ஒருவர் பாம்புக்கடிக்குள்ளானால் இயன்றவரை பாதிக்கப்பட்டவரை பதற்றமடையச் செய்யவேண்டாம். பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். எனவே மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பிக்கையளித்து அவரது பதட்டத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
கடிபட்டவருக்கு எல்லாவகைப் பாம்புகளும் அபாயமானதல்ல என்று விளக்கவேண்டும். அத்துடன் கடிபட்ட அனைவருக்கும் விஷம் ஏறி இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவிக்க வேண்டும்.
காயத்தை சோப் (soap) போட்டு ஓடும் நீரில் கழுவவேண்டும்.காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம்.கடிபட்ட பாகத்தை அசையாது வைத்திருந்தால் அது இரத்த ஓட்டத்தை தாமதப்படுத்த உதவம்.
முடிந்தால் பாம்பின் வகையை கேட்டறிந்து கொள்வது மருத்துவத்துக்கு உதவியாக இருக்கும்
ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகள்
கடிவாயின் மீது கீறுவதோ,உறுஞ்சுவதோ, கட்டுவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.கடிவாயின் மேற்பகுதியில் கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் செல்கள் இறக்கக்கூடும். வாய்வைத்து உறிஞ்சும் போது வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.
“ஆஸ்பிரின்” ,“மதுபானம்” முதலியவற்றை கொடுக்கக்கூடாது.
உடன் மருத்துவமனைக்கு கடிபட்டவரை கொண்டு செல்ல வேண்டும்.
சரியான முதலுதவிகள் செய்வதன் மூலமும், மருத்துவம் மூலமும் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களைத் தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment