For Read Your Language click Translate

10 May 2014

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ விருட்சம் விவரங்கள

1.சித்தர் விருட்ச முறை
 
சித்தர்களின் அபூர்வ மூலிகைகளை கட்டிடத்தினுள் வளர்ப்பதின் மூலம் பஞ்ச சக்திகளின் கூறுகளாகிய நவகிரங்களின் சக்திகளை உயர்நிலைப்படுத்தி கட்டிடத்தில் மையங்கொள்ளச்செய்து கட்டிடத்தின் குறைபாடுகளை நீக்கி கட்டிடத்தை வளப்படுத்தி அதன் மூலம் கட்டிடத்தில் வாழும் உயிர்களின் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக முறை சித்தர் மூலிகை முறையாகும். இந்த முதல்வகை முறையின் மூலம் அவரவர்களின் ஊழ்வினைப்படி ஐம்பது விழுக்காடுகள் அளவிற்கு வாஸ்து வளன்களைப்பெற்று நலம்பெற முடியும்.
 
ஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது காண்போம்.
 சூரியபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
ரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல் மற்றும் சூரியபாணம் போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
சந்திரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
வெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
சத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம் மற்றும் செண்பகவிருட்சம் போன்ற மூலிகைகள் செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
புதபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்               
நாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம் மற்றும் சங்குவிருட்சம் போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
 குருபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
பொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்திரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம் மற்றும் வித்யாவிருட்சம் போன்ற மூலிகைகள் குருபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
  சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
சக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி மற்றும் காமாட்சிவிருட்சம் போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
சனி பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
நீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை விருட்சம் மற்றும் மந்தாரை விருட்சம் போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
ராகுபவானுக்குரிய அபூர்வ விருட்சம்
கறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம் போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
கேது பகவானுக்குரிய அபூர்வ விருட்சம்
பிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம் மற்றும் செம்பணி விருட்சம் போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.
 
2. சித்தர் மூலிகைச்சக்கர முறை
 
சித்தர்களின் அபூர்வ மூலிகைச்சக்கரங்களை கட்டிடத்தில் உரிய இடத்தில் பதிப்பதின் மூலம் பஞ்ச சக்திகளின்  கூறுகளாகிய நவகிரகங்களின் சக்திகளை உயர்வுபடுத்தி கட்டிடத்தில் மையங்கொள்ளச்செய்து கட்டிடத்தின் குறைபாடுகளை நீக்கி கட்டிடத்தை வளப்படுத்தி அதன் மூலம் அக்கட்டிடத்தில் வாழும் உயிர்களின் வாழ்வை வளப்படுத்தும் தெய்வீக முறை சித்தர் மூலிகைச்சக்கர முறையாகும். இந்த இரண்டாம் வகை முறை மூலம் அவரவர்களின் ஊழ்வினைப்படி எழுபது விழுக்காடுகள் அளவிற்கு வாஸ்து வளன்களைப்பெற்று நலம்பெற முடியும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் பலவகையான மூலிகை மரங்கள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் எளிதாகக்கிடைக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்குமுண்டான ஒன்று அல்லது இரண்டு வகைகளைக்கொண்ட மூலிகை மரங்களைக்கொண்டு செய்யப்படும் மூலிகைச்சக்கரங்களைப்பற்றி நாம் இப்பொழுது காண்போம்.
               
