பிரசன்னம்:-
பிரசன்ன ஜோதிடம் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவர் எந்த நேரத்தில் – எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கிறாரோ அதற்குண்டான விடையை இந்த பிரசன்னத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவருடைய ஜனனகால ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தும் தசாபுத்தி, அந்திரங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நல்லது நடக்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதற்கான கர்ம வினையையும் – முன்னோர்கள் செய்த பாவத்தால் உண்டான வினைப்பயனையும் – தெய்வ தோஷங்களையும் மற்றும் பல தோஷங்களையும் கண்டறிய பல முறைகளில் பிரசன்னம் போடப்படுகிறது.
இதில் தானிய பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், ஹோரா பிரசன்னம், ஆரூட பிரசன்னம், சோழி பிரசன்னம், கேரள அஷ்ட மங்கள பிரசன்னம், நாடி பிரசன்னம், நிமிர்ந்த பிரசன்னம், கெளரி பிரசன்னம், கடிகார ஆரூடம், ஜாமக்கோள் ஆரூடம், சகால ஹோரை ஆரூடம், சகாதேவர் பிரசன்னம், நட்சத்திர பிரசன்னம் என பல வகைகள் உள்ளது.
பிரசன்னத்திற்குண்டான ஆதார நூல்கள் :-
1. சிரேந்திரமாலை 2. ஞானபிரதீபிகை 3. பிரசன்ன மார்க்கம் 4. கிருஷ்ணீயம் 5. சப்பண்ணா 6. பிரசன்ன அனுஷ்டான பத்ததி 7. பிரஸ்னாயனம் 8. பிரஸ்ன ஞானம் 9. பிரஸ்ன சங்கிரஹா 10. பிரஸ்ன ரத்னா 11. பிரஸ்ன தந்திரா 12. நீலகண்ட நிதி 13. சங்கேத நிதி 14. புவன தீபிகா 15. சட்பஞ்சசிகா 16. கண்டபரணம் 17. சிந்தாமணி போன்ற நூல்கள்.
அஷ்ட மங்கள பிரசன்னத்தின் மூலமாக
- தெய்வ அனுகூலம்
- குலதெய்வ அனுகூலம்
- சர்ப்ப தோஷம்
- பிதுர்தோஷம் அதாவது மூதாதையர் தோஷம்
- குரு சாபம்
- பிராமண சாபம்
- வசிக்கும் இடத்தில் உள்ள பிரேத தோஷம்
- செய்வினை தோஷம், இடத்தில் உள்ள தோஷங்கள்
- இடுமருந்து தோஷம் (கைவிஷம்)
குறிப்பாக இடுமருந்து தோஷத்திற்கு கருட பஞ்சாட்சர மந்திரத்தை பஞ்சகவ்யம் நெய்யில் தினமும் ஆயிரத்தெட்டு உரு வீதம் நாற்பத்தொரு நாள் செய்து கொடுத்தால் இந்த தோஷத்தைக் கட்டுப்படுத்தும்.
அஷ்ட மங்கள பிரச்சன்னம் பார்த்து அதன்மூலம் பரிகாரம் செய்ய வேண்டியிருப்பின் ஆறு மாதத்திற்குள் செய்து விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அஷ்ட மங்கள பிரச்சன்னம் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment