கஞ்சமலை, இதன் அமைவிடம் இந்தியாவின் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சேலம் நகரில் இருந்து சுமார் 15 கி.மீ , தொலைவில் அமைந்துள்ளது .இங்கு அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது , சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் ...இருந்து 68 ஏ, 68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள் கிளம்புகின்றன..
இக் கோவிலின் மூலவர்= அருள்மிகு சித்தேஸ்வரர் ஆவார் . இக் கோவில் தீர்த்தம் = காந்ததீர்த்த குளம் ஆகும் ,
இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் . இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன
.சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும்..இக் கோவில் காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இக் கஞ்சமலையில் அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.
இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.
மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர்.
நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.வியாதிகள் குணமாகவும், முகத்தில் உள்ள பரு நீங்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
நாரதர்
இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
இக் கோவிலின் தலபெருமை மிகவும் விசேசமாகும் இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.
இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்."அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.
பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர். மேலும் காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.
அடுத்து வரும் பதிவுகளில் கஞ்சமலை பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அளிக்கிறேன்.
No comments:
Post a Comment