For Read Your Language click Translate

27 May 2014

சித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சித்த மருத்துவ ஆய்வின் தேவை

சித்த மருத்துவ ஆய்வின் தேவை:சித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவமாகத் தொன்றுதொட்டு தொடர்ந்துவரும் மருத்துவமாகக் காணப்படுகிறது.

சித்த மருத்துவ ஆய்வின் தேவை

சித்த மருத்துவத்தில் பல அரிய முறைகள் காணப்படுகின்றன. மருத்துவத்தால் எளிதில் குணப்படுத்த இயலாதது எனக் கூறப்படுகின்ற மரபு நோய்களுக்கும், முதிர்வு நோய்களுக்கும் மருத்துவம் கூறப் படுகின்றது.

அம்மருந்து முறைகளைக் கண்டறிந்து, மருத்துவத்துக...்குப் பயன்படச் செய்யும் முறையில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், தமிழ் மருத்துவம் மேம்பாடு அடையும்.

சித்த மருத்துவ நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அவற்றி லுள்ள மருத்துவப் பகுதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து சித்த மருத்துவக் களஞ்சியமாகப் பதிப்பிக்க வேண்டும்.

மருத்துவ நூல்கள் கூறும் மருந்துகள் அனைத்தும் அறிவியல் ஆய்வு முறையில் ஆய்வு செய்திட வேண்டும்.

ஆய்வின் முடிவில் தெரிவு செய்யப்படுகின்ற மருந்துகள், இந்திய மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் முறையில் மருந்துகள் தயாரித்து அளித்திட வேண்டும்.

பயன்கள்

சித்த மருத்துவ நூல்களும் மருந்தும் மருத்துவ முறைகளும் ஆய்வு செய்யப்பட்டால்,

1) அறுவை மருத்துவம் (Surgery)

2) இசை மருத்துவம் (Musio therapy)

3) உணவு மருத்துவம் (Diet therapy)

4) காயகல்ப மருத்துவம் (Kalpa Medicine)

5) நம்பக மருத்துவம் (Faith Healing)

6) மூலிகை மருத்துவம் (Herbal Medicine)

7) வர்ம மருத்துவம் (Varma therapy)

ஆகிய ஏழு துறைகளில் மருத்துவக் கல்வி முறை வளர்ச்சியடையும்.

மருத்துவ மூலிகையியல் துறையில்,

1) கற்ப மூலிகை (Rejuvenating Herbs)

2) ஞான மூலிகைகள் (Spiritual Herbs)

3) இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)

4) வசிய மூலிகைகள் (Hypnopising Herbs)

5) மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)

6) வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)

7) பிணிதீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)

8) உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)

9) உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)

10) வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)

11) விஷ மூலிகைகள் (Toxic Herbs)

12) நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

13) எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Joiners or headers)

14) சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle headers or Joiners)

15) பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)

16) காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)

17) பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)

18) கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)

என்னும் வகைகளில் மூலிகைகள் பற்றிய கல்வி நிலை வளரும். மூலிகைத் துறை கல்வி முறையில் தமிழகம் முன்னிலை வகிக்கும்.

தமிழ் மருத்துவக் கலைச் சொற்கள் தொகுக்கப்பட்டு வகைப்படுத்தி ஆராயப்பட வேண்டும். அறிவியல் முறைகளுடன் ஆராயப்பட்டால் தமிழ் மருத்துவம் வளர்ச்சி பெறும்.

தமிழ் மருத்துவம், எல்லாருக்கும் சென்றடைய வேண்டுமானால், தமிழ் இலக்கியப் பட்டயக் கல்வியைப் போல், தமிழ் மருத்துவ இலக்கியத்திலும் பட்டயக் கல்வியை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இளைய தலைமுறையினருக்கு மருத்துவக் கல்வியில் நாட்டமும் ஊக்கமும் உருவாகும்.

முற்றும்

No comments:

Post a Comment