For Read Your Language click Translate

09 June 2014

பெண்களுக்கு என்று சிறப்பு சாஸ்திரங்கள் உண்டு.



பெண்களுக்கு என்று சிறப்பு சாஸ்திரங்கள் உண்டு. கணவனோடு சேர்ந்திருக்கும் போது மல்லிகை, முல்லை போன்ற பூக்களைத்தான் சூட வேண்டும். கனகாம்பரம், நீலாம்பரம் போன்ற பூக்கள் கூடாது. குளிக்கும் போது மஞ்சள் அவசியம் பூச வேண்டும். மூக்குத்தி அவசியம் அணிய வேண்டும்.

கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி அணிவது சிறப்பு. கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அவசியம் (வெள்ளியில் செய்தது) அணிய வேண்டும். மாத விலக்கின் போது தலையில் பூ வைக்கக் கூடாது. சமையல் அறைக்குள் செல்லக்கூடாது, உணவு பரிமாறக் கூடாது. திருமணமான பெண் இரவில் கருப்பு, கடல் நீலம், ரத்தச் சிவப்பு ஆடைகளை அணியக்கூடாது.

வெளிறிய வண்ண சேலைகள் தான் உடுத்த வேண்டும். அதிகாலையில் நீராடி, உறங்கும் கணவனை, குரல் கொடுத்து எழுப்பி, தன் முகத்தில் விழிக்க வைக்க வேண்டும். இவற்றால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

No comments:

Post a Comment