்து, அதன் பால் தரும் காலத்தை அதிகப் படுத்தமுடியும்.

மாடுகளுக்கு உணவு அளிப்பதை அக்கறையுடன் செய்யவேண்டும். பசுந்தழை (புல்), காய்ந்த தழை (வைக்கோல் முதலியன) ஆகியவற்றுடன் சரியான அளவு probiotic நுண்ணுயிரிகள் கலந்த கலவையைக் கொடுக்கவேண்டும். (மனிதர்கள் சாப்பிடும் தயிர் probiotic வகையைச் சேர்ந்தது.) அப்போதுதான் மாடுகள் உட்கொள்ளும் உணவை முழுமையாக உள்வாங்கி, செரித்து, அதன் சத்து முழுவதும் பாலாக ஆகும் நிலை ஏற்படும். எந்த மாதிரியான உணவைத் தரவேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அதனைப் பின்பற்றவேண்டும்.

கன்றுகள் பால் சாப்பிடும் காலம் வரையிலும், கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் அளவுக்கு அதற்குப் பால் தரவேண்டும். பலரும் இதனைச் செய்வதில்லை. இதெல்லாம் கன்றின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால் அந்தக் கன்று பின்னர் வளர்ந்ததும் அதன் பால் தரும் அளவு நிச்சயமாக பாதிக்கப்படும்.

மாடுகள் வசிக்கும் இடத்தைப் பராமரிப்பது, மாடுகளுக்கு நோய் வராமல் பார்த்துக்கொள்வது, அவற்றின் உடலில் ஈக்கள், உண்ணிகள், பிற மொய்க்காமல், தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வது, இவை அனைத்தும் முக்கியம். அவற்றுக்கும் நோய்கள் வரும்போது உடனடியாக மருத்துவர்களைப் பார்ப்பதும் முக்கியம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால் மனிதனுக்கு எந்த அளவுக்கு தொந்தரவோ, அதே அளவுக்கு மாட்டுக்கும் தொந்தரவுதான். வருமானமும் பாதிக்கப்படும் என்பது முக்கியம்.

இந்தியாவைப் பொருத்தவரை வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பது சரியல்ல. கலப்பினப் பசுக்கள், அதில் சுமார் 62-63% வெளிநாட்டு (ஜெர்ஸி?) பசுவின் மரபணு இருந்தால் போதும்.

***

சென்ற வாரம் சென்னையிலிருந்து காரில் ஊர் சுற்றும் பயணத்தின்போது மாறி மாறி எஃப்.எம் வானொலிகளைக் கேட்டு, பின் கவரேஜ் இல்லாத இடத்தில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டபோது கிடைத்த தகவல்கள் இவை. இந்த அதிமுக்கியமான விஷயத்தை உடனடியாகப் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள் தில்லி செல்லவேண்டிய வேலை வந்துவிட்டது. பிறகு மறக்கவும் ஆரம்பித்துவிட்டது. எனவே ஞாபகம் இருக்கும்வரை இங்கே!

இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன்.

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!


மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு … என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.
இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.
இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.
அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.
எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என “UNO” போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.
அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.
நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.
இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:
1) அமிர்த மகால் -கர்நாடகா
2) பச்சூர் – பிகார்
3) பர்கூர் – தமிழ்நாடு
4) தாங்கி – மகாராஷ்டிரா
5) தியோனி – மகாராஷ்டிரா
6) கவொலாவோ – மகா
7) கீர் – குஜராத்
8) ஹல்லிகர் – கர்நாடகா
9) ஹரியானா – ஹரியானா
10) காங்கேயேம் – தமிழ்நாடு
11) காங்ரெஜ் – ராஜஸ்தான்
12) கேன்கதா – உத்திரப்பிரதேசம்
13) கேரிகார்க் – உத்திரப்பிரதேசம்
14) ஹில்லார் – மகாரஷ்டிரா
15) கிருஷ்ணா வாலி – கர்நாடகா (250க்கும் குறைவாக)
16) மால்வி – ராஜஸ்தான்
17) மேவாதி – உத்திரபிரதெசம்
18)நகோரி – ராஜஸ்தான்
19)நிமாரி – மகா
20)ஓங்கோல் – ஆந்திரா
21) பொன்வார் – உத்திரபிரதேசம்
22) புங்கனூர் – ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)
23) ரதி -ராஜஸ்தான்
24) சிவப்பு காந்தாரி – மகா, குஜராத்
25) சிவப்பு சிந்தி – பஞ்சாப்,
26) சாஹிவால் – பஞ்சாப்
27) சிறி – மேற்குவங்கம் , சிக்கிம்
28) தார்பார்க்கர் – ராஜஸ்தான்
29) உம்பளச்சேரி – தமிழ்நாடு
30) வச்சூர் – கேரளா (100 க்கும் குறைவாக)
31) கங்காத்திரி – உ.பி, பீகார்,
32) மல்நாட் ஹிடா – கர்நாடகா
33) தோ தோ – நாகாலாந்த்
*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!
மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது ,
நன்றி : வவ்வால்

நேர்காணல் – காங்கயம் மாடுகள் காணாமல் போய்விடுமா?

இரா. வேணுகோபாலகிருஷ்ணன்

மாடு என்றால் தமிழில் செல்வம். ஏனோ ஆடு அப்படி இல்லை. ஆடு, மாடு… அனைத்தும் கால்நடைகள். வீட்டுப் பிராணிகளாக உள்ள இவை, மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை & மாடு, எருது, காளை, பசு, கன்று எனப் பல உள்ளன.

நம் நாட்டில் 42 வகையான மாட்டு இனங்கள் உள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. பல வகையான மாடுகளில் தமிழ்நாட்டின் காங்கயம் இன மாடுகள் புகழ் பெற்றவை.
வேளாண் பணிகளிலும், பார வண்டி இழுப்பதிலும் காங்கயம் காளைகள் மிகுந்த திறன் கொண்டவை. பூ என்றாலே தாமரை. காளை என்றாலே காங்கயம் காளைதான் என்று புகழ்ந்து பேசப்படுகின்றது. தென் மாவட்ட ஜல்லிக்கட்டுகளில் 30 சதவிகிதம் காளைகள் காங்கயம் காளைகள்.
இன்றைய அறிவியல் யுகத்தில் இயந்திரமயமாக்கல், உலகமயமாக்கல், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தில் விரைவான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாகப் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதை இயற்கை ஆர்வலர்கள் எடுத்துக் கூறி, அந்த அழிவைத் தடுப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாரம்பரியச் சிறப்பு மிக்க காங்கயம் காளைகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி அறிய, திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகிலுள்ள குட்டப்பாளையத்தில் இயங்கி வரும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களை ஓம் சக்தி சார்பில் அணுகினோம்.
திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் பாரம்பரியச் சிறப்புமிக்க பழையகோட்டைப் பட்டக்காரர் ராவ் பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் பேரன் ஆவார். அவர் ஓம் சக்திக்கு அளித்த பேட்டி:
கேள்வி: நம் நாட்டில் எத்தனை வகை மாடுகள் உள்ளன?
பதில்: நம் நாட்டில் 42 வகை மாட்டினங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், பகுதிகளில் காங்கயம் இன மாடுகள் உள்ளன. திருநெல்வேலி, தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் உம்பளச்சேரி என்னும் இன மாடுகளும், அந்தியூர்ப் பகுதியில் பர்கூர் இன மாடுகளும், கிருஷ்ணகிரி, தர்மபுரிப் பகுதிகளில் ஆலாம்பாடி இன மாடுகளும், தேனிப் பகுதியில் மலைமாடு என்னும் இன மாடுகளும், மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் புலியகுளம் இன மாடுகளும் உள்ளன.
கேள்வி: காங்கயம் இன மாடுகள் காங்கயம் பகுதியின் பூர்வீக இனமா அல்லது வேறு இன மாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினமா?
பதில்: காங்கயம் இன மாடுகள் காங்கயம் பகுதியின் பூர்வீக இன மாடுகள்தான். 100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தாத்தா ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் கர்நாடகத்திலிருந்து அமிர்த மகால் என்ற இன மாட்டைக் கொண்டு வந்து இப்போதுள்ள காங்கயம் மாட்டினை வடிவமைத்து அழகுபடுத்தியுள்ளார். மற்றபடி காங்கயம் மாடு என்பது கலப்பினமல்ல. இந்த மண்ணிற்கே உரிய அசல் இனம்தான்.
கேள்வி: காங்கயம் இன மாட்டின் அடையாளங்கள் என்னென்ன?
பதில்: காங்கயம் இன மாடுகளின் சிறப்பான அடையாளங்களாக அவற்றின் திமில்களும், கொம்புகளும் உள்ளன. கொம்புகள் சற்றே வளைந்து கூர்மையாக இருக்கும். உருண்டு, திரண்டு உயர்ந்திருக்கும் இவற்றின் திமில்கள் வேறு எந்த இன மாட்டிற்கும் கிடையாது. கம்பீரமான தோற்றம் கொண்டவை.
கேள்வி: காங்கயம் இனக் காளைகளின் சிறப்பு இயல்புகள் என்னென்ன?
பதில்: காங்கயம் காளைகள் கடும் வெயிலிலும் தொடர்ந்து 12 மணி நேரம் உழவு, பார வண்டி இழுத்தல் முதலான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை. எந்தத் தட்ப வெப்பச் சூழலையும் தாங்கும் திறன் கொண்டவை. மாட்டு வண்டியில் 4 டன் எடை கொண்ட பொருள்களைக் கழுத்தளவு நீருள்ள பாதையில் கூட இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை.
இதன் பால் A-2 ரகத்தைச் சேர்ந்தது. இதில் கொழுப்புச் சத்துக் குறைவு. நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய்களையெல்லாம் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. ஆனால் கலப்பின மாடுகளின் A-1 ரகப் பால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதது. இந்தப் பாலைக் குடிப்பதால் மேற்கண்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கேள்வி: பிறவகை மாடுகளுக்கும் இந்த இன மாடுகளுக்குமுள்ள குறிப்பிடத்தகுந்த வேறுபாடு என்ன?
பதில்: இந்த மாடுகள் எந்த வறட்சியையும் தாங்கக் கூடியவை. பஞ்ச காலத்தில் பனை ஓலைகளைக்கூடத் தின்று உயிர் வாழும். அப்போது உடல் எடை வேண்டுமானால் குறையலாம். பின்னர் பஞ்சம் நீங்கிய காலத்தில் மீண்டும் உடல் பொலிவு பெற்றுவிடும். அயல்நாட்டு இன மற்றும் அயல் கலப்பின மாடுகள் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் அற்றவை. உணவு நிலையிலும் இது போல் இருக்காது.
அடுத்து இதன் கோமயம், சாணம் கொண்டு ஜீவாமிர்தம், அமிர்த சஞ்சீவி, பஞ்சகவ்யம் முதலிய இயற்கை உரங்களைத் தயாரித்து இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தலாம். இதனால் விளைச்சல் பெருகும். இயற்கை விஞ்ஞானிகள் கலப்பின மாடுகளின் கழிவுகளை மேற்கண்ட இயற்கை உரங்கள் தயாரிக்கப் பரிந்துரைப்பதில்லை.
காங்கயம் மாடுகள் மிகுந்த நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. அதனால் இவை பிற இன மாடுகளைப் போல எளிதில் நோய்வாய்ப் படுவதில்லை.
கேள்வி: இந்த இனக் காளைகளின் விந்து அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று அங்கு கலப்பினங்கள் உருவாக்கப் படுகின்றனவா?
பதில்: தேசியப் பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002&இன் படி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இந்தக் காளைகளின் விந்தினைக் கொண்டு செல்ல முடியாது. கொண்டு சென்றால் அது சட்டப்படி குற்றமாகும். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசில் நாட்டிற்குக் கொண்டு சென்று அங்கே இதன் கலப்பின மாட்டினை உண்டாக்கியுள்ளனர். அந்தக் கலப்பின மாட்டிற்கு பிரம்மன் என்று பெயரிட்டுள்ளனர். 1920-&களிலேயே காங்கயம் மாடுகளுக்கான இன விருத்தி மையம் அங்கே உருவாக்கி யிருக்கிறார்கள். அதன்பின் எங்கும் கொண்டு செல்லப்படவில்லை.
கேள்வி: இந்த இனத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

