For Read Your Language click Translate

Follow by Email

26 June 2014

மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம்

 
புரநானூற்றில் வியக்க வெய்க்கும் விஞ்ஞான அறிவு.
வடமொழியில் உள்ளவை எல்லாம் ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்டது. ஆனால் தொல்காப்பியம், திரு...க்குறள், புறநானூறு, அகநானூறு, பறிபாடல் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் இவை எலாம் வெறுமன நமது தமிழர் பண்பாட்டை பறை சாற்றும் இலக்கியங்களே ஒழிய இதற்க்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லை. இந்த கோவில், வழிபாடு இதெல்லாம் பார்ப்பனர்களால் ஒரு 1500 ஆண்டுகளுக்கு முன் இங்கு புகுத்தப்பட்டது. [பகுத்தறிவு வாதி என்று தன்னை தானே கூறி கொள்ளும் கூட்டத்தினரின் கருத்து ] அது செரி. நீங்கள் சொல்லும் அதே இலக்கியங்களில் தொல்காப்பியம் முதற்கொண்டு இந்திர விழா பற்றி வருகிறது. மாயோன் என்று தொல்காப்பியர்
திருமாலை -போற்றுகிறார். சிவன் என்கிற பெயர் தொல்காப்பியத்தில் வரவில்லை என்றாலும் ஆலமர் கொன்றையன், பிறை சூடி போன்ற பல பெயர்கள் ஈசனையே குறிப்பிடுவது. அதிலும் முக்கியமாக புற நானூறு, அக நானூறு ஆகிய இரு இலக்கியங்களில் அக நானூறு ஆழ்நிலை சமாதி, ஆழ் மனத்தின் அதிசய சக்தி பற்றி மிக ஆழமாக கூறிய அற்புத நூல். உள் மனம், வெளி மனம், ஆழ் நிலை மனது, ஆத்மா. தன்னை உணர்தல் என பலவாறாக பிரித்து சொல்லப்பட்டுள்ளது.

புற நானூறு வின் முதல் மண் வரை வானவியல், பூகோளம் என அனைத்து புறம் சார்ந்த விடயங்களையும் பேசும் ஒரு அற்புதமான விஞ்ஞான நூல். இது 2000 ஆண்டுகள் பழமையானது என்பது தோராயமான கணிப்பு தான். அதை விட மேலும் சில நூறு, ஆயிரம் வருடங்கள் பழமையாக இருக்கும். இன்று புரநானூற்றில் உள்ள விஞ்ஞானத்தை பார்ப்போம்.
மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்.
புறநானூறு. [புறம் 365: 1 - 3]
தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை.
Troposphere, Stratosphere, Mesosphere, Thermosphere, Exosphere Nothingness.
இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது. இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.
"இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.
"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிதுநிலை காயமும்." - (புறநா -30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புறனானுற்றின் ஆசிரியர் கோவூர் கிழார் குறிப்பிட்டு இருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது அல்லவா.
மேலும் நாளை பார்ப்போம்.