பாயன் லேபாஸ் எனும் இடத்தில் உள்ள சுங்காய் கிலுவான்காவ் ( Sungai Keluang, Bayan Lepas) எனும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாம்புகளின் ஆலயத்தை ஹாக் ஹின் கியோங் ( Hock Hin Keong ) , பான் கா லான் சாவ் பியோ ( Ban Kah Lan Chua Beow ) அல்லது செர் மியாவு ( Ser Miau) என அழைக்கின்றார்கள். உலகத்திலேயே மிகவும் வினோதமான ஆலயம் அது என்கிறார்கள். பல இணையதளங்கள் அந்த ஆலயம் கட்டப்பட்டது 1805 ஆம் ஆண்டு எனக் கூறினாலும் உண்மையில் அது கட்டப்பட்டுள்ளது 1850 ஆம் ஆண்டில்தான். கிழக்கு மற்றும் மேற்கு மலேசிய , சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள பெரும்பான்மையான சீன தேசத்தினர் வம்சத்தில் வந்த ஹோக்கீன் என்ற பிரிவை சேர்ந்த செவ்ஸியா அல்லது சோர் சோ காங் (Chor Soo Kong) எனும் துறவியின் நினைவாக கட்டப்பட்டு உள்ளது அந்த ஆலயம். பல வம்சங்களாக போற்றப்பட்டு வந்துள்ள வரலாற்று ஆராய்சியாளரின் பெயரும் சோர் சோ என்பதே. ஆகவே செவ்ஸியா மற்றும் சோர் சோ காங் என்ற இருவரும் ஒருவரே, அவர்களின் பெயரும் மிகவும் போற்றுதலுக்கான சோர் சோ என்பதையே குறிக்கும்.
பெனாங்கில் சோர் சோ காங்கிற்கு மூன்று ஆலயங்கள் உள்ளன . பாம்புகளின் ஆலயத்தைத் தவிற படு மாங், பாலிக் புலாவு என்ற இரண்டு இடங்களிலும் கூட அவருக்கு ஆலயங்கள் உள்ளன. ஆனால் சுங்கை கேலாங்கில் (Sungai Keluang ) உள்ள சிறிய அளவிலான மக்களுக்கு அங்குள்ள ஆலயமே முக்கியமானதாக உள்ளது. ஹாக்ஹினில் உள்ள பான் கா லான் ஆலயம் பாம்பு ஆலயம் அல்லது நீல ஆகாய ஆலயம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சீன நாட்டின் புது வருடமான சந்திர மாதத்தில் (Lunar month) ஆறாம் தேதியன்று வரும் சோர் சோ காங்கின் பிறந்த நாள் அன்று பல இடங்களில் இருந்து மக்கள் அந்த ஆலயத்தில் வந்து கூடுகிறார்கள்.
சோங் வம்சத்தினர் ( Song Dynasty ) ஆட்சி செய்து வந்த காலத்தில் (960-1276 AD) சோர் சோ காங் அவர்கள் புஜியான் (Fujian ) என்ற மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் இன்க் (Eng) என்பது. அவர் டான் (Tan) என்ற பிரிவை சேர்ந்தவர். சோர் சோ காங் தனது இளம் பருவத்திலேயே துறவை மேற்கொண்டவர். ஆகவே அவருக்கு புத்த மதப் பெயரான பூ சூ (Pu-Zu) என்ற பட்டப் பெயர் கிடைத்தது.
அவர் தா யுன் யுவான் (Da Yun Yuan) என்ற மடத்தில் தங்கி ஆன்மீகப் பயிற்சி பெற்றார். ஜென் மாஸ்டர் மிங் கோங் (Zen Master Ming-Song) என்பவரிடம் ஆன்மீக பயிற்சி பெற்று ஆன்மீகவாதியானார். அதன் பின் அவர் கவோ தாய் (Gao-Tai ) மலைப் பகுத்திக்குச் சென்று தங்கினார்.
அவர் ஆன்மீக அறிவு மட்டும் அல்லாமல் மருத்துவ கல்வியும் பெற்று அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு சேவை செய்து வந்தார்.
சாங் வம்சத்தின் ஆறாவது மன்னரான ஷேன் ஜாங் (Shen-Zhong ) என்பவரின் ஆட்சியில் கியிங் ஜீ இன் புஜியான் ( Qing-Xi in pusian ) என்ற மலைப் பகுதியில் பயங்கரமான வறட்சி ஏற்பட்டபோது சோர் சோ காங் அங்கு சென்று மழைப் பொழிய பிரார்த்தனை நடத்தினார். அதனால் அங்கு நல்ல மழைப் பொழிந்தது. அதற்காக அங்கு இருந்த மக்கள் அவருக்கு பெங் லை (Peng-Lai ) மலைப் பகுதியில் ஒரு மடாலயம் கட்டிக் கொடுக்க அந்த மடாலயத்தின் பெயரை நல்ல நீரில் உள்ள பாறை என்ற பெயரில் செங் ஸ்வீ கியாம் (Cheng Swee Giam) என வைத்தார்.
1850 ஆம் ஆண்டில் புத்த மதத்தை சேர்ந்த ஒரு துறவி சோர் சோ காங்கின் ஒரு உருவச் சிலையை எடுத்து வந்து பாயன் லேபாஸ் எனும் இடத்தில் உள்ள சுங்காய் கிலுவான்காவ் நதிக் கரையில் அவருக்கு ஒரு ஆலயம் அமைத்தார். அந்த ஆலயத்தை கட்டத் தேவையான நிலத்தை நிலச்சுவாந்தரான டேவிட் பிரவுன் என்பவர் தானமாகக் கொடுத்தார். அந்த ஆலயம் கட்டப்பட்டவுடன் அதில் பல கட்டு விரியன் விஷப் பாம்புகள் வந்து பல இடங்களிலும் புற்றுக்களை ஏற்படுத்தி அங்கு புகுந்து கொண்டன. ஆனால் அங்கு இருந்த துறவிகளோ அவை மக்களினால் எந்தவிதமான தொந்தரவுக்கும் ஆளாகக் கூடாது என கவனமாகப் பார்த்துக் கொண்டு அவற்றுக்கு அடைக்கலம் தந்தனர்.

பாம்புகளின் ஆலயத்தில் பாம்புகள்
அங்கு இருந்த பாம்புகள் ஆக்லரின் விரியன் விஷப் பாம்புகள் வகையை சேர்ந்தவை (Wagler's Pit Vipers ). அவற்றை ஆலய குழி விரியன் அல்லது மலாய மொழியில் உல் கபாக் தூகாங் (ular kapak டோகாங்) என அழைத்தனர். அவை முக்கியமாக தென்னை மரங்களில் வசிப்பதை விரும்பின. அவை தாய்லாந்து நாட்டின் தென் பகுதி (South Thailand ), மலாசியா தீபகற்பம் (Peninsular Malaysia) ,போர்னியா( Borneo), சுமத்ரா, சுலவேசி (Sulawesi), பிலிபீன் நாட்டின் தென் பகுதி என பல இடங்களிலும் காணப்படுபவை . பச்சை மற்றும் இளம் நிறத்தில் காணப்படும் அவற்றின் நீளம் மூன்று முதல் நான்கு அடிகள் இருக்கும். அவை நன்கு வளர்ந்துடன் நல்ல பச்சை நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும். அவற்றின் விஷம் கொடிய விஷத்தன்மை கொண்டது இல்லை என்றாலும் அவை கடித்தால் அதன் வலி மிகவும் அதிகமாக இருப்பதுடன் அந்த இடம் வீங்கி விடும். ஆனால் அவை சாதாரணமாக சோம்பேறித்தனமாக இருப்பதினால் கடிப்பது அபூர்வம். தற்போது அந்த இடங்களை சீர்படுத்தி வருவதினால் அந்த வகைப் பாம்புகளின் எண்ணிக்கையும் குறைத்து வருகின்றது. ஆலயத்தின் பின்புறத்தில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டு அவை பவன் லேபாசின் தொழில் மைய பூங்காக்களாக மாறிவிட்டன.
ஆலயத்தில் ஏற்றப்படும் ஊதுபத்தியின் புகை பாம்புகளுக்கு ஏற்றதாக இல்லை. சுமார் ஐந்து ஆண்டுகளே உயிருடன் இருக்கும் அவற்றின் வாழ்நாளை அந்தப் புகை மேலும் குறைக்கின்றதாம். மேலும் புகையை பாம்புகள் விரும்புவது இல்லை. ஆகவே பாம்புகளுக்கு புகை ஒத்துக் கொள்ளாததினால் இனிமேல் ஊதுபத்தியை ஆலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் ஏற்றக் கூடாது என ஆலய நிர்வாகிகள் தடை விதித்து உள்ளனர்.
பாம்புகளின் ஆலயத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் சோர் சோ காங்கின் பிறந்த நாளான சீன புது வருடப் பிறப்பன்று அந்த ஆலயத்துக்கு போகக் கூடாது. அந்த நாட்களில் மக்களின் கூட்டத்தினால் ஏற்படும் சங்கடங்கள் மற்றும் சப்தத்தினால் அவதியுறும் பாம்புகளுக்கு அந்த தொல்லையைக் குறைக்க ஆலய நிர்வாகம் அந்தப் பாம்புகளின் எண்ணிக்கையை அன்று குறைத்து விடுகின்றனர்.

சோர் சோ காங்கின் மற்ற ஆலயங்கள்
பெனாங்கில் உள்ள பாம்புகளின் ஆலயத்தைத் தவிர சோர் சோ காங்கிற்கு வேறு இரண்டு இடத்திலும் ஆலயங்கள் உள்ளன. அவை படு மாவுங் சோர் சூ காங் ஆலயம் (Batu Maung Chor Soo Kong ) மற்றும் பாலிக் புலாவு (Balik Pulau) ஆலயம் ஆகும். அவற்றைக் கட்டியவர் மறைந்த டான் ஸ்ரீ ததோ செரி திர் லிம் கோ டாங் (Tan Sri Dato Seri Dr Lim Goh Tong ) என்பவர். வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த அவர் சோர் சோ காங்கின் பக்தர். அவர் பாம்புகளின் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வார். அங்கிருந்து அவர் சோர் சோ காங்கின் புனித சாம்பலையும், புனிதப் பொருளையும் கொண்டு வந்து ஜென்டிங் ஹைலாந்தில் (Genting Highlands) அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினார்.பாம்பு ஆலயம் புதுப்பிக்கப்பட்ட வரலாறு
1850 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாம்பு ஆலயம் 1907, 1971 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் புதிப்பிக்கப்பட்டாலும் மீண்டும் அது 2008 - 2009 ஆம் ஆண்டில் சீர் அமைக்கப்பட்டது. ஆனால் புனரமைக்கப்பட்ட அந்த ஆலயத்தின் கலை நுணுக்கங்கள் முதலில் இருந்த ஆலயத்தின் தன்மையை மாற்றிவிட்டதாக கண்டனம் செய்த ஹோப்கியன் கான்ஸ்கி (Hokkien Kongsi) என்பவர் மீண்டும் 2008 ஆம் ஆண்டு அதை புனரமைத்தார். கட்டிடத்தின் தலை பகுதியில் உடைந்து இருந்த சியன் நியன் (chien nien) எனப்படும் புனிதக் குடங்களை புதுப்பித்தார். ஆலயத்தின் அனைத்துப் பகுதிகளும் புதிய வண்ணத்தினால் ஜொலிக்க வைக்கப்பட்டன. கலை நுணுக்கம் வாய்ந்த சுவற்றின் சில மேல் கூறைகள் தங்கத் தகடுகளினால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்படி ஆலயம் புதுப்பிக்கப் பட்டபோது அங்கிருந்த பாம்புகளை மற்றொரு இடத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.அதன் பின் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் சீன புது வருட வைபவத்தைக் கொண்டாவும் வருடாந்தர தீ மூட்டும் வைபவத்தையும் கொண்டாட 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதியன்று 10 .30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
பெனாங் ஹெரிடேஜ் டிரஸ்ட்
நான் பெனாங் ஹெரிடேஜ் டிரஸ்ட் நிர்வாகத்தினருடன் தொடர்ப்பு கொண்டு பாம்புகளின் ஆலய விஜயத்தை தயாரித்தேன். அங்கு எங்களை அந்த டிரஸ்டின் அங்கத்தினர்கள் அன்புடன் வரவேற்று அந்த ஆலய வரலாற்றைப் பற்றி விளக்கிக் கூறினார்கள். எங்களை அங்கு இருந்த பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்கள்.சுத்தமான டிராகன் நீர் கிணறு
பாம்பு ஆலயத்தில் இரண்டு கிணறுகள் சுத்தமான தண்ணீரை தந்து கொண்டு உள்ளன. அவை 1850 ஆம் ஆண்டு அந்த ஆலயம் நிறுவப்பட்டபோது ஏற்படுத்தப் பட்டவையாம். அதை டிராகனின் இரண்டு கண்களைக் கொண்ட இரண்டு கிணறுகள் என்கிறார்கள். அந்த டிராகன் அந்த ஆலயம் நிறுவப்பட்டபோது ஆகாயத்தில் இருந்து எறங்கி வந்ததாம். ஒரு கிணறு மூண்டு அடி அகலமும் பத்து அடி ஆழமாகவும் இருக்க இன்னொரு கிணறு இரண்டு அடி அகலமும் பத்து அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. அந்த கிணற்று நீரைத்தான் பக்கத்தில் உள்ள கிராம மக்களின் உபயோகத்துக்கு தருகிறார்கள். அந்த கிணற்று நீரை பருகினால் ஆரோக்கியம், நீண்ட வாழ்வு மற்றும் அதிருஷ்டம் கிடைக்கும் என்கிறார்கள். அந்த இரண்டு கிணறுகளில் ஒன்று பாம்பு பண்ணைக்கு பக்கத்தில் இருக்க என்னோன்றோ பாம்புகளின் ஆலயத்தின் அருகில் உள்ளது.பாம்புப் பண்ணை
பாம்புப் பண்ணை வேறு சிலர் முயற்சியினால் பாம்புகளீன் ஆலய நிர்வாகிகளின் ஒப்புதலோடு அந்த ஆலயத்தின் பக்கத்திலேயே அமைக்கப்பட்டு உள்ளது. அதைப் பற்றிய விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சுங்கை கேலுகாங் ஆலயத்தின் வளாகத்தில் மிருகக் காட்சி சாலையைப் போல பாம்புகள் பண்ணை என்ற பெயரில் பாம்புகளின் காட்சி சாலை உள்ளது. அங்கு அபூர்வமான அல்பினோ (Albino Cobra) நாகப்பாம்பு முதல் பல வகைப் பாம்புகள் வைக்கப்பட்டு உள்ளன. அதை 2006 ஆம் ஆண்டில் நிறுவியவர் திரு சேவ் பொஹ் ஹூ என்பவர் (Chew Poh Hoo ). அந்த காட்சியகம் அந்த ஆலயத்தில் உள்ள விரியன் பாம்புகளின் நலத்தையும் பார்த்துக் கொள்கின்றது. னான் அங்கு 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியன்று சென்றேன். திரு சேவ்எனக்கு சீனர்களின் நம்பிக்கைப் பற்றிய சில தகவல்களைக் கூறினார். அதன்படி பாம்பின் தொலை மனிபுர்சில் வைத்துக் கொண்டால் அதிருஷ்டமாம். அது பர்சில் உள்ள பணத்தை பாம்பு போலவே பாதுகாக்குமாம். பாம்புகள் தமது தொலை தாமே உரித்துக் கொள்வதுண்டு. அந்த உரித்த தொலை அங்கு காட்சியாக வைத்து உள்ளார்கள். அந்த தொலை கையில் எடுத்தால் அது உடைந்து விடும். திரு சேவ் சீனர்களின் 'யின்' மற்றும் 'யாங்' என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர் என்பதினால் அந்த பண்ணையில் பாம்புகளைப் போன்ற 'யின்' மற்றும் எலிகளைப் போன்ற 'யாங்' மிருகங்களையும் வளர்கின்றார். அந்தப் பண்ணையில் திரு சேவ் எனக்கு உடும்பைப் போன்ற ஒரு பிராணியின் கூண்டிர்ற்குள் அழைத்துச் சென்று அதைக் காட்டினார். அது மிருதுவான ஆனால் உடம்பேகும் வழுவழுப்பான தோலைக் கொண்டு இருந்தது.

பாம்பு பண்ணை மற்றும் ஆலயத்துக்கு செல்வது எப்படி ?
பாம்புகளின் ஆலயத்தில் உள்ள பண்ணை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை மட்டுமே திறந்து உள்ளது. நுழைவுக் கட்டணம் RM 5.00 . குழந்தைகளுக்கு கட்டணம் RM 3.00. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பாம்புகளின் காட்சி நடைபெறும். பெனாங்கிற்குச் செல்ல என்னுடைய பெனாங் விஜயம் பற்றிய குறிப்பை Penang Travel Tips படிக்கவும். வேல்ட் குவே பஸ் (Weld Quay Bus Terminal,) இருந்து ராபிட் பெனாங் (Rapid Penang) பஸ் எண் 401 இல் ஏறி பாலிக் புலாவ் எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து இன்னொரு பஸ்ஸில் ஏறி ஒஸ்ரம் எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும் . அங்கிருந்து எவரைக் கேட்டாலும் பாம்பு ஆலயம் செல்ல வழி காட்டுவார்கள் . பாம்பு ஆலயம் உள்ள இடத்துக்குச் செல்ல பயன் லேபாஸ் சாலையில் உள்ள கிளை சாலையான ஜலான் டோகாங் உலார் சாலையில் செல்ல வேண்டும். ஆலயத்தில் என்ன பார்க்கலாம்.அந்த ஆலயத்தில் சென்று அங்குள்ள பாம்புகளைக் காணலாம். மேலும் ஆலயத்தில் உள்ளே உள்ள மரத்தில் ஏறித் திரியும் பாம்பை கையில் பிடித்துக் கொள்ளலாம். அவை எவரையும் கடிப்பது இல்லை என்றாலும் அது அவரவர் சொந்தப் பொறுப்பில் செய்ய வேண்டும். அதை உங்களுடன் செல்லும் புகைப் படகாரரைக் கொண்டு படமாகவும் பிடித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment