பறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று கிரகவாசி யூ டியூபில் பரபரப்பு வீடியோ வெளியீடு
கருத்துகள்
0
தைவான் நாட்டை சேர்ந்தவர் ஸ்காட் வேரிங். இவர் கடந்த வாரம் யூ டியூபில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், வேற்று கிரகவாசி ஒன்று தனது தலையை உயர்த்தி சுற்றி பார்ப்பது தெரிகிறது. வேற்று கிரகவாசிகளை குறித்த தேடலில் ஈடுபட்டு வருபவர் வேரிங். கூகுள் எர்த்தில் அவர் பார்த்தவற்றை குறித்து வீடியோவில் கூறும்போது, நேற்று இரவு நான் சற்று கவனமுடன் உற்று பார்த்தேன். அது வழக்கமான வேற்று கிரகவாசி போன்று இல்லை. உருண்டையான தலை கொண்ட ஒரு பொருள் இருந்தது.
உயரமான பகுதியில் இருந்து அது வெளியே நீட்டி கொண்டு இருந்தது. அது பார்ப்பதற்கு தலை போன்று எனக்கு தோன்றியது. அது பயணம் செய்த பறக்கும் தட்டின் உள்ளே இருந்து தனது தலையை உயர்த்துவது போன்று தெரிந்தது. அந்த வடிவம் பெரிய மண்டையோடு போன்று இருந்தது. ஒரு பெரிய தலை சிறிய கன்ன பகுதி ஆகியவற்றை அது கொண்டு இருந்தது என்று கூறியுள்ள அவர் அதனை பார்ப்பதற்கான வழிகாட்டி முறைகளையும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கூகுள் எர்த்தில் சென்று டிரவுட் கிரீக், மொன்டானா என்பதை கண்டுபிடிக்கவும்.
அதற்கு அடுத்து, நெடுஞ்சாலை எண் 200ல் ஆறு ஒன்றின் மீது உள்ள பாலத்தை பார்க்கலாம். ஆரஞ்சு நிற மனிதனை இழுத்து பாலத்திற்கு மேல் கொண்டு வாருங்கள்.
வானில் பறக்கும் தட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த பக்கத்தை மேல்நோக்கி நகர்த்தினால் அங்கு சூரியன் இருப்பதையும் பார்க்கலாம்.
பறக்கும் தட்டை நன்றாக பார்க்க வேண்டுமானால் சற்று முன்னோக்கி (ஜூம் செய்து) செல்லவும். அங்கு என்ன தெரிகிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்? பறக்கும் தட்டு, நிலா அல்லது ஒளிரும் பகுதி மட்டுமா?
ஒரு உடைந்த பானை போன்று அந்த புகைப்படத்தை பார்க்கவும். மேல் பகுதியில் இருந்து தனது தலையை உயர்த்தி வேற்று கிரகவாசி பார்ப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?
நீங்கள் பறக்கும் தட்டு இருப்பதை பார்க்கலாம் என்று கூறும் வேரிங், அதில் உள்ள வேற்று கிரகவாசியையும் கூகுள் எர்த்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் 20 வெவ்வேறு பகுதிகளில் காணலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாங்கள் சோதனை செய்யவோ மற்றும் அதற்கான முயற்சியில் இறங்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

good...
ReplyDelete