For Read Your Language click Translate

10 May 2014

விருட்ச சாஸ்திரம் சொல்வது என்ன?விருட்ச வழிபாடு செய்வது ஏன்?

விருட்ச வழிபாடு செய்வது ஏன்? மனித உடல் பஞ்சபூத சக்திகளை உள்ளடக்கியே இறைவனால் உருவாக்கப் பட்டுள்ளது. பஞ்சபூதங்களும் இணைந்து நிற்கும் பொருட்களில் ஜீவஐகியம் (உயிரோட்டம்) உண்டாகும். இயற்கையிலே கலந்து நிற்கும் பொருட்களில் தான் இறைவனது ரூபங்களை சிலைகளாக வடிக்கின்றனர். அதாவது மரம், கருங்கல். ஏனென்றால் பஞ்சபூதங்களும் இணைந்து உள்ள பொருளில் இயற்கையிலேயே உயிரோட்டம் உண்டு. அதாவது மனிதன், விலங்குகள், செடி கொடிகள், மரங்கள் இயற்கையிலேயே உயிரோட்டம், ஜீவசக்தி பெற்றவை. கருங்கல்லில் ஜீவசக்தி பிராணபிரதிஷ்டை எனும் மந்திரமுறை மூலம் உண்டாக்கப்படுகிறது. அவ்விதம் பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டால் மட்டுமே ஜீவன் குடிகொண்டு தெய்வசக்தி செயல்பட துவங்குகிறது. ஆனால் இயற்கையிலேயே பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தோன்றி ஜீவசக்தியுடன் விளங்குபவை விருட்சங்கள். கோயிலில் பிரதிஷ்டை செயப்படும் சிலைகளை விட பல்லாயிரம் மடங்கு சக்தியை இயற்கையிலேயே பெற்றவை விருட்சங்கள். அதனால் தான் எல்லா கோவில்களிலும் வழிபாட்டுக்கென தல விருட்சங்களை அமைத்திருந்தனர் நம் முன்னோர். இந்த விருட்சங்களின் சக்தியை மனிதன் பயன்படுத்த எண்ணிய நம் முன்னோர்கள் விநாயகர் அரசமரத்தடியிலும், சக்தி வேம்பின் அடியிலும், சிவன் ஆலமரத்தடியிலும் இருப்பதாக கோயில்களை அமைத்து வழிபட்டனர். இது மட்டுமின்றி ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களையும் அதன் மகிமைகளையும் பற்றி விருட்சசாஸ்திரம் தெளிவாக விவரிக்கிறது. விருட்ச சாஸ்திரம் சொல்வது என்ன? அரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும், வேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும், மாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும், விடதாழை மரம் - சனி தோஷம் போக்கும், பின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும், ஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும், பாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும், பும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும், அரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும், குறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும், கொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும், ஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும், கருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும், நத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும், கல்லால மரம் - உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும், என ஒவ்வொரு விருட்சங்களின் மகத்துவங்களை தெள்ள தெளிவாக எடுதுரைக்கிறது. நமது சர்வசக்தி விருட்ச பீடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான பரிகார விருட்சங்களும் மேலே குறிப்பிட்டுள்ள அபூர்வ விருட்சங்களும் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இத்தகைய விருச்சங்களை தன்னகத்தே கொண்ட அபூர்வ பீடம் தான் நமது சர்வசக்தி விருட்சபீடம். உங்களின் நட்சத்திர தோஷங்கள், கிரக தோஷங்கள், திசை - புத்தி தோஷங்கள், புத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், மனை தோஷம், குடும்ப தோஷம், மாத்ரு தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ தோஷம் முதலிய ஜாதக தோஷங்கள் எதுவானாலும் இங்கு வந்து வழிபட உடனே நிவர்த்தியாகும். கர்மவினைப்பயனால் உடலில் தோன்றி வாட்டும் தீராத நோய்களும் இங்கு உள்ள விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானிக்க நீங்கும். இங்கு தியானம் செய்ய சகல சித்திகளும் உண்டாகும். இத்தகைய அபூர்வ சக்திகளை தன்னகத்தே கொண்ட சர்வசக்தி விருட்ச பீட விருட்ச பிரதிஷ்டை விழாவுக்கு அனைவரும் வருக... சகல ஐஸ்வர்யம் பெறுக... இடுகையிட்டது ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் நேரம் 11:14 பிற்பகல் இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

No comments:

Post a Comment