For Read Your Language click Translate

Follow by Email

10 May 2014

மருத்துவ குணமுள்ள மரங்கள் - ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை


மருத்துவ குணமுள்ள மரங்கள் சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் - ஆவாரம்பூ ஒரு அற்புத மூலிகை ஆவாரம்பூ ஆவாரம்பூ என்பது தங்கச் சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு விஷுக்கனி தரிசனத்தில் இடம் பெற்றுள்ளது . சாதாரணமாக தங்க பற்பத்தின் விலையும் அதிகம் . தங்கத்தின் விலையும் அதிகம் . சரியாக முடியாத தங்க பற்பம் சிறுநீரகத்தைப் பாதிக்கும் . ஆனால் ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பற்பம் . அதே சமயம் ஆவாரம்பூ மிக எளிதாக , விலையில்லாமல் அங்கங்கே பூத்துக் கிடக்கிறது . ஒரு முறை மூலிகை ஆராய்ச்சி செய்ய கொல்லி மலைக்குச் சென்ற மாணவர்கள் அங்கே ஒரு சித்தரைக் கண்டார்கள் . அவர் உடல் ஒளி வீசும் பொன்னிறமாக இருந்தது . அவரிடம் அந்த மாணவர்கள் கேட்டார்கள் உங்கள் ஒளி வீசும் பொன்னிற உடலுக்கு காரணம் என்ன என்று கேட்டார்கள் . அதற்கு அவர் சொன்னார் ” ஆவாரம்பூ என்ற இந்த பொன் மூலிகைதான் எனது இந்த பொன்னிற ஒளி வீசும் உடலுக்கு காரணம் “என்றார் . “ஆவாரம்பூ காலையில் ஒரு கைப்பிடி , மாலையில் ஒரு கைப்பிடி பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகிறேன் ” என்றார் . “அதன் விளைவாக ஆவாரம்பூவில் உள்ள தங்கச் சத்து எமது உடலில் ஊறி உடல் இப்படி மாறியது ” என்றார் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை இந்த ஆவாரம்பூ . ” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ” ஆவாரை பொதுவாகவே ஒரு காய கற்ப மூலிகை.அதன் சிறப்புக்களையும் உபயோகிக்கும் முறைகளையும் காண்போம். ஆவாரம்பூ தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும் பூவைச் சேராவாரம் பூ - ( பதார்த்த குண விளக்கம் )- குணம்:-ஆவாரம்பூ பிரமேக நீர் , வறட்சி , உடம்பிற் பூத்த உப்பு , கற்றாழை நாற்றம் இவைகளை நீக்கும் . தேகத்திற்குப் பொற்சாயலைத் தரும் . செய்கை:- சங்கோசனகாரி, சமனகாரி உபயோகிக்கும் முறை:- ஆவாரம் பூவை நன்றாய் அலம்பி பச்சைப் பயறுடன் ,கூட்டி பாகப்படி கூட்டமுது செய்து உண்பது வழக்கம் . இதனால் மது மூத்திரம் , இரத்த மூத்திரம் , பெரும்பாடு ( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) , உட்காங்கை , தாகம் இவைகள் போகும் . இன்னும் நிழலில் இதழ் இதழாக சீலையில் போட்டு வதங்கி வரும் சமயம் புஷ்பத்தை எடுத்து இரண்டு எடைசீனாக் கற்கண்டு போட்டு ஆட்டி வழித்து எடுக்க குல்கந்து போலிருக்கும் , இத்துடன் போதிய அளவு அப்பட்டமான தேன் கூட்டி கலந்து பிசைந்து சில தினம் ரவியில் வைத்து வேளைக்கு 1/4பலம்அளவிற்கு (ஒரு பலம் என்பது 35 கிராம்) தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர அதிக நன்மையைத் தரும் . இந்தப் பூவை உலர்த்தி வேளைக்கு கால் பலம் கியாழமிட்டு பால் சர்க்கரை கூட்டி காப்பி போல் சாப்பிடுவதுண்டு . இதனால் நீரிழிவு , உட்சூடு ,நீர்க்கடுப்பு ,முதலியவைகள்குணமாகும். இந்தப் பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து ஸ்நானம் செய்து வர கற்றாழை நாற்றம் ,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும் . இன்னும் நல்ல தேகத்தை தரும். ஆவாரை சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேக நீர் செல்லா மொழிக்கு மெரிவகற்று – மேல்லவச மாவாரை பம்பரம் போலாட்டுந் தொழிலணங்கே! யாவாரை மூலி யது - ( பதார்த்த குண விளக்கம் )- குணம்:-ஆவாரைச் செடியானது சர்வப் பிரமேக மூத்திர ரோகங்களையும் , ஆண் குறி எரி வந்தததையும் குணமாக்கும் . செய்கை:- சங்கோசனகாரி, வித்திற்கு காம விர்த்தினி உபயோகிக்கும் முறை:-அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு முக்கால் படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து , வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி , தினம் இரு வேளை 1 1/ 2 , அவுன்ஸ் ( 45 மில்லி லிட்டர் ) வீதம் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் ) , ரத்த மூத்திரம் (ரத்த வெட்டை ), பெரும்பாடு( பெண்களுக்கு ஏற்படும் பெரு உதிரப் போக்கு (அதாவது மாதாந்திர விலக்கு மட்டில்லாமல் உதிரமாகப் போவது ) பெண்களுக்கு ஏற்படும் வியாதிகளில் இது உயிரையும் கொல்லும் என்பதால் இதற்கு பெரும்பாடு என்று சித்த வைத்தியத்தில் அழைப்பர் ) ,இவைகள் போகும் . இத்துடன் இதர சரக்குகளை கூட்டி லேகியமாகவும் , சூரணமாகவும் , கியாழமாகவும் கொடுப்பது உண்டு . அவற்றுள் சில முறைகளாவன ஆவாரைப் பஞ்சக சூரணம் ஆவாரையிலை , ஆவாரம்பூ , ஆவாரம் பட்டை , ஆவாரம் வேர் , ஆவாரங்காய் வகைக்கு வகைக்கு வராகனெடை 4 ,கடலைழிஞ்சிப்பட்டை, மருத மரப்பட்டை , நாவல் மரப்பட்டை , தண்ணீர் விட்டான் கிழங்கு , பாதிரி வேர் , வகைக்குப் பலம் 2 , மரமஞ்சள் , கல்நார் வகைக்குப் பலம் ஒன்று , குரோசாணி ஓமம் பலம் கால் , ஆகிய இவற்றை இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொள்க . வேண்டும் போது வேளைக்கு 1 தோலா நிறையுள்ள சூரணத்தை கால் படி சேலத்தில் போட்டு அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிக் கொடுத்து வர மது மேகம் (சர்க்கரை நோய் ) , தேக காங்கை ( சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல் ) , அதீத தாகம் , முதலியவைகள் நீங்கும் . இன்னமும் இக்கியாழம் நாவிற்கு ருசியாக இருக்க வேண்டின் சிறிது நாட்டுப் பசுவின் பாலையும் கூட்டிக் கொள்ளலாம் . இதனால் இதன் குணங் கெடாது . மேற்கண்ட ஆவாரைப் பஞ்சாங்கமும் , ஆவாரம் பூவும் மச்சமுனி சிறப்பு மது மேகச் சூரணத்திலும் , சாதாரண மது மேகச் சூரணத்திலும் சேர்க்கப்படுகிறது . இவை இரண்டிற்கும் நீங்கள் நாட வேண்டிய முகவரியும் , மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . திரு அமீர் சுல்தான். மின்னஞ்சல் :- machamunimooligaiyagam@gmail.com அலைபேசி எண் :- 9597239953 நன்றி திரு அமீர் சுல்தான்,machamunimooligaiyagam@gmail.com பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான சர்க்கரை