நேரம், காலம், எங்கே, எப்போது என்று இல்லாமல் வாகன ஓட்டிகளின் எரிச்சலைத் தூண்டும் ஒரே விஷயம் 'பஞ்சர்.’ காரில் செல்பவர்களுக்கு உடனடி உதவியாக ஸ்டெப்னி இருக்கும். ஆனால், பைக் ஓட்டிகளின் நிலைதான் பரிதாபமானது. அவர்கள் எப்படியாவது பஞ்சர் கடையைத் தேடியே ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான் 'ட்யூப்லெஸ்’ டயர். இது, பஞ்சராகி டயரில் காற்று குறைய ஆரம்பிக்கும்போது, டயரில் குத்தி உள்ள ஆணியை அகற்றாமலே 200 கி.மீ வரை பயணத்தைத் தொடர முடியும். பின்பு, நமக்கு வசதியான நேரத்தில், இடத்தில் ஆணியை அகற்றி ட்யூப்லெஸ் டயரை சரிசெய்து கொள்ளலாம். மேலும், ட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியும் என்பதுதான் விசேஷமே. அது எப்படி என்பதை விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த மெக்கானிக் வாசுதேவன்.
No comments:
Post a Comment