பதில்: மாடுகளின் வண்ணங்களைக் கொண்டு மட்டும் இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் 95 சதவிகிதம் மயிலை எனப்படும் வெள்ளை நிறமுடையவை. 2 சதவிகிதம் காரி எனப்படும் கருப்பு நிறம் உடையவை. 3 சதவிகிதம் செவலை என்னும் சிவப்பு நிறமுடையவை.
கேள்வி: இது விரும்பி உண்ணும் தீவனம் எது?
பதில்: மற்ற மாடுகள் உண்ணும் தீவனங்கள் எல்லாவற்றையும் இது உண்ணும். விரும்பி உண்பவையாகக் கொழுக்கட்டைப்புல், செப்பு நெருஞ்சிக்காய், வேலங்காய் ஆகியவற்றைக் கூறலாம்.
கேள்வி: கலப்பின மாடுகள் உருவாக்கப்படுவதை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது ஏன்?
பதில்: மனிதர்களிடத்தில்தான் சாதி ஒழிக்கப்பட வேண்டும். விலங்குகளில் அல்ல. இவ்வாறு இனக்கலப்புச் செய்வதன் மூலம் அந்த இனம் முற்றாக அழிந்துவிடும்.
இனக்கலப்பால் பிறக்கும் கன்றுகளும் இரண்டும் கெட்டான் இனமாக இருக்கும். அதிகப் பால் கிடைக்கும் என்பதற்காகப் பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஓர் இனத்தை அழித்தல் கூடாது. இது கலாச்சார ரீதியிலும் சரியல்ல.
ஓர் இனம் உருவான மண்ணின் தட்ப வெப்பநிலை, நீர், அப்பகுதியில் கிடைக்கும் தீவனங்கள் ஆகியவற்றைக் கொண்டு வாழத் தகுந்த உடல் கூறுகள் அந்தந்தப் பகுதி இனத்திற்கு இயற்கையாகவே அமைந்திருக் கும். அவற்றை மாற்ற முயல்வது இயற்கைக்கு மாறானது.
கேள்வி: காங்கயம் இன மாடுகள் அழிந்து வருவதாகக் கூறப்படு கிறது. இது எதனால்?
பதில்: இந்த இன மாடுகள் 1990-ஆம் ஆண்டில் 11 லட்சத்து 76 ஆயிரம் இருந்தன. 2000 ஆவது ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரம் மாடுகள் இருந்தன. தற்போது சுமார் இரண்டரை லட்சம் மாடுகள்தான் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.
இதற்கு முதல் காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமையாகும். அடுத்து, இந்த இன மாடுகள் ஒரு வேளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரையே பால் தருவன. எனவே வியாபார ரீதியாகப் பாலுக்காக மாடுகள் வளர்ப்பவர்கள் குறைவான பால்தரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை. அதிகப் பால் தரும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகளையே வளர்க்கிறார்கள்.
மூன்றாவதாக வேளாண்மைத் துறையில் டிராக்டர் முதலான இயந்திரப் பயன்பாடு அதிகரித்து விட்டதால் நல்ல இழுவைச் சக்தி கொண்ட காளைகள் உழவுக்கும், வண்டிகள் இழுக்கவும் தேவையற்றனவாகி விட்டன. இதனாலும் வளர்ப்பது குறைந்து வருகிறது.
அடுத்ததாக அதிக அளவிலான மாடுகளை மேய்க்க முன்பு போல் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் முன்பு நிறைய மாடுகள் வைத்திருந்தவர்களெல்லாம் தற்போது அளவாக மாடுகள் வைத்துக் கொள்கிறார்கள் அல்லது மாடுகள் வளர்ப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்.
மாடுகளைக் காப்பதற்காக நம் நாட்டில் அரசின் கொள்கை முடிவுகளோ அல்லது பொதுமக்களின் சங்கங்களோ முன்பு இல்லை. இப்போதுதான் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேள்வி: காங்கயம் இன மாடுகளின் அழிவைத் தடுக்க உங்கள் மையம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
பதில்: காங்கயம் இன மாடுகளை நாங்கள் பாரம்பரியமாக வளர்த்து வருகிறோம். இந்த இனம் அழிவதைத் தடுப்பதற்காகத்தான் எங்கள் ஆராய்ச்சி மையத்தை 2005-&இல் தொடங்கினோம். எங்கள் மையத்தின் சார்பாக சுமார் 50 மாடுகள் வளர்த்து வருகிறோம்.
இன விருத்திக்காக இப்பகுதியைச் சேர்ந்த நாட்டு மாடுகளுடன் இனச் சேர்க்கை செய்யக் காங்கயம் காளைகளைத் தருகிறோம். வேறு கலப்பின மாடுகளுடன் இனவிருத்தி செய்வதில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். மாடுகளை வளர்க்கத் தயாராக உள்ள ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தினரிடம் மாட்டுக் கன்றுகளைக் கொடுத்து அவற்றை 8 முதல் 10 மாத காலம் அவர்கள் வளர்த்துக் கொடுத்தால் பின்னர் அதை விற்பனை செய்து விற்ற தொகையில் பாதியை வளர்ப்பவர்களுக்குக் கொடுக்கும் திட்டம் ஒன்றையும் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த மாடுகளின் கோமயம் மற்றும் சாணத்தைக் கொண்டு பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், ஜீவாமிர்தம் முதலிய இயற்கை உரப் பொருள்களைத் தயாரித்து இயற்கை வேளாண்மையைச் செய்தும், ஊக்குவித்தும் வருகிறோம்.
இப்பகுதியில் கொறங்காடு என்னும் மேய்ச்சல் நிலம் இம்மாடுகளுக்கு ஏற்றதாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் சுண்ணாம்புச் சத்துள்ள தீவனம் மாடுகளுக்குக் கிடைக்கின்றது. இந்த இடத்தைப் பட்டா நிலமாக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதனை அவ்வாறு பட்டா நிலமாக்காமல் மேய்ச்சல் நிலமாகவே நீடிக்க விட வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இங்கே காங்கயம் மாடுகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் மையம் சார்பில் காங்கயம் மாடுகளுக்காக www.kangayambull.com என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. மேலும் மக்களிடம் காங்கயம் மாடுகளைப் பற்றிய விழிப்புணர்வுக்காகக் கண்காட்சியும், காளைகளுக்கான அழகுப் போட்டியும் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.சென்ற ஜனவரியில் வெள்ளக்கோவில் அருகிலுள்ள புஷ்பகிரி நகரில் காங்கயம் காளைகளுக்கான அழகுப் போட்டி நடைபெற்றது. இதன்மூலம் இதைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இதை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
உழைப்பிற்கும், கம்பீரத் தோற்றத்திற்கும் பெயர்பெற்ற காங்கயம் இன மாடுகளை மட்டுமல்லாது, நம்நாட்டுப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பிற இனக் கால்நடைகளையும் அழியாது காத்திட பல்லுயிர்ப் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு ஒன்று தற்போது தொடங்கப் பட்டுள்ளது. இதனை சேனாபதி காங்கயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்துடன் காங்கயம் இனவிருத்தியாளர்கள் சங்கம், உம்பளச்சேரி பாரம்பரிய மாடுகள் வளர்ப்போர் சங்கம், பர்கூர் மாடு வளர்ப்போர் சங்கம், தேனி மாவட்ட மலைமாடு வளர்ப்போர் சங்கம் ஆகிய அமைப்பினர் இணைந்து தொடங்கியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் பாரம்பரியக் கால்நடை இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும் என நம்பலாம்.
பால் ரகங்கள்
A-2 ரகப் பால் என்பது இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த பாஸ் இண்டிகஸ் (Bos Indicus) ரக மாடுகளின் பால் ஆகும். ஐரோப்பிய நாடுகளின் பாஸ் டாரஸ்(Bos – Taurus) ரக மாடுகளின் பால் A-1 ரகப் பால் ஆகும்.காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்… என தமிழ்நாட்டுக்கென பாரம்பரிய ரகங்கள் இருப்பதுபோல… ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள். அதிலும் ‘புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய நாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி. புங்கனூர் மாடுகளைத் தேடி இம்மாவட்டத்தில் உள்ள குப்பம், சாந்திபுரா, வி.கோட்டா, புங்கனூர் ஆகிய பகுதிகளில் வலம் வந்தபோது, ராமமோகன் என்பவர், நாட்டினங்களை பராமரித்து வருவது பற்றிய தகவல் கிடைத்தது.
மதனப்பள்ளி-பெங்களூரு சாலையில் பதினோராவது கிலோ மீட்டரில் ‘செக் போஸ்ட்’ அருகே ‘சுரபி பண்ணை’ என்ற பெயரில் மாட்டுப் பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த ராமமோகன். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வரவேற்று பண்ணைக்குள்ளே அழைத்துச் சென்றார். அங்கே… தார்பார்க்கர், சிந்தி, காங்கிரேஜ், தியோனி இன மாடுகளும், முர்ரா எருமைகளும் அசைபோட்டுக் கொண்டிருந்தன.
”இந்திய இனங்கள்ல 32 வகைகள் இருக்கு. அதுல நாலு ரகங்கள், குட்டை ரகத்தைச் சேர்ந்தவை. கேரளாவுல இருக்கிற வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் மாதிரியே… இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி அடி உயரம் தான் இருக்கும். இந்த ரகத்தை, சித்தூர் மாவட்டத்துல இருக்கிற புங்கனூர் ஜமீன்தார், அவரோட பண்ணையில வெச்சு பராமரிச்சு பிரபலபடுத்தினதா சொல்றாங்க. அதனால இதுக்கு ‘புங்கனூர் குட்டை’னு பேர் வந்துச்சு” என்று பெயர்  காரணம் சொன்ன ராமமோகன், தொடர்ந்தார்.
குறைந்த கொழுப்பு… அதிக புரோட்டீன்!

”வெள்ளை, பழுப்பு, கருப்பு, சாம்பல்னு நாலு நிறத்துல இருக்குது. இதோட பால்ல கொழுப்பு குறைவு. இப்பெல்லாம் தினமும் இரண்டு, மூணுவேளை தவறாம டீ, காபி, பால் குடிக்கிறாங்க. உடம்புல கொழுப்புச்சத்து ஏறாம இருக்கணும்னு நினைக்கறவங்களுக்கு, இந்த மாட்டோட பால் ரொம்ப நல்லது. இதுல, புரோட்டீன் சத்து கூடுதலா இருக்கு. பால் ரொம்ப சுவையா இருக்கும். முப்பது வருஷங்களுக்கு முன்ன மாவட்டம் முழுவதும் பரவலா இருந்துச்சு. நாட்டு மாட்டோட அவசியம் நிறைய பேருக்குத் தெரியாததால, இந்த இனங்களோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுச்சு. முன்ன இதோட காளைகளை உழவுக்குக்கூட பயன்படுத்தியிருக்காங்க. இப்போ, காளைகள் குறைஞ்சு போயிடுச்சு. பசுக்களைக் கூட, பாலுக்காகத்தான் வளர்க்கறாங்க. இன்னிக்கு ஆந்திரா முழுசும் தேடினாலே, நூறு மாடுகளுக்குள்ளதான் இருக்கும்.
ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் பால்!
சாதாரணமா நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தா போதும். இதுக்கு பாயுற பழக்கம் இல்லாததால, யாரும் பயமில்லாம பராமரிக்கலாம். ஒருவேளைக்கு ரெண்டு லிட்டர்ல இருந்து மூணு லிட்டர் வரைக்கும் பால் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஆறு லிட்டர். என்கிட்ட இருக்கிற மாடு, இப்போ சினையா இருக்குது. வறட்சி காலங்கள்லயும், இருக்கிற தீனியை வெச்சே சமாளிச்சுடும்” என்று பெருமையோடு சொன்ன ராமமோகன்,
”சித்தூர் மாவட்டம், பலமனேர் கால்நடை பண்ணையிலும், புங்கனூர் காளைகள், பசு மாடுகள் இருக்கு. அதற்கான செயற்கை கருவூட்டல் ஊசியும் அங்க கிடைக்குது. ஆனா, யாரும் நாட்டு மாடுகள வளக்கறதுக்கு ஆர்வம் காட்ட மாட்டேங்கறாங்க. எங்களை மாதிரி ஆர்வம் உள்ளவங்கள்லாம் குழுவா சேர்ந்து புங்கனூர் மாடுகள பரவலாக்கறதுக்கான முயற்சிகளைச் செஞ்சுட்டு இருக்கோம்” என்று சொன்னார்.
நல்ல மனம் வாழ்க!
கலப்பினம் கூடாது!
நாட்டு ரகங்கள் பற்றி பேசிய சென்னை, கால்நடை மருத்துவக் கல்லூரியின் மரபியல் துறை பேராசிரியர் சிவச்செல்வம், ”இந்தியாவுல முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டு மாடு இனங்களும், நாப்பதுக்கும் மேற்பட்ட ஆட்டு இனங்களும் இருக்கு. அந்தந்தப் பகுதி கால நிலைக்கு ஏற்பத்தான் கால்நடைகளும், அதன் குணாதிசயங்களும் இருக்கும். ஆந்திராவுல இருக்கிற புங்கனூர் குட்டை என்ற ரகமும் நாட்டு இனம்தான். அதேமாதிரி, தமிழ்நாட்டோட நாட்டு இனங்களான காங்கேயம், புலிகுளம், உம்பளாச்சேரி, பர்கூர் இன மாடுகளும் நம்முடைய சீதோஷ்ண நிலையில் இருப்பவை. தற்போது, நாட்டு இனங்களுக்கான கருவூட்டல் ஊசியும் அந்தந்தப் பகுதி அரசு கால்நடைப் பண்ணைகளில் கிடைக்கிறது. உதாரணமாக, காங்கேயம் இனத்தின் கருவை அதே இனப் பசுவுக்கு செலுத்தினால்தான், ஒரிஜனல் இனமாகக் கிடைக்கும். இல்லாவிட்டால், குணாதிசயம் மாறி, கலப்பினமாகிவிடும். அந்தந்தப் பகுதி கால நிலைக்குப் பொருந்திப் போகிற இனங்களை வளர்த்து… நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் விஷயமே” என்றார்.
Thanks Pasumai Vikatan + Rajaram, Quillon

மாடு வளர்ப்புமாடு வளர்ப்பு

கன்று பராமரிப்பு
கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
பசு மற்றும் எருமைக்கான குடல் புழு நீக்கும் அட்டவணை
கலப்பின கால்நடைக்கான இடத்தேவை
கால்நடை இனங்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் முறைகள்
கோமாரி நோய் / காணை நோய் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
அசோலா - கால்நடை தீவனம்
கன்று பாரமரிப்பு
கறவை மாடுகளுக்கான முதன்மை தடுப்பூசி அட்டவணை

கன்று பராமரிப்பு

பிறந்தவுடன் கன்று பராமரிப்பு
 • கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.
 • கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும். குளிர்காலத்தில் தாய் மாடு கன்றினை நக்கவில்லையெனில் உடனே துணி அல்லது சாக்கினைக் கொண்டு கன்றினை துடைக்கவும். மேலும் செயற்கை சவாசம் அளிக்க, அதன் மார்பில் கையினை வைத்து அமுக்கி அமுக்கி எடுக்கவும்.
 • உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்கி வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ இட வேண்டும்.
 • தொழுவத்தில் ஈரமான கூளத்தினை அடிக்கடி அப்புறப்படுத்தி, எப்பொழுதும் தொழுவத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறந்தவுடன் கன்றின் எடையை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
 • மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.
 • கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்
 • கன்று பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து மாட்டிடன் சீம்பால் ஊட்ட முயற்சி செய்யும். சில மெலிந்த கன்றுகள் தானாகவே சீம்பால் ஊட்டவில்லை என்றால் அவை சீம்பால் ஊட்ட உதவி செய்யவேண்டும
கன்றுகளுக்கு தீவனமளித்தல்
பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
கன்றின் முதல் 3-4 வார வயதில் சீம்பால் மட்டுமன்றி பாலும் மிக அவசியம். மூன்று –நான்கு வார வயதிற்கு பின்பு கன்று தாவரமாவுச்சத்துக்களை ஜீரணிக்கும் திறன் பெற்று விடும். இதன் பின்னரும் பால் கன்றுக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அதற்கு பதிலாக அளிக்கப்படும் தானியவகை தீவனங்களை விட பாலுக்கான செலவு அதிகமாகும். கன்றுக்கு அளிக்கப்படும் அனைத்து திரவ வகை உணவுகளும் அதன் உடல் வெப்பநிலையில் இருக்குமாறு அல்லது அறை வெப்பநிலையிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கன்றுகளுக்கு தீவனம் அளிக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் தீவனமளிக்க பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும்.
நீர் அவசியம்
கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் கன்று அதிகமான நீரை குடிக்காமல் இருப்பதைத் தடுக்க, தண்ணீரை வெவ்வேறு உபகரணங்களில், வெவ்வேறு இடங்களில் வைக்கவேண்டும்.
கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள்
கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனங்களைப் பொறுத்தது. கீழ்க்காணும் தீவனமளிக்கும் முறைகளை கன்றுகளை வளர்க்க கடைபிடிக்கப்படுகின்றன
 • பால் மட்டும் அளித்து வளர்ப்பது
 • ஆடை நீக்கிய பாலில் வளர்ப்பது
 • பால் தவிர்த்த மற்ற திரவங்களான புதிதாக தயாரித்த மோர்,புதிதாக தயாரித்த பாலடையினை பாலிலிருந்து பிரித்தெடுத்தவுடன் பெறப்படும் திரவம், கஞ்சி ஆகியவற்றில் வளர்ப்பது
 • பாலுக்கு பதிலாக பால் மாற்றுதிரவங்களில் வளர்ப்பது
 • தொடக்க நிலை கன்று தீவனங்களில் வளர்ப்பது
 • செவிலி மாடு கொண்டு வளர்ப்பது.
பாலில் மட்டும் வளர்ப்பது
 • 0-3 மாத வயதுடைய சராசரியாக 50 கிலோ உடல் எடையை உடைய கன்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளாவன
  உலர் பொருள்1.43கிலோ
  மொத்த ஜீரணமாகக்கூடிய கனிம பொருள்1.60கிலோ
  புரதம்315கிராம்
 • பாலில் அதிகமான கொழுப்பு சத்து இருப்பதால் அதிலுள்ள மொத்த சீரணமாகும் பொருட்களான TDN ன் அளவு அதிலுள்ள உலர்ந்த பொருட்களின் அளவை விட அதிகம் உள்ளது. கன்று பிறந்து பதினைந்தாவது நாளில் புற்களை மேய தொடங்கும். இது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அரை கிலோவாக இருந்து பின்னர் மூன்று மாத வயதில் 5 கிலோவாக உயரும்.
 • பசுந்தாள் தீவனத்தை விட, நல்ல தரமான வைக்கோல் (1-2 கிலோ) இந்த வயதில் கன்றிற்கு நல்ல உணவாகும். பதினைந்து நாட்களில் ஒரு நாளைக்கு 0.5 கிலோவில் ஆரம்பித்து பின்னர் மூன்று மாதங்களில் 1.5 கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும்
 • மூன்று வாரங்களுக்கு பிறகு முழு பால் கிடைக்கவில்லை யென்றால், ஆடை நீக்கிய பால் அல்லது மோர் அல்லது வேறு பால் மாற்று பொருளை உணவாக அளிக்கலாம்.
கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை
 • பால் மற்றும் இதர திரவ உணவுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனங்களின் கலவையே அடர்தீவனக்கலவையாகும். இது தானியங்களால் ஆன முக்கியமாக மக்காசோளம் மற்றும் ஓட்ஸ் அதிகம் கொண்ட கலவையாகும்.
 • பார்லி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியங்களையும் இந்த அடர்தீவனக்கலவையில் சேர்த்துக்கொள்ளலாம். மொலாசஸ் எனப்படும் கரும்புச்சர்க்கரையை 10 சதவிகிதம் அளவுக்கு இந்த அடர்தீவனக்கலவையில் சேர்க்கலாம்.
 • ஒரு தரமான கன்று அடர்தீவனத்தில் 80% TDN (மொத்த சீரணிக்கும் பொருட்கள்)- ம் மற்றும் 22% CP (புரதம்) இருக்கும்.
கன்றுக்கான உலர்தீவனம்
 • இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் கலந்து புல் வைக்கோலும் அளிப்பது சிறந்தது.
 • சூரிய ஓளியில் உலர்த்திய பசுமையான வைக்கோலில் வைட்டமின் A, D மற்றும் B-complex அதிகமாக இருக்கும்.
 • ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும்.
 • ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொஞ்சமாகக் கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.
 • பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும்.
 • பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.
செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல்
 • குறைந்த கொழுப்புச்சத்துடைய ஆனால் அதிக பால் கறக்கக்கூடிய மாட்டுடன், 2-4 தாயற்ற கன்றினை முதல் வாரத்திலிருந்து பால் குடிக்கச் செய்யலாம்
 • உலர்ந்த தீவனத்தினை வைக்கோலுடன் சேர்த்து எவ்வெளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவேண்டும். இவ்வாறு தீவனமளிக்கப்பட்ட கன்றுகளை 2-3 மாதத்தில் மாட்டிடமிருந்து பிரித்துவிடலாம்.
கஞ்சியில் கன்றினை வளர்ப்பது
கஞ்சி கன்றுக்கு அளிக்கப்படும் திரவ ஆரம்பகால தீவனமாகும். இது பாலுக்கு பதில் அளிக்கப்படுவதால், 4 வாரங்களில் இருந்து சிறிது சிறிதாக பாலை குறைத்து அதற்கு பதில் கஞ்சியினைக் கொடுக்கவேண்டும். இதற்கு 20 தினங்களுக்கு பிறகு முழுவதுமாக பால் அளிப்பதை நிறுத்திவிடவேண்டும்
கன்றுதீவனத்தில் கன்றினை வளர்ப்பது
இம்முறையில் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் முழு பாலினை அளித்து பின்னர் உலர் தொடக்க தீவன பொருள் மற்றும் தரமான வைக்கோல் மற்றும் தீவனம் தின்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். பின்பு கன்றின் 7-10வது வார வயதில் பால் மறக்க செய்யப்படும்
பால் மாற்று பொருளில் கன்றினை வளர்ப்பது
கன்றுக்கு தேவைப்படும் சத்துகளை கொடுப்பதில் பாலிற்கு சிறந்த மாற்று பொருள் எதுவும் இல்லை. பால் மற்றும் இதர திரவ உணவு தீவனங்கள் தேவையான அளவு கிடைக்கவில்லையென்றால் பால் மாற்று பொருளை உபயோகிக்கலாம். இது பால் கொடுக்கும் அளவு போன்று கொடுக்கப்பட வேண்டும். அதாவது கன்றின் எடையில் 10-12% பால் மாற்றுப்பொருளை உணவாகக் கொடுக்க வேண்டும்
கன்றினை தாயிடமிருந்து பிரித்தல்
 • கன்றினை தாயிடம் இருந்து பிரிப்பது, தீவிர மேலாண்மை பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு மேலாண்மை முறையாகும். இதனால் எல்லா கன்றுகளுக்கும் தேவையான அளவு பால் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் பால் வீணாவதையும், கன்றுகளுக்கு அதிக அளவு பால் கொடுப்பதையும் தடுக்கமுடியும்.
 • பண்ணையில் பின்பற்றப்படும் மேலாண்மை முறையினைப் பொருத்து கன்றுகளை தாயிடமிருந்து பிரிப்பதை அவை பிறந்தவுடனேயோ, மூன்று வாரத்திலோ, 8-12 வாரத்திலோ அல்லது 24 வார வயதிலோ செய்யலாம். பொதுவாக பண்ணையாளர்கள் 12 வாரத்தில் கன்றினை தாயிடமிருந்து பிரிப்பார்கள். பண்ணையில் பயன்படுத்த வளர்க்கப்படும் காளைக் கன்றுகள், 6 மாதம் வரை தாயுடன் இருக்கும்.
 • நன்கு நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை வளர்க்கும்போது அவை பிறந்தவுடனேயே பால் மறக்கச் செய்வது நல்லது.
 • பிறந்தவுடனேயே கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து பால் மாற்றுப் பொருள் மற்றும் தீவனத்தில் கன்றினை வளர்ப்பதால், பால் மனித உபயோகத்திற்கு சேமிக்கப்படும்.
கன்றினை தாயிடமிருந்து பிரித்ததற்குப் பின்
கன்றினைப் பிரித்ததில் இருந்து மூன்று மாதங்களில், சீராக கன்று தொடக்க தீவனத்தை அளிக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். கன்றின் உடல் அளவில் 3% அளவு, ஈரப்பதம் அதிகம் உடைய பதப்படுத்திய புல் பசுந்தீவனங்களை அளிக்கலாம். ஆனால் பசுந்தீவனங்களை அதிகம் கொடுக்கக்கூடாது ஏனெனில் பசுந்தீவனத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்பொழுது கன்றுகள் எடுத்துக்கொள்ளும் மொத்த ஊட்டச்சத்தின் அளவு குறையும்.
கன்றின் வளர்ச்சி
அடிக்கடி கன்றின் எடையை பார்த்து அது குறிப்பிட்ட எடையில் வளர்கிறதா என்று பராமரிக்க வேண்டும்
 • முதல் மூன்று மாதங்கள் கன்றுக்கு உணவு அளிப்பது மிக முக்கியமானதாகும்.
 • இந்த சமயத்தில் சரியாக உணவு அளிக்கவில்லையென்றால், 25-30% கன்றுகள் இறந்து விடும்.
 • சினை மாட்டிற்கு சினைப்பருவத்தின் கடைசி 2-3 மாதங்கள் நல்ல தரமான தீவனம் அளிப்பது அவசியம்.
 • பொதுவாக கன்று பிறந்தவுடன் 20-25 கிலோ எடையிருக்கும்.
 • தகுந்த தீவனமளித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் தவறாமல் செய்தால் சராசரியாக கன்றின் எடை ஒரு மாதத்திற்கு 10-15 கிலோ எடை கூடும்.
போதுமான வீடமைப்பு முக்கியம்
தாயிடமிருந்து பிரித்த கன்றுகளை தனித்தனி தொழுவத்தில் கட்ட வேண்டும். இதனால் ஒன்றை ஒன்று நக்குவது தவிர்க்கப்பட்டு நோய் தொற்று வராமல் இருக்கும். தொழுவம் சுத்தமாகவும், உலர்வாகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். கன்றுகளின் மீது சுத்தமாக காற்று எப்பொதும் படுமாறு தொழுவத்தினை அமைக்கவேண்டும். கன்றுகளுக்கு வசதியாக இருக்கவும், அவற்றின் உடல் உலர்வாக இருக்கவும் கன்றினை கட்டும் இடத்தில் கூளம் இட வேண்டும். கூளமாக வைக்கோல் அல்லது உமி உபயோகிக்கப்படும். வெளிப்புற தொழுவம் பாதி மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் அதிகமான சூரிய வெப்பம் கன்றுகளின் மீது படுவது தவிர்க்கப்படுவதுடன் மழை மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்தும் கன்றுகள் பாதுகாக்கப்படும். கிழக்கு பக்கம் திறப்பு இருக்கும் தொழுவம், காலை வெயிலினால் வெப்பமாக்கப்பட்டு உச்சி வெயிலில் நிழலால் மூடப்பட்டிருக்கும். மழை இந்த திசையில் இருந்து விழாது.
கன்றுகளை நலமாக வைத்திருத்தல்
பிறந்த கன்றுக்கு நோய்வராமல் காப்பது மிக அவசியம். இதனால் கன்றுகளின் இறப்பு தவிர்க்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுக்கு சிகிச்சை அளிப்பதை விட அவற்றினை நலமாக பேணுவதற்கு குறைந்த செலவே ஆகும். முறையாக கன்றுகளை கண்காணித்து சரியான உணவு அளித்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்குவது மிக அவசியம்.

கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுதன்மை இந்திய பால் பண்ணைத்தொழிலில், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும். சினைபிடிக்காத கறவை மாட்டினை பராமரிப்பது பால்பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாகும். பெரும்பாலான நாடுகளில் சினை பிடிக்காத மாடுகளை இறைச்சிக்காக அனுப்பி விடுவார்கள்.
கறவை மாடுகளில், 10 - 30 % பால் கறவை காலத்தினை மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் பாதிக்கிறது. கறவை மாடுகளில் கருவுறும் தன்மையினை அதிகரிக்கவும், கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்கவும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு முறையாக தீவனத்தினை அளித்து நோய்கள் இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
சினைபிடிக்காத்தற்கான காரணங்கள்
கறவை மாடுகள் சினைபிடிக்காததற்கு காரணங்கள் பல உள்ளன. மலட்டுதன்மை அல்லது கருவுறாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய், பிறவிக்கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கும்
சினைப்பருவ சுழற்சி
பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவ சுழற்சியானது 18-21 நாட்களுக்கு ஒரு முறை 18-24 மணி நேரம் இருக்கும். ஆனால் எருமை மாடுகளில் இந்த சுழற்சிக்கான அறிகுறிகள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை காலையிலிருந்து இரவு வரை 4-5 முறை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சினைப்பருவ காலத்தில் இருக்கும் கறவை மாட்டினை சரியாக கண்டறியாமல் இருப்பது மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும். சினைப்பருவ சுழற்சி அல்லது சினை பருவ காலத்தில் இருக்கும் கறவை மாடுகளை கண்டறிதலில் மிகத் திறமை அவசியம். எவர் ஒருவர் தன் கறவை மாடுகளை பற்றிய பதிவேடுகளை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும்.
கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள்
 • கறவை மாடுகள் சினைப்பருவ காலத்தில் இருக்கும் போதே சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்கவேண்டும்.
 • சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து அதற்கு மருநத்துவம் அளிக்க வேண்டும்.
 • மாடுகள் ஆரோக்கியத்தினை பேண 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் செய்யப்படும் குடற்புழு நீக்கத்திற்கான சிறு முதலீடு, பெரும் இலாபத்தை அளிக்கும்.
 • கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் சக்தி, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனமாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு சரிவிகித தீவனத்தினை கொடுப்பதால் அவற்றின் கருவுறும் தன்மை, ஆரோக்கியமான சினை காலம், பாதுகாப்பான கன்று ஈனல், குறைவான தொற்றுநோய்களின் தாக்கம் மற்றும் ஆரோக்கியமான கன்று பெறுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
 • கிடேரி கன்றுகளுக்கு அவற்றின் இளம் வயதிலிருந்தே சரிவிகிதத் தீவனத்தினை அளித்தால் சரியான வயதில் சரியான எடையுடன் (230-250 கிலோ) இனப்பெருக்கத்திறனை அடையும். இதன் மூலம் அவற்றின் கருவுறும் தன்மை அதிகரித்து இனப்பெருக்கத்திற்கும் ஏற்றதாகவும் இருக்கும்
 • சினையாக இருக்கும் போது அதிகமான அளவு பசுந்தாள் தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன் கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி கறவை மாட்டின் கருப்பையிலிருந்து போடாமல் இருப்பதையும் தடுக்கும்.
 • மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கும் போது அந்த காளைகளின் இனப்பெருக்கத்திறன் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின் மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கவேண்டும்.
 • மாடுகளை சுகாதாரமான முறையில் இனவிருத்தி செய்து, சுகாதாரமான இடத்தில் கன்று ஈனச்செய்வதன் மூலம் அவற்றின் கருப்பையில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
 • மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60-90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப்பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .
 • மாடுகள் கருவுற்று இருந்தால், பின்னர் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பசுவுக்கு சினைக்காலம் 280 நாட்கள், எருமை மாட்டிற்கு 300 நாட்கள்.
 • சினைக்காலத்தின் கடைசி கட்டத்தில் தேவையற்ற அயற்சிகள் மற்றும் ஓரிடத்திலிருந்து மாடுகளை மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லுதல் கூடாது.
 • மற்ற மாடுகளிலிருந்து சினையுற்ற மாடுகளை தனியாக பிரித்தது வைத்து நன்றாக தீவனமளித்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
 • கன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன் பால் கறப்பதை நிறுத்தி போதுமான தீவனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சினை மாட்டின் உடல் நலம் பராமரிக்கப்படுவதுடன், சரியான உடல் எடையில் நலமான கன்று ஈனுதல், குறைந்த நோய் தொற்று போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கன்று ஈன்ற பின்பு மாடுகள் விரைவில் சினைப்பருவ சுழற்சியினை அடைவதற்கும் வழிவகுக்கும்.
 • கறவை மாடு கன்று ஈன்று அடுத்த 4 மாதங்களில் அல்லது 120 நாட்களில் மீண்டும் சினைஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்த்தல் போன்ற முறைகளின் மூலம் இனப்பெருக்கத்திற்கு அவற்றை உட்படுத்தலாம். இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலாபகரமான பால்பண்ணைத் தொழிலை நடத்தலாம்.

கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுதன்மை இந்திய பால் பண்ணைத்தொழிலில், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும். சினைபிடிக்காத கறவை மாட்டினை பராமரிப்பது பால்பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாகும். பெரும்பாலான நாடுகளில் சினை பிடிக்காத மாடுகளை இறைச்சிக்காக அனுப்பி விடுவார்கள்.
கறவை மாடுகளில், 10 - 30 % பால் கறவை காலத்தினை மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் பாதிக்கிறது. கறவை மாடுகளில் கருவுறும் தன்மையினை அதிகரிக்கவும், கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்கவும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு முறையாக தீவனத்தினை அளித்து நோய்கள் இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
சினைபிடிக்காத்தற்கான காரணங்கள்
கறவை மாடுகள் சினைபிடிக்காததற்கு காரணங்கள் பல உள்ளன. மலட்டுதன்மை அல்லது கருவுறாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய், பிறவிக்கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கும்
சினைப்பருவ சுழற்சி
பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவ சுழற்சியானது 18-21 நாட்களுக்கு ஒரு முறை 18-24 மணி நேரம் இருக்கும். ஆனால் எருமை மாடுகளில் இந்த சுழற்சிக்கான அறிகுறிகள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை காலையிலிருந்து இரவு வரை 4-5 முறை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சினைப்பருவ காலத்தில் இருக்கும் கறவை மாட்டினை சரியாக கண்டறியாமல் இருப்பது மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும். சினைப்பருவ சுழற்சி அல்லது சினை பருவ காலத்தில் இருக்கும் கறவை மாடுகளை கண்டறிதலில் மிகத் திறமை அவசியம். எவர் ஒருவர் தன் கறவை மாடுகளை பற்றிய பதிவேடுகளை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும்.
கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள்
 • கறவை மாடுகள் சினைப்பருவ காலத்தில் இருக்கும் போதே சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்கவேண்டும்.
 • சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து அதற்கு மருநத்துவம் அளிக்க வேண்டும்.
 • மாடுகள் ஆரோக்கியத்தினை பேண 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் செய்யப்படும் குடற்புழு நீக்கத்திற்கான சிறு முதலீடு, பெரும் இலாபத்தை அளிக்கும்.
 • கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் சக்தி, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனமாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு சரிவிகித தீவனத்தினை கொடுப்பதால் அவற்றின் கருவுறும் தன்மை, ஆரோக்கியமான சினை காலம், பாதுகாப்பான கன்று ஈனல், குறைவான தொற்றுநோய்களின் தாக்கம் மற்றும் ஆரோக்கியமான கன்று பெறுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
 • கிடேரி கன்றுகளுக்கு அவற்றின் இளம் வயதிலிருந்தே சரிவிகிதத் தீவனத்தினை அளித்தால் சரியான வயதில் சரியான எடையுடன் (230-250 கிலோ) இனப்பெருக்கத்திறனை அடையும். இதன் மூலம் அவற்றின் கருவுறும் தன்மை அதிகரித்து இனப்பெருக்கத்திற்கும் ஏற்றதாகவும் இருக்கும்
 • சினையாக இருக்கும் போது அதிகமான அளவு பசுந்தாள் தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன் கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி கறவை மாட்டின் கருப்பையிலிருந்து போடாமல் இருப்பதையும் தடுக்கும்.
 • மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கும் போது அந்த காளைகளின் இனப்பெருக்கத்திறன் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின் மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கவேண்டும்.
 • மாடுகளை சுகாதாரமான முறையில் இனவிருத்தி செய்து, சுகாதாரமான இடத்தில் கன்று ஈனச்செய்வதன் மூலம் அவற்றின் கருப்பையில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
 • மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60-90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப்பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .
 • மாடுகள் கருவுற்று இருந்தால், பின்னர் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பசுவுக்கு சினைக்காலம் 280 நாட்கள், எருமை மாட்டிற்கு 300 நாட்கள்.
 • சினைக்காலத்தின் கடைசி கட்டத்தில் தேவையற்ற அயற்சிகள் மற்றும் ஓரிடத்திலிருந்து மாடுகளை மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லுதல் கூடாது.
 • மற்ற மாடுகளிலிருந்து சினையுற்ற மாடுகளை தனியாக பிரித்தது வைத்து நன்றாக தீவனமளித்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
 • கன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன் பால் கறப்பதை நிறுத்தி போதுமான தீவனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சினை மாட்டின் உடல் நலம் பராமரிக்கப்படுவதுடன், சரியான உடல் எடையில் நலமான கன்று ஈனுதல், குறைந்த நோய் தொற்று போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கன்று ஈன்ற பின்பு மாடுகள் விரைவில் சினைப்பருவ சுழற்சியினை அடைவதற்கும் வழிவகுக்கும்.
 • கறவை மாடு கன்று ஈன்று அடுத்த 4 மாதங்களில் அல்லது 120 நாட்களில் மீண்டும் சினைஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்த்தல் போன்ற முறைகளின் மூலம் இனப்பெருக்கத்திற்கு அவற்றை உட்படுத்தலாம். இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலாபகரமான பால்பண்ணைத் தொழிலை நடத்தலாம்.

கலப்பின கால்நடைக்கான இடத்தேவை

வயது
தீவன இடம் (மீட்டர்)
நிற்கும் இடம் (சதுர மீட்டர்)
திறத்த இடம் (சதுர மீட்டர்)
4-6 மாதம்
0.2-0.3
0.8-1.0
3.0-4.0
6-12 மாதம்
0.3-0.4
1.2-1.6
5.0-6.0
1-2 வயது
0.4-0.5
1.6-1.8
6.0-8.0
பசு
0.8-1.0
1.8-2.0
11.0-12.0
சினை பசு
1.0-1.2
8.5-10.0
15.0-20.0
எரு*
1.0-1.2
9.0-11.0
20.0-22.0


கறவை இனங்கள்
சாஹிவால்
 • அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - கிராம சூழலில்1350 கிலோ
                         - வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ
 • 32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது
 • கறவை கால இடைவெளி - 15 மாதம்.


கிர்
 • தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ
                                                  வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ
gir.JPG


தார்பர்கர்
 • ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ
                         – வணிக பால் பண்ணை: 2500 கிலோ


கரண் ஃபிரி
ஹோலஸ்டின் பிரிசின் காளையின் விந்தைக் கொண்டு, செயற்கை முறையில் இராஜஸ்தானின் தர்பார்கர் பசுவுக்கு செயற்கை முறையில் விந்தினை செலுத்தி உருவாக்கிய கலப்பின இரகம் கரண்ஃபிரியாகும். தா்பார்க்கர் பசுக்கள் சுமாரான அளவு பால் கறக்கும் பசுக்களாக இருந்தாலும், அவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காலநிலைனய தாங்கும் சிறந்த தன்மை வாய்ந்தவை.
 • இரகத்தின் சிறப்பியல்புகள்
 • பசுவின் உடல்பகுதி, நெற்றி மற்றும் வால்பகுதி கறுப்பு மற்றும் வெள்ளை நிற பற்றுகள் நிறைந்திருக்கும். மடியானது கறுத்தும், காம்புகளில் வெள்ளை நிறமும், தடித்த பால் நரம்புகளும் காணப்படும.
 • இந்த இரகமானது மிக சாந்தமாக காணப்படும். பெண் கன்று, ஆண் கன்றுகளை விட மிக விரைவாக வளர்ச்சியடையும். 32-34 மாத வயதில் கருவுற தொடங்கும்.
 • சினை காலமானது 280 நாட்கள் ஆகும். கன்று ஈன்று 3-4 மாதங்களுக்கள் மீண்டும் கருவுற தயாராகும். ஆனால் ஏனைய வட்டார இரகங்கள் கன்று ஈன்று மீண்டும் கருவுற 5-6 மாதம் ஆகும்.
 • பால் அளவு : கரண் ஃபிரி பசுக்கள் ஒரு வருடத்திற்கு 3000-3400 லிட்டர் பால் வரை கறக்க வல்லவை. நிறுவன பண்ணையில் இந்த பசு இரகத்தின் சராசரி பால் கறக்கும் அளவானது 3700 லிட்டர் ஆகும். பாலின் கொழுப்பு சத்து அளவு 4.2 சதவிகிதம் ஆகும். இதனுடைய கறனவ நாட்கள் 320 நாட்கள் ஆகும்.
 • இந்த இரகத்தினை நிறைய பசுந்தாள் தீவனம் கொண்டும் மற்றும் சரிவிகித செறிவான உணவு கவவைக் கொண்டும் ஊட்டச்சத்து அளித்து வந்தால், ஒரு நாளுக்கு 15-20 லிட்டர் வரை பாலினை அளிக்கும். பாலின் உற்பத்தியானது நாளுக்கு 25-35 லிட்டர் வரை (முக்கிய கறனவ நேரங்களில், அதாவது கன்று ஈந்த 3-4 மாதங்களில்) செல்லும்.
 • அதிக கறவை அளிப்பதனால், இந்த இரகமானது பால் மடி வீக்கம் மற்றும் கனிம பொருள் பற்றாக்குறை போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனை முன்னரே கண்டறிந்தால் எளிதில் குணமாக்கலாம்.
karan-frie breed
கன்றின் விலை
மாட்டின் கறவையின் திறம் பொறுத்து, புதிதாக ஈன்ற கன்றானது பொதுவாக 20,000 - 25,000 ரூபாயில் கிடைக்கும்.
மேலும் தகவலுக்கு
தலைவர்,
கறவை மாடு இணவிருத்தி துறை,
தேசிய பால் ஆராய்ச்சி மையம், கர்ணால், ஹரியானா 132001
போன் 0184-2259092


சிவப்பு சிந்து
 • பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ
                         – வணிக பால் பண்ணை : 1900 கிலோ
கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்
ஓங்கோல்
 • ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - 1500 கிலோ
 • வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.


