ஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :
சவ்வீராஞ்சனம்
ரசாஞ்சனம்
ரக்தாஞ்சனம்
சுரோதாஞ்சனம்
நீலாஞ்சனம்
புஷ்பாஞ்சனம்
என்று பலவகை அஞ்சனக்கல் உண்டு .இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரா மற்றும் தென் தமிழகப் பகுதியில் இந்த கல் கிடைக்கிறது...
இவற்றில் தற்போது நீலாஞ்சனம் மட்டுமே நமக்கு கிடைக்கின்றது. மற்றவை மிக அரிதானவை!இந்த அஞ்சனங்களை மருத்துவத்தில் வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தியதற்க்கான பல ஆதாரங்கள் உள்ளன !
போகர் அருளிய “போகர் 12000” என்கிற நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. வெள்ளையும், நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற வேறு பெயர்களும் உண்டு
குருவாயூரப்பன் சிலை இந்தகல்லில் வடிக்கப்பட்டதாக அறிகிறோம் ! எனவே தெய்வீக சக்தி மட்டுமின்றி மருத்துவ குணங்களும் இந்த சிலாரூபத்துக்கு உண்டு
குருவாயூரப்பன் ஸஹஸ்ரத்தில் "பாண்ட்யா ராஜ க்ருதாலயாய நம" என்று வருவதால் குரு+ வாயுவால் பூர்வம் பிரதிஷ்டிக்கப்பட்டு பிறகு பாண்டியனால் கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பெற்ற ஆலயம் என்பதும் தெரிய வருகிறது
No comments:
Post a Comment