படித்ததில்..... பிடித்தது.......
" If you feel peace within yourself , you will find peace everywhere else in the world "
To "Do nothing" and "To remain silent" can be achieved only Inside and not Outside.
தொடர்புக்கு :- suganesh80@gmail.com
நேஷனல் ஜாக்ரஃபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.கேரள கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது.
வயநாடு எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பகுதிக்கு வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
எடக்கல் குகைகள், சுல்தான் பத்தேரி
சுல்தான் பத்தேரி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எடக்கல் குகைகள், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவுச் சின்னமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காணப்படும் தொன்மையான சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கும் கலைப் பிரவாகமாய் திகழ்ந்து வருகிறது.
எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன.
இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.
இவை யாவும் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாக கருதப்படுவதால் உலகம் முழுக்க உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றியலாளர்கள் கவனத்தை பெற்றுள்ளன. மேலும் இந்த குகைப் பகுதிகளில் காலை நேரங்களில் நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.
குருவா டிவீப், வயநாடு
குருவா டிவீப் எனும் இந்த அழகிய ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. வயநாட் பகுதியின் முக்கிய ஆறாக இந்த கபினி ஓடுகிறது.
குருவா டிவீப் என்று அழைக்கப்படும் இந்த ஆற்றுத் தீவுத்திட்டு செழிப்பான பசுமையான மரங்கள் அடர்ந்த ஒரு சோலை போன்று காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஏராளமான தாவர இனங்களும் காட்டுயிர் அம்சங்களும் வசிக்கின்றன.
பல அரிய வகைப்பறவைகளும் இந்த குருவா தீவுத்திட்டினை இருப்பிடமாக கொண்டுள்ளன. மருத்துவ குணங்கள் கொண்ட விசேஷமான மூலிகைச்செடிகள், ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் போன்றவற்றை இங்கு பயணிகள் காணலாம்.
இயற்கையின் செழிப்பை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் ரசனை உள்ளம் படைத்தவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் விஜயம் செய்து ரசிக்கும் அளவுக்கு இந்த தீவுத்திட்டின் இயற்கை வளம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
கேரள சுற்றுலாத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஃபைபர் படகுகள் அல்லது மிதவைகள் மூலம் இந்த தீவுத்திட்டுக்கு பயணிகள் செல்லலாம். இயற்கை அழகு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வருடத்தின் சில பருவங்களில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் இந்த தீவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே தீவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றுச்செல்வது அவசியம்.
மீன்முட்டி அருவி, கல்பெட்டா
கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவி 300 அடி உயரத்தில், கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment