For Read Your Language click Translate

07 June 2014

பாட்டு – MUSIC THERAPY.



தாலாட்டின் ராகம் நீலாம்பரி. அந்த ராகத்தைக் கேட்டால் மனது அமைதியாகி தூக்கம் வருகிறது. ராகம் என்பது ஒலிகளின் தொகுப்பு. நீலாம்பரி ராகத்தின் ஒலி தொகுப்புகளுக்கு மனத்தை அமைதியாக்கும் சக்தி இருப்பதால்தான் தூக்கம் வருகிறது.
அமிர்தவர்ஷிணி என்ற ராகத்தை பாடினால் மழை வரும். இதை சங்கீத மேதைகள் முத்துசாமி தீக்ஷிதர், செம்மங்குடி பாலமுரளிகிருஷ்ணா, குன்னக்குடி வைத்யநாதன் என பலர் நிருபித்தனர். அமிர்தவர்ஷிணி ராகத்தின் ஒலி தொகுப்புகள் வான்வெளியில் ஈரப்பத்தைக் குவித்து மேகங்களைத் திரட்டி குளிரவைத்து மழையைப் பொழிய வைக்கும் வலிமை கொண்டது. அதனால் தான் மழை பெய்கிறது.
வருணஜபம் செய்தாலும் மழை வரும். வருண ஜப மந்திரத்தின் ஒலித் தொகுப்புகள் அமிர்தவர்ஷிணி ராகத்தின் ஒலித் தொகுப்புகளைப் போலவே இருக்கின்றன. இரண்டு ஒலித் தொகுப்புகளின் மொத்த சக்தி சரி சமமாக இருப்பதாக ஜெர்மனியில் இருக்கும் “ இண்டலாஜி “ ஆய்வுமையம் நிருபித்துள்ளது.
அக்பர் சபையில் தான்சேன் தீபக் ராகம் பாடி திரி, எண்ணெய் இல்லாமல் விளக்கை எரியச் செய்தார். மேகராகம் பாடி கல்லை கரைய வைத்தா ஒரு வித்வான்.
ஹாலந்தில் மாட்டுப் பண்ணையில் பாட்டு கேட்ட பசுக்கள் அதிகம் பால் கொடுத்ததாம். சில மிருகங்கள் கூட சில ராக {இசை} அதிர்வுகளுக்கு மயங்குகின்றன. பாம்பு கூட செவிபுலன் இல்லாத போதும் மகுடி வாசிக்கும் போது அதன் ஒலி அதிர்வுகள் பாம்பின் உடலில் உரசுவதால் பாம்பிற்கு ஒரு இன்ப அதிர்வி உண்டாகிறது. அந்த மகிழ்ச்சியினால் அது படமெடுத்து ஆடுகிறது. இதிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியெல்லாம் ஓசைக்கு உண்டு என்பது தெரிகிறது.
ஒன்றுமில்லாத ஆகாயத்தில் எலக்டிசிட்டியால் எவ்வளவோ வேலைகள் செய்யப்படுகின்றன. அதுபோல குணம், குறி ஒன்றுமில்லாத பிரம்மமான அறிவுப் பொருளிடமிருந்து உண்டாகும். பிரளய காலத்தில் அந்த அறிவு தூங்கும், அதாவது செயலற்று இருக்கும் ஒரு குத்துச்சண்டை வீரன் தூங்கும் பொழுது அவனது சக்தி ஒன்றும் தெரிவதில்லை. குஸ்தி முதலிய போட்டிகளின் போது அவனது சக்தி தெரிகிறது. அதுபோல படைத்தல் காலத்தில் அறிவுமயமான சக்தி பல வேலைகளைச் செய்கிறது.
thதெய்வீக பாடல்கள் அதாவது வேத கீதங்கள் ஸௌந்தர்யலஹரி, தேவாரம், திருவாசகம், ப்ரபந்தம் முதலானவற்றிற்கு மனத்தை உருக்கி ஆண்டவனிடம் மனத்தைச் செலுத்தும் சக்தி எப்படி உண்டாகிறது என்றால் இடி, பட்டாசு, போன்ற சப்தங்கள் கேட்கும் போது மனம் படபடக்கிறது. எரிச்சல் உண்டாகிறது. பய எண்ணங்கள் உண்டாகிறது.
தாலாட்டு கேட்கும்போது மனம் அமைதியாகிறது. மனத்தை உருக்கும் பாடலைக் கேட்கும்போது தன்னை அறியாமலேயே மனம் உருகி அதில் லயமாகிறது. ஒப்பாரியை கேட்கும் போது மனம் சோகத்தில் முழ்குகிறது.
எப்படி என்றால் ராகங்களின் மற்றும் சொற்களின் ஒலி அதிர்வுகள் நமது உடல் நரம்புகளில் ஊடுருவி ஒலி அதிர்வுகள் ஏற்றபடி நரம்புகள் துடிக்கின்றன. நரம்பு துடிப்புக்கு ஏற்றபடி ஸ்வாச கதி {அளவு} மாறுகிறது. ஸ்வாச மாற்றத்திற்கு ஏற்றபடி ரத்த ஓட்டம் மாறுகிறது இதனால் மூளையின் செயல்பாடுகள் மாறுகின்றன. இந்த மாற்றங்கதான் அமைதி, கோபம், துக்கம் போன்ற எண்ணங்களை தூண்டுகின்றன.
அர்த்தமுள்ள சொற்களின் ஒலிகள், மனதில் அந்த சொல்லின் வடிவத்தையும் உண்டாக்குகின்றன.
உதாரணமாக மயில் என்ற சொல் காதில் பட்டதும் அதன் உருவம், அழகிய நிறமுள்ள தோகை, அது ஆடும் அழகு முதலானவைகள் நம் மனக்கண் முன்னால் தோன்றுகின்றன. இவ்வாறுதான் மந்திரத்தை உச்சரிக்கும் போது அதன் பொருள் வடிவம் முதலானவை மனதில் ஒரு வித அதிர்வை ஏற்படுத்தி மன அமைதியையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.
கோவில்மணி ஓசை காதிலுள்ள செவிப்பறையில் உரசும் போது கோவில் கோபுரம் தெய்வ உருவம், கோவில் அமைப்புகள் முதலான எண்ணங்களை மூளைக்கு அனுப்புகிறது.
தெய்வீக பாடல்கள் எல்லாமே மன அமைதி தரும் ராகங்களில் தான் அமைந்துள்ளன. ஆதலால் பாடல்களால் வழிபடும்போது நரம்பு அதிர்வுகளைச் சீராக்கி ஸ்வாசம், ரத்த ஓட்டம், மூளை அலைகள் என எண்ணங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு அம்சமும் மனமும் அமைதி அடைகிறது

No comments:

Post a Comment