For Read Your Language click Translate

Follow by Email

16 June 2014

வேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்பண வரவிற்கு:
மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்.தடைகள் விலக தாந்த்ரீக முறை :
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும். 
ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்

வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு 
வேலை மாற்றத்திற்காண வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.

சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள் (1)
வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.
(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.
பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்பதில் தவறென்ன 


கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :
பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

திடீர் பண வரவிற்கு :
பவழமல்லி செடியின் வேரை சிறிது எடுத்து அதோடு 11 சிகப்பு குன்றி மணி சேர்த்து வெள்ளி தாயத்தில் அடைத்து உடம்பில் படும் படி கழுத்தில் அணிய திடீர் பண வரவு உண்டாகுமாம்.
மேற்கண்ட செடியின் வேரை எடுக்க எந்த வித சாப நிவர்த்தியும் கிடையாது