For Read Your Language click Translate

Follow by Email

25 May 2014

மூலிகை - அறிய வேண்டிய தகவல்கள்

மூலிகைவளம்
பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.
Friday, 01 February 2013 13:03
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
 ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின்  மேல் வெறுப்பு உண்டாகிறது.
சுவை நரம்புகள் பல காரணங்களால் தனது சுவை உணரும் தன்மையை இழக்கின்றன. சுரம், காமாலை, வயிற்று கிருமிகள், இரத்தச்சோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய் நிலைகளில் நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால் உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால் நோய் சரியானதும் மீண்டும் சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன. பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர் கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில் நிரந்தரமாகவே நாவின் சுவை அரும்புகள் செயலிழந்து விடுகின்றன. நாவில் ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல் அமிலச் சுரப்பும், நாவில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை கிருமிகளும் கூட நாவின் சுவையை மாற்றிவிடுகின்றன.

உண்ணும் உணவின் சுவை தெரியாமலும், உணவின் மேல் விருப்பம் இல்லாமலும், பசியின்மையாலும் தோன்றும் ருசியின்மையை சித்த மருத்துவம் அரோசகம் என குறிப்பிடுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பி, கபால நரம்புகளை தூண்டி உண்ணும் உணவின் ருசியையும், தன்மையையும் நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த ஏராளமான உணவுப் பொருட்களை நமது முன்னோர்கள் உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி, பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை, துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும் பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் பக்குவப்படுத்தப்பட்டு உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட்டு படுகின்றன. இவை நாவின் சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன. இந்த உணவுகளில் சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காயே நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

பிலன்தஸ்  டிஸ்டிகஸ்  என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது. அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.
அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு  நீக்கி  நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய  இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.
4
Wednesday, 02 January 2013 11:46
https://lh5.googleusercontent.com/-I9CJrXWxHXs/UOQP05vyxmI/AAAAAAAAxk0/dBbnnpJZuP0/s500/Sappathi_Kalli.jpg
நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.
இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
   
மேலும் நாம் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகுகின்றன.
    சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும். இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன்  அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்துவதால் கட்டிகளை உடனே உடைத்து அவற்றை ஆற்றும் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.    
    இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.
    ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.
    முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.  
3
Monday, 17 December 2012 10:12
https://lh3.googleusercontent.com/-0WT5oSE6xI0/UM7hknz1mVI/AAAAAAAAuko/4Q7leoKXrCs/s476/Smilax_zeylanica.jpg
முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.
அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.
நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.
போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.
Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.
டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
2
Friday, 26 October 2012 01:58
https://lh5.googleusercontent.com/-9B_54NU1LjA/UInRaVcxOlI/AAAAAAAAlHg/e0mOpHie2Ws/s476/ginger.jpg
இஞ்சி மஞ்சள் இனம், இஞ்சி காய்ந்தால் சுக்கு என்பர். கொல்லிமலை இஞ்சி காரமும், மணமும் நிறைந்தது.கொல்லிமலையில் மண்ணின் வளத்துக்கு ஏற்ப அதிகமாக விளைகிறது. மலையில் இயற்கையாக விளைந்தாலும் பணப் பயிராகவே பார்க்கப் படுகிறது.

இஞ்சியின் குணங்கள்: இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சி, பசியைத் தூண்டிவிடும். உணவை செரிக்க வைக்கும் சுரப்பிகளை சுரக்க வைக்கும், மூட்டுக்களுக்கு வலு சேர்க்கும் தலை சுற்று மயக்கம் போக்கும், உடல்வலி, சளி இருமலைப் போக்கும்.

திரிகடுக சூரணத்தில் இஞ்சி சேர்க்கப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா செரியாமை சுவையின்மை ஆகியவற்றை குணமாக்கும் உணவு செரிக்கும் இரைப்பை, சிறு குடல், பெருகுடல் ஆகியவற்றை செயல் பட வைக்கும்.

சாப்பிடும் முறை: தோல் எடுத்த இஞ்சியைப் பொடிபொடியாக நறுக்கி தேனில் ஊறவைக்கவும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். பசி எடுக்கும் உணவு செரிக்கும். தலை சுற்றல், மயக்கம் தீரும் நாம் வழக்கமாக சாப்பிடும் பழச்சாறுகளில் இஞ்சியை நசுக்கிப் போட்டு வடிகட்டி பருகினால் நல்ல மனமும், சுவையும் கிடைக்கும். மோரில் இஞ்சி தட்டிப்போட்டு உப்புப் போட்டு பருகினால் மேலும் பல உடல் நலன்கள் ஏற்படும். இப்படி இஞ்சியை  உணவில் சேர்த்துக் கொள்வதால் மேற் சொன்ன பல வியாதிகள் தீரும்.  

இப்படி சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், நாம் அன்றாடம் செய்யும் தேங்காய் சட்னி தக்காளிக் குருமா கொத்து மல்லிப் புதினாத் துவையல் இவைகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டு சாப்பிடலாம். மஞ்சள் போலவே இருக்கும் மா இஞ்சி மாங்காய் வாசனையோடும் ருசியோடும் இருக்கும். இதையும் சமையலுக்கு பயன்படுத்தலாம், இதிலும் மருத்துவ குணங்கள் உண்டு.
இவற்றையும் காண்க :
1
Saturday, 20 October 2012 04:10
https://lh5.googleusercontent.com/-1Mw_49S8zM8/UIILzBozVqI/AAAAAAAAj8E/9qEXV1K5aLE/s476/Malabar+Spinach2.preview.jpg
காலை மற்றும் இரவு நேர உணவுகளை விட அறுசுவையுடன் விருந்து போல வயிறு முட்ட ரசித்து, ருசித்து சாப்பிடும் உணவு மதிய உணவுதான்.
ஆகவேதான் கல்யாணம், விழா போன்ற கொண்டாட்டங்களில் மதிய உணவான சாப்பாட்டை வயிறு முட்ட ருசிப்பதற்கு ஒரு கூட்டமே பந்திக்காக காத்திருப்பதுண்டு. ஆகவே மதிய சாப்பாட்டில் காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு பலவிதமான கூட்டு, பொரியல், பச்சடி என நாக்கில் எச்சில் ஊறவைக்கும் உபஉணவுகளும் பரிமாறப் படுவதுண்டு.

ஒவ்வொரு நாள் உணவிலும் ஏதேனும் ஒரு கீரையை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோல் கீரையை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஆண்மை அதிகரிப்பதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. பெரும்பாலான கீரைகள் மிகவும் குளிர்ச்சித்தன்மை உடையதுடன் மலத்தையும் இலக்கும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு சளித்தொல்லை, தொண்டைக்கட்டு போன்றவை எப்பொழுதாவது ஏற்படலாம். இந்த தொல்லைகளுக்காக பயந்து சிலர் கீரையை உட்கொள்வதில்லை. அதுபோன்றவர்கள் கீரையுடன் பருப்பு, மிளகு, சீரகம், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றை சரியான முறையில் சேர்த்துக்கொண்டால் இந்த தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

தொடர்ந்து ஒரே கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு கீரையில் உள்ள உப்புகள் இரத்தத்தில் அதிகமாக கலந்து கற்களை உண்டாக்கலாம். அது போன்றவர்கள் மூடிய பாத்திரத்தில் கீரையை நன்கு வேகவைத்து, நீரை வடிகட்டி இலைகளை மட்டும் சமைத்து உபயோகப்படுத்தலாம். இதனால் உப்பை தவிர பிற சத்துகள் வீணாகாமல் உடலில் சேருகின்றன. அது போல் கீரையிலுள்ள இரும்பு, பாஸ்பரஸ், சுண்ணாம்பு, சிலிகா, துத்தநாகம் மற்றும் செலினிய சத்துகள் செல் அழிதல் மற்றும் முதிர்தலை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டிக்கின்றன. பெரும்பாலான கீரைகள் போகத்தை அதிகப்படுத்துவதுடன், நாடி நரம்புகளுக்கு வலுவையும் உண்டாக்குகின்றன.

பலவிதமான கீரைகளை நாம் அடிக்கடி உட்கொண்டாலும், சில கீரைகளே அனைவரும் உட்கொள்வதற்கு ஏற்றதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் காணப்படுகின்றன. அது போன்ற கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. தரைப்பசலை, கொடி பசலை என இரண்டு வகைகளாக காணப்படும் பசலைக் கொடிகளில் சிவப்பு நிறத்தண்டுகளையும், சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த இலைகளையுடைய கொடி பசலையே உணவுடன் கூட்டாக செய்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ள பசலைக்கீரையை வாரம் இரண்டு முறையாவது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன், உடல் உஷ்ணம் தணியும்.

போர்டுலேகா ஸ்பீசஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட  போர்டுலேசியே குடும்பத்தைச் சார்ந்த பசலைக்கொடிகள் நட்டு வைத்தால் கூட முளைத்து, கொடியாக படரும் தன்மையை உடையவை. உணவுடன் கடையலாகவும், கூட்டாகவும், குழம்பாகவும் பல விதங்களில் பசலைக்கீரை பாகப்படுத்தப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.
இதோ பசலைக்கீரை கூட்டு செய்யும் முறை:
 
பசலைக் கீரையை நன்கு அலசி காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 100கிராம் பாசிப்பருப்பை மைய வேகவைத்து அதில் வதக்கிய வெங்காயம் 100கிராம், கடுகுஅரைத்தேக்கரண்டி, உழுந்தம்பருப்பு - அரைதேக்கரண்டியை நல்லெண்ணெயில் தாளித்து, வெந்த பாசிப்பருப்பில் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். அதன்பின் அரைமூடி தேங்காயை அரைத்தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு அரைத்து அத்துடன் மஞ்சள்தூள்‡1தேக்கரண்டி, மிளகாய்த்தூள்அரை தேக்கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பாசிப்பருப்புடன் கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 
சுவையான நீர்ச்சத்து மிகுந்த பசலைக்கீரை கூட்டை மதிய உணவுடன் அடிக்கடி உட்கொள்ள உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் மற்றும் அக்கி, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
1
Tuesday, 16 October 2012 09:36
https://lh5.googleusercontent.com/-QTLCiJdHoXg/UH0awQZOgMI/AAAAAAAAjNY/gYZ5Ylgn66s/s800/ragi%2520%2528Custom%2529.jpg
உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றல் எதில் இருக்கிறது ?
உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்குவதுடன் பலவித நோய்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் இந்திய உணவு வகைகள் பல மக்களின் உடல்வாகுக்கும், சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு காணப்படுகிறது.
உடனடி சக்தியை தரக்கூடிய அரிசி உணவை தென்னிந்தியர்கள் அதிகம் உண்பதும், தாமத சக்தியை தரக்கூடிய கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை வட இந்தியர்கள் அதிகம் உட்கொள்வதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். உடலின் தன்மைக்காக மட்டுமின்றி, சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு நாம் உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.
வெறும் அரிசியை மட்டுமே உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உண்டாகும் பொழுது பிற உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், ருசி பிடிக்காமலும் மறுபடியும் அரிசி உணவுகளையே உட்கொண்டு தங்கள் சர்க்கரைநோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றனர். அது போல் வட இந்தியர்கள் கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை உட்கொள்வதால் உடனடி சக்தி கிடைக்காமல் உடல் உழைப்பு சற்று குறைந்து காணப்படுகின்றனர். ஆகவே ஒவ்வொருவரும் பலதரப்பட்ட சத்துக்களையும் உள்ளடக்கிய கலப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அரிசியை விட ஊட்டச்சத்து அதிகம் மிகுந்த கோதுமை போன்ற பல தானியங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றையும் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி இதர சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய தானியங்களில் முக்கியப் பங்கை வகிப்பது ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஆகும்.
சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. அரிசியைப் போன்றே சர்க்கரையளவு இதில் காணப்பட்டாலும் சீரண மண்டலத்தில் சர்க்கரையை கொஞ்சங் கொஞ்சமாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளும் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
எலுசின் கோரக்கேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட போயேசியே குடும்பத்தைச் சார்ந்த புல்லைப் போல் வளரும் கேழ்வரகு தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. கருஞ்சிவப்பு நிற ராகியை விட வெள்ளை ராகியே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ராகியில் பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.
கேழ்வரகை களியாக கிண்டியோ, புட்டு போல் வேகவைத்தோ, அடை அல்லது ரொட்யாக சுட்டோ , கூழ் போல் செய்து குடித்தோ பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கால்கிலோ கருப்பட்டியை 300மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அரைகிலோ ராகிமாவு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் நான்கு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், இந்த கருப்பட்டி நீரை கலந்து கெட்டியாக பிசையவும். இதனை நல்லெண்ணெய் ஊற்றி ரொட்டியாக சுட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ராகியை புட்டாக செய்து சாப்பிடலாம்.
அரைகிலோ ராகி மாவை தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து உதிரியாக கிளறி 10 நிமிடங்கள் இட்லி போல் ஆவியில் வேகவைத்து அத்துடன் பொடித்த ஏலக்காய்த்தூள், தேவையயனில் தேங்காய் துருவல் மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையளவு அதிகப்படாமல் கட்டுப்படுத்துவதுடன், பசியையும் மட்டுப்படுத்தும்.
கேழ்வரகு கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில் தீவீரமாக செயல்படுவதால் சிலருக்கு தோல் வறட்சியும், அரிப்பையும் உண்டாக்கலாம். அது போன்றவர்கள் உணவில் கேழ்வரகை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
11
Thursday, 20 September 2012 10:36
https://lh6.googleusercontent.com/-ghpvnZwAumg/UFrVbErXGPI/AAAAAAAAe5c/JcM2hc0cI0g/s800/pistha.jpg
இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,
நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.
இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன்றுதல், முதுமைகால நோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறைந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தினாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒருவிதமான சோர்வு நம்மை ஆட்கொள்கிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது போல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை. ஹார்மோன்களின் செயல்பாடானது செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முதுமையை கட்டுப்படுத்துகின்றன. டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், அலித்தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பலஹீனமும் உண்டாகின்றது. அதே போல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடி உதிர்தல் போன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்களை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்டுயூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுடன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.
தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபட வாய்ப்பில்லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா. பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.
பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும். பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.
மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது.
17
Monday, 27 August 2012 14:36
https://lh6.googleusercontent.com/-wTyw6cS6Zf0/UDto5uVgFpI/AAAAAAAAbRg/Q1iXyhvI9cI/s800/Sphaeranthus-raw-honey.jpg
புரதம் நம் உடலுக்கு மிகவும் அவசியமானதாகும். இரத்தத்தில் இந்த புரதமானது அல்புமின் மற்றும் குளோபிளின் என்ற வடிவத்தில்
பிளாஸ்மா திரவத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த புரதங்கள் உடல் வலிமையை கூட்டவும், செல் வளர்ச்சியை சீர்படுத்தவும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை ஏற்றுக்கொள்ளவும் உதவுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இம்மியுனோ குளோபுளின்களின் பலவகையான பரிணாம மற்றும் பரிமாற்றங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
புரதங்களின் பல அவதாரங்களில் ஒன்றுதான் நோய் எதிர்ப்பு சக்தியாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ஆன்டிஜன் ஆன்டிபாடி செயல்பாட்டை கட்டுப்படுத்தும் புரத அமைப்பானது சீராக இல்லையயனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் ஆட்டோ இம்மியுன் என்று சொல்லப்படும் சுய குறை நோய் எதிர்ப்புத் தன்மையால் பலவகையான தொற்று நோய்களும் தன்னிச்சையான குறை எதிர்ப்பு சார்ந்த நோய்களும் உண்டாகின்றன.
நோய் எதிர்ப்பு குறைவால் கழுத்து, அக்குள், அடிவயிறு, தொடையிடுக்கு பகுதிகளில் உள்ள லிம் திரவ முடிச்சுகளில் நெறி கட்டுகின்றன. அடிக்கடி சளி பிடித்தல், சுரம் உண்டாதல் போன்ற சுவாச நோய்கள் தோன்றுகின்றன. தோல் வறட்சி, சோரியாசிஸ், கரப்பான், அத்திக்காய் குட்டம் போன்ற தோல் நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தான் உண்டாகின்றன. இவை தவிர மாறி, மாறி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் சர்வாங்கி வாதம் போன்ற மூட்டு அழற்சி நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அதிகப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய் நோயாளிகள் மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் பலவித தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். நாட்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உடல் உருக்குலைதல், எடை மாற்றம், பொதுவான உடல் பலஹீனம், எளிதில் பல நோய்களுக்கு ஆட்படுதல் போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இளம் வயதிலேயே முதுமையைப் போன்ற உருவ மாற்றம் ஏற்படுகிறது. இளநரை, பார்வை குறைபாடு, தோல் வறட்சி, தோல் சுருக்கம், மடிப்புள்ள பகுதிகளில் சதை தொங்குதல் போன்ற பல குறைபாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளினால் பக்கவிளைவுகளினாலும் தோன்றுகின்றன. இளம் வயதினரும், நடுத்தர வயதினரும் தற்சமயம் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்கு ஆளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொட்டைக்கரந்தை
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை. ஸ்பேரான்தஸ் இன்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வயலோரங்களில் களைச்செடியாக வளருகின்றன.
பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்.
வாசகர் கேள்வி : எனது குழந்தைக்கு வயது 8 ஆகிறது. சிறு வயதிலிருந்தே இரைப்பு நோய் உள்ளது. இதனால் அவளுக்கு குளிர்ந்த பொருட்கள் எதையும் கொடுப்பதில்லை. பனிக்காலம் என்பதால் இரைப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அவள் சாக்லேட்டை அதிகம் சாப்பிடுவாள். சாக்லேட் காரணமாக இரைப்பு அதிகமாக உள்ளதா? இதற்கு மருந்து கூறவும்.
மருத்துவர் பதில்: சாக்லேட் போன்றவற்றிலுள்ள வேதிப்பொருட்களும், செயற்கை உணவு பதனிகளும் பலருக்கு பலவிதமான ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. சாக்லேட்டுக்கு பதிலாக கடலைமிட்டாயை அளவோடு கொடுக்கலாம். இது நமது இந்திய குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உப உணவு. முசுமுசுக்கை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து கொடுக்க இரைப்பு தணியும். கருந்துளசி மற்றும் வெற்றிலை இலைச்சாற்றை மார்பு மற்றும் முதுகில் தடவி வர இரைப்பு தணியும்.
பாலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதில் வைட்டமின் சி கிடையாது. அதுபோல் இரும்புச் சத்தும், வைட்டமின் டியும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. ஆகவே பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் நிறைவடைந்ததும் கொஞ்சங் கொஞ்சமாக காய்கறிச்சாறு, பழச்சாறு, வேகவைத்த முட்டை, நன்கு வேகவைத்த மாமிசம் மற்றும் பருப்புகளை கொஞ்சங் கொஞ்சமாக கொடுத்து வர வேண்டும்.
பசும்பாலில் இருந்து தயார் செய்யப்படும் உடனடி பால் பொடியில் 26 சதவீதம் புரதமும், 26 சதவீதம் கொழுப்பும் காணப்பட வேண்டும். ஆனால் தற்சமயம் வெளிச்சந்தையில் கிடைக்கும் உடனடி பால் பொடியில் 14 சதவீதம் புரதமும், 10 சதவீதம் கொழுப்புமே காணப்படுகிறது. ஆகவே பசும்பால் கொடுக்க வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு தங்களது மருத்துவரை ஆலோசித்து தரமான உடனடி பால்பொடியை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பது நல்லது.
44
Friday, 07 September 2012 07:16
https://lh4.googleusercontent.com/-SP6gL31tGBE/UEmC0Gb1FHI/AAAAAAAAdDA/mAvYYbPpovQ/s388/onion.jpg “உணவே மருந்து மருந்தே உணவுஎன்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.
நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுண்கிருமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாரம்பரிய இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பல பதார்த்தங்கள் உணவுக்கு சுவையை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. ஒரு உணவு பதார்த்தமானது உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்பட்டால் அதைப் போல் சிறந்தது வேறு எதுவுமில்லை.
இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் குழாய்கள் தடிமன் அடைகின்றன. இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன. அதே போல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது. உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, வி­க்கடிகள் போன்றவற்றால் புரோஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன. மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன. அது போல் இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.

உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட  உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமாகவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இந்திய உணவில் முக்கியப் பங்கை வகிப்பது வெங்காயமே. வெங்காயம் உணவின் ருசியை கூட்டுவதுடன், பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தில் சிறிதாக காணப்படும் சற்று காரம் மிகுந்த சின்ன வெங்காயமே ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெங்காயத்தில் ஏராளமான நீர்ச்சத்து அடங்கியுள்ளதாலும், குறைந்த அளவு கலோரிகளே சேமிக்கப்படுவதாலும் உடல் பருமனானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் வெங்காயம் மிகச் சிறந்த உணவாகும். 100கிராம் வெங்காயம் உட்கொள்ளும் பொழுது 51 கலோரிகள் மட்டுமே சத்து கிடைக்கின்றது. ஆகவே கலோரி சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளுடன் வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுகிறது.
வெங்காயத்திலுள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, , பி, சி வைட்டமின்கள் இரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குகின்றன. இவை உடலில் சேரும் பொழுது பைபிரினோலைசின் என்னும் பொருளை உற்பத்தி செய்து இரத்தக் கட்டிகளை கரைக்கின்றன. ஆகவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வெங்காயம். வெங்காயத்திலுள்ள அலினின் மற்றும் அலிசின் என்ற பொருள் செல்களுக்கு இன்சுலினின் தேவையை குறைக்கிறது. அது போல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிய வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்ள அதிலுள்ள தையோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றன.
https://lh5.googleusercontent.com/-UPxidh8mgog/UEmC1CyubZI/AAAAAAAAdDE/A8e5sKBnyw0/s443/17.jpg

தேனீ மற்றும் வி­ வண்டுகள் கொட்டிய இடங்களில் சின்ன வெங்காயத்தை தடவ வி­ம் நீங்கும். ஆறாத புண்கள் ஆறவும், கட்டிகள் உடையவும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, லேசாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரலாம். வெயில் காலங்களில் ஏற்படும் தோல் கருமை மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் உட்கொள்வதுடன் வெங்காயச் சாறை வெயில் படும் இடங்களில் தடவி வரவேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும், விரைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதாலும் தாம்பத்ய குறைபாடுள்ள ஆண்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிலக்கின் போது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள் வெங்காயத்தை மைய அரைத்து சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.

எனக்கு உடல் பருமன் உள்ளது. மலச்சிக்கலுக்காக வாழைப்பழம் சாப்பிடுகிறேன். இதனால் இன்னும் உடல் பருமானவது போல் உள்ளது. நான் வாழைப்பழம் சாப்பிடலாமா? வாழைப்பழ தோலில் மட்டுமே நார்சத்து உள்ளது. உள்ளே உள்ள பழத்தில் நார்சத்து இல்லை. மேலும் வாழைப்பழத்தின் உள்ளே உள்ள மாவுப்பொருள் உடல் பருமனை கூட்டலாம். ஆகவே வாழைப்பழத்தை உட்கொள்ளும் பொழுது மேற்தோலின் உட்புறமுள்ள நார்சத்து நிறைந்த, சற்று மென்மையும், கடினமும் கலந்த பகுதியை உரித்து சாப்பிட மலச்சிக்கலும் நீங்கும். உடல் பருமனும் கூடாது. மேலும் தோலின் உட்புறம் உடலின் ஆயுளை நீட்டிக்கும். செரடோனின் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
 
