For Read Your Language click Translate

26 June 2014

தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா



தண்ணீருக்கு H2O என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு(ஹைடிரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள். பாருங்க! நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் ஆன்மிகத்தை அறிந்து கொள்ள மறுக்கும் தன்மையால் விளைந்த கொடுமை இது!


No comments:

Post a Comment