For Read Your Language click Translate

21 June 2014

ஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன? அதனை ஏன் மக்கள் வழிபடுகின்றனர்?


                     


சக்தி வழிபாடு அல்லது பெண் ஆற்றல் சக்தி வடிவத்தை வணங்குவது இந்து மதத்தில் உள்ள ஒரு முக்கிய வழக்கமாகும். இந்தியாவில் 5000 வருடங்களுக்கு மேலாக பெண்மை வழிபாடு இருந்து வருகிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவின் தொல்பொருள் ஆராய்ச்சி.
ADVERTISEMENT
சக்தி வழிபாடு என்றால் என்ன? ஆதி சக்தி என்றால் என்ன? அல்லது யார் அந்த ஆதி சக்தி? அவளை ஏன் நாம் வணங்குகிறோம்? இந்து மதத்தில் பெண் தெய்வங்களை வழிபடுவதைப் பற்றி ஒருவரின் மனதில் பல கேள்விகள் எழலாம். அதற்கான விடைகளை தெரிந்து கொள்வோமா?
இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?
முதலில், ஆதி சக்தி என்றால் "முதல் சக்தி" என்று அர்த்தமாகும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வசிக்கின்ற தொடக்கநிலை சக்தியாகும். இந்த சக்தி பெண்மை வடிவமாகும். ஆக்கத்திறன், சமாளிலை மற்றும் முழுமையின் உள்ளடக்கம் இது விளங்குகிறது. சக்தி என்பது அண்டசராசத்தில் உள்ள உயிரனங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு கருத்தமைவு அல்லது மனிதப் பண்புகளை மனிதர் அல்லாதவைகளுக்கு ஏற்றிச் சொல்லும் தெய்வீக பெண்மை வடிவமாகும்.
இரண்டாவதாக, படைப்பிற்கு பொறுப்பாவது சக்தியாகும். அண்டசராசரத்தில் ஏற்படும் அனைத்து மாற்றத்திற்கும் காரணமாக விளங்கும் கருவியாகும். புதிரான உள ஆன்மீக சக்தியான ஆதி சக்தி, அனைத்து உயிரனங்களிலும் குண்டலினி சக்தி வடிவத்தில் வசிக்கும். சார்பிலாதவையாக இருந்தாலும் கூட அண்டத்துடன் இணைப்புடன் இருக்கும்.
இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?
அப்படியானால் ஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன? அதனை ஏன் மக்கள் வழிபடுகின்றனர்? பார்க்கலாமா?

ஆதி சக்தி - பெண்மை சக்தி

இந்து சமய சித்தாந்தத்தின் படி, அனைத்து பெண்களும் ஆதி சக்தியின் வெளிப்படுத்துதல் ஆகும். அதற்கு காரணம் பெண்கள் அனைவரும் படைத்தலின் சக்தியை கொண்டுள்ளனர். அதே போல் பெண்கள் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வது கடினம். ஆதி சக்தியை துர்கா தேவி வடிவத்தில் நிற்குனா (உருவமற்ற) மற்றும் சகுணாவாக (உருவ) வழிபடுவர். அவளிடம் இருந்து வந்து மீண்டும் அவளிடம் செல்லும் உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரனங்களும் மூலாதாரமாக அவள் விளங்குவாள்.


ஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன? அதனை ஏன் மக்கள் வழிபடுகின்றனர்?











சக்தி & சிவபெருமான்

சிவபெருமானுடன் இணையும் போது சகுணா வடிவில் தன்னை வெளிப்படுத்துவாள் ஆதி சக்தி. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் தோன்றியது அவளிடம் இருந்து தான். ஆதி சக்தி (பிரக்ரிதி) படைத்தல் செயல்முறையை தொடங்க சிவனுடன் (புருஷா) இணைவாள். சிவபெருமானின் பாதியாக விளங்குபவள் ஆதி சக்தி. அதனால் தான் சிவனால் அண்டசராசரத்தை சமநிலையுடன் பராமரிக்க முடிகிறது











மனிதர்களுடன் வசிக்கிறாள் ஆதி சக்தி

ஆதி சக்தி என்ற அண்டத்திற்குரிய சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் அடங்கியுள்ளது. பிறந்தது முதலே இந்த ஆற்றலின் மூலம் மனிதனுக்குள் ஒளிந்திருக்கும். அதன் முழுமையான சக்தியை உணர்ந்திட அதனை செயல்படுத்த வேண்டும். தனிப்பட மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இந்த சக்தியை விழிக்க செய்யும் பாதையை நோக்கி தான் தந்த்ரா, யோகா, ஆன்மீகம் போன்றவைகள் பயணிக்கின்றன.





நம்முள் ஒளிந்திருக்கும் இந்த சக்தியை வெளிக்கொண்டுவர இந்த மந்திரத்தை கூற வேண்டும். அவை கீழ் வருமாறு:
ஆதி சக்தி, ஆதி சக்தி, ஆதி சக்தி, நமோ நமோ!
சரப் சக்தி, சரப் சக்தி, சரப் சக்தி, நமோ நமோ!
ப்ரிதும் பகவதி, ப்ரிதும் பகவதி, ப்ரிதும் பகவதி, நமோ நமோ!
குண்டலினி மாதா சக்தி, மாதா சக்தி, நமோ நமோ!
அர்த்தம்:
முக்கிய மூலாதாரமான சக்தியே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
அனைத்தையும் உள்ளடக்கும் சக்தியே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
படைக்கும் இறைவனே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!
குண்டலினியின் ஆற்றல் திறன் சக்தியே, தாய்க்கு தாயான சக்தியே, உனக்கு நான் தலை வணங்குகிறேன்!

சக்தி நம்பிக்கை

சக்தியை வழிபடுபவர்கள் ஆதி சக்தியை தான் உச்ச உயர்வான கடவுளாக பார்க்கின்றனர். அண்டசராசரத்தில் வாழும் அனைத்தும் இந்த தெய்வீக சக்தியால் உருவானவை. தெய்வீகத்தின் ஆண்மையான சிவபெருமானுடன் சேர்ந்து இந்த சக்தியை வழிபடுகின்றனர். அதனால் சக்தியை நம்புகிறவர்கள், அண்டசராசரத்தை உருவாக்கிய பெண்ணாக சக்தியை பார்க்கின்றனர். அண்டசராசரத்தை அவள் வடிவத்தில் பார்க்கின்றனர். உலகத்தின் அடித்தளமே பெண் தான். உடலின் உண்மையான வடிவமும் அவளே.


முரண்பாடு

வாழ்வின் ஆதாரமே பெண்கள் தான் என கூறும் அதே நாட்டில் தான் பெண்ணாக பிறப்பது ஒரு பாவமாகவும் பார்க்கப்படுகிறது. இதை பற்றி நாம் யோசிக்க வேண்டிய நேரம் அல்லவா இது?










No comments:

Post a Comment