For Read Your Language click Translate

27 May 2014

நாட்டுமாடு

'பழையக்கோட்டை...

இப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மணப்பாறை... காங்கேயம்... உம்பளாச்சேரி, பர்கூர்... என்ற பெயர்களைச் சொன்னதுமே... அட, நம்ம நாட்டுமாடுங்க... என்கிறோமல்லவா... அந்த வரிசையைச் சேர்ந்ததுதான் பழையக்கோட்டை!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே-யுள்ள பழையக்கோட்டை எனும் கிராமத்தைப் பூர்விக-மாகக் கொண்ட இந்த மாடுகளுக்கு ஒரு காலத்தில் இப்பகுதியில் ஏக மவுசு. இன்றைக்கும் கூட அப்படித்-தான்! ஆனால், அந்த மாடுகளைத்தான் இன்றைக்கு கண்ணிலேயே காணோம். ஆம், கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன பழையக்கோட்டை மாடுகள்.

''பெருசா தீவனச் செலவு வைக்காது; பராமரிப்புச் செலவும் கிடையாது; ஏழை விவசாயிகள்-கூட எளிதா வளர்க்க முடியும்... இதுதான் பழையக்கோட்டை மாடு. இப்பல்லாம் தேடினா கூட பார்க்க முடியல'' என மாடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஏக்கத்தை வெளிப்--படுத்தியபடி இருக்கிறார்கள்.

*காலைத் தேய்த்து நடக்காமல், குதிரை போல தாவும்.
*நான்கு நாட்களுக்கு தீவனம் எடுக்காவிட்டாலும், சோர்வடையாது.
*5 லிட்டர் பால் கொடுக்கும்!
*தனித்தீவனம், பராமரிப்பு தேவையில்லை...
*உழவுக்கும், வண்டிக்கும் ஏற்றது...

No comments:

Post a Comment