For Read Your Language click Translate

29 May 2014

கம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probability and combination formulae in excel sheet)

எக்ஸெல் COMBIN பார்முலா

எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.
இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக்காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. 10 எண்கள் உள்ளன. (0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும்? நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.
இந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா. இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும். sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : =COMBIN(26+10,4)
எத்தனை இணைப்பு இதில் உருவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா? 58,905 இணைப்பு கேரக்டர் களை உருவாக்கலாம்.

No comments:

Post a Comment