கத்தரிக்காய்க்கு தெய்வ அம்சம் உண்டென்பதும், நச்சுத்தன்மையை ( விஷம் ) முறிக்கும் சக்தி அதற்கு உண்டென்பதும் பலருக்குத் தெரியாது.
அம்மை நோயை குணப்படுத்தவும் சிறந்த ஔஷதம் என்பது பலருக்குத் தெரியாது. சமீப ஆ...ராய்ச்சிகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபணமாகியும் உள்ளது. இத்தகைய கத்தரிக்காயில் பல வகைகள் உள்ளது, அதில் சிறந்த வகைகளில் ஒன்றே " மட்டிக்குள்ளா கத்தரிக்காய் "
மத்வாச்சாரியார் ஏற்படுத்திய எட்டு மடங்களில் ஒன்றான ஸ்ரீசோட் மடத்தின் அதிபதியாக இருந்தவர் ( சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் ) வாதிராஜர், இவர் விரும்பி தினமும் தொழும் தெய்வம் ஸ்ரீ ஹயக்ரீவர் * ( ஸ்ரீமந்நாராயணன் எடுத்த அவதாரங்களுள் ஹயக்ரீவ ( பரிமுகன், பரி - குதிரை [ குதிரை புரவி என்றும் அழைக்கப்படும் ] ) அவதாரமும் ஒன்று.
அஞ்ஞான இருளில் மூழ்கிய உலகை ஞான ஜோதியால் விளங்கச்செய்த பெருமை இந்த அவதாரத்திற்கு உண்டு. சிருஷ்டியின் ஆரம்பகாலத்தில் பிரம்மாவிடம் இருந்து அசுரர்கள் வேதங்களை அபகரித்துச் சென்றபோது அவர்களை வென்று வேதங்களை மீட்டவர் இவர்.
திருவஹீந்திரபுரம் வந்த இவர் ஹயக்ரீவருக்குப் படைக்கும் நைவேத்தியத்தை ஒரு கூடையில் வைத்து தலையில் சுமந்து கொள்வார். ஹயக்ரீவர் வாதிராஜரின் தோள்களில் தன் கால் குளம்பை வைத்து நைவேத்தியத்தை உண்டு மீதி வைப்பது வழக்கம். வாதிராஜர் அதைத்தான் உட்கொள்வார்.
இவ்வாறு நடக்கும் போது கோயிலில் உள்ள அர்ச்சகர்களுக்கு நைவேத்தியத்தில் தினமும் ஒரு சிறு பாகம் குறைவது பற்றி சந்தேகம் உண்டாயிற்று. சுவாமியாவது நைவேத்தியத்தை உட்கொள்வதாவது, வாதிராஜரே பெரும் பகுதியை உட்கொள்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர்.
தங்களை இவ்வளவு காலமாக ஏமாற்றியதைப் பழி தீர்த்துக்கொள்ளும் வகையில் ஒரு பாடத்தைக் கற்பிக்கவேண்டும் என எண்ணி நைவேத்தியத்தில் நஞ்சைக் கலந்து விட்டார்கள். வழக்கம்போல் நைவேத்தியத்தை வாதிராஜர் எடுத்துக்கொண்டு சந்நிதியினுள் சென்று கதவைத் தாழிட்டார். நைவேத்தியத்தை உட்கொள்ள ஹயக்ரீவரைப் பணிந்து துதித்தார். பிறகு பாத்திரத்தைத் தாழ்த்தியபோது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வெறும் பாத்திரம் மட்டுமே உள்ளதைக் கண்டு வியந்தார். இந்தப் புனிதப் பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்க முடியவில்லையே ! இதை உட்கொள்ள நாங்கள் தகுதியற்றுப் போனோமோ ! என்று கடவுளை வேண்டினார்.
வெளியே அர்ச்சகர்கள் சந்நிதியினுள் என்ன நிகழ்கிறதோ என்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். வாதிராஜர் திட்டமாக ஆனால் வாடிய முகத்துடன் வெளியே கால் பதித்தது கண்டு வியப்படைந்தார்கள். " பகவான் சிறிதளவு பிரசாதத்தைக்கூட என்று நமக்கு வைக்கவில்லை " என்று மெல்லிய குரலில் கூறினார். சந்நிதியினுள் சென்ற அர்ச்சகர்கள் நைவேத்தியத்தைப் படைக்கும் பாத்திரம் சுத்தமாக நக்கப்பெற்று வெறுமனே உள்ளதைக் கண்டார்கள். ஆனால் பகவானின் உருவம் நீல நிறமாக மாறியிருந்தது ! உடனே சுவாமியே இவ்வளவு நாட்களாக பிரசாதத்தை உண்கிறார் என்றுணர்ந்து வாதிராஜரிடம் ஓடிவந்து உண்மையை உரைத்து அவரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள்.
ஆனால் வாதிராஜரோ பெருந்துயரத்தில் ஆழ்ந்தார். " நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன். என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன், ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே !!! " என வருந்தினார். இவரை அறியாஅல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது. தாமே விஷத்தை உட்கொண்டிருந்தாலும் இவ்வளவு துன்பப் பட்டிருக்கமாட்டார் வாதிராஜர்.
பொழுது புலரும் வேளை, அர்ச்சகர்கள் கண்ணயர்ந்திருக்குக் சமயம், வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி, விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, " மட்டி " என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் " என்று அருளிச்செய்தார்.
விழித்தவுடன் வாதிராஜர் ' மட்டி ' என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார். அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார். இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய, திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று. 48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.
ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் கருடபகவான் அருள்பெற்று ஹயக்ரீவர மந்திரத்தை ஜெபித்து அவர் அருளைப் பெற்றார். திருமஹீ(கே)ந்திரபுரம் ஆலயத்தில் இவருக்கு கொடிமரத்துடன் கூடிய சந்நதி உள்ளது.
இங்குள்ள தேவநாதன் நெற்றிக்கண்ணோடும் தலையில் சடையுடனும் ஹரியும் ஹரனும் என்றே என்பதை விளக்குகிறார். மூலஸ்தான விமானத்தின் தென்புறத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். இங்குள்ள ஔஷத மலையில் லக்ஷ்மி ஹயக்ரீவர் இருக்கிறார்.
ஞானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே.
ஹயக்ரீவ மூல மந்திரம் -ஹ்ரசூம் (Hrasoom)
கல்வியில் மேம்பட ஹயக்ரீவ ரக்ஷை வேண்டுபவர்கள் தங்கள் முகவரி , பெயர் நட்சத்திரத்துடன் எனக்கு in box மூலம் Msgஅனுப்பவும் :
கூடல் மாணிக்கம் என்ற கேரள க்ஷேதிரத்தில் பரதன் குடி கொண்டுள்ளார் அவருக்கும் கத்தரிக்காய் தான் நிவேதனம் !
No comments:
Post a Comment