For Read Your Language click Translate

30 May 2014

அறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு



அறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு



அறிவியல் ஆர்வத்தை தூண்டக் கூடிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் குறித்த தொடர்களை ஒளிபரப்பும் டிஸ்கவரி கிட்ஸ் தொலைக்காட்சி, தனது தொடர்கள் மூலம் கல்வி கற்பதில் குழந்தைகளுக்கு உற்சா கத்தை ஊட்டுவதுடன் அவர்களின் கற்பனைத் திறனையும் வளர்க்கிறது. இயற்கை, அறிவியல், காட்டுயிர் வாழ்க்கை, வரலாறு, தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒளிபரப்பி வரும் டிஸ்கவரி கிட்ஸ், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தனது முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, நான்கிலிருந்து பதினொரு வயதிற் குட்பட்ட குழந்தைகளுக்கு போட்டி நடத்துகிறது. குழந்தைகள் தங்கள் பிறந்த நாளை 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் னுஐளுஊடீருஏநுசுலு முஐனுளு ஈளுஞஹஊநுழூனுனு/ஆஆ/லுலு என்ற வடிவத்தில் அனுப்பு வேண்டும். இறுதி நாள்: 15.7.2013. இதில் அதிக வாக் குகள் பெறும் குழந்தைகள் டிஸ்கவரி கிட்ஸ் உடன் கொண்டாடும் வாய்ப்பை பெறுவர். குழந்தைகளிடையே அறிவுசார் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், அவர்களிடையே ஆராய்ச்சி மனப் போக்கு உருவாகும் வகையிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு கிறோம் என டிஸ்கவரி நெட் வொர்க்ஸ் பொது மேலாளர் ராகுல் ஜோக்ரி தெரிவித்துள்ளார்.


தேசிய மனிதவள அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இந்திய வேலை தருவோர் அமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய ராஜீவ்துபே, இந்தியாவில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய தேசிய மனிதவள அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்துபே அவர்கள் தற்போது மகேந்திரா அண்ட் மகேந்திரா குழுமத்தின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளார். மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றி மனிதவள அதிகாரிகள் சமூகத்திற்கு மேலும் ஆக்கபூர்வமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்போவ தாக துபே கூறியுள்ளார்.

தொழில்துறை மேம்பாட்டிற்கு ஆன் லைன் வணிக பயிற்சிகள்

தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை பெறுவ தற்கான வணிகம் சார்ந்த பயிற்சிகளை அளித்து வரும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி உயர்கல்வி நிறுவனமும், வணிகப்பயிற்சி பள்ளியுமான ரிஜென்சிஸ், இந்தியாவில் எம்பிஏ வகுப்புகளை துவக்கியுள்ளது. சான்றிதழ், பட்டயம், இளங்கலை பட்டம் முதல் எம்பிஏ வரை இலவசமாக வழங்கும் வணிகப் பள்ளியாக இருக்கும். இதில் உயர்கல்வி பயில விரும்பும் எவரும் இந்த கல்வி நிறுவனத்தின் இலவசப் படிப்பை பெறமுடியும். தனது அனைத்து பாடத்திட்டங்களையும் ஆன் லைனில் இலவசமாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது என இந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Read more: http://www.viduthalai.in/other-news/76-commerce-news/63686-2013-07-09-11-20-06.html#ixzz3395zn4Xn

No comments:

Post a Comment