For Read Your Language click Translate

23 June 2014

வானத்தில் பறந்த குழந்தை…



வானத்தில் பறந்த குழந்தை…
என்ன தலைப்பை நம்ப முடியவில்லை அல்லவா? கதை, கப்சா விடுகிறான் என்று தோன்றுகிறதல்லவா? முதலில் இதைப் படித்து விடுங்கள்…
“ கோவை (கோவைதானா என சரியாக ஞாபகமில்லை எனக்கு. மேலும் நினைவில் இருந்தே இதனை எழுதுகிறேன்) அருகே ஒரு அம்மையார் அற்புதம் நிகழ்த்துவாகக் கேள்விப்பட்ட மறைமலையடிகள் நண்பருடன் அங்கே செல்கிறார். அது ஒரு சாதாரண குடிசை வீடு. உள்ளே முருகன் முதலிய தெய்வங்களின் படங்கள். அப்போது அங்கே தங்கள் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் வருகின்றனர்.
“அம்மா, குழந்தைக்கு பழனில முடி இறக்கணும் வேண்டுதல் அதான் இங்கே வந்தேன்” என்கின்றனர்.
“ஓ. அர்ச்சனை சாமான் கொண்டு வந்தியா?”
“இதோ”
அந்தத் தட்டை வாங்கி தூக்கிப் பிடித்தபடி “முருகா” என்று சொல்லி அந்த அம்மா மேலே எறிகிறார்.
மேலே சென்ற தட்டு காணாமல் போய் விடுகிறது.
இவர் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “ம்ம் முருகனை நல்லா வேண்டிக்குங்க” என்கிறார் அந்த அம்மையார்.
அவர்கள் வேண்டிக் கொள்ள சற்று நேரத்தில் அந்த அம்மா, “முருகா முருகா” என்க அந்தத் தட்டு மறுபடியும் கீழே இறங்கி வருகிறது. அதில் உடைத்த தேங்காய், பூ, பழம் என அர்ச்சனைப் பிரசாதம்.
அடுத்து அவர்கள் நிறைமுடியோடிருக்கும் தங்கள் குழந்தையைக் கொடுக்க, அந்த அம்மாவும் அதை வாங்கி, “முருகா” என்று சொல்லி மேலே தூக்க, குழந்தையும் மறைந்து விடுகிறது.
எல்லோரும் பதைபதைத்துக் காத்திருக்க, வெகு நேரம் கழித்து அந்த அம்மா மீண்டும் “முருகா முருகா’ என்று சொல்லிக் கையை உயர்த்த குழந்தை கைக்கு வருகிறது. அழகாக மொட்டையடிக்கப்பட்டு, சந்தனம் பூசப்பெற்று.
மறைமலையடிகள் திகைத்து விடுகிறார்.
- அரவிந்த்
இனி இதனைப் பெரிதாக்கிப் பாருங்கள்…
ttk
mms 1
mms 2
mms 3
ப்போ நம்ப முடியுதா?

No comments:

Post a Comment