ஹரியானா
 • கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்திய பிரதேசம்
 • பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ
 • வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.


கங்ரெஜ்
 • குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ
                         - வணிக பால் பண்ணை : 3600 கிலோ
 • 36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.
 • கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்
 • காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.
             
டியோனி
 • ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
 • பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.


பண்ணை வேலைக்கான இனங்கள்
அம்ரித்மஹால்
 • கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.
 • உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.


ஹல்லிகார்
 • கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.


ஹில்லர்
காங்கேயம்
 • தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
 • உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.


அயல்நாட்டு கறவை இனங்கள்
ஜெர்சி
 • 26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.
 • கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்
 • பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ
 • ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.
 • ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.
 • இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.
 


Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்
 • இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.
 • பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ
 • பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.
 • டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.


எருமை இனங்கள்
முர்ரா
 • ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி - 1560 கிலோ
 • சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது
 • ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.
 • கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்


சுர்த்தி
 • குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
 • பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ


ஜப்ராபதி:
 • குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது
 • பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ


நாக்பூரி
 • நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)
 • பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ
கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை
கறவை மாடுகளின் தேர்வு
கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
 • மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
 • மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
 • கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது.  எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
 • தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
 • யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும். 
 • அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
 • ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.
அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்
 • கவர்ச்சியான  தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
 • உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
 • கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
 • மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
 • மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
 • மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.
வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள்
 • இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும்.  இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 :  50 அல்லது 40  :  60 என்ற விகிதத்தில்).  எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
 • சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய  பால் தேவை.  எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.
 • உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.  இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும்.  ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும்.  மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.
வணிக ரீதியான பண்ணைக்கான மாடு . எருமைகளை தேர்வு செய்யும் முறை
பசுமாடுகள்
 • ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது.  (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000)
 • நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது.
 • கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.
 • பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது.  இது எருமைப்  பாலைவிட சற்று குறைவாக உள்ளது.
எருமைகள்
 • மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.
 • பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது.  இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.
 • எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம்.  இதனால் செலவு குறைகிறது.
 • எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது.  மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது.  காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.
 • எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை. 

கோமாரி நோய்

கோமாரி நோய் மாடு, ஆடு, பன்றி முதலிய கால்நடைகளைத் தாக்கி மிக அதிக அளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய தொற்று நோயாகும். நம் நாட்டில் இந்நோய் ஏற்படுவதால் கால்நடை உபபொருட்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும் கால்நடை உரிமையாளருக்கு கால்நடைகளின் நிரந்தர பயன்பாடான பால் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் அதிக நட்டத்தினை ஏற்படுத்துகிறது.
கோமாரி நோயின் அறிகுறிகள் என்ன?
 • மிக அதிக காய்ச்சல்
 • சோர்ந்து காணப்படுதல்
 • பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய், கால் குளம்புகளின் இடைவெளி மற்றும் பால் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்
 • பாதிக்கப்பட்ட கால்நடைகள் நாக்கினை நீட்டியபடி வாயில் நுரையுடன் கூடிய எச்சில் ஒழுக்குதல்
 • கால் குளம்புகளில் புண்கள் இருப்பதால் கால் நொண்டி நடத்தல்
 • சமீப காலங்களில் இந்நோயானது பாலூட்டும் இளங்கன்றுகளின் இதயத்தினை தாக்கி அதிக இறப்பினை ஏற்படுத்துகிறது
வாயில் கோமாரி நோயின் அறிகுறிகள்
    
கால் குளம்புகளில் கோமாரி நோயின் அறிகுறிகள்
    

கோமாரி நோய் எவ்வாறு பரவுகிறது?
 • நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு காற்றின் மூலமாக பெரும்பாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரங்களில் இந்நோய்க்கிருமி பரவுகிறது
 • இந்நோய் தீவனம், பண்ணையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றின் மூலமும் பறவைகள், நாய் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டத்தின் மூலமும் எளிதாகவும் மிக விரைவாகவும் பரவுகிறது
 • பாதிக்கப்பட்ட கறவை மாடுகள் கன்றுகளுக்கு பாலூட்டும் போது கன்றுகளுக்கு இந்நோய் பரவுகிறது
 • செம்மறியாடுகள் மற்றும் பன்றிகள் இந்நோய்க்கிருமியினை மாடுகளுக்கு பரப்புவதில் அதிக பங்கு வகிக்கின்றன
 • கலப்பின மாட்டினங்கள் (ஜெர்சி, ஃபிரிசியன்) நம்நாட்டு மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன
 • கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்வதின் மூலம் இந்தோய் எளிதில் பரவுகிறது
கோமாரி நோயின் பின்விளைவுகள் என்ன?
 • பாதிக்கப்பட்ட மாடுகளில் மூச்சிரைப்பு ஏற்பட்டு உற்பத்தி திறன் குறைதல்
 • கறவை மாடுகள்  எளிதில் மடி வீக்க நோயினால் பாதிக்கப்படுதல்
 • கறவை மாடுகள் சினை பிடிப்பது கடினமாதல்
 • சினை மாடுகளில் கன்று வீசிவிடுதல்
 • பால் உற்பத்தி குறைந்து மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்துதல்
 • காளை மாடுகளில் இனவிருத்தி திறன் குறைதல்
நோய் சிகிச்சை
 • ஒரு சதவிகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கொண்டு நோயுற்ற கால்நடைகளின் வாய் மற்றும் கால் புண்களை கழுவவேண்டும்
 • வாய் புண் மீது போரிக் அமிலம் கிளிசரின் களிம்பினையும், கால் புண்களின் மீது ஆன்டிசெப்டிக் களிம்பினை தடவ வேண்டும்
நோய் தடுப்பு முறைகள்
 • நோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது
 • நோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது
 • புதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்
தடுப்பூசி போடுதல்
 • ஒரு பகுதியிலுள்ள அனைத்து மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு கோமாரி நோய்க்கு ஒருங்கிணைந்த முறையில் தடுப்பூசி போட வேண்டும்
 • கன்றுகளுக்கு முதலாவது தடுப்பூசி நான்காவது மாத வயதிலும் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஐந்தாவது மாத வயதிலும் பிறகு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதத்திற்கொரு முறை பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் போட வேண்டும்

அசோலா - கால்நடை தீவனம்

அசோலா பற்றி
 • தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.
 • பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.
 • மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
 • பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 • வேகமாக வளரும் தன்மை கொண்டவை.

                            அசோலா

அசோலா- தீவனமாக
 • அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.
 • உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.
 • அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.
 • அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
 • செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.
அசோலா உற்பத்தி
 • மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
 • செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.
 • புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்
 • அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
 • சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
 • புதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
 • மேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
 • 500 - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
 • ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
 • தினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.
 • மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.
 • மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
 • 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
 • அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.

நன்றாக வளர்ந்த அசோலா
          
                                            அசோலா உற்பத்திக்கான தொட்டிகள்
அசோலா அறுவடை
 • அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
 • ஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.
 • அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.
மாற்று இடுபொருட்கள்
 • புதிய சாணத்திற்க்கு பதிலாக சாண எரி வாயு கலனில் இருந்து வெளியேறும் சாணத்தை உபயோகப்படுத்தலாம்.
 • குளியலறை மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அசோலா குழியில் நிரப்ப பயன்படுத்தலாம்.
நல்ல வளர்ச்சிக்கான சுற்று சுழல் காரணிகள்
 • வெப்பநிலை 200C - 280C
 • வெளிச்சம் 50% சூரிய ஒளி
 • ஈரப்பதம் 65 - 80%
 • தொட்டில் நீரில் உயரம் 5-12 செ.மீ
அசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை
 • அசோலாவை  சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
 • தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.
 • நிழல் வலைகளை உபயோகப்படுத்தி வெளிச்சத்தின் அளவை குறைக்கலாம்.
 • அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்கலாம்.

கன்று பாரமரிப்பு

 • " இன்றைய கன்றுகள் நாளைய பசுக்கள் "  கன்றுகள் வளர்ச்சி குன்றினால் பருவமடைவது தாமதமாகி உற்பத்தி திறன் குறைந்து விடுகிறது.
 • கன்று பிறந்தவுடன், தொப்புள் கொடியை சுமார் 8 செ.மீ. விட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி டிஞ்சர் அயோடின் தடவ வேண்டும்.
 • கன்று பிறந்த 2 மணி நேரத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சீம்பால் கொடுக்க வேண்டும்.
 • கன்றுகளுக்கு தாய்ப்பாலோடு கன்று தீவனத்தையும் சேர்த்து கொடுத்தால் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கன்று தீவனம் கீழ் கண்டவாறு தயாரிக்காலாம்.
மக்காசோளம்30 பங்கு
பிண்ணாக்கு27 பங்கு
தானியங்கள்20 பங்கு
தவிடு10 பங்கு
உடைத்த அரிசி10 பங்கு
தாதுஉப்புக் கலவை3 பங்கு
 • கன்றுகள் பிறந்த 2- 3 வாரங்களில் பசும்புற்களையும் தீவனக்கலவையையும் தின்னத் தொடங்கும்.
 • கன்றுகளில் ஏற்படும் சிறுநீர் குடித்தல், மண் மற்றும் குப்பைகளை உண்ணும் பழக்கங்களை தடுக்க தொழுவத்தில் உப்புக்கட்டிகளை தொங்கவிட வேண்டும்.
 • கலப்பின மாடுகளில் கொம்புகள் திடமான இல்லாத காரணங்களால், கலப்பின கன்றுகளின் கொம்பு குருத்தை 21 நாட்களில் கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு நீக்க வேண்டும்.
 • கன்று பிறந்த ஒரு வாரத்திலும் பிறகு மூன்றாவது வாரத்திலும் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். பின்னர் இரண்டு மாததிற்கு ஒரு முறை 6 மாத வயது வரை குடற்புழு நீக்க வேண்டும்.
 • கன்றுகளுக்கு 4 முதல் 6 மாத வயதில் கோமாரி நோய், சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் நோயைகளுக்கான தடுப்பூசிகளை போடவேண்டும். கோமாரி நோய் தடுப்பூசியை 6 மாததிற்கு ஒரு முறையும் சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் தடுப்பூசிகளை வருடத்திற்கு ஒரு முறையும் திரும்ப திரும்ப போடவேண்டும்.

கறவை மாடுகளுக்கான முதன்மை தடுப்பூசி அட்டவணை

வ.எண்வயதுதடுப்பூசி
1.நான்காம் மாதம்கோமாரி நோய் முதல் தடுப்பூசி
2.இரண்டு முதல் நான்கு வாரங்கள் கழித்துகோமாரி நோய் இரண்டாம் தடுப்பூசி
3.பின்பு வருடம் மூன்று இரு முறை (தொடர்ந்து நோய் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளில் மட்டும்) அல்லது வருடம் இரு முறைகோமாரி நோய் பூஸ்டர் தடுப்பூசி
4.ஆறாம் மாதம்சப்பை நோய்
அடைப்பான் நோய்
5.ஆறாம் மாதத்திற்கு பின்தொண்டை அடைப்பான் நோய்
6.வருடம் ஒரு முறைதொண்டை அடைப்பான், சப்பை மற்றும் அடைப்பான் நோய்

கோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு!
பிப்ரவரி 15,2011

Temple images

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.

1. பசு (கோமாதா) வழிபாடு
மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே சனாதன தர்மம் என்ற இந்துமதம், எல்லாம் இறை மயம் என்றும் தத்வமசி, அதாவது, நீயும் பரம்பொருளே என்றும் அத்வைதம் - எல்லாம் ஒன்றே - அதாவது, பரம்பொருளின்றி வேறொன்றும் இல்லை என்றும் காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே என்றும் கூறி வந்திருக்கின்றது. இந்நிலையில்,மிருக இனங்களில், பசுவையும், யானையையும், ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும், தாவர இனத்தில் அரசு, வேம்பு போன்ற சிலவற்றை மட்டும், மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக, தொன்று தொட்டு வழிபட்டு வருவதும் அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கூறுவதும்.

