For Read Your Language click Translate

26 June 2014

பிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது

நவமணிகள் என்பது ஒன்பது கற்களான நவரத்தினங்களைக் குறிக்கின்றன என்று கொண்டால் அவற்றிற்கும் ஒன்பது கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு மனிதனின் உடல் நலத்தையும் மன நலத்தையும் ஆன்மீக வளர்ச்சியையும் அவை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதையும் பார்க்கலாம்.
பிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பைக் கீழ்காணும் விதமாகக் கூறுகிறது
மாணிக்கம்- சூரியனுக்கு உகந்தது. வாத கபத்தை சமன்படுத்தி பித்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட ஆயுளை அளிக்கிறது.உடலில் உள்ள அக்னியைத் தூண்டி ஜீரணசக்தியை அதிகரிக்கிறது.
முத்து- சந்திரனுடன் தொடர்பு கொண்டது, எல்லா தோஷங்களையும் சமன்படுத்துகிறது. வலது ஆள்காட்டி விரலில் அணிந்துகொள்ள வேண்டும். மனத்துக்கு அமைதியையும் சாந்தத்தையும் அளிக்கவல்லது.
புஷ்பராகம்- குருவுக்கு ஏற்றது, வாத பித்தத்தை சமன்படுத்தி கபத்தை அதிகரிக்கிறது. செவ்வாயின் தீமையைக் குறைக்கிறது.
பவளம்- செவ்வாய்க்கு ஏற்றது, பித்தத்தைக் குறைக்கிறது,
எமரால்டு- புதனுக்கு ஏற்றது, படபடப்பைக் குறைக்கிறது பேச்சுத்திறன், எழுத்துத் திறனை அதிகரிக்கிறது.
நீலம்- சனிக்கு ஏற்றது, வலது கைநடுவிரலில் அணியவேண்டும். நீலத்தையும் வைரத்தையும் சேர்த்து அணியக்கூடாது!
வைரம்- சுக்கிரனுக்கு ஏற்றது, கலைகளில் திறமையை அளிப்பது, குடும்ப விருத்திக்கு உதவுவது.
கோமேதகம்- ராகுவுக்கு ஏற்றது,கவனமின்மையை விலக்குவது, மனம் சார்ந்த நோய்களுக்கு ஏற்றது.
வைடூர்யம்- கேது- சர்க்கரை நோய் மூட்டுவலிக்கு ஏற்றது.
நவரத்தினங்களை மோதிரமாகவோ மாலையாகவோ அணியும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இந்த கற்களை தகுந்த ஜோதிடரைக் கேட்ட பிறகோ, குருவைக் கேட்ட பிறகோதான் அணியவேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
நம் உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பைப் பின் வரும் ஒரு பாடலில் காணலாம். இந்த நவரத்தினங்கள் நமது சக்தி மையங்களின் மீதும் தமது ஆற்றலைச் செலுத்தி நமது ஆன்மீக முன்னேற்றைத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவை.
இவற்றைப் பற்றிய விவரங்களை டாக்டர் வசந்த் லாட் என்பவரது நாடிகளைப் பற்றிய மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் காணலாம்.
http://agatthiyarjnanam.blogspot.ru/2014/03/72-mystical-accomplishments-of-brahma.html
**************************
Note:Dear Agasthiyar devotees.. if you have any reasonable queries,please click the following website link and post your queries there,very compassionate people will give their answer to your questions .. thanks .. dont forget to share and invite your friends..
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha...
குறிப்பு :அன்பான அகத்தியர் அடியவர்களே,தங்களின் மேலான கேள்விகளையும் கருத்துகளையும் கீழ் காணும் வலைமனையில் பதியுமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்...இறை அடியார்கள் தங்களின் கேள்விக்கான பதிலை மிகவும் கருணையோடு அங்கு தருவார்கள் ..மறக்காமல் பகிரவும் ..நன்றி ...
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
http://agatthiyarjnanam.blogspot.ru/2014/03/72-mystical-accomplishments-of-brahma.html

No comments:

Post a Comment