For Read Your Language click Translate

09 June 2014

கஜகர்ணம் என்றால் என்ன ?



கஜகர்ணம் என்றால் என்ன ?
வித்யைகளில் கஜ கர்ண வித்யை ,கோகர்ணவிதியை என உண்டு .”கஜகர்ணம் போட்டாலும் உன்னால் இது முடியாது “என்று பேச்சு வாக்கில் சொல்வதை கேள்விப் பட்டு இருக்கிறோம் .”கஜகர்ணம் “என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பலருக்கு தெரியாது .
யோகாசன முறையில் பிராணாயாம வழியில் சுவாசத்தை (மூச்சை) ஒரு விதமாகக் கட்டுப்படுத்தி காது நரம்புகளில் அசைவை உண்டாக்கி ,யானை எவ்விதம் தன் காதை மட்டும் ஆட்டவும் ,மடக்கவும் செய்யுமோ ,அதை மாதிரி சுவாச பந்தனத்தால் அஷ்டாங்க் யோகம் பயின்றவர்கள் செய்து காட்ட முடியும் . அதற்க்குப் பெயர் தான் “கஜகர்ண வித்யை “.
இதே போல் கோகர்ண வித்யைக்கும் லட்சனம் உண்டு .ஒரு குச்சியால் பசுவின் உடலைத் தொட்டால் ,தொட்ட இடத்தில் இருந்து வட்ட வட்ட சுழிகளாக சிலிர்க்கும் .அதை மாதிரி யோக சக்தியினால் மனித உடலையும் சிலிர்க்க செய்வது “கோகர்ண வித்யை “ஆகும்

No comments:

Post a Comment