For Read Your Language click Translate

16 June 2014

கள்ளி மர்மங்கள் பற்றி தெரியுமா



http://kaliyugasidhar.blogspot.in/
கள்ளி பாளையம் என்பது முற்காலத்து சித்தர்கள் தங்கள் தவவலிமையால் கள்ளிச்செடிகளை ஆராய்ந்து அதை மக்களின் நன்மைக்காக எழுதிவைத்த நூலேயாகும்.இந்த நூலில் ஆயிரக்கணக்கான கள்ளி வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன,

கொடிக்கள்ளி(இது கொடியாக வளரும் கள்ளி)

செடிக்கள்ளி (இது செடிகளாக வளரும் கள்ளி)

இலைக்கள்ளி (இது இலையிலையாக வளர்ந்து இலைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்வது)

மரக்கள்ளி(இது பெரிய பெரிய மரங்களாக வளரக்கூடியது)

பூக்கள்ளி(இவைகள் பூக்கள் வடிவில் வளர்வது)

இரத்தகள்ளி(சிகப்பு வர்ணமாக தோற்றத்தைக்கொணடது)

இரணக்கள்ளி(உடலில் புண்களை உண்டாக்குவது)

சதுரக்கள்ளி(இது சதுரம் சதுரமாக வளரக்கூடியது)

திருகுக்கள்ளி(இந்த இணங்கள் எல்லாம் முடிக்கி முறுக்கி வளர்வது)

கொம்புக்கள்ளி (இவைகள் ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களின் 
கொம்பு போன்று இருக்கும்)

பால்கள்ளி(இவைகளில் வெண்
மை நிறங்கொண்ட பாலிருக்கும்)

முட்கள்ளி(இவ்வகைகள் வெளிப்புறத்தில் முட்கள் கொண்டதாயிருக்கும்)

தட்டைக்கள்ளி(இவ்வினங்கள் எவ்வடிவத்திலிருந்தாலும் தட்டையாகவேயிருக்கும்)

முட்டைக்கள்ளி(இவ்வினங்கள் அனைத்தும் முட்டை வடிவாகவும் உருண்டை வடிவாகவும் இருக்கும்)

வரிக்கள்ளி(இவ்வினங்களில்வட்டவடிவாகவோ, நீள்வடிவாகவோ, வளைவாகவோ,கோடுகளிருக்கும்)

விஷக்கள்ளி(இவைகள் கொடிய விஷங்கொண்டதாயிருக்கும்)

வேதைக்கள்ளி (இவ்வினங்கள் ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாய் மாற்றக்கூடிய இரசவாதத்தன்மையை பெற்றதாயிருக்கும்)

பேய்க்கள்ளி(இவ்வினங்கள் பேரில் பேய் பிசாசங்கள் வசிக்கும்)

பூதக்கள்ளி(இவைகள் மிகவும் பெரியதாய் பூதாகரமாக வளரக்கூடியதாயிருக்கும்)

புற்கள்ளி(இவ்வினங்கள் புற்கள் போன்று வளரக்கூடியதாயிருக்கும்)

என முக்கியமாக இருபது வகைகளாக பிரித்துள்ளனர் .

இப்படி மேற்கூறப்பட்ட கள்ளிகளால் என்ன? பயன் என்றால் முறைப்படி நம்யோக பாகையை அறிந்துக்கொண்டு அவ்விடத்தில் யோகத்தை வளர்க்கும் கள்ளியையும்,அதற்கு எதிரிடையான துர்யோக(துரதிர்ஷ்ட) பாகையை அறிந்துக்கொண்டு அந்த துரதிர்ஷ்ட பாகையில் அதைபோக்கக்கூடிய கள்ளியையும் வைக்கவேண்டும்.

ஒருவருடைய யோகம் அவருடைய பிறந்த நேரத்தின் படி 115'E பாகையாக இருக்க ஆனால் அவர் 85'E வஸிக்கும் பக்ஷத்தில் அவருக்கு அதிர்ஷ்டமும் யோகமும் எளிதில் கிட்டாது,அந்த 115'E பாகையில் உள்ள அதிர்ஷ்டத்தை கள்ளிகளுக்கு சில விஷேஷமூலிகை சாற்றை வேரில் ஊற்றி வளர்க்கும் பக்ஷத்தில் நம்மால் அடையமுடியும்.

உதாரணமாக ஒருவர் 80⁰-15' E வஸித்து வந்தார் அவர் மிகவும் அதிர்ஷ்டமாக அங்கே வாழ்ந்து வர அவர் திடீர் என்று 77⁰E ல் மாறி வாழவேண்டியதாகி விடவே அவர் அதிர்ஷ்டத்தை இழந்து கஷ்டபடவே அவர் தற்சமயம் வஸிக்கும் 77⁰E வீட்டின் 80⁰-15' E ல் மூன்று முகமுள்ள கள்ளியை ஸ்தாபநம் செய்து விஷேஷ மூலிகையி சாற்றை ஊற்றி வளர்க்க அது அங்கே ஆறுமுகங்கொண்ட கள்ளியாக வளர்ந்தது அவர் மீண்டும் அதிர்ஷ்டத்தை அடைந்தார்.நாம் கண்கூடாய் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட பாகையை அறிந்துக்கொள்ள முதிலில் ஒருவருடைய பிறந்த தேதி மாதம்,வருடம்,நேரம் பிறந்த இடம் இவற்றைக்கொண்டு பிரம்மா சிருஷ்டி முதல் பிறந்த நாள் வரையிலான கழிந்துபோன சுத்ததினம் கணித்து அதன் பிறகு சூரிய சந்திர ஓட்டத்தை அறிந்து யோக பலப் பாகையை கணிக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்.......

1 comment:

  1. ஐயா, கொடிக்கள்ளியை வீட்டின் முன் வளர்க்கலாமா, சிலர் கூடாது என்கிறார்களே... கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா ..

    ReplyDelete