நோகலிகை நீர்வீழ்ச்சி ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள நோகலிகை நீர்வீழ்ச்சி இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அருவி
இந்த அருவி டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். எனவே மழைக்காலங்களில் இந்த அருவிக்கு சுற்றுலா வருவதே சிறப்பானதாகும்.
புஷி அணை
புஷி அணை மகாராஷ்டிர மாநிலம் லோனாவ்ளாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. லோனாவ்ளா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பகுதிகள் என்றே சொல்லலாம். அதிலும் புஷி அணையின் பேரழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
புஷி அணை - அறியப்படாத பேரழகுமகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசஸ்தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை தேடி ஏராளமான குடும்பங்கள், வணிகமயமாக்கலின் அசுர வளர்ச்சியின் காரணமாக புலம் பெயர்ந்து வந்து வாழத் துவங்கினர்.இதன் காரணமாகவே இங்கு வரும் பயணிகளின் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று புஷி அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.
குழந்தைகளாகும் பெரியவர்கள்! புஷி அணையின் படிக்கட்டுகள் மீது வயது வித்தியாசமின்றி அனைவரையும் நீங்கள் பார்க்கலாம். அங்கு வழிந்தோடும் நீரினில் நனைந்து கொண்டு குதூகலிக்கும் குழந்தைகளோடு குழந்தைகளாக, பெரியவர்களும் விளையாடிக் களிக்கும் தருணம் மிகவும் சிறப்பானது.
லோனாவலாவிலிருந்து புஷிக்கு எப்படி செல்வது? நீங்கள் லோனாவலாவை அடைந்த பிறகு அங்கு யாரிடம் கேட்டாலும் புஷி அணைக்கு எப்படி செல்வது என்பதை தெளிவாக சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல், புஷி அணைக்கு செல்லும் வழியில், அணைக்கு 2 கிலோ மீட்டர் முன்பாக 'புஷி டேம் பார்க்கிங்' எனும் அறிவுப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த இடத்தில் உங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு 5 முதல் 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.
வாகன நெரிசலை தவிர்க்க வழி! புஷி அணையிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு தூரத்தில் தள்ளி உங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஏனெனில் நீங்கள் அணையை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும் போது வாகன நெரிசலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்தப் பகுதியில் போக்குவரத்து காவல்துறையின் தலையீடு ஏதும் இருக்காதென்றாலும், சாலைகள் மோசமானதாக காணப்படும்.
குட்டை நீரை கடக்க வேண்டும் புஷி அணையை அடைவதற்கு நீங்கள் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கும் குட்டை நீரினை நடந்துதான் கடக்க வேண்டும். அதன்பிறகு வளைந்து செல்லும் படிக்கட்டுகள் மூலம் நீங்கள் சுலபமாக புஷி அணையை அடைந்து விட முடியும்.
No comments:
Post a Comment