இங்கு சமீப காலங்களாக வளைகுடா நாடுகளிலிருந்து அதிக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருவதால் முன்பெப்போதும் இல்லாத அளவு மலப்புரம் மாவட்டம் பொருளாதரத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வல்லுனர்களின் பார்வை மலப்புரம் மாவட்டத்தின் மீது விழத் தொடங்கி இருக்கிறது.
மலப்புரம் மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதிகளாக ஓடிக் கொண்டிருக்கும் சாளியாறு, பாரதப்புழா, கடலுண்டி ஆகிய மூன்று நதிகளும் மலப்புரத்தின் மண் வளத்துக்கும், கலாச்சார மேன்மைக்கும் முக்கிய காரணங்களாக திகழ்ந்து வருகின்றன.இந்த மாவட்டம் கோழிக்கோட்டின் ஜமோரின் மகாராஜாக்களின் ஆற்றல்மிக்க ராணுவத்தின் தலைமையிடமாக விளங்கி வந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்திய சுதந்திர போர் நடைபெற்று வந்த காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளான கிலாஃபத் இயக்ககமும், மாப்ளா கிளர்ச்சியும் நடந்தேறிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் மலப்புரம் பிரபலமாக அறியப்படுகிறது. இவைதவிர இஸ்லாமிய நடன வடிவமான 'ஒப்பனா' மலப்புரம் மாவட்டத்தில்தான் தோன்றியதாக கூறப்படுகிறது.
வேறுபட்ட பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவமான சுற்றுலா மையங்கள்
கேரளாவின் கலாச்சார, அரசியல் மற்றும் இலக்கிய பாரம்பரியத்துக்கு மலப்புரம் மாவட்டத்தின் பங்களிப்பு மகத்தானது. இந்த மாவட்டத்தின் திருநாவாயா ஸ்தலம் இடைகாலங்களில் வேத கல்விக்கு மையமாக விளங்கி வந்தது.அதோடு கோட்டக்கல் கிராமம் ஆயுர்வேத மருத்துவத்தின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இவைதவிர இஸ்லாமிய கல்வி முறையின் மையமாக விளங்கிய பொன்னனியும், தேக்கு நகரமான நீலம்பூரும் மலப்புரம் மாவட்டத்துக்கு உலக அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவை.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக கடலுண்டி பறவைகள் சரணாலயம், கேரளதேஷ்புரம் கோயில், திருநாவாயா கோயில் போன்றவை அறியப்படுகின்றன.
மேலும் மலப்புரம் ஜூம்மா மஸ்ஜித், மன்னூர் சிவன் கோயில், வேட்டக்கொருமகன் கோயில், கோட்டக்குன்னு ஹில் கார்டன், பீயம் ஏரி, ஷாந்திதீரம் ரிவர்சைட் பார்க் உள்ளிட்ட பகுதிகளும் நீங்கள் மலப்புரம் மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
மலப்புரம் மாவட்டத்தை வான் வழியாகவோ, ரயில் மற்றும் சாலை மூலமாகவோ சுலபமாக அடைந்து விட முடியும். அதோடு இந்த மாவட்டம் ஆண்டு முழுவதும் மிதமான வானிலையையே கொண்டிருக்கும்.
இங்கு இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசித்து வருவதால் அரேபிய மற்றும் பாரம்பரிய கேரள உணவுகளின் கலவையில் புது விதமான உணவு வகைகளை நீங்கள் மலப்புரம் வரும் போது சுவைத்து மகிழலாம்.
கடலுண்டி பறவைகள் சரணாலயம், மலப்புரம்
கடலுண்டி சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில், பிரம்மாண்ட குன்றுகள் சூழ அமையப்பெற்றிருப்பது பறவை காதலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். இந்த சரணாலயம் ஏராளமான புலம்பெயர் பறவையினங்களுக்கு பருவ கால வசிப்பிடமாக இருந்து வருகிறது.
இங்கு மலபார் இருவாய்க்குருவி, சதுப்பு நிலக் கொக்கு, கடற்பறவை, மரங்கொத்தி, மீன்கொத்தி, பிராமினி பருந்து, விம்ப்ரேல், டார்டர், சாண்ட்பைப்பர் போன்ற பறவையினங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். இவைதவிர இந்த சரணாலயத்தில் மீன், ஆமை, நண்டு உள்ளிட்ட கடல் வாழ் பிராணிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடலுண்டி சரணாலயத்துக்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தக் காலங்களில் நீங்கள் இங்கு வந்தால் பறவைகளை ரசிப்பதோடு படகுப் பயணம் சென்றும் பொழுதை கழிக்கலாம்.
கேரளதேஷ்புரம் கோயில், மலப்புரம்
மலப்புரம் மாவட்டத்தில் பழமையான போர்த்துகீசிய குடியிருப்புகளுக்காக பிரபலமாக அறியப்படும் தானூர் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கேரளதேஷ்புரம் கோயில் அமைந்திருக்கிறது.
கேரளதேஷ்புரம் கோயில் மைசூர் மகாராஜா திப்பு சுல்தானால் தகர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இப்போது இருக்கும் கோயில் அதன் பிறகு புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.
இந்தக் கோயிலில் காணப்படும் சுவர்ச் சித்திரங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இங்கு மலையாள மாதம் விருச்சிகத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் ஆண்டுத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் திரள் திரளாக கலந்து கொள்வார்கள்.
கேரளதேஷ்புரம் கோயில் தானூர் நகருக்கு அருகில் அமைந்திருப்பதால் நீங்கள் இங்கு சுற்றுலா வரும் போது தானூர் கடற்கரையை தவற விட்டுவிடக் கூடாது.
அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு நேரம் இருந்தால் தானூர் நகருக்கு அருகில் உள்ள திருக்கைகட்டு கோயில் மற்றும் மடம், ஷோபா பரம்பு தேவி கோயில், வேட்டக்கொருமகன் கோயில் போன்ற இடங்களுக்கும் சென்று வரலாம்.
திருநாவாயா கோயில், மலப்புரம்
திருநாவாயா கோயிலின் முதன்மை தெய்வமான விஷ்ணு பகவான், நவ முகுந்தன் என்ற வடிவத்தில் பக்தர்களால் வழிபடப்படுகிறது. அதோடு இந்த கோயில் வளகாத்தில் லக்ஷ்மி மற்றும் விநாயகர் சன்னதிகளும் இருக்கின்றன.
இந்தக் கோயில் முந்தைய காலங்களில் வேதம் பயிற்றுவிக்கும் ஸ்தலமாக திகழ்ந்து வந்தது. அதன் பிறகு மைசூர் பேரரசு இந்தப் பகுதிகளில் படையெடுத்து வந்தபோது திப்பு சுல்தான் ராணுவத்தால் இந்தக் கோயில் சூறையாடப்பட்டதுடன், இடித்துத் தகர்க்கப்பட்டது. எனினும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் இன்றளவும் புகழ் குன்றாமல் இருந்து வருகிறது.
திருநாவாயா கோயில் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், மாமாங்கம் திருவிழாவுக்காக பிரசித்திபெற்ற திருநாவாயா எனும் சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. எனவே இந்த கோயிலை சாலை மூலமாக அடைவது கடினமான காரியமாக இருக்காது.
திருநாவாயா கோயில், மலப்புரம்
கேரளாவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான திருநாவாயா கோயில், பாரதப்புழா நதிக்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில், திருநாவாயா நவ முகுந்த ஷேத்ரம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது.
இந்தக் கோயில் முந்தைய காலங்களில் வேதம் பயிற்றுவிக்கும் ஸ்தலமாக திகழ்ந்து வந்தது. அதன் பிறகு மைசூர் பேரரசு இந்தப் பகுதிகளில் படையெடுத்து வந்தபோது திப்பு சுல்தான் ராணுவத்தால் இந்தக் கோயில் சூறையாடப்பட்டதுடன், இடித்துத் தகர்க்கப்பட்டது. எனினும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் இன்றளவும் புகழ் குன்றாமல் இருந்து வருகிறது.
திருநாவாயா கோயில் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், மாமாங்கம் திருவிழாவுக்காக பிரசித்திபெற்ற திருநாவாயா எனும் சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. எனவே இந்த கோயிலை சாலை மூலமாக அடைவது கடினமான காரியமாக இருக்காது.
No comments:
Post a Comment