For Read Your Language click Translate

16 June 2014

மரம் வளர்ப்பதன் மகிமைகள்!!!





மரங்கள்,புதர்கள்,கொடிகள்,செடிகள்,மேல்பட்டை கடினமாக இருக்கும் மூங்கில் முதலியவை,புல்,பூண்டு வகைகள் என ஆறுவகைகள் தாவரங்களில் இருக்கின்றன;

மரங்கள் நட்டு வளர்ப்பவன் இவ்வுலகில் புகழடைகிறான்;
இறந்தப்பின்னர் புண்ணியப் பலன்களை அடைகிறான்;
பித்ருக்கள் உலகத்தில் முன்னோர்களும் அவனைக் கொண்டாடுவார்கள்;
தேவ உலகம் போன பின்னரும் அவன் பெயர் நிலைத்து நிற்கும்.
மரம் வைப்பவன் இறாந்த காலத்திலும்,எதிர்காலத்திலும் தனது வம்சத்தைக் கரையேற்றுவான்;

மரங்கள்,அவற்றை நடுபவனுக்குக் குழந்தைகள் ஆகின்றன;மரம் நடுபவன் மேல் உலகம் செல்லும்போது,சொர்க்கத்தையும் மற்றும் அழிவில்லாத உலகங்களையும் அடைகிறான்.

மரங்கள்,பூக்களால் தேவர்களையும்;பழங்களால் முன்னோர்களாகிய பித்ருக்களையும்,நிழலால் விருந்தினர்களையும் பூஜை செய்கின்றன;
மரங்கள் பூத்தும்,காய்த்தும் மனிதர்களுக்கு மகிழ்வை ஊட்டுகின்றன;மரங்களைத் தானமாகக்கொடுப்பவனை அந்த மரங்கள் பிள்ளைகளைப் போல மறுமையில் நரகத்தைத் தாண்டச் செய்கின்றன;


இம்மை,மறுமையில் நன்மைகளை அடைய விரும்புபவன் குளக்கரையில் நல்ல மரங்களை எப்போதும் வளர்க்கக்  வேண்டும்;பிள்ளைகளை காப்பாற்றுவதைப் போல,அவற்றைக் காப்பாற்ற வேண்டும்;மரங்கள் தங்கள் செய்கைகளால் பிள்ளைகளாகவே நினைக்கப்படுகின்றன;
இதனாலேயே தென்னையை ‘தென்னம்பிள்ளை’ என்று அழைக்கும் பழக்கம் கிராமத்தில் ஏற்பட்டுள்ளது.இளமையில் ஒரு தென்னை மரத்தை நட்டு வைப்பவனுக்கு,அவனது/அவளது முதுமைகாலத்தில் அம்மரம் காய்களைத் தந்து,கீற்று,மட்டை முதலானவைகளால் வருமானம் அடைய வைக்கிறது.

புரட்டாசி மாதத்தின் இறுதியில் இருந்து பங்குனி மாதத்தின் ஆரம்பம் வரையிலான காலகட்டமே மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்ற காலமாக தமிழ்நாடு,ஆந்திரப்பிரதேசம்,கேரளமாநிலம்,கர்னாடக மாநிலம்,ஸ்ரீலங்காவில் அமைந்திருக்கிறது.இந்த காலகட்டத்தில் ஒரு நாளுக்கு ஒரு மரக்கன்று என்ற விகிதத்தில் மரக்கன்றை நடுவது அவசியம்.குறிப்பாக,நமது ஜன்ம நட்சத்திரத்திற்குரிய மரக்கன்றை நடுவதும் அளவற்ற புண்ணியம் தரும்.

கோவில் சார்ந்த மலைப்பகுதிகளில்/வனப்பகுதிகளில் மரக்கன்று நடுவதன் மூலமாக அளவற்ற புண்ணியத்தைப் பெறமுடியும்.ஒரு மரக்கன்று நட நாம் இடத்தைத் தேர்வு செய்த பின்னர்,அந்த இடத்தில் முதல்நாளே பள்ளம் தோண்டி வைத்து விட வேண்டும்.மறு நாள் மாலை வரை அந்த பள்ளத்தில் வெப்பம் வெளியேறிவிடும்.அதன் மூலமாக நாம் நடும் மரக்கன்றின் வேர்கள் குளிர்ச்சியான சூழ்நிலையில் மண்பிடிப்புக்கு ஏதுவாக தயாராகிவிடும்.முறையாக வளரத்துவங்கிவிடும்;

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

No comments:

Post a Comment