For Read Your Language click Translate

Follow by Email

10 May 2014

மருத்துவ குணமுள்ள மரங்கள் - கனையெருமை விருட்சம்

 
கனையெருமை விருட்சம்


காய கற்ப மூலிகைகளென்று சொல்லும் போது அதற்குள்ள  ஒரு முக்கியத்துவத்தை இங்கே  குறிப்பிட விரும்புகிறோம்.அதாவது கழிவுகளின் பெருக்கமே அனைத்து நோய்களும் .நோய்களின் தொகுப்பு மரணம் .எனவே கழிவுகளை அகற்றினால் நோய்கள் அனைத்துமே அகலும். நோய்களும்  அகன்றால் மரணமும் அகலும்.எனவே ஒரு குறிப்பிட்ட வியாதியை இந்த காய கற்ப மூலிகைகள் கண்டிக்கும் என்றால் அந்தக் குறிப்பிட்ட வியாதியுடன் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதால் உடலில் உள்ள மற்ற வியாதிகளையும் கண்டிக்கும் என்பதோடு ஆயுளையும் விருத்தி செய்யும்  என்று பொருள்.
இப்போது சென்ற பதிவில் பார்த்தது போல ஒரு கற்ப மூலிகையைப் பற்றிப் பார்க்கலாம்.சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் தயாரிப்புக்கள் ( பாகம் 8) ஓர் அரிய மூலிகை (கனையெருமை விருட்சம்) என்ற தலைப்பில் இது வெளியிடப்பட்டாலும் இது தயாரிக்கப்படுவதல்ல. இதற்கு முன்னிருக்கும்  இரு கட்டுரைகளும் அது போலத்தான் என்பதால் இவற்றிற்கு கிடைக்கும் மாதங்களும் கால வரையரை உண்டு என்பதாலும் இதற்கு திரு கண்ணனிடம் அவசரம் என்று  கோர வேண்டாம்.
இதே விடயங்கள்தான் கீழ்க்கண்ட  காயகற்ப பதிவுகளுக்கும் சேர்த்துத்தான்.
http://www.machamuni.com/?p=2715
http://www.machamuni.com/?p=2705
கீழ்க்கண்ட நூல்களில் கனை யெருமை விருட்ச கற்பம் பற்றி சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கீழே கொடுத்துள்ளோம்.
kana erumai virutcham1_mini
kana erumai virutcham3_mini
kana erumai virutcham4_mini
kana erumai virutcham5_mini
நன்றி:-
காலாங்கிநாதர் கொல்லிமலை ரகசியம் என்னும் மரணம் மாற்றும் மூலிகைகள்
ஆசிரியர் என், பாலகுருசாமி , (சித்த வைத்தியர் ), கோட்டாத்தூர்.
ஸ்ரீதேவி புத்தக நிலையம்,1,ஆண்டியப்பன் தெரு , சூளை , சென்னை-3,
M.பூபதி , 219, அல்லிக்குளம் புதிய வளாகம், மூர் மார்க்கெட் சென்னை-3