பாரபட்சமற்ற செயல் தானா? நியாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள், பசுவையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனரே தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும் ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும். புற்றுகளில், பாம்புக்குப் பாலும், முட்டையும் வைப்பதும் அன்றாடம், பகலில், காக்கைக்கு  உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களைத் தொங்க விடுவதும் இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இதோடு, சிற்றினங்களை, நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

விநாயகன் யானைத்தலையன், அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சுறு
தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
மாமன் திருமால் படுப்பது பாம்பணையில், அவன் ஏறும் வாகனம் கருடன், எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
தர்மதேவன் வருவது எருமையின் மீது
சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி நூற்றக் கணக்காக பட்டியலிடலாம். மேலும், பல இனங்களின் நிலையை ஆய்ந்து, சிலவற்றை, உதாரணமாக, பூரான், தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் சட்டம் இருக்கிறது.
2. பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?
எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப்பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை. அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர்தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுவதாக அமையவில்லை. தொன்றுதொட்டு மனித இனம், தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றைப் போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது. மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது. வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது. பசுவை, வெறுமனே மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று வழங்கிவந்திருக்கிறது. பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.
3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா
எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்று தொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின், ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.
அர்த்த நாரீஸ்வரரில் சிவ -சக்தி ஐக்கியத்தையும், சங்கர நாராயணரில் சிவ - விஷ்ணு ஐக்கியத்தையும், லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு - லக்ஷ்மி ஐக்கியத்தையும், நரசிம்மரில் மனித - மிருக ஐக்கியத்தையும், தாணுமாலயனில் ஹரி -ஹர - ப்ரும்ம ஐக்கியத்தையும், கணபதியில் யானை - தேவர்கள் ஐக்கியத்தையும், ஏகபாத த்ரீமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம். பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே, ஆணும் பெண்ணும் வித்தியாசமாகத் தோன்றினாலும், இரு பாலருமே 45 எக்ஸ் ஒய் க்ரோமோசோம்களின் கூட்டே. இவற்றில் (எக்ஸ் ஒய் ல்) ஒன்று கூடினால் ஆண் என்றும் மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான டிஎன்ஏ, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை ப்ரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவாகும்.இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வ சக்தியற்றது என்று கூறவில்லை. காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும் இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. எனினும், தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிபாடு).

உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை. நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை
உடனே பயன்படுத்திடுகிறோம். இது போல பூச்சி முதல் பிரமாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன்பெறுவதே அறிவுடைமை. நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக்கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டுத் தொடர்வதே கோமாதா பூஜையாகும். எல்லாரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும் பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும். தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108, கோ பூஜை, 1008 கோபூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகிலுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.

கோபூஜை செய்வோம் கஷ்டங்கள் தீரப்பெறுவோம். பசுவை வழிபடுவோம் பரம்பொருளை அறிந்திடுவோம்.

4. பசுவைப் போற்றும் முக்கிய நூல்கள்
வேத காலம் தொடங்கி, இன்று வரை பசுவின் (கோமாதாவின்) பெருமையைப் பேசாத நூல்களோ இல்லை எனலாம். அவற்றுள் சில நூல்களின் பெயர்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.
1. ருக்வேதம்
2. யஜூர் வேதம்
3. ஸ்ரீ மஹாபாரதம்
4. ஸ்ரீமத்பாகவதம்
5. ஸ்ரீ மத்ராமாயணம்
6. பிரகத்ஸம்ஹிதை
7. சுக்கிர நீதி
8. காமிகாகமம்
9. சுப்பிரபேதம்
10. காசிபம்
11. வாதூளாகமம்
12. மகுடாகமம்
13. சிவதருமோத்திரம்
14. பெரியபுராணம்
15. சாரதா திலகம்
16. சகலாகம சங்கிரகம்
17. பிரம்மாண்ட புராணம்
18. கருடபுராணம்
19. விஷ்ணு புராணம்
20. சூதசம்ஹிதை
21. வாயுசம்ஹிதை
22. சங்கரசம்ஹிதை
23. காசி மண்டபம்
24. பிரமோத்தரகாண்டம்
25. மனுஸ்ம்ருதி
26. போதாயன கற்பம்
27. பக்த விலாசம்
28. பதார்த்த குண சிந்தாமணி
29. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
30. சிவ மகாபுராணம்
31. வைத்யநாத தீஷிதம்
32. ஹரி ஹர தாரதம்மியம்
33. திருவாரூர் ஸ்தல புராணம்
34. திருக்கோகரண மான்மியம்
35. காஞ்சி ஸ்தல புராணம்
36. திருவான்மியூர் புராணம்
37. திருக்கழுக்குன்றம் புராணம்
38. திருவாமாத்தூர் புராணம்
39. திருமாத்தனை நல்லூர் புராணம்
40. திரு ஆயர்பாடி புராணம்
41. திருச்சேய்ஞலூர் புராணம்
42. திரு வானைக்காபுராணம்
43. திருத்தென்குடி திட்டை புராணம்
44. திருஆவூர் புராணம்
45. திருவாவடுதுறை புராணம்
46. திருக்கொண்டீசுவரம் புராணம்
47. திருச்சிக்கல் புராணம்
48. திருவண்டாம்படி புராணம்
49. திருக்கருவூர் புராணம்
50. வெண்ணைமலை புராணம்
51. திருச்செங்கோடு புராணம்
52. திருப்போரூர் புராணம்
53. கபில வாசகம்
54. அர்த்த சாஸ்திரம்
55. குமரேச சதகம்
56. கோமுக்தீசுவர சதகம்
57. ஏரெழுபது
58. ஜோதிஹ சாஸ்திரங்கள்
59. சாஸ்த்ர ரத்நாகரம்
60. மாட்டு வைத்திய நூல்
61. காலப்பிரகாசிகை
62. ஹேமாத்திரி புராணம்
63. தேவிமான்மியம்
64. திருவாலவாய் புராணம்


5. வயதான பசுக்களும் வயிரவம் கோயில் அம்மனும்
திருசெந்தூரின் தென்மேற்கே 25 கி.மீ. ல் தட்டார்மடம் அருகே அருணகிரியார் வழிபட்ட வயிரவம் என்ற ஊரில், தொன்மையான, சிவகாமி ஞானாதீஸ்வரர் கோயில் உள்ளது. 1994ல் குடமுழுக்கு பெற்ற இக்கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பும் குடமுழுக்கு முயற்சி நடந்தது. அப்போது, சிவகாமி அம்மன் நேரில் கூறிய வார்த்தைகளை கோமாதா பராமரிப்புக்கு மிகவும் ஏற்றதாகக் கொள்ளலாம். சிவகாமி அம்மனின் திருவுரு லக்ஷணம் சிதைந்து இருந்ததால் பக்தர்கள், வேறு அம்மன் வைக்கத் தீர்மானித்து விட்டனர். அன்றிரவே, சிவகாமி பக்தர் கனவிலும் சிற்பியின் கனவிலும் நெஞ்சை உருக்குகின்ற ஒரு கேள்வியை எழுப்பினாள்.உன்தாய் வயதாகி மெலிந்து, தளர்ந்து, தேய்ந்து இருந்தால் அவளை ஒதுக்கிவிட்டு இன்னொருவளை தாயாக ஏற்பாயோ? பக்தர்கள் சிலைமாற்ற எண்ணத்தை அன்றே விட்டுவிட்டனர். பழைய திருவுருவே இன்றும் பூஜையில் உள்ளது. வயதாகி, கறவை நின்று விட்ட ஒவ்வொரு பசுமாட்டைப்பற்றியும் அன்று சிவகாமி கேட்ட கேள்வியை நினைவு கொண்டால், எந்தப் பசுமாட்டுக்கும், அடிமாடாக விற்க பட்டு பல மைல்கள் நடந்தோ, லாரிகளில் நசுக்குப்பட்டோ, கசாப்புக் கடையில் பலியாகி, துண்டம் துண்டமாக பெட்டிகளில் அடைபட்டு ஏற்றுமதி ஆகும் நிலையே வராது. ஒரு அரசன், நாட்டுப் பொருளாதாரத்தை சீர்படுத்த எண்ணி, 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் அழிக்க உத்தரவிட்டான் சில வருடங்களுக்கு பின்பு ஏற்பட்ட பஞ்சத்தின் போது, அது வரை கொலை செய்யப்படாமல், பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு கிழவனே அதை தீர்த்திட வழி கூறியதை ஒரு கதை விவரிக்கிறது. பெற்ற தாயின் ஆரோக்கியத்தையும் நம் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுக்காகின்ற பசுவை ஈன்ற தாயினும் இருமடங்கு பராமரிப்பது அனைவரின் கடமையாகும்.

6. பசுவுள் இருந்து அருளும் தேவர்கள்
நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களையும் நம் மூளையின் நுண்ணியமான பகுதிகள் பாதுகாத்தாலும், பொதுவாக கை, கால், இடுப்பு, மார்பு, கண், காது, மூக்கு, வாய், வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புக்களை மூளையின் சில பகுதி காக்கிறது என்றே கூறுகிறோம். அதுபோல, உலகை காக்கின்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் கோமாதாவின் (பசுவின் உடலில்) அடங்கி இருந்தாலும், கல்வி, செல்வம் போன்ற முக்கிய தேவைகளை நிறைவேற்றும் முக்கிய தெய்வங்கள் கோமாதாவின் திருவுருவில் எங்கெங்கு உள்ளனர் எனத் தெரிவிப்பதே வழக்கமாக இருக்கிறது. இதையே பல தெய்வங்களை உள்ளடக்கிய காமதேனு என்ற படத்தில் காண்கிறோம்.
கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும் தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                       சிவன்
2. வலக் கண்                               சூரியன்
3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதி, விஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்       
12. முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி   
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                            இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல் 


7. பசு வழிபாடு வகை
பசு வழிபாடு இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. ஈசனை விக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும். 
2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடா விட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே. இரண்டாம் வகை பராமரிப்பு வழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடு நடக்க முடியும்.

பசுப்பராமரிப்புச் செயல்பாடுகள்
1. நம் வீட்டில் பசு மாடு வளர்க்க வாய்ப்பு இல்லையெனில், பசுமாடு வைத்திருப்போருக்கு நாமாக உதவ வேண்டும்.
2. அவர்களை, மாட்டுக்காரன் என்று இழிவாக பேசக்கூடாது. பசு உள்ள குடிசை வாசியை விட பசு இல்லாத பங்களா வாசியே ஏழை.
3. அன்றாடம், சிலர் நாய் போன்ற பிராணிகளை வாக்கிங் என்ற பெயரில் வெளியே அழைத்துச் செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது பசு மேய்ப்பராக இருப்பதில் கேவலம் இல்லை.
4. வீட்டில் பசு இல்லாதவர், அன்றாடமும், ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு, ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ அகத்திக் கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.
5. வெளியில் மேயும் பசுக்களுக்கு, நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி வைக்கலாம்.
6. சிறு குழந்தைகளுக்கு எங்கு வலிக்கிறது என்று சொல்லத் தெரியாவிடினும், கத்தியாவது நம் கவனத்தை ஈர்க்க முடியும். மாடுகளுக்கு அதுவும் முடியாது. எனவே, அவைகள், தாமாகவே, அரிப்பைத் தீர்த்து கொள்ளும் வகையில் சாலையோரமாக கருங்கற்களை நட்டு வைப்பது நல்லது.
7. மலஜலம் கழித்தவுடன், தானே சுத்திகரித்துக் கொண்டு, நுகர்ந்து கொள்ளத் தெரியாதக் குழந்தையை கவனிப்பது போல மாடுகளைத் தொழுவத்தில் கட்டிப் போட்டிருக்கும் வரை, சாணத்தையும், நீரையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தையும், மாடுகளையும் தூய்மையாகக் காக்க வேண்டும்.
8. நமக்கு தினமும் ஆறு, குளத்தில், குளிக்க வசதியில்லாவிடில் அவ்வப்போதாவது, பெரும் நீர் நிலைகளில். ஆசைதீர, அதிக நேரம் நீராடி, பயன்பெறுவது போல, மாடுகளுக்கும், அதிக நேரம் நீந்திக் குளிக்க வகை செய்ய வேண்டும்.
9. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
10. வசதியுள்ள விவசாயிகள் வேலிக்குள்ளேயே எல்லா வைக்கோல் போர்களையும் போடாமல் சிறிய வைக்கோல் குட்டான்களையாவது வழிப்போக்கு மாடுகளுக்காக வெளியே அமைப்பது நல்லது.
11. மனித இனத்தவர், பெண் பூப்படைந்த பிறகும், பல வருடம் திருமணம் செய்விக்க, செய்து கொள்ளத் தயங்கும் போது, பசுங்கன்றுகளை மட்டும் பால் - மணம் மாறும் முன்பே, சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
12. பிள்ளை கதறினாலும், தன் அழகு குறைந்திடுமோ என்று கடமையை மறந்திடும் சில தாய்மார்கள் இருக்க, தன் கன்றுக்கு பால் விட மாட்டார்களோ என்ற நிலையில், பால் கறக்கும் போது உதைக்கின்ற மாடுகளை, கால்களை கட்டி அல்லது தாங்க முடியாத அரிப்பை ஏற்படுத்தும் காஞ்சரங்காய் இலையால் அடித்து, பால் கறப்பது முறையல்ல.
13. சில தாய்மார் குழந்தைகட்கு பால் ஊட்டத் தயங்கும் போது பசுக்களுக்கு ரசாயனத் தீவனங்கள் மற்றும் உடனடியாக அதிகப்பால் கறப்பதற்கான ஊசிகள் போடக்கூடாது.
14. பல மணி நேரம் பிரிந்து உள்ள தாயையும் கன்றையும் பால் கறந்த பிறகாவது, காலையும், மாலையும் அவை, மனமாற இணைந்து இருக்கின்ற வாய்ப்பு அளிக்க வேண்டும்.
15. தாய் தந்தையரை நன்கு கவனிக்க முடியாவிட்டால், சிலர் அவர்களை அனாதை ஆசிரமத்தில் விடுவது போல, நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை, அடிமாடாக விற்காமல், நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசுமடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும்.,
16. ஆலயத்திற்கு உபயமாக்கப்படும் மேஜை உடைந்துவிட்டாலும் கணக்கு காண்பிப்பதற்காவது பத்திரமாக வைப்பது போல, ஆலயத்திற்கு விடப்படும் மாடுகளையும், எப்படியாவது, பராமரிக்க வேண்டுமே தவிர ஏலம் விட்டு காசாக்கக் கூடாது.
17. அரசாங்க மிருக - இன ஆணையங்கள், சிற்றினங்களை நமக்கு எப்படி சாதகமாக்கி கொள்வது என்ற நோக்கை விடுத்து அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று கருத வேண்டும்.
18. பால் விற்பதற்கு மட்டும் கூட்டுறவு மையங்களை விட பசுமாடுகளை வளர்க்கின்ற கூட்டுறவு மையங்கள் மேன்மை.
ஒவ்வொருவரும் ஒரு பசு மீது மட்டும் கருத்தை செலுத்துவதைவிட பல பசு மாடுகளை கவனித்த பயன் கிடைக்கும். ஊரார் பிள்ளைகளுக்கு ஊட்டிட தன் பிள்ளையும் வளர்ந்திடும்.
19. சொத்துக்குக் காவலாக வளர்க்கும் நாய்க்குப் பெயர் வைத்து, அன்போடு அழைப்பதுபோல, பசுக்களையும் காளைகளையும் நல்ல பெயர்களை வைத்தே கூப்பிட வேண்டும்.
20. மடியில் கொஞ்சிய காவல் நாயை, அது வயதாகி இறந்தபின் அடக்கம் செய்வது போல், தாய்ப்பாலுக்கு ஈடாக, அத் தாய்ப்பால் இல்லாத போது, நமக்கு உயிர்ப்பால் அளிக்கும் பசுவை அதன் வாழ்நாள் முழுவதும் காத்து, நல்லடக்கம் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
21. மரம் குறைய, மழை குறைந்து, மனிதர் இன்னலுறுவதுபோல பசு போன்ற சிற்றினங்கள் அல்லலுற்றால் அகிலமே அல்லலுறும்.
22. தேவையைக் கூற இயலாத பசுவைப் பேணிட, நம்மிடையே, பிறர் கேட்கும் முன்பே குறிப்பறிந்து உதவிடுவது வளரும்.
பிறவிலேயோ, இடையிலேயே அல்லது வயதினாலோ சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாதவற்கு உதவுகின்ற போக்கும் நம்மிடையே வளரும்.
23. தாய் - பிள்ளை, கணவன் - மனைவி ஆகியவரை பிரிக்காதது போல, பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் கட்டக் கூடாது.
24. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு, எல்லோரையும் சுற்றம் சூழ வரவேற்பது போல, பசுவழிபாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.


9. பசுவினால் பெரும் பயன்
பொதுவாக, எல்லா பொருட்களின் எல்லா பகுதிகளும், நம்முள் எல்லா வயதினருக்கும். ஏற்புடையதாக இருப்பதில்லை. உதாரணமாக, பல கீரைகளில், வேர் காம்பு, நரம்பு போன்றவை நமக்கு அதிகம் உபயோகப் படுவதில்லை. ஆனால், பசுவிடமிருந்து கிடைக்கும் எல்லாப் பொருளுமே பால், தயிர், நெய், சாணி (கோமயம்) நீர் (ஆகியன), நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அளவு, தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும், பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது. மேலும் ஆவியில் சமைக்கப்பட்ட, இட்லி, ஆகியவற்றை விட பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட, பசுந்தயிரே, நமக்க மிக ஏற்புடையதாக உள்ளது. பசுநெய், கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பதில்லை. இதனால் தான், விளக்கேற்றுவது முதல், வேள்வி வரை பசு நெய் முக்கியமாக, சிறப்பாக கருதப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில், மனிதனும் உட்பட, ஆடு, மாடு போன்ற மிகச் சிலவற்றின் கழிவே (மலம், சிறுநீர்) பயிர்களுக்கு உரமாக மட்டுமின்றி மனிதருக்கும் நேரடியாக சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றன.
இவற்றுள், பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை. பசுஞ்சாணி, கிருமிநாசினியாக (ஆண்டிபையோடிக்) மட்டுமின்றி, பில்லி, சூனியம், திருஷ்டி (தீய கண்நோக்கு) கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது. இதனால் தான், வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும், அன்றாடம், பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்கிறோம். வீட்டினுள் துடைக்கும் போதும், மார்பின் தரையானாலும் பசுஞ்சாணியை பயன்படுத்தும் படி கூறப்படுகிறோம். புதிதாக வாங்கும் மனையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக்கூடிய தீயவற்றின் பாதிப்புக்கு நாம் உள்ளாகாமலிருக்க, தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது. வீடுகளில் மட்டுமின்றி, ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை, நுண்ணிய சக்தி வாய்ந்த, மந்திர ஒலியால் தூய்ப்பிப்பதற்கு ஈடாக, பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும், மிக முக்கியமான வழக்கமாக உள்ளது.

பசுஞ்சாணியிலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு மட்டுமே பல்மதத்த வரும் ஏற்கும் சின்னமாக உள்ளது. இத்திருநீறு அறிவு கூட்டும் ; ஆணவம் ஒழிக்கும்; இம்மை நலம் சேர்க்கும்; ஈர்க்கும் அழகு தரும்; உடல்வலு கூட்டும்; ஊறு (துன்பம்)களையும், எதிரியைத் தவிர்க்கும்; ஏவல் குலைக்கும், ஐயம் தீர்க்கும் ; ஒருமையும் ஒருப்பாடும் அளிக்கும்; ஓங்காரம் உணர்விக்கும்; ஒளடதமும் ஆகிடும். இப்படி நாம் விரும்பக்கூடிய பலவற்றையும் கொடுக்கவல்ல திருநீற்றை தயாரித்து, பயன்படுத்தி, அருள்பெறும் வகையை அனைவரும் அறிந்து நலம் பெறுவோம். பஞ்சகவ்வியத்தில், பால், தயிர், நெய், சாணியோடு நீரும் சேர்வதோடு, பசு நீர், தனியாகவும் பலவகையில் பயன்படுகிறது. பசு நீர் புற்றுநோயை தீர்ப்பதில் ஒரு அரு மருந்தாகும். அதோடு, பிறரின் தீயப் பார்வையினால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை, எண்ணெய் போல, தேய்த்து கொள்வதும், அதிகம் கிடைப்பின்,பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும். கடலில் குளித்த பின் சில நிமிடங்கள் கழித்து நன்னீரில் குளிப்பது போல, பசு நீர்க் குளியலுக்குப் பிறகும் வேறு நீரில் நீராடிவிடலாம். இடம் கருதி, பசுவிடமிருந்து கிடைக்கும் பயன்களில் மிகச்சிலவே குறிப்பிடப்பட்டுள்ளன. பயன்கள் அளப்பரியன.

10. கோ பூஜை பசுவழிபாடு
ஒவ்வொரு வருஷமும் மகர ஸங்க்ராந்தி (தைமாதப்பிறப்பன்று) இந்த்ர பூஜையும் சேர்த்தே கோ பூஜை செய்வர். பிற நாட்களிலும் செய்வது மேன்மை. சுருக்கமான விக்நேச்வர பூஜை மஞ்சள் பிள்ளையார் செய்து புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு விநாயகரை த்யானிக்கவும்.
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பத
ஆந: ஸ்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்

அஸ்மின் ஹரித் ராபிம்பே மஹா கணபதிம் த்யாயாமி;
மஹா கணபதிம் ஆவாஹயாமி; ஆஸநம் ஸமர்ப்பயாமி;
அர்க்யம் ஸமர்ப்பயாமி; பாத்யம் ஸமர்ப்பயாமி;
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி; ஒளபசாரிக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி;
ஸ்நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
கந்தாந் தாரயாமி ;
அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி;

புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அøக்ஷதையால் பூஜிக்கவும்)
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஸுர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய  நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷநாத் ஸமர்ப்பயாமி;
(வெற்றிலை, பாக்கு, பழம் மந்திரங்கள் கூறி நிவேதிக்கவும்)
ஓம் பூர்வபுஸ்ஸுவ; தத்ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய,
தீமஹி, தியோ யோந: ப்ரசோயாத், தேவஸவித: பர்ஸுவ,
ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. அம்ருதோபஸ்தரணமஸி.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா
ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ப்ரஹ்மணிமே ஆத்மா அம்ருதத்வாய : மஹா கணாபதயே  நம:
குளகண்டம், சுதளிபலம் மகா நிவேதநம் ஸமர்ப்பயாமி;
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
அம்ருதாபிதாநமஸி - உத்தரா போஜநம் ஸமர்ப்பமாயி; நீர் விடவும்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி; தீர்த்தத்தை வெற்றிலையில் விடவும்.
நீராஜநம் ஸமர்ப்பமாயி; கற்பூரம் ஏற்ற வேண்டும்.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி; தீர்த்தம் விடவும்.

வக்ரதுண்ட மஹாகாய ஸுர்யகோடி ஸமப்ரப
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
என்று கூறி ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்.

கணபதி பிரசாதத்தை தலைமேல் கொள்ளவும்.
பிரதான பூஜை - பசு வழிபாடு ஆரம்பம்
ஸுக்லாம்பரதம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே
ப்ராணாயாமம், சங்கல்பம்
ஓம் பூ : ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம்ஜந: ஓம்தப: ஓம்ஸத்யம்:
ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்: ஓமாப: ஜ்யோதீரஸ:
அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸுபே ஸோபநே முஹூர்தே ஆத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வன்தரே அஷ்டாவிம்ஸதி தமே கலியுகே - ப்ரதமேபாதே -ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே - பரதகண்டே மேரோ: தஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே (சித்ரபானு) நாமஸம்வத்ஸரே (உத்தர) அயநே (க்ரீஷ்ம) ருதௌ (மிதுன) மாஸே (க்ருஷ்ண) ப÷க்ஷ (ஷஷ்ட்யாம்) ஸுபதிதௌ, (பானு) வாஸர யுக்தாயாம் (சதபிஷக்) நக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விஸேஷேண விஸிஷ்டாயாம் அஸ்யாம் கோபூஜதினே தைர்ய வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், இந்த்ராணி ஸமேத இந்த்ர ப்ரீயர்த்தம், இந்த்ரபூஜாம் கோபூஜாம் ச கரிஷ்யே. ததங்கம் கலஸ பூஜாம் ச கரிஷ்யே. (வருடம், மாதம், திதி, நக்ஷத்ரம், கிழமை ஆகிய செய்திகளை அன்று அன்று உள்ளதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும்.)
விக்நேஸ்வரம் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூறி மஞ்சள் பிள்ளையார் மீது அஷதை சமர்ப்பித்து வடக்கே நகர்த்தவும்

கலச பூஜை
தீர்த்த பாத்திரத்தை சந்தனம், குங்குமம் பூவால் அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு கீழ்வருமாறு ஜபிக்கவும்
கலஸஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாஸ்ரிதா:
மூலே தத்ரஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குöக்ஷளது ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோத யஜுர்வேத: ஸாமவேதோபி அயதர்வண:

அங்கைஸ்ச ஸஹிதா: ஸர்வே கலஸாம்பு ஸமாஸ்ரிதா:
ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா :

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந் நிதிம் குரு

கலஸ தீர்த்தத்தை எடுத்து பூஜாதிரவ்யங்களையும் பசுவையும், தன்னையும், ப்ரோக்ஷணம் செய்து கொள்க.

கண்டா (மணி) பூஜை
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்சநம்
(என்று மணியடிக்கவும்)÷ஷாடஸோபசர (16 உபசரிப்பு) பூஜை

ஐராவத கஜாரூடம் ஸஹஸ்ராக்ஷம் ஸசீபதிம்
வஜ்ராயுத தரம் தேவம் ஸர்வ லோக மயீபதிம்
இந்த்ராண்யா ச ஸமாயுக்தம் வஜ்ரபாணிம் ஜகத்ப்ரபும்
இந்த்ரம் த்யாயேத்து தேவேஸம் ஸர்வமங்கள ஸித்தயே

அஸ்மிந் கோமயபிம்பே இந்த்ராணீ ஸமேத இந்த்ரம் த்யாயாமி;
இந்த்ராணீ ஸமேத இந்த்ரம் ஆவாஹயாமி ;
இந்த்ராய நம: ரத்ந ஸிம்ஹாஸநம் ஸமர்ப்பயாமி;
ஐராவத கஜாரூடாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;
வஜ்ரபாணயே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி;
ஸசீபதயே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸஹஸ்ராக்ஷõய நம: ஸ்நபயாமி;
ஆபோஹிஷ்ட்டாம யோபுவு : மந்திரம் கூறி நீர் ப்ரோஷிக்கவும்
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸர்வலோக மஹீபதயே வஸ்த்ரார்த்தம் அக்ஷநாத் ஸமர்ப்பயாமி;
தேவேஸாய நம: உபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;
இந்த்ராணீ ஸமேதாய நம: ஆபரணார்த்தம் அக்ஷதாந்
ஸமர்ப்பயாமி; ஜகத் ப்ரபவே நம: கந்தாந் தாராயாமி;
கந்தோபுரி குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதாந் ஸமர்ப்பயாமி;


அர்ச்சனை
ஓம் இந்த்ராய நம:
ஓம் மஹேந்த்ராய நம:
ஓம் தேவேந்த்ராய நம:
ஓம் வ்ருத்ரயே நம:
ஓம் பாகஸாஸநாய நம:
ஓம் ஜராவத கஜாரூடாய நம:
ஓம் பிடௌஜலே நம:
ஓம் ஸவர்ணாயகாய நம:
ஓம் ஸஹஸ்ரநேத்ராய நம:
ஓம் ஸுபதாய நம:
ஓம் ஸத மகாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் த்ரிலோ கேஸாய நம:ஓம் ஸசீபதயே நம:

ஓம் இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
இந்த்ராணீ ஸமேதாய இந்த்ராய நம: தூபமாக்ராபயாமி;
இந்த்ராணீ ஸமேதாய நம: தீபம் தர்ஸயாமி;
மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி; தாம்பூலம் ஸமர்ப்பயாமி;
கர்ப்பூர நீராஜநம் தர்ஸயாமி; ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
அநந்த கோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி;

ஹே தேவ காம் ரக்ஷ, மாம் ரக்ஷ, மம குடும்பம் ரக்ஷ
என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்.

கோபூஜை
காமதேநோ : ஸமுத்பூதே ஸர்வகாம பலப்ரதே
த்யாயாமி ஸெளரபேயி த்வாம் வ்ருஷபத்நீ நமோஸ்து தே

காம் த்யாயாமி; ஆவாஹயாமி தேவேஸி ஹவ்யகவ்ய பலப்ரதே
வ்ருஷபத்நீ நமஸ்துப்யம் ஸுப்ரீதா வரதா பவ: காம் ஆவாஹயாமி
காமதேநவே நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி;
பயஸ்விந்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி;
ஹவ்யகவ்ய பலப்ரதாயை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி;
கவே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸெளரபேய்யை நம: ஸ்நபயாமி;
ஆபோஹிஷ்ட்டாமயோ என்ற மந்திரத்தால் ப்ரோக்ஷிக்கவும், ஸ்நா நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
க்ஷீரதாரிண்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி;
மஹாலக்ஷ்ம்யை நம: ஆபரணம் ஸமர்ப்பயாமி;
ரோஹிண்யை நம: கந்தாந் தாரயாமி;
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி; ஸ்ருங்கிண்யை நம: புஷ்பை பூஜயாமி.


அர்ச்சனை
ஓம் காமதேநவே நம
ஓம் பயஸ்வின்யை நம
ஓம் ஹவ்யகவ்யாயை நம
ஓம் பலப்ரதாயை நம
ஓம் வ்ருஷபத்ந்யை நம
ஓம் ஸெளரபேய்யை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் ரோஹிண்யை நம
ஓம் ஸ்ருங்கிண்யை  நம
ஓம் க்ஷீரதாரிண்யை நம
ஓம் காம்போஜஜநகாயை நம
ஓம் ஜநகாயை நம
ஓம் யவநஜநகாயை நம
ஓம் மாஹேய்யை  நம
ஓம் நைசிக்யை நம
ஓம் ஸபள்யை நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி;
(மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் கூறியும் அர்ச்சனை செய்யவும்)

(தூபம் முதல் இந்திரனுக்கும் பசுவுக்கும் சேர்த்தே செய்யவும்)
தஸாங்கம் குக்குலூபேதம் ஸுகந்தம் ச மநோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேஸி வ்ருஷபத்ந்யை நமோஸ்துதே
இந்த்ராய நம: இந்த்ராண்யை நம: தூபமாக்ராபயாமி;
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹீநா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமீராபஹம்
ஜயந்தஜநகாய நம; காம்போஜஜநகாயை நம: தீபம் தர்ஸயாமி
தீபாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி;
திவ்யாந்தம் பாயஸாதீநி ஸாகஸூப யுதாநி ச
ஷட்ரஸாதீநி மாஹேயி காமதேந்வை நமோஸ்து தே
மஹேந்த்ராய நம; மாஹேய்யை நம; திவ்யாந்தம், க்ருதகுள
பாயஸம், நாளிகேர கண்டத்வயம், கதளீபலம், ஸாகஸூப தேஹி

தம் ஸர்வம் அம்ருதம் மஹாநைவத்யம் நிவேதயாமி
நிவேதநானந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ஏலா லவங்க கர்ப்பூர நாகவல்லீ தளைர் யுதம்
பூகீபல ஸமாயுக்தம் தாம்பூலம் பரதிக்ருஹயதாம்
காஸ்யபேயாய நம: ஸெளரப்யை நம: தாம்யபூலம் ஸமர்ப்பயாமி
நீராஜநம் க்ருஹாணேதம் கர்ப்பூரை: கலிதம் மயா
காமதேநு ஸமுத்பூதே ஸர்வாபீஷ்ட பலப்ரதே
ஹரயே நம: மஹாலக்ஷ்ம்யை நம: கர்ப்பூர நீராஜநம் தர்ஸயாமி
இந்த்ராய நம: வ்ருஷபத்ந்யை நம:
வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
யோபாம் புஷ்பம் வேத, புஷ்பவாந், ப்ரஜாவாந் பஸுமாந்பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பஸுமாந்பவதி

யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச
தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே
ப்ரக்ருஷட பாபநாஸாய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே
ஜயந்த ஜநகோ தேவ: ஸ்ஹஸ்ராக்ஷ: புரந்தர
புலோமஜா பதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம் நமோ நம:

இந்த்ராணீ பதயே நம: வ்ருஷபத்ந்யை நம:
அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி;
சத்ர சாமராதி ஸமஸ்த ராஜோபசாராந் ஸமர்ப்பயாமி;
யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமாக்யா தப: பூஜா க்ரியாதிஷு
ந்யூநம் ஸம்பூர்ணதாமேதி தம் வந்தே பாகஸாஸநம்
மந்த்ரஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம் ஸசீபதே
யத் பூஜிதம் மயா பக்த்யா பரிபூர்ணம் ததஸ்து தே
மயா க்ருத்யா பூஜா பகவாந் ஸர்வாத்மக: ப்ரீயதாம்
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
உபாயநதாநம் (குருவுக்கு தானம் அளித்தல்)

இந்த்ர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம்
ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாஸஹோ:
அநந்த புண்ய பலதம் அதஸ் ஸாந்திரம் ப்ரயச்ச மே
மயா க்ருத தேவேந்த்ர பூஜா - கோபூஜா -ஸாத்குண்யார்த்தம்
யத்கிஞ்சித் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம், ஸதாம்பூலம்
தேவேந்த்ர ப்ரீதிம் காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே நமம.

அஸ்மாத் கோமய பிம்பாத் இந்த்ராணீ ஸமேதம் இந்த்ரம்
யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி ; இந்த்ர கோ பூஜை முற்றிற்று.


11. சில துதிகள்
1. கவாஷ்டகம்
1. ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை ஸுரபியைச நமோ நம:
கவாம், பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே.

2. கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீரதாயை தனதாயை புத்திதாயை நமோ நம:

3. சுபாயைச சுபத்ராயை கோப்ரதாயை நமோ நம:
யசோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:

4. பவித்ரரூபாம் பூதாஞ்ச பக்தானாம் ஸர்வகாமதம்
யதா பூதம் ஸர்வம் விசுவம் தாம் தேவீம் சுர பிம்பஜே.

5. கவார்ச்சனம் மகா புண்ணியம் தேவானுக்கிரக காரகம்
மகா பாப ப்ராயச்சித்தம் புக்தி முக்தி ப்ரதாயகம்.

6. யஸ்மாத் சரீரேஸான் நித்யம் த்ரிவிம்சத்கோடி தேவதா
ஸாதேனுர்பவ பூஜ்ய நித்யம் ஸ்ரீ கிருஷ்ணஸ்யாஜயா.

7. தர்மராஜ பிரதிஷ்டாம்ஸ்தி கோ, லக்ஷ்மீ பிரமதாமதா
கல்பவிருக்ஷ ஸ்வரூபாயை ஸாந்நித்யம் ஸேவ்ய பிரயத்னதா

8. கோபிரதிஷ்டா வினாசைய்வா வியர்த்தா ஸர்வ பிரதிஷ் டிதா
ஸர்வபிரதிஷ்டா மூலம்ஸ்யாத் ரக்ஷணீயா பிரயத்நதா

9. ஜாத்வாபூஜா ரகஸ்யஞ்ச பக்தி யுக்திச்ச மானவா
யபூஜ யச்சஸுரபி ஸச பூஜ்யோ பவேத்புஜிஹி.

10. அஷ்டகமிதம் ஸபுண்யம் பக்தியுக்திச்சயப் ப்டேத்
ஸ்ர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா.


2. கோமதீவித்யா (அக்னி புராணம்)
கோமதீம் கீர்தயிஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாஷிநீம்
தாம் து மே வததோ விப்ர ஷ்ருணுஷ்வ ஸுஸமாஹித :
காவ: ஸுரபயோ நித்யம் காவோ குக்குலு கந்திகா:
காவ: ப்ரதிஷ்டா பூதாநாம் காவ: ஸ்வஸ்த்யயநம் பரம்
அந்நமேவ பரம் காவோ தேவாநாம் ஹவிருத்தமம்
பாவநம் ஸர்வ பூதாநாம் ரக்ஷந்தி ச வஹந்தி ச
ஹவிஷா மந்த்ர பூதேந தர்ப்பயநந்யமராந் திவி
ருஷீணாமக் நிஹோத்ரேஷு காவோ ஹோமே ப்ரயோஜிதா

ஸர்வேஷாமேவ பூதா நாம் காவ: சரணமுத்தமம்
காவ பவித்ரம் பரமம் காவோ மங்க லமுத்தமம்
காவ: ஸ்வர்கஸ்ய ஸோபாநம் காவோ தந்யாஸ் ஸநாதநா:
(ஓம்) நமோ கோப்ய: ஸ்ரீமதீப்ய: ஸெளரபே யீப்ய ஏவ ச
நமோ ப்ரஹ்ம ஸுதாப்யஸ்ச்ச பவித்ராப்யோ நமோ நம:
ப்ராஹ்மணாஷ்சைவ காவஷ்ச குலமேகம் த்விதா ஸ்திதம்

ஏகத்ர மந்த்ராஸ்டதி ஹவிரேகதர திஷ்டதி
தேவ ப்ராஹ்மணகோ ஸாதுஸாத்வீபி: ஸகலம் ஜகத்
தார்யதே வை ஸதா தஸ்மாத் ஸர்வே பூஜ்யதமா: ஸதா
யத்ர தீர்தே ஸதா காவ: பிபந்தி த்ருஷிதா ஜலம்
உத்தரந்தி பதா யேந ஸ்திதா தத்ர ஸரஸ்வதீ
காவம் ஹி தீர்தே வஸதீஹ கங்கா
புஷ்டிஸ்ததா தத் ரஜஸி ப்ரப்ருத்தா
லக்ஷ்மீ: சுரேஷே ப்ரணதௌ ச
தர்மஸ்தாஸாம் ப்ரணாமம் ஸததம் சகுர்யாத்


12. கோதானம்
அல்லல் அனைத்தும் அறுத்து, நல்லன யாவும் கூட்டுகின்ற தானங்களில் கோதானம் மிகச் சிறந்த ஒன்றாகும்.
1. தத்தம் வாழ்நாளில் அவரவரே செய்வது நல்லது.
2. நம்மால் பராமரிக்க இயலவில்லை என்பதற்காக, அடுத்தவர் தலையில் பாரத்தை கட்டுவதாக இருக்க கூடாது.
3. தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது சிறப்பு.
4. பால் கறக்கும் போதே பசுவை கொடுப்பதே முறை.
5. தாயையும், பால் அருந்தும் கன்றையும் பிரித்து அளிக்கலாகாது.
6. பசுவோடு காளையும் சேர்த்து தானம் செய்வது மேன்மை.
7. பால் கறக்க பாத்திரமும் சேர்த்து கொடுப்பதுச் சிறப்பு.
8. மாடு கன்றோடு, அதற்கு குறைந்தது ஒரு வருட உணவிற்கு, பரமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகைசெய்வது இன்னும் சிறப்பு.

13. பசு நேசிப்பால் நன்மை பெற்றவர்கள்  நன்மையை நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு. கோபால கிருஷ்ணனைப் போல நாமும் பசுவை போற்றுவோம். ஆவினம் காப்போம் அனைத்தும் பெறுவோம்.

பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்? 

http://vivekaanandan.blogspot.in/2010/05/blog-post_25.html 

 

http://www.tamilhindu.net/t1215-topic 

 

http://ghosamrakshana.manthiras.com/ 

 

 http://www.livingextra.com/2011/04/blog-post_11.html

 

பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்? || cow called by komaatha

 பசு ஸ்லோகம்.
http://www.trinethram-divine.com/2012/02/pasu-slokam.html  - See more at: http://vivekaanandan.blogspot.in/2014/02/50.html#sthash.xhrBJP0M.dpuf