For Read Your Language click Translate

26 June 2014

அகத்திய மாமுனி


இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
 
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை: 
1. அகத்தியர் வெண்பா 
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி 
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம் 
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி 
5. அகத்தியர் வைத்தியம் 1500 
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி 
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம் 
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம் 
9. அகத்தியர் வைத்தியம் 4600 
10. அகத்தியர் செந்தூரம் 300 
11. அகத்தியர் மணி 4000 
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு 
13. அகத்தியர் பஸ்மம் 200 
14. அகத்தியர் நாடி சாஸ்திரம் 
15. அகத்தியர் பக்ஷணி 
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200 
17. சிவசாலம் 
18. சக்தி சாலம் 
19. சண்முக சாலம் 
20. ஆறெழுத்தந்தாதி 
21. காம வியாபகம் 
22. விதி நூண் மூவகை காண்டம் 
23. அகத்தியர் பூசாவிதி 
24. அகத்தியர் சூத்திரம் 30 
 
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும் 
 
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம் 
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 
அகத்தியர் சித்தர் வரலாறு முற்றிற்று. 

No comments:

Post a Comment