For Read Your Language click Translate

10 May 2014

விருட்ச சாஸ்திரம் -ஆத்ம விசாரம்

மனிதன் அடையக் கூடிய ஞான நிலைகளில் இரண்டாவதாக குறிப்பிடப்படுவது ஆணையும் பெண்ணையும் ஒன்றாகப் பார்த்தல் என்பதாகும்.

மர நிழலையும் குறிப்பாக ஆலமர நிழலையும், கிணற்று நீரையும், பெண்களின் தனத்தையும் புரிந்து கொண்டால்தான் ஆண் பெண் தத்துவத்தை ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும். மேற் கூறிய மூன்றுமே வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், பனிக் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

இந்த தத்துவ விளக்கங்களை இறை அவதாரங்களும், அடியார்களும் தங்கள் உபதேசங்களின் மூலமாக மக்களுக்கு அவ்வப்போது அளித்து வருகின்றனர் என்பதும் உண்மையே.

ஆலமர நிழலில் தட்சிணா மூர்த்தி எழுந்தருளி இறை தத்துவத்தின் விளக்கமாய் காட்சி அளிக்கிறார். திருஅண்ணாமலையில் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுக்கு இத்தத்துவ விளக்கத்தை மௌனமாக உபதேசக்கிறார் அல்லவா? இதன் மெய்ப் பொருள் விளக்கமே நாம் திருக்கோயிலில் காணும் தட்சிணா மூர்த்தி கோலமாகும்.

உண்மை எப்படி கடவுளைக் காட்டும் என்னும் தத்துவத்தையே மர நிழல் விளக்குகின்றது. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு எம்பெருமான் அமர்ந்திருக்கும் கல்லால மரத்தின் நிழல் எப்படி இருக்கும் என்று ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.  கல்லால மரத்திற்கு நிழல் உண்டா? நிச்சயமாகக் கிடையாது. நிழல் என்பது என்ன? மனிதர்களின் வினைத் தொகுதியே அவர்களின் நிழலாகக் காட்சி அளிக்கிறது. அதனால்தான் கர்ம வினைகள் சிறிதும் சாராத வள்ளலார் சுவாமிகள் போன்றோருக்கு அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை.

அதே வண்ணம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் எம்பெருமான் அமர்ந்திருக்கும் கல்லால மரத்திற்கும் நிழல் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

திருஅண்ணாமலையில் உள்ள கல்லால மரம் மட்டும் அல்லாது பூமியில் உள்ள ஆலமரம், அரச மரம், துளசிச் செடியும் கர்ம வினைகள் அற்றவையே. ஆனால், அவைகளின் நிழல் பூமியில் விழுவதை நாம் பார்க்க முடிகிறதே என்ற கேள்வி எழலாம். உண்மையில் அவைகளுக்கும் நிழல்கள் கிடையாது. அந்த மரங்களின் நிழல்கள் என்று பார்ப்பது காண்பவர்களின் கர்ம வினை பிரதிபலிப்பே.
முள் இல்லா வில்வமரம் செழிக்கும்
நகர்- திருத்தலம்
எந்த அளவிற்கு இந்த நிழல் பிம்பங்களை நோக்கி ஆத்ம விசாரம் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களைச் சார்ந்த கர்ம வினைகளை அறிந்து உங்களை நீங்களே தூய்மைப் படுத்திக் கொண்டு கர்ம வினைகளிலிருந்து முழுவதுமாக விடுதலை பெறுவீர்கள்.

கர்ம வினைகளிலிருந்து முழுவதுமாக நீங்கள் விடுபட்ட அடுத்த விநாடியே உங்களுக்கு எம்பெருமான் தரிசனம் கிட்டி விடும். இதுவே உண்மை எப்படி கடவுளைக் காட்டும் என்பதன் தத்துவ விளக்கம்.

இன்றைய உலகில் சினிமா, டீவி திரைகளில் தோன்றும் நிழல் பிம்பங்களையும் நிகழ்ச்சிகளையும் நிஜம் என்று நம்பி தங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்வோர் ஏராளம். இதனால்தான் சித்தர்கள்,

‘’ நாங்கள் நிழல்களை நிஜங்களாகப் பார்க்கிறோம்
  நிஜங்களை நிழல்களாகப் பார்க்கிறோம் ” என்று சித்த தத்துவ விளக்கத்தை நமக்கு அருளி உள்ளார்கள்.

மனிதர்கள் நிழல் படங்களை நிஜம் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள், ஆனால், சித்தர்களோ நிழல்களின் நிஜத்தை உணர்ந்து ஆத்ம ஞானம் பெறுகிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? நன்கு ஆத்ம விசாரம் செய்தால்தான் இதன் உண்மைப் பொருள் விளங்கும்.

உதாரணமாக, ஒரு மனிதனின் உருவம் உண்மை. அவனுடைய நிழல் ஒரு பிம்பம், அதாவது ஒரு மாயத் தோற்றமே. ஒரு மனிதனுடைய கர்ம வினைகளே நிழலாகத் தோற்றமளிக்கிறது என்று கூறினோம் அல்லவா? சித்தர்கள் மனிதனின் நிழல் என்ற மாயைக்குப் பின்னால் உள்ள கர்ம வினை என்ற உண்மையைப் பார்க்கிறார்கள். இது நிழலை நிஜமாகப் பார்ப்பதாகும்.

அடுத்தபடியாக மனிதன் என்ற உண்மையும் இறைவனின் நிழல்தானே? இறைவனின் பிரதிபலிப்புதானே மனிதனின் ஆன்மா? இதுவே மனிதன் என்ற நிஜத்தை இறைவனின் பிரதிபலிப்பு என்ற நிழலாகப் பார்ப்பது. இதுவே சித்தர்களின் நிலை

No comments:

Post a Comment