For Read Your Language click Translate

10 May 2014

சுர பாலரின் விருட்ச சாஸ்திரம் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று



1857இல் செளரி செளராவில் சாயத் தேவைக்காக ஆங்கில அரசு அவுரிசெடியைப் பயிரிட முடிவு செய்து விவசாயிகளைக் கட்டாயப் படுத்தியது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்தும் ஆங்கில அரசின் அராஜக நடவடிக்கை மக்களைக் கோபமூட்டியது. கலவரம் உண்டாக ஆங்கில அரசு தன் நடவடிக்கையிலிருந்து பின் வாங்கியது. அன்றைய ஆங்கிலேய அதிகாரியான விக்டர் டி கிளார்க்தனது குறிப்புகளில் "பாரம்பரிய விவசாயம் கைவிட்டுப் போவதை விவசாயிகள் விரும்பாததே கலவரத்திற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்" .இச்சட்டம் காலத்திற்கு மிகத் தேவையான ஒன்று என்கிறார் பத்திரிக்கையாளர் வால்டர்‘. இயற்கை வேளாண்மையில் உணவுப் பொருட்களின் தேவையை ஈடு செய்யவே முடியாது. வேதியியல் பொருட்கள் மட்டுமே தேவையை ஈடு செய்யும் என்பது இவரது வாதம்.






தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் முருகேச பாண்டியன் "இச் சட்டம் அரைகுறை அறிவு பெற்றோர் வேளாண்மையில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. இது நல்ல செயல் தானே ? இதில் என்ன தவறு இருக்கிறது" எனக் கேள்வி எழுப்புகிறார். மேலும் தனி மனித உரிமைகளை ஒருவர் தவறாகப் பயன்படுத்துவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? அதைத் தடுக்கத்தான் இச் சட்டமே என்கிறார்.




சமூக ஆர்வலர் வந்தனா சிவா "உலகில் வேறு எங்கும், எந்த மாநிலத்திலும் இல்லாத கருப்புச் சட்டம்" எனச் சாடுகிறார். அதே சமயம் அண்ணாமலை பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் டாக்டர் பாபு. "இது தூய வெள்ளைச் சட்டம். உலகில் மொத்த உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.


 1950இல் வெறும் 51 டன்னாக இருந்த உணவு உற்பத்தி 2007-08இல் 211.6 டன்னாக அதிகரித்துள்ளது. இயற்கை வேளாண்மையை நம்பிக் கொண்டிருந்தால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்குமா? அது போல் தானிய உற்பத்தியில் 4, 5 ஆவது இடமும், காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் 1, 2 ஆவது இடத்தையும் மாறி மாறி தக்க வைத்துக் கொள்கிறது. இது நவீன வேளாண் அறிவியலின் பெரும் வெற்றி" என்கிறார்.




பிடல் காஸ்ட்ரோ, புரட்சிக்குப் பின் கியூபாவின் அதிபராகப் பதவி ஏற்ற உடன், நாட்டின் உணவுத் தன்னிறைவே தன் ஆட்சியின் முக்கிய குறிக்கோள் என உரைத்தார். சொல்லியபடியே விவசாய முன்னேற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அனைத்து உதவிகளும் அரசிடம் இருந்தே தரப்பட்டது. பலன்கள் மக்களிடம் சேர்க்கப்பட்டது. எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது 1990 வரை. வேதிப் பொருள் உபயோகிப்பை பிரதானமாகக் கொண்டு விவசாயம் செய்ததால் நிலம் தன் வளத்தை இழந்ததை துவக்கத்தில் உணரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல உணவு உற்பத்தி குறைந்தது. கமிட்டி அமைக்கப்பட்டு அதில் விஞ்ஞானிகளை உறுப்பினர்களாக்கியது. அவர்களே கண்டுணர்ந்து சமர்ப்பித்த அறிக்கை, அதிக வேதிப் பொருள் உபயோகிப்பே நில வளம் குன்றக் காரணம் எனக் கூறியது. உடனடியாக அதிபர் வேதிப் பொருள் உபயோகிப்பிற்கும், உற்பத்திக்கும் தடை விதித்தார் . இயற்கை விவசாயத்திற்கு உத்தரவிட்டதோடு அதற்குண்டான பயிற்சி, பொருட்கள், கொள்முதல், பண பட்டு வாடா என அனைத்து துறைகளையும் அரசே ஏற்றுக் கொண்டது. இன்று உலகிலேயே நூறு சதவீதம் இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பி உணவு உற்பத்தி செய்யும் ஒரே நாடு கியூபா தான்.




இந்தியாவில் இயற்கை வேளாண்மையில் மகாராஷ்ட்ரா முன்னிலை வகிக்கிறது. எஸ்.. தபோல்கரால் அறிமுகப் படுத்தப்பட்ட பழப் பயிர் சாகுபடி, மாடி தோட்ட சாகுபடி போன்றவை உலகப் புகழ் பெற்றவை. இவரது பல தானிய விதைப்பு முறை மண்ணிற்கு வளம் சேர்க்கும் அற்புத பாரம்பரிய நில சீரமைப்பு முறையாகும். பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிய இவர், சூரிய ஒளியை சரியாக பயன் படுத்தும் போது அனைத்து நன்மைகளும் தாமாக கிடைக்கப் பெறுகின்றன என்கிறார். அடிப்படையில் கணித பேராசிரியரான இவர் மண்ணில் நிபுணத்துவம் கொண்ட "சாயில் கெமிஸ்ட்". இவர் விவசாயத்தில் பட்டம் பெறவில்லை என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.



1905ல் கடும் பஞ்சத்தால் இந்தியா துவண்ட போது, லார்ட் கர்சன் ,"ஆல்பர்ட் ஹோவர்ட்" என்ற வேளாண் விஞ்ஞானியை அழைத்து நிவாரண தேவைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். நமது விவசாயிகளின் தொழில் நுட்ப முறைகளை பல மாதங்கள் ஆராய்ந்து வியந்த ஹோவர்ட் "அரசின் அராஜகப் போக்கே உணவுப் பொருள் உற்பத்திக்கு தடையாக இருக்கிறது.இந்திய பாரம்பரிய விவசாய முறை என்றும் ஜீவித்திருக்கும். முடிந்தால் நாமும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்."என்று பதிலளித்தார் .
இவர் "வேளாண் உயில்" என்ற புகழ் பெற்ற புத்தகத்தின் ஆசிரியர்.




வேதங்களும், சாஸ்திரங்களும் பலராலும், பல விதமாக, பல் வேறு கட்டங்களில் விமர்சிக்கப் படுகிறது என்றால் அதற்கு பல முகங்கள் உண்டு. அதன் ஒரு முகம் விவசாயத்தை மேம் படுத்த குரல் எழுப்பிய வாறே உள்ளது.அந்த வகையில் சுர பாலரின் விருட்ச சாஸ்திரம் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.அது போல "நாட்டு மக்கள் நலமாய் வாழ கிராம விவசாயம்
பாதுகாக்கப்பட வேண்டும் " என்ற ரிக் வேதத்தின் வாக்கு இன்றைக்கும் பொருந்துவதாக நான் கருதுகிறேன்.
நன்றி  http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=2019



No comments:

Post a Comment