For Read Your Language click Translate

26 May 2014

ஆழ்மனதின் சக்திகள்...-ஓஷோ


குறிப்பிட்ட தூரம் உயர் விழிப்புணர்வை அடைந்திருக்கின்ற,ஆன்மிக ஆற்றல் உடைய மனிதருக்கும்,முற்றிலும் ஞானநிலை பேறு பெற்றிருக்கிற வாழும் புத்தருக்கும் இடையிலான வளர்ச்சி நிலை,இடைவெளியை விளக்குங்கள்?
ஆன்மீக ஆற்றல்கள் உடைய மனிதர்:
யோகா சொல்கிற அனைத்து சித்திகளும் அதாவது ஆற்றல்களும் அவனுக்கு எளிதாக கைவரும்.அவன் அற்புதங்கள் செய்யும் மனிதனாவான்.அவனது தொடுதலே மாயங்கள் பல புரியும்.எதையும் அவனால் சாதிக்க முடியும்.அவன் மிகுந்த ஆற்றல் உடையவனாக இருப்பான்.இருந்தாலும் அவன் இன்னும் ஞானம் பெற்றவனல்லன்.மேலும் ஒரு ஞானம் பெற்றவனை ஞானம் பெற்றவன் என நினைக்க முடிவதை காட்டிலும் இந்த மனிதனை ஞானம் பெற்றவனாக நினைப்பதே உங்களுக்கு அதிக எளிதாக இருக்கும்.ஏனெனில் ஞானநிலை பெற்ற மனிதர் முற்றிலும் உங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.உங்களால் அவரை புரிந்து கொள்ள முடிவதில்லை.அவர் புரிந்து கொள்ள பட முடியாதவராக இருக்கிறார்.
ஆன்மிகராக முயற்சிக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆன்மீக ஆற்றல்களை கண்டு ஏமாந்து போகாதீர்கள்.மேலும் உங்களில் ஆன்மீக ஆற்றல்கள் எழ தொடங்கும் போதெல்லாம் முன் எப்போதையும் விடவும் நீங்கள் அதிக விழிப்பாக இருக்க வேண்டி உள்ளது.
ஒருவரை நீங்கள் தொட்டு அதனால் உடனடியாக அவர் குணம் பெற முடிந்தால் அந்த சோதனையை எதிர்த்து நிற்பது கடினமாக உள்ளது.மக்களுக்கு உங்களால் மிகுந்த நன்மை செய்ய முடியும்போது நீங்கள் மிகப்பெரும் சமூக சேவையாளர் ஆக முடிகிறது.அந்த ஆவலை எதிர்த்து நிற்பது மிகவும் கடினம்தான்.உடனடியாக ஆவல்கள் எழுகின்றன.நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்.மக்கள் பணிக்காகவே இதை நீங்கள் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறீர்கள்.ஆனால் உள்ளே பாருங்கள்.மக்கள் சேவை வழியாக அகங்காரம் எழுந்து கொண்டு உள்ளது.இப்போது தடை மிக பெரியதாக இருக்கும்.
உண்மையை சொன்னால் ஞானம் பெற்ற மனிதர் வெறுமனே மிகமிக சாமாணியராகவே ஆகிறார்.சிறப்பான எதுவும் அவரிடம் இருப்பதில்லை,அதுவே அவரது சிறப்பு.எந்த அளவுக்கு அவர் சாதாரணமாக இருக்கிறார் என்றால் தெருவில் அவரை பார்த்ததும் பாராமல் நீங்கள் தாண்டி போய்விட முடியும்.ஆன்மீக மனிதரை உங்களால் தாண்டி போய்விட முடியாது.அவரை சுற்றிலும் ஒரு ஆற்றல் அலையை அவர் கொண்டு வருவார்.அவர் ஆற்றலாய் இருப்பார்.சாலையில் உங்களை அவர் கடந்து சென்றால் அவரால் அப்படியே குளிப்பாட்டப்பட்டு விடுவீர்கள்.நீங்கள் ஒரு காந்தம் போல் அவரால் கவரப்படுவீர்கள்.
ஆனால் ஒரு புத்தரை நீங்கள் தாண்டி போய்விடமுடியும்.அவர் ஒரு புத்தர் என்பதை நீங்கள் அறியாதிருந்தால் உங்களுக்கு தெரியப்போவதில்லை.ஆனால் ரஸ்புதீனை அப்படி உங்களால் தாண்டி போய்விட முடியாது.மேலும் ரஸ்புதீன் ஒரு கெட்ட மனிதரும் அல்லர்.ரஸ்புதீன் ஒரு ஆன்மீக மனிதர்.ரஸ்புதினை கவனிக்காமல் தாண்டி போய்விட உங்களால் முடியாது.அவரை பார்த்ததுமே அவரால் ஈர்க்கப்படுவீர்கள்.உங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை நீங்கள் பின்தொடர்வீர்கள்.ஜாருக்கு நடந்தது அதுதான்.ஒரு முறை அவரை கண்டதுமே அவர் அடிமையாகிவிட்டார்.ஒரு புயல் போல் அவர் வருவார்.அவரால் கவரப்படாமல் இருப்பது கடினம்.
ஒரு புத்தரால் கவரப்படுவது கடினம்.பல தடவை நீங்கள் அவரை அறியாமல் கடந்து போய் விட முடியும்.அவ்வளவு எளிமையும் சாதாரணமும் ஆனவர் அவர்.அதுதான் அவரது அசாதாரண தன்மை.ஆனால் இருத்தலை பற்றி அவருக்கு மட்டுமே தெரியும்.உயிர் என்ன என்பதை அவர் மட்டுமே அறிகிறார்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.எவ்வித ஆன்மிக ஆற்றல்களை அடையவும் ஒரு போதும் முயலாதீர்கள்.உங்களின் பாதையில் தாமாக அவை வந்து சேர்ந்தாலும் கூடிய சீக்கிரத்தில் அவற்றை உதறிவிடுங்கள்.அவற்றிடம் தொடர்பு வைத்து கொள்ளாதீர்கள்.அவற்றின் சூழ்ச்சிகளுக்கு செவிசாய்க்காதீர்கள்.இதில் என்ன தவறு இருக்கிறது?உங்களால் மற்றவர்களுக்கு உதவ முடிகிறதே.நீங்கள் ஒரு மிகப்பெரிய நலம் விளைவிப்பவராக ஆக முடிகிறதே.என்று அவை கூறும்.ஆனால் அப்படி ஆகாதீர்கள்.நான் ஆற்றலை,அதிகாரத்தை தேடவில்லை,யாரும் யாருக்கும் உதவி செய்துவிட முடியாது என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.உங்களால் ஒரு வித்தைகாட்டுபவராக ஆக முடியும்,ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது

No comments:

Post a Comment