இரத்தச்சோகை இப்பொழுது பெரும்பாலானோரை பாதித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் இரத்தச்சோகையால் அவதிப்படுகின்றனர். 12 வயதை நெருங்கும் பெரும்பாலான பெண்களுக்கு இரத்தச்சோகை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கம்பு, கேழ்வரகு, சோளம், வெந்தயம், பாதாம், முந்திரி, பிஸ்தா, பட்டாணி, உளுந்து, சுண்டைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ், அனைத்து கீரைகள், பேரீட்சை, மாதுளை, ஆப்பிள், நெல்லிக்காய் போன்ற பழங்களிலும், மீன், ஆட்டு இறைச்சி, ஈரல், மூளை போன்ற அசைவ உணவுகளிலும் இரும்புச் சத்தை அதிகப்படுத்தும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே இவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் இரத்தச் சோகையை தவிர்க்கலாம்.
12
Monday, 03 September 2012 10:58
https://lh4.googleusercontent.com/-PymJ7WIkiz4/UERw3t35dwI/AAAAAAAAcZ8/0tf47a_5oU0/s800/boswellia_serrata.jpg
பலரை சமாளிக்கவும், பல வேலைகளை தள்ளிப்போடவும் நாம் சொல்லும் காரணம் தான் தலைவலி.
தலைவலி வந்தால் போதும் எல்லா வேலைகளையும் மூட்டை கட்டிவிட்டு நாம் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டு யாரையும் பார்க்கவும், பேசவும் பிடிக்காமல் குனிந்து உட்கார ஆரம்பித்துவிடுவோம். தலைவலி குறைந்தால்தான் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிப்போம். ஆனால் தலைவலிக்கு என்ன காரணம் என்று அறியாமல் பெரும்பாலும் வலி மாத்திரைகளை போட்டு தற்காலிகமாக தலைவலியை ஒத்திவைத்து விடுவோம். இதனால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக வயிற்றுவலி, இரத்தவாந்தி, சிறுநீரக கோளாறு என பல தொல்லைகள் ஆரம்பித்துவிடும்.
தலைவலிக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வேலைப்பளு, தூக்கமின்மை, அதிக தூக்கம், மன உளைச்சல், சளி, சத்தம், பயம், நாட்பட்ட சளி, அதிக இரத்த அழுத்தம், சுரம் போன்ற பல எண்ணிலடங்கா காரணங்களால் தலைவலி உண்டாகிறது. மூளை, கண், சுவாசப்பாதை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏராளமான இரத்தக் குழல்கள் உள்ளன. இந்த இரத்தக் குழல்கள் மூளைக்கு மட்டுமின்றி முகதசைகள், கண் தசைகள், கழுத்து தசைகள் என அனைத்து பாகங்களுக்கும் ஏராளமான இரத்தத்தை அனுப்புகின்றன. இரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும், கபால அறையிலுள்ள இரத்தக்குழல்கள் சுருங்குவதாலும், கொழுப்பு அடைப்பதாலும், சைனஸ் அறைகளில் சளி தேங்குவதால் காது, மூக்கு, தொண்டைப் பகுதியில் இரத்தக்குழல்கள் பாதிக்கப்படுவதாலும், பல வகையான நுண்கிருமிகள் தொற்றினாலும் தலைவலி தோன்றுகிறது.
தலைவலி நீடிக்கும் பொழுது நெற்றியின் இரண்டு புறங்களிலும் சம்மட்டியால் தட்டுவது போன்ற வலி அல்லது விண், விண் என தெரிப்பது போன்ற வலியுண்டாகும். நீடித்த தலைவலியில் கடுமையான வாந்தி மற்றும் தலைச்சுற்றல் உண்டாகும். கடும் வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு இரத்தக்குழாய்கள் விரிவடைகின்றன. அவ்வமயம் திடீரென நிழலில் தங்கி ஓய்வெடுக்கும் பொழுது இரத்தக்குழாய்கள் திடீரென சுருங்குவதால் தலைவலி உண்டாகிறது. அது போல் தலையில் குளிர்ந்த நீரை ஊற்றுவதால், குளிர்பானங்கள் மற்றும் குளிர்ச்சியான உணவுப்பொருட்களை உட்கொள்வதாலும் மூளைக்கு செல்லும் இரத்த நாளங்கள் சுருங்கி தலைவலி ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு தலை குளித்தவுடன் தலைவலி உண்டாகிறது. இவை தவிர ஒவ்வாத நறுமணத்தை உண்டாக்கும் வாசனை திரவியங்கள், பூ, புகை மற்றும் மாசடைந்த காற்று, தூசி போன்றவற்றால் தலைவலி கடுமையாகிறது. தலைவலி அதிகரித்த நிலையில் ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும். ஓய்வு இல்லாவிடில் தலைவலியானது எளிதில் குறையாது.
தலைவலி தீவிரமாகும் பொழுது நெற்றி, கன்னக்கதுப்பு, பிடரி, காதின் பின்புறம் போன்ற பகுதிகளில் சூட்டை அதிகப்படுத்தக்கூடிய உஷ்ண வீரியமுடைய மருந்துகளை தடவுவதாலோ அல்லது சூடான ஒற்றடம் கொடுப்பதாலோ தலைவலி நன்றாக குறைய ஆரம்பிக்கும். சின்ன வெங்காயம், இஞ்சிச்சாறு, நீலகிரி தைலம், வேப்பெண்ணெய், கிராம்புத் தைலம் போன்ற மருந்துகள் பல்லாண்டு காலமாக தலைவலியை கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


சாம்பிராணி
தலைவலி மாலை நேரத்தில் உண்டாகும் தலைவலியினால் இரவில் பலருக்கு தூக்கம் ஏற்படாது. சூரிய உதயத்தின் போது ஆரம்பித்து, சூரியன் மறையும் வரை உண்டாகும் தலைவலியானது சூரியாவர்த்தம் என்றும் சூரியன் மறைவிற்கு பின் தோன்றி அதிகாலை சூரியன் மறையும் வரை உண்டாகும் தலைவலியானது சந்திராவர்த்தம் எனவும் சித்த மருத்துவத்தில் வழங்கப்படுகிறது. காரணம் ஆயிரம் இருந்தாலும் தலைவலியை கட்டுப்படுத்தும் வல்லமை பொருந்தியது நாம் வழிபாட்டில் பயன்படுத்தும் சாம்பிராணி.
ஸ்டீராக்ஸ் பென்சாயின் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டீரேசியே குடும்பத்தைச் சேர்ந்த சாம்பிராணி மரங்கள் தென்கிழக்கு நாடுகளிலும், மலைப்பகுதிகளிலும் ஏராளமாக விளைகிறது. இதன் தண்டிலிருந்து கசியும் ஒரு வகையான ரெசினே சாம்பிராணி என்று அழைக்கப்படுகிறது. இறந்த உடலைப் பதப்படுத்த மம்மிகளில் சாம்பிராணியை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. நுண்கிருமிகளை கொல்வதால் வழிபாட்டில் சாம்பிராணியை பயன்படுத்துகிறோம்.
சாம்பிராணியை அனலில் காட்டி, லேசாக உருகியதும் கிராம்புத் தைலத்துடன் கலந்து நெற்றியில் பற்றுபோட தலைவலி நீங்கும். அதுபோல் குளியல் மஞ்சள் 1 பங்கு, கஸ்தூரி மஞ்சள் 1 பங்கு, பொரித்த வெங்காரம் அரை பங்கு, சாம்பிராணி அரை பங்கு, மிளகு அரைபங்கு, தோல் நீக்கிய சுக்கு அரைபங்கு, சாதிக்காய் அரைபங்கு, வறுத்த ஓமம் கால்பங்கு, கிராம்பு கால் பங்கு, பொடித்த கற்பூரம் கால்பங்கு இவற்றை இஞ்சிச்சாறு விட்டு மைய அரைத்து பட்டாணியளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் பொழுது வெந்நீரில் குழப்பி நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் சாம்பிராணி சேர்ந்த நீர்க்கோவை மாத்திரையை வாங்கி இஞ்சிச்சாறு அல்லது தாய்ப்பாலுடன் கலந்து நெற்றியில் பற்றுபோட தலைவலி தீரும்.
4தமிழ்மீடியாவுக்காக: டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.Saturday, 06 October 2012 23:54
https://lh5.googleusercontent.com/-MdZQ9jO2Znk/UHCnZpW5GII/AAAAAAAAhcY/gcn9KCZBPHs/s450/turmeric-june-08.jpghttps://lh5.googleusercontent.com/-IvSFeEZ9LtE/UHCnY6MeLTI/AAAAAAAAhcU/ukcGtAPpaW8/s306/tumeric_0706.jpg
https://lh6.googleusercontent.com/-RJXa6l3Bs_g/UHCnW6AtD-I/AAAAAAAAhcE/KD5qMP-lDWA/s513/turmeric_627528f.jpg
நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம்.
 மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது. வயிற்றின் உள்ளே  உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள்தான்.

    
சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை, வேப்பங்  கொழுந்துடன் வாரா  வாரம் ஒரு முறை  அரைத்துக் கொடுத்தால், வயிற்றில் பூச்சிகள் இருக்காது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால்  இருமல் உடனே நின்றுவிடும்.
   
மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் தூளை  சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே  பொரித்த  சிப்ஸ்வடைஅப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும்.

  
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால், அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போது, மிளகின் கெட்டத் தன்மையை  மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது  புற்று நோய்கூட அண்டாது.

   
இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய்  கொஞ்சம்  குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான்.
  
விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு  அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.
  
மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும்போது  ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம்  பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.
   மஞ்சளில்  உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும்  அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை  ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும்.

  
அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும்  அழித்து விடும்.

  
மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்!PLEASE NOTE THIS WEB SITE FOR MOOLIGAI KNOWLEDGE:
http://bp2.blogger.com/_VaxInUOziT8/R3sNhhTr7UI/AAAAAAAAAIM/3nnm2J2W4e0/s320/Manjal.jpg
கரிசலாங்கண்ணி.

1) மூலிகையின் பெயர் -: கரிசலாங்கண்ணி
2) தாவரப்பெயர் -: ECLIPTA PROSTRATA ROXB.
3) தாவரக்குடும்பம் -: ASTERACEAE.

4) வேறு பெயர்கள் -: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி(ECLIPTA PROCENA) என்ற பெயர்களாலும் வழங்கப்படும்.

5) வகை -: வெள்ளைக்கரிசலாங்கண்ணி, மஞ்சக்கரிசலாங்கண்ணி.

6) முக்கிய வேதியப்பொரிட்கள் -: இலைகளில் ஸ்டிக்மாஸடீரால், மற்றும்
-டெர்தைனில் மெத்தானால் மற்றும் எக்லிப்டின், நிக்கோடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. 16 வகையான பாலி அசிட்டெலினிக்தை
யொபீன்கள் எடுக்கப் பட்டுள்ளன.

7) தாவர அமைப்பு -: எதிரடுக்கில் அமைந்த வெள்ளை நிற மலர்கள் உடைய மிகக்குறுஞ்செடியினம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளர்வது.
குத்து உரோமங்கள் கொண்ட ஒரு பருவச்செடி தலை சிறியது இரு இன மலர்கள் கொண்டது. கதிருள்ளது. இலைக் கோணங்களிலோ உச்சியிலோ இருக்கும். வெளிவட்ட மலர்கள் பெண்பாலானவை, அரைவட்டத்தில் இரு வரிசையிருக்கும். உள்வட்ட மலர்கள் இரு பாலானவை, 4 -5 மடல் கொண்டுமிருக்கும், வளமானவை, பூவடிச்சிதல், அடுக்குத் தட்டு மனிவடிவமானது. பூவடிச்சிதல், இருவரிசையில் இருக்கும். இலை போன்றது பூத்தளம் தட்டையானது. அல்லிகள், பெண் மலரில், மெலிந்தும், முழுமையாகவோ, இருபிளவாகவோ இருக்கும். மஞ்சள் நிறமானவை. இருபால் மலரில், 4 - 5 மடலாயிருக்கும். மகரந்தப்பை அடி மழுங்கியது. சூல் தண்டுக் கரங்கள் குருகலாயும் மழுங்கியும் இருக்கும். கனி, அக்கீன்கள், கதிர்மலர்களில் முப்பட்டையாயும் வெடித்தும் இருக்கும். வட்டத்தட்டு மலரில் அமுக்கியிருக்கும், பாப்பஸ் 1 - 2 நுணுக்கமான பற்களாகக் காணப்படும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

8) பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும் (சமூலம்)

9. மருத்துவப் பயன்கள் -: இது இருவகைப் பூக்கள் உடையது
மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.
தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.
மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.
காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 - 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.
ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.
கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.
குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.
காது வலி -: இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.
பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.
நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.
குட்டநோய் -: நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.
முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும். வசியமூலிகை - :
பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று "யவசிவய' " என்று நீயும்
அப்பனே கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
சுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
அனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.
-------------------------அகத்தியர் பரிபூரணம்.
கரிசாலை சுட்டெரித்த சாம்பல் மையை நெற்றியில் வைத்து கற்பூர தீபம் காட்டி "யவசிவய" மந்திரம் கூறி திருநீறு கொடுத்தால் அதை அணிந்தவர் வசியமாவார்.
வேர் வாந்தியுண்டாக்கியாகவும், நீர்மலம் போக்கியாகவும்பயன் படுத்தப் படுகிறது. வேர், ஆடுமாடுகளுக்குண்டாகும் குடல் புண் மற்றும் வெளிப்புண்ணை ஆற்றும் கிருமிநாசினியாகவும் பயன்படத்தப் படுகிறது. (சோப்ரா மற்றும் பலர் 1956,நட்கர்னி 1954)

இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம்பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து(கரிசாலைத்தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்துவரத் தலைவலி, பத்தக் கிறுகிறுப்ப், உடல் வெப்பம், பீனிசம், காது, கண் நோய்கள் தீரும்.கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.
-------------------------------------------(மூலிகை தொடரும்)