For Read Your Language click Translate

23 June 2014

தாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)









பிரசன்ன ஜோதிடம் என்பது ஒருவர் வரும் நேரம்,கேள்வி கேட்கும் நெரம் பொறுத்து கணிதம்
போட்டு பலன் சொல்வதாகும்.சில ஜோதிடர்கள் ஃபோன் மூலம் கேட்கும் நேரத்தை கணித்தும்
 சொல்ல்லி வருகின்றனர்.இப்போது நான் சொல்வது வெற்றிலை மூலம் பார்க்கப்படும் ஆரூடம்.
சோழி பிரசன்னம்,அகத்தியர் ஆரூடம் போன்ற வரிசையில் இந்த வெற்றிலை ஜோதிடமும்
 வருகிறது.இதை எப்படி கணிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தாம்பூல பிரசன்னம்:
அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை கொடி நாகலோகத்தில் உண்டானது அதற்கு நாகவல்லி என்று பெயர்.அது மகா லட்சுமி அம்சமாகும்.
தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும்.

வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும்.
ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுகிறார்கள்....

தாம்பூல பிரசன்னம் பார்க்கும் விதம்:
முதலில் பிரசன்னம் பார்க்க வருபவரிடம் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிவரும்படி கூறவும்.
குறிப்பு : வெற்றிலை வாங்கிவரும்பொழுது 12 வெற்றிலைக்கு மேல் வேண்டும். எனவே ஜோதிடர் வெற்றிலையின் விலையை அறிந்து சாதகம் பார்க்க வந்தவரை  வாங்கி வரும்படி கூறவும்.
 

1) இவைளை வாங்கி வந்தவுடனே பிரசன்னம் பார்க்க வந்தவரிடம் அவருடைய குலதெய்வம், வண்ங்கும் தெய்வத்தை வணங்கிக் கொள்ளும்படி கூறவும்.
2) பிறகு ஜாதகர் கொண்டுவந்த வந்த வெற்றிலையின் எண்ணிக்கையை முதலில் இரண்டால் பெருக்க வேண்டும்.
3) பெருக்கி வந்த தொகையை 5ஆல் பெருக்க வேண்டும்.
4) பெருக்கி வந்த தொகையுடன் 1யை கூட்டிக் கொள்ள வேண்டும்.
5) வரும் மொத்த தொகையை 7ஆல் வகுக்க வேண்டும். வரும் மீதி……….
1 எனில் சூரியன்
2 எனில் சந்திரன்
3 எனில் செவ்வாய்
4 எனில் புதன்
5 எனில் குரு
6 எனில் சுக்கிரன்
7 எனில் சனி எனக்கொள்ள வேண்டும்..



ஆரூடம் பார்க்க வருபவர் பகல் 12 மணிக்குள் வந்தால் வெற்றிலையின் மேல்புறத்தில் இருந்து
  எண்ணவும்.

சில அடிப்படை பலன்கள்;

சூரியன் என்றால் துக்கமும், சந்திரன் எனில் சுகமும், செவ்வாய் எனில் கலகமும், புதன் & குரு எனில் பணமும்;(புதன்-செய்யும் தொழிலின் மூலம் பணமும் குரு-ஞானம், ஆன்மீகப் பணி மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்).
சுக்கிரன் எனில் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
சனி எனில் கண்டங்கள், தடங்கல்கள் ஏற்படும் .மாந்தியுடன் சேர்தால் மரணம் எற்படும்.


அடுத்து இந்த தாம்பூலம் கிரகம் உள்ள இடமே தாம்பூல லக்னம் எனப்படும். அதை எப்படி அறிவது?
பிரசன்னம் பார்க்க வந்தவர், வந்த நேரத்தில் பஞ்சாங்கத்தின் உதவியால் கிரகங்களைஉள்ள நிலையை கட்டத்தில் குறித்துக் கொள்ளலாம். பிரசன்னம் பார்க்க வந்தவர் நேரத்தின் அடிப்படையில்
அன்றைய கோட்சார கிரக நிலையை கட்டம் போட்டு மேற்க்கண்ட,கிரகம் வரும் கட்டத்தை
 லக்கினமாக எழுதி பலன் சொல்லவும்.


 
 

செவ்வாய் உள்ள இடத்தில் லக்கினம் வந்தால் மருத்துவ செலவு
சனி வந்தால் கோர்ட்,கேஸ் மருத்துவ செலவு,எண்ணிய காரியம் முடக்கம்,தாமதம்
கடகம்,விருச்சிகம்,மீனம் வந்தால் வந்த காரியம் முழு வெற்றி கிடைக்கும்
தனுசு,மிதுனம்,மீனம் வந்தால் வந்தவர் இரட்டை எண்ணத்துடன் வந்திருப்பார்.
மிதுன லக்கினம் வந்தால் ஒப்பந்தம்,ஆதாயம் கிடைக்குமா என கேள்வி அவர் மனதில் இருக்கும்.
 
 


 

ராசிக்கட்டத்தில் கிரகங்களை குறித்துவிட்டோம். இனி பலன்கள் கூற வேண்டும்.
வெற்றிலையை ஆராய்ந்து பலன் கூறும் விதம்:
1. வெற்றிலையின் மொத்த எண்ணிக்கை 24க்கு மேல் எனில்,பூர்வீக இடத்தை விட்டு வந்து இங்கு 2 தலைமுறையாக வாழ்கிறார்கள்.
2. அடிப்பாகம் பெரிய நரம்பு உள்ள பகுதி துவாரம் :கர்ப்பிணி பெண் மரணம்.
3. நடுவில் துவாரம் : துர்மரணம் அடைந்த பிரேத தோஷம் உண்டு.
4. தாம்பூலம் கிழிந்து இருந்தால் : பூர்வ புண்ணியம் தோஷம் உண்டு. இறந்த பிரேத தோஷம் – சர்ப்ப தோஷம்.
5. நுனிப்பகுதி கிழிந்திருந்தல் : தோஷம் யக்ஷிகளால் துன்பம்
இவாறு கூறிக்கொண்டே போகலாம்


 
Jai said...
Instead of multiplying by 2 and by 5 and then adding; we can directly add the digits of

tobacco which gives the same result.

For example, considering 37 tobacco leaves.

In Your case:
37x2 = 74
74x5 = 370 = (3+7+0) = 10

My case:
37 = (3+7) = 10

I don't know why you are making it a three digit unnecessarily.






 





No comments:

Post a Comment