For Read Your Language click Translate

Follow by Email

27 February 2015

நாரத சம்ஹிதை

ஜோதிடத்தின் மூலகர்த்தா
தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷ¡ பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.

ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை!
பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம்.வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத சம்ஹிதையில் உள்ள பல சுலோகங்கள் அப்படியே ப்ருஹத் சம்ஹிதாவிலும் இருப்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்! நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!
த்ரி ஸ்கந்த ஜோதிஷம்
ஜோதிஷம் சூர்யாதி க்ரஹணம் போதகம் சாஸ்த்ரம் என்பது ஜோதிடம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.
கிரஹ சஞ்சாரங்களைத் துல்லியமாக நிர்ணயிக்க உதவும் கணக்குகளும் அதையொட்டி நல்ல காரியங்களை நல்ல நேரங்களில் ஆரம்பித்து நற்பயன் காண்பதையும் நாரத சம்ஹிதா, ஸ்கந்த த்ரியா என்று மூன்று பகுதிகளாக விளக்குகிறது! த்ரிஸ்கந்த ஜோதிஷம் என்ற பெயரில் இன்று பிரபலமாக இது விளங்குகிறது.
பின்னால் இது விரிந்து சித்தாந்தம், ஹோரா (பராசரர்,ஜைமினி, யவனர் முறைகள்), வாஸ்து சாஸ்திரம் முஹ¥ர்த்தம் உள்ளிட்ட சம்ஹிதா, ப்ரஸ்னம் பார்த்தல், சகுனம் பார்த்தல் என ஐந்தாக விரிவடைந்தது.பிரம்மாவிடமிருந்து நாரதர் ஜோதிடத்தைக் கற்று அதை சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இப்படிப் பட்ட அனுபவங்களைக் கொண்ட நாரதர் ஜோதிடத்தை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருப்பார் என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பறவைகள் ஜோதிடம்

வராஹமிகிரரின் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சி யத்தில் (பிருஹத் சம்ஹிதா) காகமும் சகுனமும் என்ற அத்தியாயத்தைப் படித்தபோது மேலும் ஒரு அதிசய விஷயம் கிடைத்தது! “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்று எங்கள் ஐயன் திருவள்ளுவன் சும்மாவா சொன்னான்? படிக்கப் படிக்கப் புது விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
காக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு -- என்று வராஹமிகிரரும் இரண்டாவது சார்லஸ் மன்னரும் நம்பினர்!
லண்டனில் டவர் மியூசியம் என்று ஒரு பெரிய கோட்டை – 980 ஆண்டுகள் பழமையான கோட்டை-  இருப்பதும் அதில் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த (தப்புத் தப்பு.... கொள்ளை அடித்த) கோஹினூர் வைரம் உள்பட மஹாராணியாரின் விலைமதிக்கவொண்ணாத நகைகள், மணிமுடிகள் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயமே!
லண்டனில் அந்தக் கோட்டையில் ஆறு அண்டங்காக்கைப் பறவைகள் இருப்பதும் அவைகளைப் பாதுகாக்க ரேவன்ஸ் மாஸ்டர் (ஆங்கிலத்தில் அண்டங்காக்கைக்குக் ரேவன் என்று பெயர்) என்று ஒருவர் அதிக சம்பளத்தில் ஊழியத்தில் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆறு காக்கைகளும் அந்தக் கோட்டையில் இருந்து போய்விட்டால் பிரிட்டிஷ் முடியாட்சி முடிந்துவிடும் என்றும் அத்தோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிடும் என்றும் பலத்த நம்பிக்கை இருக்கிறது.
raven 1
லண்டன்     டவர்   மியூசிய   அண்டங்காக்கை
இதற்காக ஒவ்வொரு நாளும் அதை இரவில் ஒரு இடத்தில் ஜாக்கிரதையாகத் தூங்க வைப்பது ரேவன்ஸ் மாஸ்டரின் பொறுப்பு அவர் ஒவ்வொரு பறவைக்கும் 170 கிராம் மாமிசமும் ‘ரத்தம் தோய்ந்த பறவைகள் பிஸ்கட்’டும் கொடுத்து அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இது இரண்டாவது சார்ல்ஸ் மன்னர் காலத்தில் துவங்கியது. இரண்டாவது உலக மஹா யுத்தத்தின்போது ஹிட்லரின் அதி பயங்கர குண்டுவீச்சில் லண்டன் என்ற ஒரு நகரமே இல்லை என்று ஆகிவிடுமோ என்று அஞ்சிய அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மேலும் பல அண்டங் காக்கைகளைக் கொண்டுவர உத்தரவிட்டார். ஏனெனில் ஒரு குண்டு,  கோட்டையில் விழுந்தாலும் ஆறு காக்கைகளும் அவுட். ஆனால் பிக் பென் கடிகார கோபுரம் பிழைத்தது போல அப்போதைய குண்டு வீச்சில் ஆறு காக்கைகளுல் தப்பின.
இப்படி இருக்கையில் 2013 அக்டோபரில் எல்லா பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் ஒரு பரபரப்பான செய்தியை புகைப்படங்களுடன் வெளியிட்டன. அதாவது இரண்டு அண்டங் காக்கைப் பறவைகளை அதிகாலையில் வந்த ஒரு நரி கொன்றுபோட்டு விட்டது. உடனே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்து விடுமோ என்றும் மஹாராணிக்கு ஊறு நேருமோ என்றும் வதந்திகள் பறந்தன. ஆனால் புத்திசாலி ரேவ்ன்ஸ் மாஸ்டர் கவலைப் படாதீர்கள், நான் இரண்டு ‘ஸ்பேர்’  (உதிரி) காக்கைக் குஞ்சுகளையும் வளர்த்து வருகிறேன் என்று காட்டினார். பிரிட்டானிய பெருமக்களும் பத்திரிக்கைகளும் ‘அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டன!! இப்போது எட்டு அண்டங்காக்கைகள் அங்கே இருக்கின்றன. இதில் ஆறு எப்போதும் இருக்கவேண்டும். இல்லாவிடில் பிரிட்டிஷ் முடியாட்சி கவிழும் என்பது மக்களின் மகத்தான நம்பிக்கை.
raven 2
ரேவன்ஸ் மாஸ்டர் -  டெய்லி மெயில்  புகைப் படங்கள்
நம்பிக்கை – மூட நம்பிக்கை – என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இது பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்- சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சம். ரஷிய அதிபர் புடின் முதற்கொண்டு இதைப் பாதுக்காக்கும் பக்குவம் பற்றிப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார்!!.
ஆட்சி மாற்றம்: வராஹமிகிரர் ஏது செப்பினார்?
பிருஹத் சம்ஹிதாவில்--- 1500 ஆண்டுகளுக்கு முன் --- காக்கைகள் பற்றி நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி வைத்திருக்கிறார்— அத்தியாயம் 95 -- அவர் பகர்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.
2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.
காகம்
(வராஹமிகிரர் இன்னும் ஒரு அத்தியாயத்தில் இந்தியாவின் ‘ஜியாக்ரபி’யை – புவியியலை – அக்குவேறு ஆணிவேராக அலசி இருக்கிறார்)
3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்
தூய்மையான-நட்பு
பஞ்ச தந்திரக் கதையில் காகம்
கோவில்கள், வீடுகள், முட்புதர்கள் முதலிய இடங்களில் கூடு கட்டினால் = பசி, பட்டினி, பஞ்சம்
என் கருத்து: வராஹமிகிரர் சொல்லுவது சரியா தவறா என்று ஆராயக்கூட நமக்கு பல ஆண்டுகள் பிடிக்கும். அந்தக் காலத்தில் சி.சி.டி.வி. காமெரா, பைனாகுலர், வீடியோ காமெராக்கள் எதுவுமின்றி ஒரு சில ‘ஆர்னிதாலஜிஸ்ட்’கள் (பறவை இயல் வல்லுனர்) இயற்கையை  நூற்றாண்டுக கணக்கில் உன்னிப்பாகக் கவனித்து, எழுதிவைத்து, ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே சகுன சாத்திரம் உருவாயிருக்கும். சகுனம் என்றால் பறவை எனப் பொருள்.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரஹமிகிரர் இவ்வளவு எழுத வேண்டுமானால் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாவது யாரோ ஒருவர் இதை டாகுமெண்டு செய்து எதிர்கால சந்ததியினருக்கு அளித்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் சொல்லுவதை நாமும் ஆராய வேண்டும். சில விடயங்கள் காலப் போக்கில் மாறத்தான் செய்யும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுவது நம் கடமை.
  1. ஒரு காக்கை 3 அல்லது 4 குஞ்சு பொறித்தால் அமோக உணவு விளைச்சல். ஐந்து குஞ்சுகள் பொறித்தால் ஆட்சி மாற்றம்!!! (எதிர்க் கட்சிகள் கவனத்தில் கொள்க!!!). முட்டைகளை உதைத்து தள்ளினாலோ, ஒரே முட்டை இட்டாலோ, முட்டையே இடாமல் இருந்தாலோ நல்லதல்ல—அமங்களம்.
kakaka
5.ஒரு கிராமத்தின் நடுவில் காரணம் இன்றி காக்கைகள் மகாநாடு (கூடிக்  கரைந்தால்) நடத்தினால் பஞ்சம் வரும். ஊரைச் சுற்றிச்சுற்றி வந்தால் எதிரிகள் முற்றுகை இடுவர். பல குழுக்களாகப் பிரிந்து கரைந்தால் அழிவு!
(என் கருத்து: சுனாமி, பூகம்பம், திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்கு முன், பறவைகள் என்ன செய்தன என்பதை ஆராய வேண்டும்)
6.காகங்கள் துணிச்சலாக மக்களைத் தாக்கினால் எதிரிகள் பெருகுவர். இரவில் வலம் வந்தால் ஊருக்கு அழிவு!
7.ஒரு தனி மனிதனை காகம் வலம் வந்தால் அவனுக்கு சொந்தக்காரர்கள் இடமிருந்து தொல்லை; அப்பிரதக்ஷிணம் செய்தால் (கடிகார திசைக்கு எதிராக – இடம் வந்தால்) எதிரிகள் இடமிருந்து தொல்லை. தாறு மாறாகப் பறந்தால் சூறாவளி வீசும்.
8.காகங்கள் மண்ணையோ, தானியங்களையோ, பூக்களையோ கொத்தி வந்தால் தன லாபம்; கலயங்கள், விலையுயர்ந்த பொருட்களைத் தூக்கிச் சென்றால் பொருள் இழப்பு.
9.காகங்கள் ஒருவருடைய குடைகள், செருப்புகள், வண்டிகள், கருவிகளைத் தாக்கினால் அந்த ஆளுக்கு ஆபத்து. மாறாக ஒருவரை ‘பூஜித்தால்’ (சம்ஸ்கிருத ஸ்லோகத்திலும் பூஜயந்தி என்றே உளது!) அவருக்கு பட்டம் பதவிகள் கிடைக்கும். மேற்கூறிய பொருட்கள் மீது மலஜலம் கழித்தால் உணவு கிடைக்கும்!
Craw Story_n
காலம் மாறும் -- பறவைகளும் மாறும்
  1. காகம் சில பொருட்களை எடுத்துச் சென்றால் அதை ஒருவர் இழப்பார். கொண்டுவந்தால் அதை ஒருவர் பெறுவர். எடுத்து காட்டாக மஞ்சள் நிற பொருட்களை உங்களிடம் இருந்து பறித்துச் சென்றால் நீங்கள் தங்க நகைகளை இழப்பீர்கள். அது மஞ்சள் நிறத்தைக் கொண்டுவந்தால் உங்களுக்கு தங்கம் கிடைக்கும் (பெண்கள் கவனத்தில் கொள்க!!)
துணிமணி = உங்களுக்கு புத்தாடை யோகம்
வெள்ளி நிற வஸ்துக்கள் = வெள்ளி கிடைக்கும்.
இப்படி வராஹமிகிரர் அடுக்கிக் கொண்டே போகிறார். அடுத்த கட்டுரையில் சில சுவையான விஷயங்களை மட்டும் சொல்லுகிறேன்.
யாராவது தமிழ், வடமொழி இலக்கியங்களில் வரும் குறிப்புகளை ஆராய்ந்து, ஆர்னிதாலஜிஸ்ட்கள் (பறவை இயல் நிபுணர்கள்) எழுதிய உயிர் இயல் செய்திகளோடு ஒப்பிட்டு டாக்டர் பட்டம் வாங்கலாம். அணி மற்றும் காகம் எவ்வள்வு புத்த்சாலி என்பதை காட்ட நிறைய யூ ட்யூப் வீடியோகள் உள்ளன. நாமோ சின்ன வயதிலேயே புத்தி சாலிக் காகம் எப்படி பானையின் கீழிருந்த தண்ணீரை மேலே கொண்டு வந்தது என்று படித்திருக்கிறோம்.
காகம்2
வாழ்க காகங்கள்! வளர்க காக்கா>>>>

வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவிகள் ஆரூடம்
சகுனம் என்றால் பறவை என்று சம்ஸ்கிருதத்தில் அர்த்தம். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா?, கெட்ட சகுனமா? என்ற சொற்றொடர்கள் உருவாயின. தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம். ஆனால் வராகமிகிரர் கூறுவது வாலாட்டிக் குருவி ஜோதிடம்!
பஞ்சாங்கங்களில் காணப்படும் பல்லி சொல்லுக்குப் பலன், பக்ஷி சாஸ்திரம் ஆகியவை நமக்குத் தெரியும். ஆனால் வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி விஷயம் நமக்குத் தெரியாது. சங்கத் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. பல்லி சொல் கேட்டு, காட்டுப் பன்றி கூட வெளியே போக பயந்த சங்க இலக்கியப் பாடலை ஏற்கனவே கொடுத்துள்ளேன். வராஹமிகிரரோ நரி ஜோதிடம், பறவைகள் ஜோதிடம் எல்லாவற்றுக்கும் பல அத்தியா யங்களை ஒதுக்கியுள்ளார். அவர் ஒரு விஞ்ஞானி. இருந்தபோதிலும் 1500 ஆண்டுக ளுக்கு முன்னர் இந்தியாவில் நிலவிய எல்லா விஷயங்களையும் தொகுத்து அளிப்பது அவர் தம் பணி.
Whit browed WagtailBP1
இனி, வாலாட்டிக்குருவிகள் பற்றி அவர்தம் பிருஹத் சம்ஹிதா – என்னும் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சியத்தில் சொல்லும் சுவையான சில விஷயங்களை மட்டும் காண்போம்.
“வாலாட்டிக் குருவிகளைப் பார்ப்பது பற்றி பழங்கால முனிவர்கள் சொன்னதை இதோ எடுத்துரைக்கப் போகிறேன்.
“முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும்.
“வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர். அதைப் பார்த்தால் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும்.
“மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.
“கீழ்கண்ட இடங்களில் வாலாட்டிக் குருவிகளைப் பார்த்தால் மங்களகரமான செய்திகளே கிடைக்கும்:– பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்த பறவைகள், புனித ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகியன
yellow wagtail
காதலன், காதலி கிடைக்க……………..
“வண்டல் மண்ணில் பறவையைப் பார்த்தால்- இனிய உணவு
மாட்டுச் சாணத்தில் பறவையைப் பார்த்தால் – பால், தயிர், வெண்ணெய்
புல் தரை – துணிகள்
வண்டிகள் மீது – நாட்டுக்கு சேதம்
வீட்டுக் கூரை- செல்வம் இழப்பு
தோல் முதலியன – சிறை வாசம்
ஆடு, செம்மறி ஆட்டின் முதுகு மேல் பறவையைப் பார்த்தால் – காதல் கைகூடும்; காதலன் – காதலி உடனே சேருவர்!
on buffalo
எதிரிடைப் பலன்கள்
வாலாட்டிக் குருவிகளை கீழ்கண்ட இடங்களில் பார்த்தால் கெட்ட செய்திகளே கிடைக்கும்:–
சாம்பல்- எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது
சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில்
ஆனால் தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும்.
Ruby_Jewel
புதையல் வேண்டுமா?
வாலாட்டிக் குருவிகள் புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும்.
உணவைக் கக்கும் இடத்தில்  மைகா/ அபிரகம் கிடைக்கும்.
மலஜலம் கழிக்கும் இடத்தில் நிலக்கரி கிடைக்கும்
விதி விலக்கு
எல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும்; எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கும். அதே போல எல்லா பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு.
வராஹமிகிரர் சொல்லுகிறார்: மேற்கண்டவற்றில் ஒரு அரசன் தீய நிமித்தங்களைக் கண்டாலும், அவன் பிராமணர்களையும் குரு மார்களையும், புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் இருந்தாலோ தீமைகள் வாரா.
என் கருத்து:
இந்த நூலில் சொன்ன வாலாட்டிக் குருவி எது என்பதை முதலில் நாம் சரியாக இனம் காண வேண்டும். நான் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவி எழுதியுள்ளேன். பின்னர் அதை நம்புவதும் நம்பாததும் தனி நபரின் அனுபவத்தில் தெரியும்.
இது ஒரு புறம் இருக்க, பொய்யோ நிஜமோ, நம்முடைய முன்னோர்கள் 2000 ஆண்டுக ளுக்கு முன்னர் இயற்கையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது.