For Read Your Language click Translate

16 June 2014

கிருத்திகை நட்சத்திரம் - விருட்சம் - பரிகாரம்

  

           அறிவாற்றலும், நல்ல பேச்சாற்றலும், செயல் திறனும் மிக்கவர்கள். இவர்களின் தூக்கத்துக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். இவர்களின் அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் மற்றவர்களை வியக்க வைக்கும், திட சித்தம் உடையவர்கள், நல்ல தலைமை பண்பு கொண்டு விளங்குவார்கள், உறவினர்களும் நண்பர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் மீது வெறுப்பு கட்டுவார்கள், நேர்மையும் நாணயமும் உள்ளவர்கள், அதே சமயம் நல்ல லாபம் அடையமுடியும் என்று இவர்களுக்கு தெரிந்தால் தவறான வழியில் நடக்க தயாராகவும் இருப்பார்கள், அரசியலில் செல்வாக்கும் அதன் மூலம் அதயமும் அடைவர், அனைவரையும் அனுசரித்து அரவனைத்து செல்லும் குணம் குறைவு அதனால் அனைவருடனும் கருத்து வேற்றுமையும் சண்டை சச்சரவுகளும் இவர்களுக்கு உண்டகிக்கொண்டே இருக்கும், இனிமையான வார்த்தைகளால் அனைவரையும் கவர்வார்கள், சுற்றத்தாரை விரும்பி வரவேற்கும் குணமும் இவர்களுக்கு உண்டு, இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்கள் போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வ செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை இனி கண்போம்.



http://kaliyugasidhar.blogspot.in/
                                                   ஆதி அத்தி வரதராஜபெருமாள்

கிருத்திகை நட்சத்திர அன்பர்களின் அதிதெய்வம் "சத்யவிரத சேத்திரம்" என்னும் காஞ்சிபுரத்தில் அருளும் ஆதி அத்தி வரதராஜபெருமாள், இவரை 40 வருடத்துக்கு ஒரு முறை ஒரு மாதம் மட்டுமே தரிசிக்க முடியும். கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான் ஆகும்.
http://kaliyugasidhar.blogspot.in/
அக்னி தேவன் 


கிருத்திகா அக்னிதேவத்யா :
மேஷ வாகன சம்ஸ்திதா !
ஸ்ருக் ஸ்ருவாவபீ திவரத்ரு :
சதுர்ஹஸ்தா நமாம்யஹம் !!


ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே 
அக்னிமக்னாய தீமஹி !
தந்நோ அக்னி ப்ரசோதயாத் !!


ஓம் வன்னி தேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி 
தந்நோ கிருத்திகா ப்ரசோதயாத் 


கிருத்திகை  நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் அத்தி  மரம் ஆகும். பிரம்மாவுக்கு மிகவும் உகந்த அத்தி மரத்தை "பிரம்ம விருட்சம்" என்பார்கள். நவகிரகங்களில் சுக்கிரனுக்கு பிடித்தமான சமித்து அத்தி, மூதாதையருக்கு செய்யும் நேர்த்திக்கடன்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது இது, அத்தி சமித்து கொண்டு செய்யப்படும் வேள்வியால் சத்ரு நாசம் ஏற்படும், பில்லி சூன்யம் ஏவல் போன்ற கெடுதல்கள் நீங்கும், மனோபலம் உண்டாகும். பால் வடியும் மரம் ஆதலால் கார்மேகங்களை கவர்ந்திழுத்து மழையை பெய்யவைக்கும் சக்தி கொண்டது, அத்தி மரசுள்ளிகளால் செய்யப்படும் வேள்வியால் வெளிப்படும் புகை கருமேகங்களை ஈர்த்து மழை பொழியவைக்கும். கிருத்திகை   நட்சத்திர அன்பர்கள் தான் பிறந்த கிருத்திகை  நட்சத்திரம் வரும் நாளில் அத்தி   மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று அத்தி  மரத்துக்கு நீர் உற்றுவதும், அத்தி  மரத்தடியில் தியானம் செய்வதும், விருட்ச பரிகாரங்கள் செய்துகொள்வதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். கிருத்திகை   நட்சத்திர அன்பர்கள் அக்னி  காயத்திரி, அக்னி   மந்திரம், கிருத்திகை   நட்சத்திர காயத்திரி மந்திரங்களை அத்தி   மரத்தின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை நீக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், மங்காத புகழும் பெற்று நீடுடி வாழலாம்.

            நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்து தினசரி பரிகார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி மகா விருட்சங்களான ருத்ராட்சம், மஹா வில்வம், சரகொன்றை மற்றும் அதி முக்யமான பரிகார விருட்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த விருட்சங்களுக்கு நடுவே பஞ்சம் மற்றும் பஞ்சமஹா பாவங்கள் சர்வ தோஷங்களை நீக்கும் பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் பிரதிஷ்டை செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே சர்வ சக்தி விருட்ச பீடம் மிக உயர்ந்த பலன்களை தரும் நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். உங்கள் வாழ்வு வளம் பெற இங்கு வந்து பரிகாரங்களை செய்து கொள்வது மிக்க பலன்தரும், உங்கள் வாழ்வு மலர உங்கள் துன்பங்களை களைய பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை திருப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், நன்கொடைகள் தந்து உதவுங்கள், திருப்பணிக்கு நன்கொடை அளிக்கும் அன்பர்களின் வாழ்வு சிறக்க அவர்கள் பிறந்த நட்சதிரதன்று (ஆயுள் முழுதும்) தொடர்ந்து பரிகார பூஜைகள் அவர்களுக்காக நடத்தப்படும்.

 நன்கொடைகளை கிழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தலாம் :

ACCOUNT NO       : 1031201001136,
BANK & BRANCH : CANARA BANK, SIRUMUGAI BRANCH,
IFSC CODE             : CNRB0001031.

No comments:

Post a Comment