கீழ்க்கண்ட இரு காணொளிக் காட்சிகளையும் படம் பிடித்தவர் திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களே.எனவே அது சம்பந்தமான அனைத்து பாராட்டும் அவரைச் சேர்ந்ததே!!
பழங்குடியினர் காட்டிற்குள் செல்லும் போது தன் இனத்தாருக்கு தான் சென்றிருக்கும் திசை மற்றும் இடத்தை அடையாளம் சொல்ல கீழ்க்கண்ட வகையில்  அடையாளம் சொல்லுதலை இன்று வரை கடைப்பிடித்து வைத்துள்ளதை காணொளிக்காட்சியாக கீழே கொடுத்திருக்கிறோம்.
]
காட்டில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் முக்கிய விடயங்களுக்கு மட்டும் இந்த கனையெருமை விருட்சம் போன்ற காய கற்ப மூலிகைகளை உபயோகித்து வந்துள்ளார்கள் .இந்த படத்தில் வரும்  மலைவாழ் மக்களுள் ஒருவரான வேலு என்பவர் 70 வயதானவர். இவருக்கு மூன்று மனைவிகள். மூவரும் இறந்துவிட்டனர். இவருக்குள்ள குழந்தைக்கு திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் வாங்கிக் கொடுத்துள்ள மிக்ஸர் பாக்கெட்டை அந்த பையன் விடாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காணொளிக்காட்சியில் காணுங்கள். இது போன்ற பழங்குடியினருக்கு உதவி செய்ய பண உதவி செய்வதாக இருந்தால் திரு சதுரகிரி  ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும்.மேலும் கனையெருமை விருட்ச பால் ஆண்மையை விருத்தி  செய்யும் என்பதை அவர்கள் அவர்கள் சொல்லும் விதம் தெரியாமல் வெளிப்படுத்தி இருப்பதையும் , அவர்களது  அப்பாவித்தனமான தன்மையையும் ( INNOCENCE )காணுங்கள்.
இதில் காட்டப்பட்டுள்ள கனையெருமை விருட்சம் மேலே மின்சாரக் கம்பிகள் செல்வதால் அதில் உரசாமல் இருக்க அன்றுதான் வெட்டப்பட்ட மரம் எனவே பால் மிகக் குறைவாக வந்தது , கனையெருமை விருட்சம் மற்றும் அதன் தன்மைகளை இந்த காணொளிக்காட்சியில் காணுங்கள்.
]
எங்களது சபையில் அஞ்சாம்படை சாமி என்பவர் நயினார் கோவில் என்ற இடத்தில் இருந்தார்.அவர் தனது தொண்ணூற்றைந்து வயதிலும் நன்றாக முதுகுத் தண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்(அவருக்கு 35 வயதில் மனைவியும் அந்த மனைவிக்கு இரு குழந்தைகளும் உண்டு ) அவரிடம் நாம் எப்படி இந்த வயதிலும் இப்படி தளராத உடலுடன் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எனது ஐம்பத்து ஐந்தாம் வயதில் கனை யெருமை விருட்சப் பால் கால்படி அருந்ததினால் இந்த தளராத தேகம் கிடைத்தது என்றார்.அவர் தனது நூற்றைந்தாவது வயதில் அடங்கினார்.அவர் தமது வாழவின் கடைசி வரை உடல் தளராது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் உரையாடலில் கனையெருமை விருட்சம் இருப்பதாகக் கூறும் இடம் யமபுரக் கானல் என சித்தர்கள் தங்களது மலை வாகடங்களில் கூறப்படும் இடமே.இந்த இடம் மிகவும் கொடும் வன விலங்குகள் உலாவும் இடம்.எனவே உயிர்களை வாங்கும் யமன் உறையும் (வாழும் ) இடமாகக் கூறப்படுகிறது.அங்கே உள்ள மரத்தில் இருந்து பால் எடுக்கும் காணொளிக்காட்சி பின்னால் வலையேற்றப்படும்.அதில் கல்லால் தட்டினவுடன்  பைப்பில் இருந்து தண்ணீர் பீறிட்டுக் கொட்டுவது போல் பால் கொட்டும்.அந்தக் காட்சியும் நம் வலைத் தள அன்பர்களுக்காக காட்சிக்கு தரப்படும்.
நாமும் இந்த கனையெருமை விருட்சப் பாலை தேன் சேர்த்து அருந்தும் பாக்கியம் கிடைத்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.கீழுள்ள புகைப்படங்களில் காணப்படுவது கணையெருமை விருட்சப் பால்தான். பல நாட்கள் ஆனாலும் இது கெட்டுப் போகாமல் இருக்கிறது  என்பது இதன் சிறப்பு.எது தான் அழிந்து போகாமலும் , கெட்டுப் போகாமலும் இருக்கிறதோ அது நம் உடலையும் கெட்டுப் போகாமல் வைத்திருக்கும்.கீழே கனையெருமை விருட்சப் பால் படங்கள்.
kanaiyerumai virutsam 1_mini
kanaiyerumai virutsam 2_minikanaiyerumai virutsam 4_mini
kanaiyerumai virutsam 5_mini
kanaiyerumai virutsam 7_mini
kanaiyerumai virutsam 9_mini
இந்தக் கனையெருமை விருட்சப் பாலை தேன் நாம் அருந்தும் போது கண்ணாடிக் குவளையில் இருக்கும் காட்சி.இது போன்ற பல காய கற்ப மூலிகைகளை நமது பயன் பாட்டில் உபயோகிக்கும்போது உடல் நன்றாக வளம் பெறும் முதுமை அகன்று இளமைத் தன்மை நம் உடலுக்கு கிடைக்கும்.
கோடிக் கற்பம் உண்டவர் சிவன், 10 லட்சம் கற்பம் உண்டவர் மஹாவிஷ்ணு , லட்சம் கற்பம் உண்டவர் பிரம்மா, 10,000 கற்பம் உண்டவர்கள் ஒரு கோடி உருத்திரர்கள், 1000 கற்பம் உண்டவர்கள் இந்திரன் முதலான தேவாதி தேவர்கள், 100 கற்பம் உண்டவர்கள் ரிஷிகள் , முனிவர்கள் , ஞானிகள், சித்தர்கள் ஆகலாம் என சதுரகிரித் தல புராணம் கூறுகிறது.
kana erumai virutcham 9_mini
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தற்போதைய புதுப்பிக்கப்பட்ட முகவரி மற்றும் அலைபேசி எண் மற்றும் அவரது தொலைபேசி எண்கள் ஆகியவற்றை கீழே காண்க.
+919943205566
+914563282222
அவரது முகவரி:-
திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,
2/159, மங்கம்மாள் கோவில் தெரு,கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்
மின்னஞ்சல் முகவரி
herbalkannan@gmail.com
நன்றி  :திரு பெ.கண்ணன்,சதுரகிரி ஹெர்பல்ஸ்,