For Read Your Language click Translate

Follow by Email

26 May 2014

ஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒரே செய்தி தியானம்

இளமை பருவம்[தொகு]

ஓஷோ 1931 டிசம்பர் 11 ல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.
ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21ல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

கல்வி[தொகு]

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.
1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.
1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார்.

பம்பாய் வருடங்கள்[தொகு]

1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.

ரஜனீஷ்புரம்[தொகு]

தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது.

கம்யூன் அழிக்கப்படுகிறது[தொகு]

1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர், அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.
அக்டோபர் 28 - எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர்.
அங்கே சிறையில் இருந்த போதுதான் அவருக்கு ‘தாலியம்' என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உலக சுற்றுப் பயணம்[தொகு]

1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.
பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மாரச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.
இதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.

ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்[தொகு]

1987 ஜனவரி - அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார்.
1989 ஜன - பிப்ர அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார்.
1989 - மார்ச் - ஜூன் அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார்.

ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார்[தொகு]

1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோ தன் உடலை விட்டு நீங்குகிறார்.
என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும்.
எனது மக்களிடம் கூறுங்கள் அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம் என்ற அவர் நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன் என்று கூறினார்
அவருடைய ஒரே செய்தி தியானம் தான். அதைதான் அவர் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வந்தார்.