For Read Your Language click Translate

09 June 2014

ஸ்வஸ்திக் கோலம்



ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக விளங்கும் இதனைப் பூஜையறையிலும், வாசலிலும் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்தி' என்றால் "தடையற்ற நல்வாழ்வு'. ஸ்வஸ்திக்கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டுத் திசைகளைக் குறிக்கும். எட்டுத்திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது.

No comments:

Post a Comment