கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய ‘ஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம்‘ என்ற நூலில் எழுதியுள்ள பல விடயங்களை விளக்கியுள்ளார்.அந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன் உள்ள நூல். அதில் உள்ள ‘ சோகம் ‘ மந்திரம் பற்றிய பயிற்சியையே ‘சுதர்சனக் கிரியா’ என்று வாழும் கலை அமைப்பில் கற்றுத் தருகிறார்கள்.
இதுபோல் பல அமைப்பினர் இந்த நூலில் இருந்து எடுத்த விஷயங்களையே வேறு பெயரிட்டு கற்றுத் தருகின்றனர்.இதில் வாசி மாற்ற , உடல் தத்துவம்,பல ஆன்மீக ரகசியங்களையும் , எளிதாக விளக்கியுள்ளார்.
இந்த நூலை தற்போது தினமணி பதிப்பகத்திலிருந்து மறு பதிப்பிட்டிருக்கிறார்கள் . மிக மிக நல்ல புத்தகம் . ஒவ்வொரு ஆன்மீக அன்பர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் . இந்த நூல் கையில் இருந்தால் ஒரு பெரிய ஆன்மீக குரு வீட்டில் இருப்பதற்குச் சமம் .
அந்த மஹானின் படமும் அந்தப் புத்தகத்தின் முதல் இரு பக்கங்கள் பற்றிய விளக்கங்கள்
இந்த புத்தகம் தினமணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் கடப்பை சச்சிதானந்த சபைக்கு மடம் உள்ளது.அந்த மடத்தில் அவர்களது அனைத்துப் புத்தகங்களின் பதிப்புக்களும் கிடைக்கும்.
CUDDAPAH SRI PARAMAHAMSA SACHIDANANDA YOGEESHWAR SIVALAYAM
NO. 1, KRISHNA STREET
GOMATHI NAGAR
SELAIYUR POST, EAST TAMBARAM
CHENNAI 600073
TAMIL NADU, SOUTH INDIA.
எனது வலைப்பூ அன்பர்களில் ஒருவர் இது பற்றி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களில் அது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை.
This book is available at following distributor.
Vinayagam & co
57(24) srinivasa perumal sannathi first street
Royapettah , chennai-600014
Phone : 28350953 , cell – 9940098076
also this book available at Thiruvalluvar book stall at moor market complex near to nehru stadium,chennai,Tamil nadu and stall owner name is Mr.Boobathy
No comments:
Post a Comment