சூரிய பகவானுக்குரிய மூலிகை மரம் உருத்திராட்ச மரமாகும். உருத்திராட்ச மரத்தில் சூரியனுக்கு உரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் கிழக்கு திக்கில் கட்டிடத்தின் வெளிபாகத்தில் ஆவரணத்தின் கிழக்கு திக்கை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து சூரிய பகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும்.  ஆயிரத்துஎட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குருதீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு ஞயிற்றுக்கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி (பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
சந்திரபகவானுக்குரிய மூலிகை மரம் வேம்பு மரமாகும். வேம்பு மரத்தில் சந்திரனுக்கு உரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் வடமேற்கு மூலையில் கட்டிடத்தின் வெளிபாகத்தில் ஆவரணத்தின் வடமேற்கு திக்கை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து சந்திரபகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும்.  ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குரு முகாந்திரமாகப்பெறப்பட்டு திங்கள் கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி (பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
செவ்வாய் பகவானுக்குரிய மூலிகை மரம் வில்வ மரமாகும். வில்வ மரத்தில் செவ்வாய்பகவானுக்கு உரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் தெற்கு திக்கில் கட்டிடத்தின் வெளிபாகத்தில் ஆவரணத்தின் தெற்கு திக்கை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து செவ்வாய் பகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும்.  ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப் பெறப்பட்டு செவ்வாய் கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி(பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
புதபகவானுக்குரிய மூலிகை மரம் ஆலமரமாகும். ஆலமரத்தில் புதபகவானுக்குரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் வடக்கு திக்கில் கட்டிடத்தின் வெளிபாகத்தில்  ஆவரணத்தின் வடக்கு திக்கை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து புதபகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு புதன் கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி(பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
குருபகவானுக்குரிய மூலிகை மரம் அரசன் மற்றும் சந்தன மரமாகும். அரசன் அல்லது சந்தன மரத்தில் குருபகவானுக்குரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் வடகிழக்கு மூலையில் கட்டிடத்தின் வெளிபாகத்தில் ஆவரணத்தின் வடகிழக்கு மூலையை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து குருபகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குரு முகாந்திரமாகப்பெறப்பட்டு வியாழன் கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி(பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்
 
சுக்கிரபகவானுக்குரிய மூலிகை மரம் அத்தி மரமாகும். அத்தி மரத்தில் சுக்கிரபகவானுக்குரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் தென்கிழக்கு மூலையில் கட்டிடத்தின் வெளிபாகத்தில் ஆவரணத்தின் தென்கிழக்கு மூலையை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து சுக்கிரபகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு வெள்ளிக்கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி(பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
சனி பகவானுக்குரிய மூலிகை மரம் வன்னி மரமாகும். வன்னி மரத்தில் சனிபகவானுக்குரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் மேற்குதிக்கில் கட்டிடத்தின் வெளிபாகத்தில் ஆவரணத்தின் மேற்கு திக்கை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து சனிபகவானின் மூலிகைச் சக்கரம் பதிக்கப்படவேண்டும்.  ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு சனிக்கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி(பஞ்சபட்சி) ஆட்சி  செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
ராகு பகவானுக்குரிய மூலிகை மரம் மருதமரமாகும்.  மருதமரத்தில் ராகு பகவானுக்குரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் தென்மேற்கு மூலையை நோக்கியவாறு கட்டிடத்தின் மொத்த உயரத்தில் மையம் செய்து ராகுபகவானின் மூலிகைச்சக்கரம் பதிக்கப்படவேண்டும்.  ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு சனிக்கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி (பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும்.
 
கேது பகவானுக்குரிய மூலிகை மரம் மாமரமாகும். மாமரத்தில் கேதுபகவானுக்குரிய பீடாட்சர அமைப்புகளுடன் சக்கரங்கள் வரைந்து கட்டிடத்தின் மையத்தில் தரைமட்டத்திற்கு சற்று கீழ்பாகத்தில் பதிக்கப்படவேண்டும். ஆயிரத்து எட்டு உரு மந்திர தீட்சையும், உரிய குரு தீட்சையும் ஏற்றப்பட்ட மூலிகைச்சக்கரம் குருமுகாந்திரமாகப்பெறப்பட்டு செவ்வாய் கிழமையில் கட்டிடக்கர்த்தாவின் பட்சி(பஞ்சபட்சி) ஆட்சி செய்யும் காலத்தில் கட்டிடத்தில் பதிக்கப்படவேண்டும். 

No comments:

Post a Comment