For Read Your Language click Translate

26 June 2014

மெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்


"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
...
விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதை வள்ளுவ பெருமான் கூறி உள்ளார். அந்த அறிவியல் எங்கு வேணாலும் இருக்கலாம். ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீகமும் இருந்தால்? இருக்கிறது. அந்த உண்மையை ஏற்று கொள்ள சிலர் மனம் மறுக்கிறது. உதாரணத்திற்கு நிலவு சூரிய ஒளியில் நமக்கு பார்க்க வெள்ளையாக தெரிந்தாலும் அதன் உண்மையான நிறம் கறுப்பு. அதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சந்த்ரமஸி கிருஷ்ணம என்கிற வேத வாக்கியம் கூறி விட்டது. சித்தர்களுக்கு எவ்வாறு இனம், மதம் போன்றவை கிடையாதோ அதே போல் அவர்களுக்கு என்று ஒரு தேசமோ, மொழியோ கிடையாது. இந்த உலகம் மட்டும் அல்ல. அகிலாண்ட கோடி உலககங்களும் அவர்கள் வீடு. சித்தர் பாடல்களில் உள்ள அறிவியலை நாம் மீண்டும் தொடர்ந்து பார்ப்போம்.
புவியினும் நாழியன்று கூடியே
நாளன்றென கணக்காம் குஜனே’’ _
என்ற போகர் வாக்கியம், ஒரு நாள் 24 மணி நேரமும் 30 நிமிடமும் சேர்த்தே செவ்வாயில் நடைபெறுகிறது என்கிற உண்மையை சொல்கிறது.
‘‘துவியாண்டின் புவிக்கு மண்டலமே
குன்ற குஜனுக்குற்ற வேக ஆண்டாம்’’
என்ற பாடல் வரி வாயிலாகச் செவ்வாயில் ஒர் ஆண்டுக்கு 687 நாட்கள் என தெரிகின்றது.
இவை அனைத்தும் இன்றைய அறிவியல் நிரூபித்து உள்ளது. இந்த பூமியில் பூமியில் நூறு வருடம் என்பது பிரும்ம லோகத்தில் ஒரு ஆண்டு என்பவை எல்லாம் வெறும் கற்ப்பனை போல் தெரியலாம். ஆனால் அறிவியல் இன்னமும் கண்டு பிடிக்காத கோடி கணக்கான கோள்கள், வின் மீன்கள் உள்ளன. இன்றைய கட்டுக்கதை நாளை அறிவியல் கதையாக ஆகும். ஏற்கனவே பல அவ்வாறு ஆகி இருக்கிறது.

No comments:

Post a Comment